புதன், 29 ஜனவரி, 2014

எண் பலன்கள் இவ்வாண்டு உங்களுக்கு எப்படி....?

எண் 01

கம்­பீ­ர­மான தோற்­றமும் தமது தனித்­து­வத்தால் மற்­ற­வர்­களை கவரும் ஆற்றல் உடைய உங்­க­ளுக்கு 2014ஆம் ஆண்டு பலன்கள்.

01,10,19,28ஆம் திக­தி­களில் பிறந்­த­வர்­க­ளுக்கு பெரும் முயற்­சிக்கு பின்னர் நினைத்த காரி­யங்கள் கைகூடும். காரி­யங்கள் உங்கள் முயற்­சிகள் இழுத்­த­டித்த பின்னர் வெற்றி பெறும். உங்­க­ளது தன்­னம்­பிக்கை தான் இவ்­வ­ருடம் உங்­க­ளுக்கு வெற்­றியை தர­வுள்­ளது. இரண்­டடி ஏற மூன்­றடி சறுக்கும். சிறு சிறு நன்­மைகள் அவ்­வப்­போது நடப்­பினும் தீமை­களே அதி­க­ரித்­தி­ருக்கும். கவனம் தேவை.



வம்பு வழக்­கு­களை தவிர்க்­கவும். தேவை­யற்ற விட­யத்தில் தலை­யி­டா­தீர்கள். கூடப் பிறந்­த­வர்­க­ளி­டத்தில் சுமூக உறவைப் பேணுங்கள். சண்­டைகள் குறையும். உற­வி­னர்கள் மத்­தியில் பொரு­மையை கடைப்­பி­டி­யுங்கள். வீண் விவா­தங்­களை தவிர்த்துக் கொள்­ளுங்கள்.

இறை நம்­பிக்­கையும் கடவுள் பக்­தியும் தடை­களின் பின் வெற்றி கிட்டும். சூரிய வழி­பாடு நன்மை தரும். முட­வர்­க­ளுக்கு உதவி செய்­யுங்கள். பொறுமை, நம்­பிக்கை, சகிப்­புத்­தன்மை கடைப்­பி­டி­யுங்கள். துன்­பத்­திலும் இவ்­வ­ருடம் இன்பம் பொங்கும்.

எண் 02

உயர்ந்த குணத்­தாலும் கற்­பனை திறன் கொண்ட சந்­தி­ரனின் ஆதிக்கம் கொண்ட உங்­க­ளுக்கு 2014ம் ஆண்டு பலன்கள்.

02,11,20,29ஆம் திக­தி­களில் பிறந்­த­வர்­க­ளுக்கு அரச உத்­தி­யோ­கத்தில் உள்­ள­வர்­க­ளுக்கு அதிக நன்மை தரும் ஆண்­டிது. இவர்­க­ளுக்கு சம்­ப­ளள அதி­க­ரிப்பு, பதவி உயர்வும் உண்­டா­கலாம். வெளி­நாட்டு வெளி­யூர்­களில் இருந்து நல்ல செய்தி கிட்டும்.

வியா­பாரம் செய்­ப­வர்கள் இவ்­வாண்டில் வியா­பாரம் தொடர்­பாக புதிய முயற்­சி­களில்; நன்மை தரும். புதிய முயற்­சி­களில்; துநன்மை. புதிய முத­லீட்­டையும் கவ­ன­மாக செய்­யவும்.

ஊழி­யர்­க­ளுக்கு நன்மை தீமை சேர்ந்தே இருக்கும். வேலைத் தலத்­திலும் குடும்­பத்­திலும் தொல்­லைகள், சச்­ச­ர­வுகள் சற்று காணப்­படும்.

எண் 03

பொறு­மையும், அடக்­கமும், நேர்­மையும், பண்பும் உடைய கௌர­வத்தை பெரிதாய் மதிக்கும் உங்­க­ளுக்கு 2014ம் ஆண்டு பலன்கள்.

03,12,21,30ஆம் திக­தி­களில் பிறந்­த­வர்­க­ளுக்கு இவ்­வாண்டு உங்­க­ளுக்கு மாற்­றங்கள் ஏற்­ப­டுத்தும் ஆண்­டா­கவே அமைந்­துள்­ளது. உடல்­நிலை, தொழில், இடம் என அனைத்­திலும் மாற்றம் ஏற்­படும். இவ்­வாண்டில் உங்­க­ளுக்கு நன்மை, தீமை சரி சம­மா­கவே கலந்து இருக்கும்.

அர­சாங்க தொழில் செய்­ப­வர்­க­ளுக்கு இவ்­வாண்டில் பதவி உயர்வு அல்­லது மாற்றம் வெளி­நாட்டு தொழில் கிடைக்கும் வாய்ப்பு இருக்­கின்­றது. தொழிலில் வெறுப்பும் புதிய முயற்­சியில் ஈடு­பட வேண்­டிய நிலையும் காணப்­படும்.

குடும்­பத்தில் சுப­கா­ரி­யங்கள் நடை­பெறும். தள்­ளிப்­போன திரு­மணம் கைகூடும். பண வரவும், செலவும் மாறி மாறி தோன்றும். ஆரோக்­கியம் சீராக இருக்கும். மகிழ்ச்சி கூடும்.

இவ்­வாண்டில் மத்­தியில் குடும்­பத்தில் உற­வி­னர்­க­ளி­டத்தில் சில உடல்­நலக் குறைவு தோன்றும் வாய்ப்­புண்டு. துக்­க­க­ர­மான சில நிகழ்ச்­சிகள் இடம்­பெ­றலாம். குரு­வ­ழி­பாடு செய்­து­வர நன்மை பெருகும்.

எண் 04

போராட்ட இயல்­புடன் வாக்கு சாது­ரி­யமும், துணிவும் எதையும் மற்­றோ­ரிடம் எதிர்­பார்க்­காத இயல்­பு­டைய உங்­க­ளுக்கு 2014ஆம் ஆண்டு பலன்கள்

04,13,22,31ஆம் திக­தி­களில் பிறந்­த­வர்­க­ளுக்கு இவ்­வாண்டு முழு­வதும் சந்­தோ­ஷ­மான நிலையே காணப்­படும். சிற்­சில கவ­லைகள் தோன்றி மறையும்.

ஊழி­யர்­க­ளுக்கு மேல­தி­கா­ரி­க­ளுடன் வாய்­த­க­றாரும், தொல்­லை­களும் ஏற்­படும். ஆயினும் ஆண்டின் மத்­தியில் கவ­லைகள் நீங்கி அதி­கா­ரிகள் பாராட்டும் படி­யாக நடந்து கொள்­வார்கள். பதவி உயர்வு போன்ற நற்­செய்­தி­களும் கிடைக்கும்.

இவ் எண்­கா­ரர்கள் இவ்­வாண்டில் சிறிது கவ­னத்­து­டனே செயல்­பட வேண்டும். கோபத்­தாலும், அவ­ச­ரத்­தாலும், உணர்ச்­சி­வ­சப்­ப­டு­வ­த­னாலும், ஆபத்­துக்கள் ஏற்­பட வாய்ப்­புண்டு.தெய்வ வழி­பாடு செய்­வது நன்மை தரும்.

எண் 05

தீர்க்க தரி­ஷ­ணத்­துடன் ஜன வசீ­க­ரமாய் எதையும் திட்­ட­மிட்டு செய்யும் ஆற்­ற­லு­டைய உங்­க­ளுக்கு 2014ஆம் ஆண்டின் பலன்கள்.

05,14,23ஆம் திக­தி­களில் பிறந்­த­வர்­க­ளுக்கு இவ்­வாண்டில் இவ் எண்­கா­ரர்கள் புதிய முயற்­சி­களை மேற்­கொள்ளும் ஆண்­டா­கவே அமை­கின்­றது. புதிய தொழில், புதிய நண்­பர்கள், பெரி­யோர்­களின் ஆத­ர­வு­களும் கிடைக்கும்.

இவ்­வாண்டில் நீங்கள் மேற்­கொள்ளும் காரி­யங்கள் அனைத்­திலும் வெற்றி கிடைக்கும்.

திரு­மணம் சம்­பந்­த­மான நற்­செய்­திகள் கிடைக்க பெறும். கணவன், மனைவி அன்­யோன்யம் அதி­க­ரிக்கும். குடும்­பத்தில் மகிழ்ச்சி நிறைந்தே காணப்­படும்.

இவ் எண்­கா­ரர்கள் ஆண்டின் இறு­தியில் சற்று நிதா­ன­மா­கவே செயல்­பட வேண்டும். குடும்ப விவ­கா­ரங்­களை வழக்­குகள்; வரை கொண்டு செல்ல வேண்­டிய நிலை ஏற்­ப­டலாம். விஷ்­ணுவை வழி­பட வினைகள் அகலும்.

எண் 06

அறி­வுடன் கற்­றலும் சேர்ந்து எதையும் அழகாய் செய்யும் அழ­கு­டைய உங்­க­ளுக்கு 2014ம் ஆண்டின் பலன்கள்.

06,15,24ஆம் திக­தி­களில் பிறந்­த­வர்­க­ளுக்கு கணவன் மனைவி உறவு மேலோங்கும். குழந்தை செல்­வத்தை எதிர்­பார்ப்­ப­வர்­க­ளுக்கு அது கிட்டும். பிர­யா­ணங்­களை முடிந்­த­ளவு தவிர்த்துக் கொள்­ளவும்.

போட்டி, பந்­தயம், வழக்­கு­களில் கவ­ன­மாக இருக்­கவும். சந்­தர்ப்­பங்­களை சரி­யாக பயன்­ப­டுத்­துங்கள். பொரு­ளா­தாரம் பற்­றிய கவ­லைகள் காணப்­படும். கட­மையில் கருத்­தாக இருந்து கடின முயற்சி செய்தால் முயற்சி கிட்டும்.

எதிர்­கால நன்­மைக்­காக தொழிலில் சில மாற்­றங்கள் செய்ய நேரி­டலாம்.

கொடுக்கல் வாங்­கலில் கவ­ன­மாக இருக்­கவும். காரி­யத்தை தாம­தப்­ப­டுத்­து­வது, அச­தி­யாக சோம்­ப­லாக இருப்­பதும் பெரும் ஆபத்தை உரு­வாக்கும்.

எண் 07

தோற்­றத்­தி­லேயே நாண­யத்­தையும் கண்­ணி­யத்­தையும் பிறரை எடை­போடும் விநோத சக்தி கொண்ட உங்­க­ளுக்கு 2014ஆம் ஆண்டு பலன்கள்.

07,16,25ஆம் திக­தி­களில் பிறந்­த­வர்­க­ளுக்கு சொந்த தொழில் செய்­ப­வர்­க­ளுக்கு அபி­வி­ருத்­தியும் எதிர்­பா­ராத லாபமும் கிடைக்கும். உத்­தி­யோகம் செய்­ப­வர்­க­ளுக்கு சம்­பள உயர்வு, பதவி உயர்வு, எதிர்­பார்த்த இட­மாற்றம் கிடைக்க வாய்ப்பு உண்டு. அடிக்­கடி அதிர்ஷ்­டங்கள் கைகூடும். இன்ப அனு­ப­வங்கள் ஏற்­படும்.

வெளி­நாட்டு யோகம் கைகூடும். ஆரோக்­கியம் மேம்­படும். போட்டி, பந்­தயம், வழக்கு போன்ற விட­யங்­களில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டு. பெரிய அளவு பணத்­தட்­டுப்­பா­டுகள் ஏற்­ப­டாது. திரு­ம­ணத்தை எதிர்­பார்ப்­ப­வர்­க­ளுக்கு திரு­மணம் நடக்கும், குழந்தை செல்­வத்தை எதிர்­பார்ப்­ப­வர்­க­ளுக்கு குழந்தை செல்­வமும் கிடைக்கும். தடை­பட்ட காரி­யங்கள் கைகூடும்.

எண் 08

எதையும் சமா­ளித்து சிந்­தித்து செயல்­பட்டு கஷ்­டத்தை துஷ்­ட­மாக மதிக்கும் உங்­க­ளுகு;கு 2014ம் ஆண்டு பலன்கள்

08,17,26ஆம் திக­தி­களில் பிறந்­த­வர்­க­ளுக்கு காரி­யங்கள் இழு­ப­றி­யாகும். நினைத்த காரி­யங்கள் நினைத்­த­படி நடக்­காது. அலைச்சல் செலவு, கடன் தொல்­லையால் அவ­தி­பட நேரிடும்.

சொந்த தொழில் செய்­ப­வர்­க­ளுக்கு வரு­மானம் உண்­டாகும். ஆயினும் வேலை செய்­ப­வர்­களால் தொல்­லைகள் உரு­வாகும். அர­சாங்க ஊழி­யர்­க­ளுக்கு நன்மை, பொருள்­சேர்க்கை கிடைக்கும். மனைவி மக்­களால் நன்மை உண்டு. வழக்­குகள் இழு­படும்.

வரு­டத்தின் ஆரம்­பத்தில் சில தொல்­லை­களும் ஆரம்­பத்தில் சில தொல்­லை­களும் தொந்­த­ர­வு­களும் வந்து இறு­தியில் நன்மை உண்­டாகும். வருட இறு­தியில் தொழில் முன்­னேற்றம் லாபமும் அதி­க­ரிக்கும். ஆரோக்­கி­யத்தில் கவனம் செலுத்­தவும். கொடுக்கல் வாங்­கலில் கவனம் செலுத்­தவும். பிணை போவதை தவிர்க்­கவும். ஐயப்­பனை வழி­பட ஆரோக்­கியம் மிகும்.

எண் 09

அசா­தா­ரண விச­யத்தை சாதா­ர­ண­மாக செய்­து­மு­டிக்கும் போராட்ட குணம் உடைய உங்­க­ளுக்கு 2014ஆம் ஆண்டு பலன்கள்

09,18,27ஆம் திக­தி­களில் பிறந்­த­வர்­க­ளுக்கு செய்­தொ­ழிலில் அவ­தானம் தேவை. பொரு­ளா­தா­ரத்தில் சில முடக்­கங்கள் வருட ஆரம்­பத்தில் இருக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு தோன்றி மறையும்.

தொழிலில் தவிர்க்க முடியாத சில மாற்றங்கள் வருட ஆரம்பத்தில் ஏற்படும்.

வருட இறுதியில் பண வருவாய் சுமாராய் ஏற்படும். குடும்பத்தில் அமைதி, நிம்மதி, ஏற்படும். நினைத்த காரியமும், தடைபட்ட காரியமும் நடைபெறும். ஊதிய வரவு மகிழ்ச்சியை தரும். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். முருகனை வழிபட முயற்சி சித்தியாகும்.

ஜோதிட சித்தர்

பிரம்மஸ்ரீ டாக்டர் ராஜராஜகுருக்கள்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல