புதன், 29 ஜனவரி, 2014

எதற்கெடுத்தாலும் கோபப்படும் குழந்தைகளை கையாளுவது எப்படி?

எதற்­கெ­டுத்­தாலும் கோபம் கொள்ளும் குழந்­தையை கையா­ளு­வது ஒன்னும் லேசு­பட்ட காரியம் அல்ல. அவர்­களை மாற்­று­வ­தற்கு நீண்ட காலம் எடுக்கும்.

அதற்கு முக்­கி­ய­மாக தேவைப்­ப­டு­வது பொறு­மையும் நீடித்து நிலைக்கும் திறனுமாகும். அதி­க­மாக கோபப்­படும் குழந்­தையை கையாள வேண்டும் என்றால், அவ்­வ­கை­யான சூழ்­நி­லை­களில் அவர்கள் எப்­படி நடந்து கொள்­வார்கள் என்­பதை முதலில் தெரிந்து கொள்­வது அவ­சியம். அமை­தி­யாக அழுதல் அல்­லது மூர்க்­கத்­த­ன­மாக நடந்து கொள்­ளுதல் என எப்­படி வேண்­டு­மா­னாலும் அவர்கள், அவர்­களின் கோபத்தை வெளிக்­காட்­டு­வார்கள். இது போக உங்­களை அடிக்­கலாம், கூச்­ச­லி­டலாம், அழலாம் அல்­லது கடிக்க கூடச்செய்­யலாம்.



இவை­களில் எதை­யா­வது அவர்கள் அடிக்­கடி தொடர்ச்­சி­யாக செய்தால், அதிக கோபம் கொள்ளும் உங்கள் குழந்­தையை கையாள நேரம் வந்து விட்­டது என்­பதை புரிந்துக் கொள்­ளுங்கள். குழந்­தைகள் அடம் பிடித்து சண்­டித்­தனம் செய்யும் போது பெற்­றோர்­க­ளுக்கு மன அழுத்­தமும் எரிச்­சலும் ஏற்­படும்.

இதனை நடத்தை பிரச்­சி­னையின் ஒரு பகு­தி­யாக எடுத்துக் கொள்­ளலாம். நிலை­யான அக்­க­றையும் மன ஒரு­மித்­தலும் இருந்தால் போதும், உங்கள் குழந்­தையின் இந்தக் குணத்தை மாற்­றி­வி­டலாம். அவர்கள் தங்­களின் கோபத்தை வெளிப்­ப­டுத்தி அமை­தி­யான பிறகு அவர்­க­ளுடன் பேசுங்கள். இது ஒரு தீய பழக்கம் என்று புரிய வையுங்கள். இவ்­வகை சூழ்­நி­லை­களை சமா­ளிக்க சில டிப்ஸ்­களை நீங்கள் அறிந்­தி­ருந்தால் இந்த வேலையை சுல­ப­மாக செய்து முடிக்­கலாம்.

அதி­க­மாக கோபம் கொள்ளும் குழந்­தையை கையாள, இதோ உங்­க­ளுக்­காக சில டிப்ஸ்.

கார­ணத்தை கண்­டு­பி­டி­யுங்கள் : உங்கள் குழந்­தைக்கு கோபம் வரு­வ­தற்­கான கார­ணத்தை முதலில் கண்­ட­றிய முற்­ப­டுங்கள். சில நேரம் உங்கள் கவ­னத்தை ஈர்க்க அவர்கள் தங்­களின் கோபத்தை வெளிக்­காட்­டலாம். அல்­லது அவர்கள் தேவைகள் நிரா­க­ரிக்­கப்­படும் போதும் அவர்கள் தங்­களின் கோபத்தை வெளிக்­காட்­டலாம். உங்கள் குழந்­தைக்கு கோபத்தை உண்­டாக்கும் சூழ்­நி­லைகள் திரும்ப ஏற்­ப­டாமல் பார்த்துக் கொள்­ளுங்கள்.

சில விதி­மு­றை­களை போடுங்கள் : செயற்­பாட்டில் இறங்­கு­வ­தற்கு முன்பு சரி­யாக திட்­ட­மி­டு­வது மிகவும் முக்­கியம். அதனால் களத்தில் இறங்கும் முன் முதலில் சில விதி­மு­றை­களை போடுங்கள். குழந்­தையின் சில தேவையை நீங்கள் நிரா­க­ரிப்­ப­தற்­கான சரி­யான கார­ணத்தை அவர்­க­ளுக்கு புரிய வையுங்கள். அதே நேரம் அவர்­களின் அனைத்து தேவை­க­ளையும் நீங்கள் நிரா­க­ரிக்­கா­த­படி பார்த்துக் கொள்­ளுங்கள்.

சீக்­கி­ர­மாக செயல்­ப­டுங்கள்:

உங்கள் குழந்­தைக்கு அதிக அளவில் கோபம் வரு­வதை நீங்கள் கண்­ட­றிந்தால், அதற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களில் உடனே இறங்­குங்கள். இதனால் அதிக கோபம் கொள்ளும் உங்கள் குழந்­தையை சுல­ப­மா­கவும் வேக­மா­கவும் சரி செய்து விடலாம். அவர்­க­ளுக்கு வழி­காட்­டுங்கள் பிஸி­யாக இருக்கும் பெற்­றோர்கள் தங்கள் குழந்­தையின் குணத்தை மேம்­ப­டுத்த போதிய நேரம் ஒதுக்­கு­வ­தில்லை. குழந்­தைகள் எதற்­கெ­டுத்­தாலும் கோபப்­ப­டு­வ­தற்கு இதுவும் கூட ஒரு முக்­கிய கார­ண­மாக விளங்­கு­கி­றது. அதனால் உங்கள் குழந்­தை­க­ளுடன் போதிய நேரம் செல­வ­ழித்து எது சரி எது தப்பு என்­பதை அவர்­க­ளுக்கு புரிய வையுங்கள்.

புறக்­க­ணித்தல் :

சில நேரங்­களில் உங்கள் குழந்­தையின் முன் கோபத்தை கையாள அவர்­களின் கோபத்தை புறக்­க­ணிப்­பதே சிறந்த வழி­யாக விளங்கும். அவர்­களின் தேவை எல்லாம் அவர்­களின் பிடி­வா­தத்தால் நிறை­வேறும் என்று அவர்கள் தெரிந்து கொண்டால், தொடர்ந்து பிடி­வாதம் பிடித்துக் கொண்டே தான் இருப்­பார்கள்.

பொறு­மை­யாக இருங்கள் :

நீங்கள் எடுக்கும் நட­வ­டிக்­கை­களால் உட­னடிப் பலன் கிடைக்கும் என்று எதிர்­பார்க்­கா­தீர்கள். அதற்கு சிறிது காலம் எடுக்கும். நீங்கள் எடுக்கும் நட­வ­டிக்­கை­களில் தொடர்ச்­சி­யான பொறு­மையை நீங்கள் கண்­டிப்­பாக கடைப்­பி­டிக்க வேண்டும். உங்கள் குழந்­தையின் முன் கோபத்தை கையாள இதுவும் உங்­க­ளுக்கு உதவி புரியும்.

தொழில் ரீதி­யான உத­வியை நாடுங்கள் ;

குழந்­தையின் முன் கோபத்தை கட்­டுப்­ப­டுத்த இதுவும் ஒரு சிறந்த வழி­யாகும். குழந்­தை­களின் பிடி­வா­தங்கள் மற்றும் கோபங்­களை கையாள பல தனித்­தன்­மை­யான தெரப்­பிகள் உள்­ளன. தொழில் ரீதி­யான ஆலோ­சனை மூலம் இவ்வகை சூழ்நிலைகளை சிறப்பாகக் கையாளலாம். அவர்களை பார்த்து கத்தாதீர்கள். உங்கள் குழந்தை கோபத்தை எப்படி வெளிப்படுத்தினாலும் சரி, அவர்களை பார்த்து கத்தாதீர்கள். உங்களின் கவனத்தை ஈர்க்கவே அவர்கள் இப்படி நடந்து கொள்ளும் போது, நீங்கள் அவர்களை பார்த்து கத்துவது அவர்களுக்கு கூடுதல் சுவாரஷ்யத்தை உண்டாக்கிவிடும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல