பகுதி - 3
ஆனந்தி சசிதரன் மற்றும் பெரும்பாலான புலிகள் சார்பு சக்திகள், இன்றைய நாட்களில் தங்களை மனித உரிமைக் காவலர்களாக எண்ணிக்கொண்டு மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியைத்தான் இலக்கு வைக்கின்றன, வேலுப்பிள்ளை பிரபாகரனின் எல்.ரீ.ரீ.ஈயை அல்ல. இப்போது எல்.ரீ.ரீ.ஈ கலைக்கப்பட்டு விட்டது ஏனெனில் அதன் தலைவர்கள் இறந்துவிட்டார்கள் மற்றும் அந்த இயக்கம் ஸ்ரீலங்காவிலிருந்து அகற்றப்பட்டுவிட்டது என அவர்கள் நினைக்கிறார்கள் போலத் தெரிகிறது.
இழிவானது
போரின் இந்த துயரமான கட்டத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள தமிழர்கள் யாவரும் வன்னி மண்ணின் துர்ப்பாக்கியசாலிகளாகவே கருதப்பட்டனர், எல்.ரீ.ரீ.ஈயின் அரசியல் பிரிவு, இழிந்த மட்டத்தில் உள்ள ஒன்றாக அனைவராலும் வெறுக்கப்பட்டது. இந்த ஆபத்தான வேளையில் எல்.ரீ.ரீ.ஈயின் அரசியல் பிரிவு மூன்று முக்கிய பணிகளில் ஈடுபட்டிருந்தது. முதலாவதாக அரசியல் பிரிவு இளைஞர்களையும் பிள்ளைகளையும் தொடர்ந்தும் பெரும் எண்ணிக்கையில் கட்டாய ஆட்சேர்ப்புக்கு உட்படுத்தியது. அவர்கள் போதியளவு பயிற்சியோ அல்லது அனுபவமோ இல்லாமல் வெறும் பீரங்கிக் குண்டுக்கு போடப்படும் தீனியாக தூக்கி வீசப்பட்டார்கள். இரண்டாவதாக எல்.ரீ.ரீ.ஈயின் அரசியல் பிரிவு, பொதுமக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தப்பிச் செல்ல முயற்சிப்பதை அடக்குமுறைகளைப் பயன்படுத்தி தடுத்தது. மூன்றாவதாக தப்பியோடும்போது பிடிபட்டவர்களுக்கு அரசியல் பிரிவு மனிதாபிமானமற்ற வகையில் கொடிய தண்டனைகளை வழங்கியது. இவை அனைத்திலும் எழிலனுக்கு முக்கிய பங்கிருந்தது.
தான் செய்த பலவகையான கொடிய செயல்களுக்கு மத்தியில் மேஜர் எழிலன் என்கிற சின்னத்துரை சசிதரன் மேற்கொண்ட மூன்று பயங்கரமான நடவடிக்கைகளும்,ஒரு நெருக்கடியான நிலையில் ஒருவர் மூழ்கத்தக்க ஆழத்தை எடுத்து விளக்குகிறது. முதலாவது புதுமாத்தளனில் நடந்த ஒரு சம்பவம் ஒரு ஐசிஆர்சி கப்பல் காயமடைந்தவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்காக அவர்களை ஏற்றிச் செல்வதற்காக அங்கு நிறுத்தப்பட்டது. வழக்கம் போல எல்.ரீ.ரீ.ஈ, காயங்களின் தீவிரத்தின் அடிப்படையில் நோயாளிகளை அதில் ஏற்றாமல் தனது காயமடைந்த அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் புலி அங்கத்தவர்களது குடும்பத்தவர்கள் ஆகியவர்களுக்கே முன்னுரிமை வழங்கியது. இது காயமடைந்தவர்களின் உறவினர்கள் தங்களது காயமடைந்த குடும்ப அங்கத்தினரது காயத்தின் தன்மையை ஐசிஆர்சி அதிகாரிகளிடம் காண்பித்து அவர்களை சிகிச்சைக்காக கடல் வழியாக அனுப்புவதற்கு தீவிரமான முயற்சிகளை முன்னெடுக்க வழியமைத்தது.
இது எல்.ரீ.ரீ.ஈக்கு சினத்தை ஏற்படுத்தியது. துப்பாக்கிகளால் சுட்டால் ஐசிஆர்சி அதிகாரிகள் எச்சரிக்கை அடைந்து விடுவார்கள் என்பதால், வாள்கள், கத்திகள், மற்றும் பொல்லுகள் என்பனவற்றை பயன்படுத்தி பொதுமக்களை அடித்தும் வெட்டியும் அவர்கள் ஐசிஆர்சி அதிகாரிகளைச் சந்திக்கவிடாமல் தடுத்தார்கள். எழிலன் தானே ஒரு வாளை எடுத்து மிகவும் ஆர்வத்துடன் ஆதரவற்ற பொதுமக்கள் மீது வீசிக்கொண்டு நின்றாராம். ஐசிஆர்சி கப்பல் போனதின் பின்னும் மாத்தளன் மக்களின் எழுச்சி அடங்கவில்லையாம். இப்போது எல்.ரீ.ரீ.ஈ பொதுமக்களின் ஆர்ப்பாட்டத்தை துப்பாக்கிச் சூடு நடத்தி அடக்கினார்களாம். இந்த துப்பாக்கிச் சூடுகளில் குறைந்தது ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் பதினைந்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தார்கள். எழிலனின் கட்டளையின்படியே புலிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகச் சொல்லப்பட்டது.
இரண்டாவது சம்பவம் வலைஞர்மடத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயமான செபமாலை மாதா தேவாலயத்தில் இடம்பெற்றது. 900 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள்,மற்றும் குழந்தைகள் இந்த தேவாலயத்தில் தஞ்சம் அடைந்து அங்குள்ள கத்தோலிக்க பாதிரிமார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளால் அவர்களுக்கு உணவாக கஞ்சி வழங்கப்பட்டு கவனித்துக் கொள்ளப்பட்டது. தேவாலயத்தில் இருந்த அகதிகள்pல், இருப்பதற்கு இல்லம் ஏதுமற்றவர்கள், கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு எல்.ரீ.ரீ.ஈ யில் இருந்து தப்பியோடிய அங்கத்தவர்கள், மற்றும் புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்புக்குப் பயந்து பிள்ளைகளுடன் வந்த குடும்பங்கள் போன்றவர்கள் அடங்கியிருந்தார்கள்.
மூவர் கொண்ட கட்சி
எழிலன், இளம்பரிதி மற்றும் மலைமகள் ஆகியவர்களைக் கொண்ட புலிகளின் மூவர் கட்சி ஒன்று அந்தப் பகுதிக்கு அடிக்கடி விஜயம் செய்து அந்த மக்களை வெளியேற்ற வேண்டும் அல்லது அந்த வளாகத்துக்குள் சென்று புகலிடம் கோரியுள்ளவர்களை பரிசீலிக்க எல்.ரீ.ரீ.ஈயை அனுமதிக்க வேண்டும் என்று கோரி வந்தார்கள். அந்த கத்தோலிக்க மதகுருக்கள் உறுதியாக அதை நிராகரித்ததுடன் அந்த மக்கள் தேவாலயத்தினுள் அடைக்கலம் தேடி வந்துள்ளார்கள் என்று சொல்லிவிட்டார்கள். தொடர்ச்சியாக பல முயற்சிகளை மேற்கொண்டதின் பின்னர் பொறுமை இழந்த எழிலன் தேவாலயத்தை சுத்தமாக்கும் ஒரு நடவடிக்கையில் இறங்கினார். ஆயதம் தாங்கிய எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் ஒரு இராணுவத் தாக்குதலை மேற்கொள்வதைப் போல தேவாலயத்தைச் சுற்றி அணிவகுத்து நின்று கொண்டார்கள். புலிகளினால் தடை செய்யப்பட்ட தமிழ் குழுக்களை சேர்ந்த அங்கத்தவர்கள் தேவாலயத்தினுள் இடம் பிடித்துள்ளார்கள் அவர்களைக் களையெடுக்க வேண்டும் என்று எழிலன் மதகுருக்களிடம் elilan-1அறிவித்தார்.
பின்னர் எழிலன் தலைமையிலான எல்.ரீ.ரீ.ஈ யினர் தேவாலய வளாகத்திற்குள் சென்று தங்கள் ஆரம்ப பதின்ம வயதுகளில் இருந்த இளைஞர்களையும் மற்றும் சிறுவர்களையும் இழுத்துச் செல்ல ஆரம்பித்தார்கள். சில இளைஞர்கள் வரமறுத்து எதிர்ப்புக் காட்டியபோது எல்.ரீ.ரீ.ஈ எழுந்தமானத்துக்கு துப்பாக்கிச் சூடு நடத்தி நான்கு பேரைக் கொன்றது. இரண்டு பாலினத்தையும் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள்,சிறுவர்கள், திடகாத்திரமான தேகத்தைக் கொண்ட ஆண்கள் என அனைவரும் துப்பாக்கி முனையில் அணிவகுத்து அழைத்து வரப்பட்டு பலவந்தமாக பேரூந்துகளில் ஏற்றப்பட்டு புலிகளால் கொண்டு வரப்பட்டார்கள். அவர்கள் போர்முனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். கிட்டத்தட்ட வயதான 300 ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே தங்கள் பிரியப்பட்டவர்களை இழந்த சோகத்தால் அழுது புலம்பியபடி வலைஞர்மடத்தில் எஞ்சியிருந்தார்கள். ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அந்த நடவடிக்கையை மேற்பார்வை செய்தபடி எழிலன் அந்த இடத்தில் நின்றிருந்தார்.
மூன்றாவது சம்பவமும் வலைஞர்மடத்தில் குருசடிச் சந்தி என்ற இடத்திலேயே நடைபெற்றது. எழிலன் மற்றும் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ நிருவாகப் பிரிவின் தலைவர் தங்கன் ஆகியோர் தலைமையிலான ஒரு குழு அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தப்பியோடிய ஒரு பொதுமக்கள் குழவினை பிடித்தது. எழிலன் அவர்களை விசாரித்து தப்பியோட முயற்சித்ததால் துரோகிகள் என்று அவர்களைக் கண்டித்தார். அப்போது இரண்டு சிறு பிள்ளைகளையும் ஒரு கைக்குழந்தையையும் வைத்திருந்த ஒரு பெண், தனது குழந்தைகளுக்கு பால் இல்லை அதனால்தான் தான் தப்பிக்க முயற்சித்ததாக தெரிவித்தாள். எழிலனுக்கும் அந்த இளம் பெண்ணுக்கும் இடையே சூடான வாக்குவாதம் வெடித்ததில் அவள் எல்.ரீ.ரீ.ஈயை மனிதாபிமானவற்றவர்கள் என்று குற்றம்சாட்டி “நீங்கள் மனிசர்கள் இல்லையா” எனக் கேட்டுள்ளாள், இந்தக் கட்டத்தில் எழிலன் தனது கைத்துப்பாக்கியை வெளியே எடுத்து அந்தப் பெண்ணின் நெற்றியில் வைத்து இரண்டுமுறை சுட்டு துடிக்கத்துடிக்க கொன்றுவிட்டார்.
இவைகள்தான் எழிலன் சம்பந்தப்பட்ட மோசமான மூன்று சம்பவங்கள். இதைப்போன்ற இன்னும் பல சம்பவங்கள் இருக்கலாம், தீவிரமான, பாரபட்சமற்ற விசாரணை ஒன்று நடத்தப்பட்டால் அவை வெளிச்சத்துக்கு வருவதுடன்,புலிகளின் பங்கும் மற்றும் நடத்தையும் பெரிய அளவில் ஆராயப்படும். எழிலன் அத்தகைய காட்டுமிராண்டித் தனமான நடத்தையில் ஈடுபட்டிருந்தாலும்கூட, நாகரிகமான விதிமுறைகள், ஒரு மட்டத்தில் மனித நேயத்துக்கு மாறாக கொடிய குற்றங்களைப் புரிந்தவர்கள் கூட மற்றொரு மட்டத்தில் சட்டப் பிரகாரம் பாதுகாப்புக்கு உரித்துடையவர்கள் என வலியுறுத்துகின்றன. மனித உரிமைகளை மோசமாக மீறியவர்கூட அடிப்படை மனித உரிமைகளான உயிர் வாழும் உரிமைக்கு அருகதை உள்ளவராவார், மற்றும் முறையான சட்ட நடவடிக்கைகளின் பின்னரே அவருக்கு தண்டனைகூட வழங்க முடியும்.
மீறல்கள்
பின்னர் ஆனந்தியை போன்ற எல்.ரீ.ரீ.ஈ மனைவிமார்களின்; பிரியதWar2009்துக்குரிய கணவன்மார்களான வாழ்க்கைத்துணைகள், யாருக்காக தாங்கள் போராட்டம் நடத்துவதாகச் சொல்லிக் கொண்டார்களே, அந்த மக்களுக்கே மனித நேயத்துக்கு எதிராக பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்களை புரிந்துள்ளார்களே இதன் பின் அந்த மனைவிகளின் பங்குதான் என்ன? எழிலனின் இந்த கட்டாய இராணுவசேவை நடவடிக்கைகளுக்கு ஆனந்தி ஒத்துழைப்பு நல்கியதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை, ஆனால் அவர் அவைகளை ஆட்சேபித்ததாகவும் தெரியவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒரு பத்திரிகை புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பு பற்றி அவரிடம் கேள்வி எழுப்பியபோது, அதற்கு நேரடியாக பதிலளிப்பதை அவர் தவிர்த்துக் கொண்டார், ஆனால் ஒரு பிரிவினர் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும்போது மற்றொரு சாரார் அவர்களை விட்டு அதிகதூரம் விலகியிருக்க முடியாது எனப் பேசியதன் மூலம் மறைமுகமாக அதை நியாயப்படுத்த அல்லது மன்னிக்க முயன்றுள்ளார்.
இந்தப் பின்னணியில் எழிலனின் மனைவியான ஆனந்தி சசிதரன், தனது காணாமற்போன கணவருக்காக நியாயம் தேட முயலுகிறார். இதில் முக்கியமான கேள்வி என்னவென்றால் எழிலன் பாதிக்கப்பட்ட ஒருவரா அல்லது மனித உரிமைகளை மீறிய ஒரு குற்றவாளியா அல்லது இரண்டுமா. இந்தப் பின்னணியில் ஆனந்தி சசிதரன் குரலெழுப்புவது பாதிக்கப் பட்டவர்களுக்காகவா அல்லது குற்றம் புரிந்தவர்களுக்காகவா? ஆனந்தி சசிதரன் இரண்டு முரண்பட்ட நிலைப்பாடுகளின் இடைமுகமாக உள்ளார். அநேக மனித உரிமைகள் மற்றும் மனித நேய மீறலில் தொடர்புடைய மூத்த எல்.ரீ.ரீ.ஈ தலைவர் எழிலனின் மனைவி என்ற வகையில் அந்த நிறமாலையின் ஒரு முனையில் நிற்கிறார். அதே நேரத்தில் மே 2009ல் இராணுவத்திடம் தானே சென்று சரணடைந்த அவரது கணவர் இப்போது காணாமற் போயுள்ளதும் ஒரு உண்மையான காரணம். அந்தக் காரணத்தினால் எழிலன் பாதிக்கப்பட்ட ஒருவர், அதே போல அவரது மனனவி மற்றும் குடும்பமும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதன்படி ஆனந்தியின் தற்போதைய நிலை குழப்பமான ஒன்று, மனித உரிமைகள் மீறலுக்காக குற்றம் புரிந்த ஒருவர். அதேபோல பாதிப்புக்கு உள்ளான ஒருவர் ஆகிய இரண்டு நிலைகளையும் கொண்ட ஒரு மனிதரின் மனைவியாக அவர் உள்ளார்.
அவரது கணவர் அல்லது எல்.ரீ.ரீ.ஈ என்பனவற்றின் செயல்களுடன் ஆனந்தி தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டிருக்கவோ அல்லது பொறுப்பாகவோ இல்லை, ஆனால் சமீப காலங்களில் அவரது தீவிரமான அரசியல் பாத்திரம் காரணமாக அவர் புலிகளுடன் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த அரசியல் பாத்திரத்தின் சாரம் மற்றும் தாக்கம் என்பன எல்.ரீ.ரீ.ஈ புரிந்த குற்றங்களை அலட்சியப்படுத்தி, மாறாக பாரபட்சமற்ற,சுயாதீனமான,சர்வதேச விசாரணை ஸ்ரீலங்கா அரசாங்கம் மற்றும் ஆயுதப் படையினர்மீது நடத்தப்பட்டு யுத்தக் குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கின்றன.
ஆனந்தி சசிதரன் மற்றும் பெரும்பாலான புலிகள் சார்பு சக்திகள், இன்றைய நாட்களில் தங்களை மனித உரிமைக் காவலர்களாக எண்ணிக்கொண்டு மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியைத்தான் இலக்கு வைக்கின்றன, வேலுப்பிள்ளை பிரபாகரனின் எல்.ரீ.ரீ.ஈயை அல்ல. இப்போது எல்.ரீ.ரீ.ஈ கலைக்கப்பட்டு விட்டது ஏனெனில் அதன் தலைவர்கள் இறந்துவிட்டார்கள் மற்றும் அந்த இயக்கம் ஸ்ரீலங்காவிலிருந்து அகற்றப்பட்டுவிட்டது என அவர்கள் நினைக்கிறார்கள் போலத் தெரிகிறது.
விசாரணை
ஒரு பாரபட்சமற்ற சுயாதீனமான சர்வதேச விசாரணை ஆரம்பிக்கப்பட்டால், அவர்கள் கோரிக்கை விடுத்த அந்த மரியாதைக்குரிய விசாரணை நம்பிக்கை உடைய ஒன்றாக இருக்கவேண்டுமானால் இறுதிக்கட்டப் போரில் எல்.ரீ.ரீ.ஈ நடந்து கொண்டதையும் அது விசாரணை செய்யும் என்பதைக் கவனிக்த் தவறிவிடுகிறார்கள் அல்லது அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை என்றே தோன்றுகிறது. புலிகளின் உயர் மட்டத்தினர் இல்லாவிட்டாலும் கூட எல்.ரீ.ரீ.ஈயின் பல்வேறு குற்றங்களின் குறை நிறை நடவடிக்கைகள் விரிவாக ஆராயப்படும். பொறுப்புக் கூறலை உறுதிபடுத்தி நல்லிணக்கத்தை மேம்படுத்தும்படி கொழும்பு கேட்கப்படும் என்று ஒருவர் நிச்சயமாக எதிர்பார்க்கலாம். நியாயத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுவதற்கு உண்மையை தெரிவிக்க வேண்டுமானால் அந்த உண்மை ஒரு முழமையான உண்மையாக இருக்கவேண்டும். ஒருபக்க உண்மை அல்லது உண்மையின் பகுதிகள் மட்டும் போதாது.
அப்படியான ஒரு நிலமையில் ஆனந்தி சசிதரன் எங்கு நிற்கப் போகிறார்? நிச்சயமாக பல அரங்குகளில் சரணடைந்த தனது கணவர் காணாமல் போய்விட்டார், என அவர் வாக்குமூலம் வழங்க முடியும். எனினும் அந்த விசாரணையில் மனித நேயத்துக்கு எதிராக எழிலன் செய்ததாகச் சொல்லப்படும் குற்றங்களும் மீள எண்ணப்பட்டால் ஆனந்தி ஒரு மோசமான சங்கடத்துக்கு முகம் கொடுக்க நேரிடும். கீழ்வரும் முக்கியமான கேள்வி எழுவதற்கான அதிகம் சாத்தியமும் தோன்றும்
மூத்த புலித் தலைவர் எழிலனின் மனைவியான ஆனந்தி சசிதரன் குரலெழுப்புவது பாதிக்கப் பட்டவர்களுக்காகவா அல்லது அநீதி புரிந்தவர்களுக்காகவா?
- டி.பி.எஸ். ஜெயராஜ்
மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக