புதன், 29 ஜனவரி, 2014

ஆனந்தி சசிதரன் குரலெழுப்புவது பாதிக்கப் பட்டவர்களுக்காகவா அல்லது அநீதி புரிந்தவர்களுக்காகவா?

பகுதி - 2

இலட்சியம்

முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஆனந்தி சசிதரனுககு ஒத்துழைப்பு வழங்கும் முயற்சியாக நிருவாகத்தில் அவரை இணைத்துக் கொள்ளும் வகையில் மனிதாபிமான கோளத்தில் அவருக்கு பணிகளை ஒதுக்கியிருந்தாலும் கூட எழிலனின் மனைவி தனது பார்வைகளை வேறு விடயங்களில் திருப்பி உள்ளார் போலத் தெரிகிறது. ஒரு நேர்காணலில் தனது எதிர்கால இலட்சியம் என்னவாக இருக்கப் போகிறது என்பதை அவர் தெரிவித்திருந்தார். மாகாணசபை மன்றம் தனது இலட்சியங்களை நிறைவேற்ற போதுமான ஒன்றாக இருக்காவிட்டால் தனது விடயத்தை உயர்மட்ட அளவில் கொண்டுசென்று பரப்பப் போவதாக அவர் அதில் சொல்லியிருந்தார். ரி.என்.ஏக்குள் இருக்கும் தீவிரவாத குழுவுக்குள் ஆனந்தி தன்னை உறுதியாகப் பிணைத்துக் கொண்டிருந்தார்.



சத்தியப் பிரமாண நிகழ்ச்சி பற்றி முற்றிலும் தேவையற்ற விதத்தில் அளவுக்கு மீறிய கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்தி முள்ளிவாய்க்காலில்தான் அதைச் செய்யப்போவதாக விரும்பிய அசல் ஒன்பது அங்கத்தவர்களில் ஆனந்தி சசிதரனும் ஒருவர். ஆனால் பின்னர் அவர் அதிலிருந்து பின் வாங்கியதுடன் நந்திக்கடலேரியின் கரைகளில் தனியாகச் சத்தியப் பிரமாணம் செய்யவேண்டிய நிலைக்கு சிவாஜிலிங்கத்தையும் தள்ளிவிட்டார். எனினும் ஆனந்தி பல விடயங்களில் வல்வெட்டித்துறை சிவாஜிலிங்கத்துடன் இணைந்திருந்தார். மாகாணபை அமர்வுகளில் ஆளுனர் சந்திரசிறி பங்கெடுத்தபோது சிவாஜிலிங்கம் அதைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தபோது ஆனந்தியும் அவருடன் இணைந்து கொண்டார். சபையின் ஆரம்ப அமர்வின்போது ஆனந்தி எல்.ரீ.ரீ.ஈயின் நிறங்களான சிவப்பு மற்றும் மஞ்சள் நிற உடையில் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தார். ஆனந்தி சசிதரன் சிவாஜிலிங்கம் மற்றும் ஏனைய தமிழ் கட்சி அங்கத்தவர்களுடன் கூட்டுச் சேர்ந்து ரி.என்.ஏ ஒப்பீட்டளவில் மிதவாதம் மற்றும் பகுத்தறிவு தொடர்பான ஒரு நிலைப்பாட்டை மேற்கொள்ள முயற்சிக்கிறது எனக்கூறி அதன் தலைமைப்பீடத்துக்கு சங்கடம் ஏற்படுத்தும் நோக்கோடு மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிலும் கலந்து கொண்டார்.

பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டின்போது அதில் கலந்துகொள்ள வந்திருந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின்போது இது தெளிவாகவே புலப்பட்டது. மாவை சேனாதிராஜாவினால் வழி நடத்தப்படும் ரி.என்.ஏ யின் ஒரு பிரிவினர் காணிகளை கையகப்படுத்துவதற்கு எதிராக மாவிட்டபுரத்தில் ஒரு எதிர்ப்பு ஆhப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருந்த அதேவேளை சிவாஜிலிங்கம் மற்றும் ஆனந்தி போன்ற நபர்கள் காணாமற் போனவர்களப் பற்றிய ஒரு எதிர்ப்பு கூட்டத்தில் பங்குபற்றிக் கொண்டிருந்தார்கள். ரி.என்.ஏ யின் மூவர் கூட்டணியான சம்பந்தன் விக்னேஸ்வரன் மற்றும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் பிரதமர் கமரூனை நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதற்கு ஊக்குவித்துக் கொண்டிருந்தார்கள். இந்த மூன்று வகையான வெளிப்பாடுகளும் ரி.என்.ஏ க்குள் இருக்கும் பிளவுகளை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

இந்த எதிர்ப்புகளில் ஈடுபட்டிருந்த அதேநேரம் ஆனந்தி சசிதரன் அதிக அளவிலான ஊடக கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்திருந்தார். எளிதில் ஆணுகக் கூடியவராகவும் மற்றும் காணாமற் போன தனது கணவர் இருக்கும் இடத்தை தேடும் ஒரு பெண் என்கிற வண்ணப் பிரதியையும் கொண்டிருந்த ஆனந்தி சசிதரன் ஜனநாயக தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஊடக விளம்பரங்களில் மிகப் பெரிய பங்கினைக் கைப்பற்றியிருந்தார். பிரித்தானிய ஊடக வாகனம் ஒன்றுக்கு அருகில் ஓடிச்சென்று கோப்பு ஒன்றினைக் கையளிப்பது போன்ற சிறுபிள்ளைத் தனமான கேலிக்குரிய செயல்களிலும்கூட அவர் ஈடுபட்டிருந்தார். இவை அனைத்தும் வெளிநாடுகளிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ மற்றும் எல்.ரீ.ரீ.ஈ சார்பு ஊடக அமைப்புகளில் விரிவாக வெளியிடப்பட்டு வந்தன. புலிகளின் ஊடகங்களில் ஆனந்தி சசிதரனின் தோற்றம் பிரமாண்டமான விகிதத்தில் உருப்பெருக்கப்பட்டு வந்தன.

புலம்பெயர்ந்தோர்

இந்த மேம்படுத்தப்பட்ட தோற்றத்தின் விளைவாக தமிழ் புலம் பெயர்ந்தவர்களின் ஒன்று கூடல்களில் ஆனந்தி ஒரு வெற்றியாளராக மிகவும் உயர்வாக பேசப்படலானார். தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட பிறகு அவர் அமெரிக்கா ஜேர்மனி டென்மார்க் மற்றும் நோர்வே போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளார். அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, பிரித்தானியா, பெல்ஜியம் மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்யும் திட்டங்களும் இன்னும் கைவசம் உள்ளன. ஜேர்மனியில் பிரேமனில் உள்ள நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் முன் அவர் சாட்சியம் அளித்துள்ளார். ஸ்ரீலங்காவில் யுத்தக் குற்றப் பிரச்சினைகளை ஆராய்வதற்காக இங்கு வந்துள்ள அமெரிக்க தூதர் ஸ்ரீபன் றப் அவர்களையும் மற்றும் கொழும்புக்கான அமெரிக்க தூதுவர் மைக்கல் ஜே சிசன் அவர்களையும் யாழ்ப்பாணத்தில் வைத்து சந்தித்துள்ளார். அந்த சந்திப்பின் பின்னர் அவர்கள் மூவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார்கள். மேலும் கடந்தவாரம் கிளிநொச்சியில் காணாமற்போனவர்கள் பற்றிய விசாரணையை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையிலும் ஆனந்தி சாட்சியம் அளித்துள்ளார்.

ஆனந்தி சசிதரன் காணாமற்போன தனது கணவர் எழிலனின் நிலை என்ன என்பதை அறிந்து கொள்வதில் தைரியமாகவும் தொடர்ந்து செயற்பட்டும் வருகிறார். 2009 மே 18ல் வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் உள்ள ஓரிடத்தில் தனது கணவர் இராணுவ அதிகாரிகளிடம் சரணடைந்ததுக்கு தானே தனிப்பட்ட முறையில் நேரில் கண்ட சாட்சியாக இருந்ததாக கூறுகிறார். ஆனந்தியின் வாக்குமூலம் அதைப் பற்றிய ஒரு நம்பகத்தன்மையின் வளையத்தைக் கொண்டுள்ளது. இதனால்தான் அவரது வாக்குமூலம் பலரையும் நன்கு சென்றடைந்ததுடன் மற்றும் அதைக் கேட்ட பெரும்பாலானவர்களுக்கு அவரது நிலையையிட்டு அனுதாபம் கொள்ளாமலும் இருக்கமுடியவில்லை. பின்விளைவுகளைப் பற்றி அச்சப்படாமல் முன்னுக்கு வந்து இதைப்பற்றி தைரியமாகப் பேசும் அவரது துணிச்சலை பலரும் பாராட்டவும் செய்கிறார்கள்.

இந்தக் கட்டத்தில் ஆனந்தி மே 2009ல் படை அதிகாரிகளிடம் சரணடைந்தது பற்றி வலியுறுத்துவதை ஆதரிப்பதோ அல்லது மறுப்பதோ இந்தப் பத்தியின் நோக்கமல்ல. ஆனால் இந்தத் தருணத்தில் அது செய்ய விரும்புவது எல்லாம் ஒரு மூத்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர் என்ற வகையில் அவரது கணவர் எழிலனின் பங்கினையும் மற்றும் அவரது நடத்தையையும் பற்றிய கவனத்தை ஈர்ப்பது மட்டும்தான். ஆனந்தியின் இக்கட்டான நிலையை எண்ணி அனுதாபம் காட்டும் ஒருவர் கடந்த காலத்தில் எல்.ரீ.ரீ.ஈ யினால் பாதிப்படைந்த எண்ணற்ற பேர்களைப் பற்றியும் சற்றுச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இதுபற்றிய மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு இது சம்பந்தமாகவுள்ள எழிலனைப் பற்றிய பதிவுகளை சுருக்கமாக ஆராய்வது பொருத்தமாக இருக்கும். அது எந்த வழியிலும் ஆனந்தியின் தனிப்பட்ட வருத்தம் மற்றும் துயரம் என்பனவற்றை குறைத்துவிடாது ஆனால் வெறுமனே நிலமையின் இரட்டைத் தன்மையை அது சித்தரித்துக் காட்டுகிறது.

முன்னர் குறிப்பிட்டிருப்பதைப்போல எழிலன் எல்.ரீ.ரீ.ஈயின் அரசியல் பிரிவில் ஒரு தீவிர அங்கத்தவராவார். எல்.ரீ.ரீ.ஈயின் கொள்கைகளையும் மற்றும் சித்தாந்தங்களையும் தமிழ் மக்களிடையே பரப்புவதில் அவர் பாரிய அளவில் தொடர்புபட்டிருந்தார். அவர் வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் எல்.ரீ.ரீ.ஈயின் அரசியல் பிரிவின் பொறுப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். எல்.ரீ.ரீ.ஈயின் அரசியல் மற்றும் இராணுவப் பிரிவுகளிடையே ஒருபோதும் தெளிவாக வரையறுக்கப்பட்ட ஒரு எல்லைக்கோடு கிடையாது என்பது வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்று. 2002 பெப்ரவரிக்குப் பின் ஏற்பட்ட சமாதான காலத்தின்போது எல்.ரீ.ரீ.ஈ அரசாங்க கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் அரசியல் அலுவலகங்களை அமைத்தது அங்கு அவர்கள் வரி அறவிடுவதையும் மற்றும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தார்கள்.

முக்கியத்துவம்

2006ம் ஆண்டு திருகோணமலையில் கடைமையாற்றும் போதுதான் எழிலன் உezhilanலக முக்கியத்துவம் பெற்றார். திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரிவிலுள்ள மாவிலாறு ஆற்றின் வழியே சிங்கள குடியேற்றங்களுக்கு தண்ணீர் வழங்குவதை தடுப்பதை திட்டமிடுவதிலும் மற்றும் நடைமுறைப் படுத்துவதிலும் அவர் முக்கிய பங்கினை வகித்தார். தண்ணீர் விநியோகத்தை தடுப்பது மானிடத்துக்கு எதிரான ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது. அந்த நடவடிக்கையை பகிரங்கமாக நியாயப்படுத்துவதற்கும் எழிலனே பொறுப்பாக இருந்தார். உண்மையில் இந்த மாவிலாறு தண்ணீர் நிறுத்தம் எல்.ரீ.ரீ.ஈ செய்த மிகப்பெரிய தவறு என்பதுடன் அரசாங்கம் தார்மிக உயர் நோக்கத்துடன் போரை தீவிரப்படுத்துவதற்கும் அது வழியேற்படுத்தியது. இந்த விடயத்தில் தனக்குள்ள பங்கிலிருந்து எழிலனால் தப்பிக்கவே முடியாது. இந்த நடவடிக்கையில் அவருக்கு இருந்த நெருங்கிய தொடர்பு அவருக்கு மாவிலாறு எழிலன் என்கிற தலைப்பையும் பெற்றுத் தந்தது.

கிழக்கை திரும்பக் கைப்பற்றுவதில் இராணுவம் வெற்றி பெற்ற பிறகு எழிலன் மீண்டும் கிளிநொச்சிக்குத் திரும்பினார் அங்கு அவர் எல்.ரீ.ரீ.ஈயின் அரசியல் பணிமனையில் தமிழ் செல்வனின் கீழ் கடமையாற்றினார். யுத்தம் விரிவடைந்ததை தொடர்ந்து அரசியல் பிரிவினரின் கடமைகளில் கடுமையான மாற்றம் ஏற்பட்டது. அரசியல் பிரிவு ஆட்சேர்ப்பை விரிவுபடுத்தி போராளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆரம்பக் கட்டத்தில் தீவிர உணர்வு சார்ந்த பிரச்சாரங்களில் தங்கியிருந்த ஆட்சேர்ப்பு இயக்கம் விரைவிலேயே கட்டாய ஆட்சேர்ப்பு மற்றும் கட்டாய இராணுவசேவை என சீரழிவுக்குள்ளானது. எல்.ரீ.ரீ.ஈயின் அரசியல் பிரிவு அங்கத்தவர்கள் வீட்டுக்கு ஒரு வீரன் அல்லது வீராங்கனை என்கிற சொல்லாணையின் அடிப்படையில் இளைஞர்களை கட்டாய இராணுவ சேவையில் இணைப்பதில் முன்னணியில் நின்றார்கள். அளவுக்குமீறிய அழுத்தம் மற்றும் கொடுமையான நடவடிக்கைகள் இந்த கட்டாய ஆட்சேர்ப்பு இயக்கத்தில் பயன்படுத்தப் பட்டது. இந்த நடவடிக்கைகள் பற்றி முன்னர் வெளிவந்த பத்தியில் முன்னர் பிரசுரிக்கப்பட்டிருந்தது. நவம்பர் 2007ல் இடம்பெற்ற தமிழ்செல்வனின் மரணத்தின் பின் உண்மையில் ஆட்சேர்ப்பு என்கிற பெயரில் நடைபெற்ற கட்டாய இராணுவ சேவைக்கு மொத்தப் பொறுப்பாளராக எழிலன் நியமிக்கப்பட்டார். 2008 – 2009ம் ஆண்டுகளில் எழிலன் மற்றும் பெண்கள் அரசியல் பிரிவின் தலைவரான தமிழினி ஆகியோர்ää இளம் ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளை கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்ததற்காக மோசமான பெயரினைப் பெற்றிருந்தார்கள்.

எல்.ரீ.ரீ.ஈயானது முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் காரைத்துறைப்பற்றி உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குள் முடக்கப்பட்டதும் அது தனது கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பை மிகவும் உயர்ந்த மட்டத்தில் விரிவுபடுத்தியது. எல்.ரீ.ரீ.ஈயின் அரசியல் பிரிவை சேர்ந்த ஏனைய மூத்த தலைவர்களுடன் சேர்ந்து எழிலன் தொடர்ந்தும் இதில் ஒரு மோசமான பாத்திரத்தை வகித்து வந்தார். யுத்தம் முல்லைத்தீவு கரையோரமாக தீவிரமடைந்து வந்தபோது அதற்குள் அகப்பட்டிருந்த பொதுமக்கள் ஒரு துயரமான பணயக்கைதிகளின் நிலைக்கு ஆளானார்கள். தமிழர்களின் விடுதலைக்காக போராடுவதாக சொல்லிக் கொள்ளும் ஒரு இயக்கம்; மிகவும் பலவீனமான ஒரு பகுதியினரை அடிமைகளாக பிடித்து வைத்து அவர்களை ஆபத்தில் சிக்கவைத்து துயரப்படுத்தியது. அந்த நேரத்தில் அது விரிவடைந்துள்ள துயரம் தோய்ந்த மனிதாபிமான பேரழிவாகும் இந்த எழுத்தாளர் தனது டெய்லி மிரர் பத்திரிகையின் பத்திக் கட்டுரைகளில் “எனது மக்களை போகவிடுங்கள்” என்ற கட்டுரையூடாக தொடர்ச்சியாக இதற்காக விண்ணப்பித்துக் கொண்டிருந்தார். இந்த வேண்டுகோள்கள் யாவும் எல்.ரீ.ரீ.ஈயின் செவிட்டுக் காதில் ஏறவேயில்லை மற்றும் அதன் பின் நடந்தவை யாவும் இப்போது சரித்திரம்.

- டி.பி.எஸ். ஜெயராஜ்

(தொடரும்)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல