புதன், 29 ஜனவரி, 2014

உத­டு­களை அலட்­சி­யப்­ப­டுத்­த­லாமா?

மணிக்­க­ணக்கில் மேக்கப், லேட்டஸ்ட் ஹெயர் ஸ்டைல், விலை உயர்ந்த உடை மற்றும் நகைகள்... இவை எதி­லுமே சாத்­தி­ய­மா­காத அழகை, புன்னகை கொடுத்துவிடும். ஒரு சின்ன சிரிப்­புக்கு அத்­தனை சக்தி! அந்த சிரிப்பைத் தாங்கும் உத­டு­களை அலட்­சி­யப்­ப­டுத் த­லாமா? கொஞ்சம் அக்­கறை காட்­டினால், உங்கள் புன்­னகை இன்னும் அழ­காகும். எத்­தனை பேர் இருந்­தாலும், நீங்கள் தேவ­தை­யாகத் தெரி­வீர்கள்!



உத­டு­களைப் பரா­ம­ரிக்­கவும் அழ­கு­ப­டுத்­தவும் ஆலோ­ச­னைகள் சொல்­கிறார் அழ­குக்­கலை நிபுணர் ஹசீனா சையத்.உத­டு­களின் அழகைப் பற்றிப் பேசும் போது, முதலில் அவற்றின் வடி­வங்­களைப் பார்க்க வேண்டியது அவசியம். ஒவ்­வொ­ரு­வரின் உதட்டு அமைப்பும் ஒவ்­வொரு மாதிரி இருக்கும். அதைத் தெரிந்து கொண்டு, அதற்­கேற்ப மேக்கப் செய்தால், அழகு அள்ளும்.

தடித்த உத­டுகள்

மேல், கீழ் உத­டுகள் தடித்து இருக்கும்.

தடித்த மேலு­தடு

மேலு­தடு மட்டும் தடித்தும், கீழு­தடு சாதா­ர­ண­மா­கவும் இருக்கும்.

தடித்த கீழு­தடு

மேலு­தடு சாதா­ர­ண­மா­கவும், கீழு­தடு தடித்தும் இருக்கும்.

மெல்­லிய உத­டுகள்

இரண்­டுமே மெலி­தாக இருக்கும்.

சின்ன வாய்

சொப்பு வாய் என்­கிற மாதிரி உத­டுகள் மிகச் சிறி­ய­தாக இருக்கும்.

எந்த உதட்­டுக்கு என்ன மேக்கப்?

தடித்த உத­டு­க­ளுக்கு உத­டு­களின் நிறத்தில் அல்­லது டார்க் ஷேடு­களில் லிப்ஸ்டிக் உப­யோ­கிக்க வேண்டும். பளீர் நிறங்­க­ளையும் பள­பளா ஷேடு­க­ளையும் தவிர்க்க வேண்டும்.மேல் அல்­லது கீழ் உதடு மட்டும் பெரி­ய­தாக இருந்தால், பெரிய உதட்டின் மேல் ஃபவுண்­டேஷன் தடவி, சிறி­ய­தாக உள்ள உதட்­டுக்­கேற்ப அவுட்லைன் வரைந்து, பிறகு லிப்ஸ்டிக் நிரப்ப வேண்டும்.

மெல்­லிய உத­டு­க­ளுக்கு பளீர் நிறங்கள் பொருந்தும். டார்க் ஷேடுகள் அவர்­க­ளது உத­டுகளை இன்னும் சிறி­ய­தாகக் காட்டும் என்­பதால் தவிர்க்கவும். பிங்க் ஷேடுகள் நன்­றாக இருக்கும். சிறிய உத­டு­க­ளுக்கு முதலில் அவுட்லைன் கொடுத்து, உத­டு­களின் ஓரங்­க­ளிலும் அவுட்லைன் கொடுத்து பிறகு லிப்ஸ்டிக் நிரப்­பினால், பெரி­தாகத் தெரியும்.சிறி­யதும் பெரி­ய­து­மான அல்­லது சரி­யான வடி­வ­மைப்­பில்­லாத உத­டு­களை உடை­ய­வர்கள், டார்க் ஷேடு­களில் அவுட்லைன் கொடுத்து விட்டு, உள்ளே நேச்­சுரல் கலர்­களை பயன்­ப­டுத்தி சரி செய்­யலாம்.

உத­டு­களின் வடிவம் எப்­படி இருந்­தாலும் இந்த முறையில் மேக்கப் மூலம் சரி செய்து விட முடியும். லிப் மேக்கப் என்­பது ஒரு கலை. லிப்ஸ்­டிக்கை திறந்­தோமா, அப்­ப­டியே நேர­டி­யாக உத­டு­களில் தட­வி­னோமா என செய்­யக்­கூ­டாது. முகத்தை சோப் போட்டுக் கழு­வு­வது போல உத­டு­க­ளையும் அடிக்­கடி தண்ணீர் வைத்து, மென்­மை­யாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். முதலில் ஃபவுண்­டேஷன் போட்­டு, திட்­டுத்­ திட்­டான உதட்டின் நிறத்தை சமன்­ப­டுத்த வேண்டும். பிறகு லிப் லைனர் உப­யோ­கித்­து, எந்த வடிவம் வேண்­டுமோ அதற்­கேற்ப அவுட்லைன் வரைய வேண்டும்.

அடுத்து லிப்ஸ்­டிக்கில் சுத்­த­மான பிரஷ்ஷை தொட்டு, அதன் மூலமே உத­டு­களில் நிரப்ப வேண்டும். டிஷ்யூ பேப்பர் வைத்து அழுத்தி, அதி­கப்­ப­டி­யான லிப்ஸ்­டிக்கை துடைத்து எடுத்து விடலாம். பக்­க­வாட்டில் லிப்ஸ்டிக் பட்­டி­ருந்தால், பட்ஸ் உத­வியால் மெது­வாக நீக்­கலாம். அதற்கு மேல் இன்னும் பள­ப­ளப்பு வேண்­டு­மானால், லிப்­கிளாஸ் அல்­லது ஷீன் உப­யோ­கிக்­கலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல