கடந்த சில வாரங்களாக ஸ்ரீலங்காவில் நடைபெற்று வரும் பரபரப்பான நிகழ்ச்சிகள்,பாதுகாப்பு தரப்பினரால், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பாக உள்நாட்டில் இயக்கி வரும் நிகழ்ச்சிகளைப் பற்றிய மூன்று முக்கிய உண்மைகளை வெளிப்படுத்துகின்றன.
கடந்த வாரம் இந்தப் பத்தியில் கிளிநொச்சி மாவட்டம், தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற ஒரு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையும் அதைத்தொடர்ந்து எல்.ரீ.ரீ.ஈக்கு புத்துயிர்ப்பு மேற்கொள்ள முயன்றுவரும் எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளாரான கோபி என்பவரை மனித வேட்டையாடுவதற்காக பாதுகாப்பு தரப்பினர் நடத்தும் தேடுதல் உட்பட பல சம்பவங்கள் பற்றி கவனம் செலுத்தப் பட்டிருந்தது. பாதுகாப்பு தரப்பினர் தங்களுக்கு எதிராக எழுந்துள்ள சவாலை முறியடிக்க மேற்கொள்ளும் முயற்சியின் தீவிரத்தை நாடு பெருமளவில் புரிந்துகொள்ளத் தவறிவிட்டது என்றே தோன்றுகிறது.
விரும்பியோ விரும்பாமலோ இந்தப் பிரச்சினையை அற்பமாக்கும் முயற்சிகள் காரணமாக அரசியல் நிறமாலையில் இருந்து வித்தியாசமான சாயலுள்ள கருத்துக்கள் வெளிப்பட்டிருந்தாலும், எல்.ரீ.ரீ.ஈக்கு புத்துயிர் கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் விடயம் தொடர்பான கடும் புதிர் வெற்றி பெறுமானால் அதன் விளைவாக நாட்டில் மோசமான பின்விளைவுகள் தோன்றலாம். பாதுகாப்பு தரப்பினரின் தேடுதல் வேட்டைகள் தீவின் சில பகுதிகளில் தொடர்ந்த போதிலும்,அதிர்ஷ்டவசமாக எல்.ரீ.ரீ.ஈயின் புத்துயிர்ப்பு சம்பந்தமான அச்சுறுத்தல்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு திறமையாக சரி செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தரப்பினருடன் தொடர்புள்ள நம்பிக்கையான வட்டாரங்களின் தகவல்படி, எல்.ரீ.ரீ.ஈ மறுமலர்ச்சி பெறுவதின் சாத்தியம் பற்றிய ஆய்வு நடைபெறுவதற்கான முக்கிய திருப்புமுனையாக இருப்பது, கொழும்பில் பிரதானமான ஓரு கொலையை நடத்துவதற்கான ஒரு சதி முயற்சி இருப்பதை கண்டுபிடித்ததே ஆகும். அதன் இலக்கு, ஒன்றில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அல்லது அவரது சகோதரரான பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி செயலாளராக உள்ள கோட்டபாய ராஜபக்ஸ ஆக இருக்கலாம் எனத் தெரிகிறது. இது ஒரு எளிய தர்க்க வாதமாக உள்ளது.
கொழும்பு
மே 2009ல் முள்ளிவாய்க்காலில் எல்.ரீ.ரீ.ஈக்கு ஏற்பட்ட இராணுவ தோல்வியினால் கடந்த வருடங்களில் கொழும்பில் எல்.ரீ.ரீ.ஈ யின் செயற்பாடுகள் எதுவும் இடம்பெறாததால் பாதுகாப்பு தரப்பினர் தவறான ஒரு மெத்தன உணர்வு காரணாக மந்த நிலையிலேயே கடமை புரிந்தனர். கொழும்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்தன. இது ஆச்சரியமான சில சகத்திகளை பயன்படுத்தி கொழும்பில் ஒரு செயல்பாட்டை நடத்துவதற்கு சாத்தியம் உள்ளது எனும் ஒரு நிலையை உருவாக்கியிருந்தது.
எல்.ரீ.ரீ.ஈயின் தற்போதைய பலவீனமான நிலை காரணமாக கொழும்பில் ஒரு தாக்குதலைத் தானும் நடத்துவதற்கு அதற்கு பெரிய அளவிலான வளங்கள் மற்றும் நிறவனத் திறமை என்பன தேவை. எனவே ஆரம்பத்தில் தனியான ஒரு ஒற்றை தாக்குதலை மட்டும் வெற்றிகரமாக நடத்துவதற்கான வாய்ப்புகள் சாத்தியமாகலாம். அதன்பின் பாதுகாப்பு தரப்பு அதிகாரிகள் முழு எச்சரிக்கை அடைந்து உஷாராகி விடுவதால் மற்;றொரு தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியங்கள் இல்லாது போய்விடும்.
இப்படியான சூழ்நிலையில் ஒப்பீட்டளவில் இலகுவான தாக்குதல்களை நடத்தி பாதுகாப்பு தரப்பினரை உஷார் படுத்துவது அர்த்தமற்ற செயலாகி விடும், ஏனெனில் பாதுகாப்பு தரப்பினர் கடுமையான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முயல்வதால் மேற்கொண்டு நடவடிக்கைகளை தொடருவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும். அதன் காரணமாக தாக்குதலுக்கான வாய்ப்பை மிகவும் உயர்ந்த இலக்குக்கு எதிராகப் பயன்;படுத்த வேண்டும். எளிதான இலக்குகளை முதலில் தாக்கினால் அத்தகைய முக்கியமான உயர்ந்த இலக்குகளைச் சுற்றியுள்ள பாதுகாப்பு வலயம் பலப்படுத்தப்பட்டு விடும். அத்தகைய பலமான பாதுகாப்பு சுவர்களை மீறிச் செல்வது தற்போது உண்மையில் ஸ்ரீலங்காவில் கரு நிலையில் உள்ள புத்துயிர் பெற்றுவரும் எல்.ரீ.ரீ.ஈக்கு சாத்தியப்படாது. இத்தகைய இலக்குக்கு பொருத்தமான கனகச்சிதான தகமைகளை ஜனாதிபதி மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் கொண்டுள்ளனர்.
தவிரவும் ஜனாதிபதி மற்றும் அவரது சகோதரரான பாதுகாப்பு செயலாளரை இலக்கு வைப்பது அதிகபட்ச அரசியல் ஆதாயத்தை எல்.ரீ.ரீ.ஈ அடைவதற்கு உதவும். அத்தகைய சக்திவாய்ந்த இலக்குகள் மீது தாக்குதல் தொடுக்கும் திறன் விளக்குவது, அது மதிப்பு வாய்ந்த ஒரு சமிக்ஞையாகவும் மற்றும் உலகளாவிய தமிழ் புலம்பெயர்ந்தோர்கள் மத்தியில் மறைந்;து விட்ட எல்.ரீ.ரீ.ஈயின் ஆதரவு தளத்தை மீளக் கைப்பற்ற உதவும் என்பதையே. எல்.ரீ.ரீ.ஈ ஒரு அழிந்து விட்ட சக்தி அல்ல என்பதை இது உலகத்துக்கு நிரூபிக்கும். மேலும் எல்.ரீ.ரீ.ஈ இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னர் மகிந்த மற்றும் கோட்டபாய ராஜபக்;ஸ ஆகியோரை எல்.ரீ.ரீ.ஈ சக்திகள் மிகவும் தீவிரமாக வெறுத்தன. இவர்களில் யாராவது ஒருவருக்கு தீங்கு விளைவிப்பது புலம்பெயர்ந்தோர்களிடையே உள்ள திவிரமான ஆதரவாளர்களின் இதயங்களை மகிழ்விப்பதுடன் எல்.ரீ.ரீ.ஈ யின் பணப்பெட்டிகளையும் எக்கச்சக்கமாக நிரப்பித் தள்ளும்.
பின்னடைவு
அது நாட்டை விரக்தி நிலைக்கு தள்ளுவதுடன் அரசியல் நிருவாக சமநிலையையும் சீர்குலைத்து விடும். ஒரு ஸ்திரமற்ற செயல்முறை உதயமாகிவிடும். அதற்குமேல அத்தகைய தாக்குதலின் விளைவாக ஒரு கொந்தளிப்பான சூழ்நிலை தோன்றுவதற்கு சாத்தியம் ஏற்படலாம், தமிழர்களுக்கு எதிரான ஒரு பின்னடைவான சூழலும் தோன்றலாம். நாட்டில் தமிழர்களுக்கு எதிரான ஒரு வன்செயல் மீண்டும் தோன்றுவதை எதிர்பார்த்து புலிகள், புலிகள் சார்பு மற்றும் ஆதரவான சக பயணிகள் ஆகியேர் ஆவலோடு காத்திருக்கிறார்கள். அப்படியான ஒரு தாக்குதல் வெற்றி பெறுமாயின் நிச்சயமாக தமிழ் மக்களுக்கு எதிராக அத்தகைய ஒரு வன்முறையான பின்னடைவு தோன்றும். தலைமைத்துவத்தின் உயர் மட்;டத்தை இலக்கு வைப்பது கடந்த காலங்களில் புலிகளின் செயற்பாடுகளின் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளது. ஒரு அமைப்பினை அல்லது நிறுவனத்தை பயனற்றதாக்கி,செயலற்றதாக்கி அல்லது தங்கள் பாதையை பின் தொடர கட்டாயப்படுத்த புலிகள் விரும்பினால் அவர்கள் அதன் அடிமட்ட அங்கத்தவர்களை இலக்கு வைப்பதில்லை. மாறாக அவர்கள் இலக்கு வைப்பது அதன் தலைவரை அல்லது தலைவருக்கு இணையான உயர் மட்டத்தை, குறிப்பாக அந்த அமைப்பின் உயிர் நாடியை. அதன்பின் அந்த அமைப்பின் அக்கறைகள் செயலற்றதாகி, பயனற்றதாகி அல்லது அவர்கள் வழிக்கு வந்துவிடும்.
கடந்த காலங்களில் எல்.ரீ.ரீ.ஈ தாங்கள் விரும்பும் அமைப்புகளைக் கட்டுப்படுத்த, அழிக்க அல்லது அதைச் செயலற்றதாக மாற்ற இத்தகைய நடவடிக்கைளைத்தான் கையாண்டது. இராணுவ ரீதியாகவும் எல்.ரீ.ரீ.ஈ இந்த மூலோபாயத்தைத்தான் 2005க்கு முந்தைய காலம்வரை பயன்படுத்தி வந்துள்ளது. முன்னர் எல்.ரீ.ரீ.ஈ ஒரு பொதுவான காலகட்டத்தில் ஆயுதப் படையினரைக் காட்டிலும் ஆட்பலத்திலும் மற்றும் ஆயுத பலத்திலும் பலவீனமாக இருந்தபோது, அத்தகைய நிலைப்பாட்டை சரி செய்யும் விதமாக ஒரு குறிப்பிட்ட பின்னணியில் இத்தகைய மூலோபாயத்தை பின்பற்றி வந்தது. அது முக்கியமான இராணுவ இலக்குகள், அதிகபட்ச வளங்களுடைய இராணுவ அணி என்பனவற்றை தேர்வு செய்து அதிர்ச்சியளிக்கும் மூலகத்தை பயன்படுத்தி தாக்குதல் தொடுத்து வந்தது. இந்த வெற்றிகரமான தாக்குதல்கள் பரபரப்பை ஏறபடுத்தியதுடன்அதன் விளைவாக எல்.ரீ.ரீ.ஈ யின் இராணுவ சக்திகளைப் பற்றிய ஒரு அளவுக்கு மீறிய மதிப்பிடலையும் தோற்றுவிக்கும். இந்த முறை ஆயுதப்படைகள் மத்தியில் மனத்தளர்ச்சி உருவாவதற்கும் வழி கோலியது.
டிசம்பர் 1986ல் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை (ஈபிஆர்எல்எப்) எல்.ரீ.ரீ.ஈ தாக்கியபோது இந்த வியூகத்தைத்தான் பின்பற்றியது. வடக்கில் ஒப்பிட்டளவில் எல்.ரீ.ரீ.ஈ, ஈபிஆர்எல்எப்பை விட வலுவானதாக இருந்தது,வடக்கில் இருந்த ஈபிஆர்எல்எப் முகாம்கள்மீது ஒரே நேரததில் தாக்குதல்களை தொடுத்து அவர்களை அழித்தார்கள். கிழக்கை பொறுத்தவரை ஈபிஆர்எல்எப், எண்ணிக்கையில் எல்.ரீ.ரீ.ஈயை விட அதிகமாகவும் மிகவும் பரவலாகவும் இருந்தார்கள். அங்கு ஈபிஆர்எல்எப் கொண்டிருந்த வலிமையின் பெரிய வேறுபாடு அவர்களுக்கு சாதகமாக இருந்தது.
தலைமை முகாம்கள்
எனினும் எல்.ரீ.ரீ.ஈ தனது மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைப் பயன்படுத்தி மற்றும் கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் இருந்த ஈபிஆர்எல்எப் தலைமை முகாம்கள் மூன்றினையும் தேர்ந்தெடுத்து இலக்கு வைத்து சாதுரியமாக ஈபிஆர்எல்எப் இனை வெளியேற்றியது. அம்பாறை,மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் முறையே தம்பிலுவில், கொக்கட்டிச்சோலை மற்றும் சாம்பல்தீவு ஆகிய இடங்களில் அமைந்திருந்த ஈபிஆர்எல்எப் தலைமை முகாம்களுக்கு எல்.ரீ.ரீ.ஈ யினர் ஒரே நேரத்தில் தாக்குதல் தொடுத்தார்கள். மூன்று தலைமை முகாம்களையும் கைப்பற்றியதுடன் எஞ்சியருந்த ஈபிஆர்எல்எப் அங்கத்தவர்கள் எண்ணிக்கையில் பெரிதாக இருந்த போதும் தலையறுபட்ட கோழிகளைப் போலாயினர்.
ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை இலக்கு வைப்பதற்காக உருவாகி வரும் திட்டங்களும் எல்.ரீ.ரீ.ஈயின் கடந்தகால செயல்வகைகளை ஒத்ததாக உள்ளன. புலிகள் 2009 க்குப் பின்னர் ஸ்ரீலங்காவில் அடித்து நொறுக்கப்பட்டு விட்டாலும் இப்போது புத்துயிர் பெற்றெழும் ஒரு முயற்சிக்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்கள். அவர்களின் செயற்பாட்டுக்கு போதுமான சொத்துக்கள் அவர்கள் வசம் இல்லாத போதிலும், ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈயின் மறமலர்ச்சிக்குப் பின்னாலுள்ள சூத்திரதாரியான கோபி மகிந்த அல்லது கோட்டபாயாவை இலக்கு வைக்கம் கொழும்பை அடிப்படையாக கொண்ட தாக்குதலை பற்றி சிந்தித்திருக்கிறார். அதிர்ஷ்டவசமாக அத்தகைய மோசமான திட்டம் கண்டுபிடிக்கப்பட்டு அந்த சதி ஒரு பரிணாம நிலையை எட்ட முன் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு விட்டது.
தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பது, திட்டமிட்டுள்ள அந்த தாக்குதலை அணுகுவதற்கு ஏற்ற ஒரு தளமாக பயன் படுத்துவதற்கு ஏற்ற நோக்கத்தோடு தெரிவு செய்யப்பட்ட கொழும்பிலுள்ள பாதுகாப்பான வீடு ஒன்று அடையாளம் காணப்பட்டு சோதனை மேற்கொள்ளப் பட்டது. அந்த மறைவிடம் வெளிப்படையாக தெகிவளையிலுள்ள ஒரு வெதுப்பகமாகும். அந்த வளாகத்துடன் தொடர்பு கொண்ட 12 பேர் கைது செய்யப்பட்டாளர்கள் அவர்கள் அனைவரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் பத்து பேர் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அதேவேளை இருவர் தீவிர விசாரணைக்காக கொழும்பிலுள்ள காவல்துறையினரின் புலனாய்வு தலைமையகத்தின் இரண்டாவது மாடியில் வைத்து விசாரிக்கப் படுகின்றனர்.
தெகிவளை
அந்த வெதுப்பக வளாகத்தினுள் கைது செய்யப்பட்டவர்களில் சிலர் உண்மையில் அப்பாவிகள், எல்.ரீ.ரீ.ஈ தேவையானவர்களுக்கு மட்டுமே விஷயங்களை வெளிப்படுத்தி செயற்பட்டு வரும் பழக்கத்தை கடைப்பிடிப்பதால், அவர்களின் கொடிய திட்டங்களைப் பற்றி இந்த அப்பாவிகளுக்கு மொத்தத்தில் எதுவும் தெரியாது. தெகிவளையில் நடந்த சுத்தமாக்கலுக்குப் பின்னர் புத்துயிர் பெற்றுள்ள புலிகளின் கொழும்பு தொடர்புகள் யாவும் செயலிழந்து போயுள்ளதைப் போல தெரிகிறது. நடைபெற்றுவரும் விசாரணைகள் வெளிப்படுத்தியிருப்பது, ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈக்கு புத்துயிர் வழங்குவதும்; மற்றும் தெகிவளையில், கொழும்பு தாவளம் ஒன்றை நிறுவுவது ஒன்று உட்பட முழு நடவடிக்கையினதும் அச்சாணியாக இருந்தவர் கோபி என்பவரே,அவரது முழுப்பெயர் பொன்னையா செல்வநாயகம் கஜீபன் என்பதாகும். அவரது மற்றைய இயக்கப் பெயர் கோபி என்பதும் மற்றொரு புனைபெயர் காசியன் என்பதுமாகும். முன்பு குறிப்பிட்டதைப் போல 31 வயதுடைய ஆறடி உயரமும் நடுத்தர நிறமும் இடதுபுற மேலுதட்டில் ஒரு மச்சமும் உடைய இந்த நபர் கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் வசித்தபடி, ஒரு கனரக வாகன ஓட்டுனராக தொழில் புரிந்து வந்துள்ளார். கோபி என்கிற கஜீபன் முன்னர் எல்.ரீ.ரீ.ஈ யினது பலனாய்வப் பிரிவு செயற்பாட்டாளராக இருந்த அச்சமூட்டும் பொட்டு அம்மான் என்கிற சண்முகலிங்கம் சிவசங்கரனின் கீழ் இயங்கி வந்துள்ளார். யுத்த முடிவில் சரணடைந்த கஜீபன் வவுனியா பூந்தோட்டத்தில் இயங்கிவந்த பாதுகாப்பு வதிவிடம் மற்றும் புனர்வாழ்வு மையத்தில் (பார்க்) சேர்க்கப்பட்டார்.
பூந்தோட்டம் முகாமிலிருந்து ஆளும் தரப்பு தமிழ் அங்கத்தவர் ஒருவரின் உதவியால் வெளிவந்ததாகச் சந்தேகிக்கப்படும் கோபி,பின்னர் சவுதி அரேபியாவுக்குச் சென்றார், கட்டாருக்கு அல்ல, கடந்த வாரம் தவறுதலாக நான் கட்டார் என எழுதிவிட்டேன். அந்த நாட்டில் சிறிது காலம் வேலை செய்த பின்னர் கஜீபன் என்கிற கோபி, ஐரோப்பாவை நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தார். ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கும் பரவலாக பயணம் மேற்கொண்ட அவர் நோர்வேக்கும் சென்றார். தற்போது தனது சுயவிபரங்களை தாழ்த்திக் கொண்டு செயற்பட்டு வரும் உயர் மட்டத் தலைவர் நெடியவன் மற்றும் அவரது சிரேட்ட உதவியாளரான இரும்பொறை ஆகியோர் உட்பட ஐரோப்பாவிலுள்ள எல்.ரீ.ரீ.ஈயின் முன்னணி செயற்பாட்டாளர்களை கோபி தனது சொற்பகால ஐரோப்பிய வாசத்தின்போது சந்தித்திருக்கலாம் என இப்போது சந்தேகிக்கப் படுகிறது. ஸ்ரீலங்காவில் புலிகளுக்கு புத்துயிர் வழங்கும் பணி நெடியவன் மற்றும் இரும்பொறை ஆகியோரினால் இவரிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கலாம்.
பின்னர் இவர் ஸ்ரீலங்காவிற்கு திரும்பி ஒரு கனரக வாகனத்தின் சொந்தக்காரர் மற்றும் ஓட்டுனராக பணியாற்றத் தொடங்கினார். கோபியிடம் சொந்தமாக கனரக வாகனம் இருந்தது, அதை அவர் வாடகைக்கு விடுவதுடன் அதன் ஓட்டுனராக தானே பணியாற்றினார். இதன் காரணமாக கொழும்புக்கும் மற்றும் முல்லைத்தீவு,வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற நகரங்களுக்கும் இதைப் பயன்படுத்தி அவரால் பயணம் செய்வதற்கு வழி அமைந்தது. விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அவரது மனைவி மற்றும் தாயார் ஆகியோர் அவரது இருப்பிடம் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என மறுத்ததுடன் மற்றும் அவர் தங்களை விட்டு தனியாக வேறு இடத்தில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
பாதுகாப்பு வட்டாரங்கள் வடக்கில் எல்.ரீ.ரீ.ஈக்கு புத்துயிர் அளிக்கும் பொறுப்பு கோபியிடமே ஒப்படைக்கப் பட்டிருக்கிறது என கருதுகிறார்கள். சாதாரணமானவரைப் போல காட்சியளிக்கும் கோபியின் வெளித் தோற்றம் அளவுக்கு மீறி ஆபத்தானது என அவர்கள் கருதுகிறார்கள், ஏனெனில் அவரது அரசியல் கண்ணோட்டம் மற்றும் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் பணி பற்றிய உணர்வு என்பனவற்றால் ஒரு வெறித்தனமான நிலைக்கு அவர் ஆட்பட்டிருந்தார். கோபி மிகவும் உன்னதமான உணர்வைக் கொண்டவராகக் கருதப்படுகிறார், ஏனெனில் ஐரோப்பாவில் வசதியானதும் பாதுகாப்பானதுமான ஒரு வாழ்க்கை வாழ்வதற்கான வாய்ப்பு கிடைத்த போதும் அதை தூக்கியெறிந்துவிட்டு அதற்குப் பதிலாக அபாயம் நிறைந்த மிகவும் ஆபத்தான ஒரு பணியை நிறைவேற்ற தன்னிச்சையாக நாட்டுக்குத் திரும்பி வந்திருக்கிறார்.
ஆயுதம் தாங்கியுள்ள ஒரு ஆபத்தான மனிதராக கோபி பார்க்கப்படுகிறார் ஆரம்பத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் கண்காணிப்பு கருவியில் கோபி, புலிகள் தமிழர்களின் பாதுகாவலர்கள் எனப் புகழும் எல்.ரீ.ரீ.ஈ சார்பான துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து வினியோகித்த சிறிய குற்றவாளியாகவே தென்பட்டுள்ளார். மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் பளை பகுதியில் வைத்து அத்தகைய துண்டுப் பிரசுரங்களை வினியோகித்த இரண்டு இளைஞர்களை கைது செய்து விசாரித்ததின் விளைவாக கோபி என்கிற பெயர் வெளிச்சத்துக்கு வந்தது. பாதுகாப்பு படைகள் கோபியை தேடிவந்தார்;கள், ஆனால் நெடியவன் தலைமையிலான புலம்பெயர் புலிகளின் பின்துணையுடன் வடக்கில் எல்.ரீ.ரீ.ஈயின் மறுமலர்ச்சிக்கு வித்திடும் சூத்திரதாரியாக அவர் இருப்பார் என்று ஆரம்பத்தில் சந்தேகிக்கவில்லை. தர்மபுரத்தில் ஜெயகுமாரி பாலேந்திராவின் வீட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் அளித்த எச்சரிக்கைதான் பாதுகாப்பு பிரிவின் புலனாய்வாளார்களுக்கு கோபியின் சுயரூபத்தை தெரிய வைத்துள்ளது.(அந்தச் சம்பவம் கடந்த வாரம் விரிவாக விளக்கப்பட்டது).
தற்போதைய விசாரணைகள் அடையாளம் காட்டியிருப்பது,கோபி எல்.ரீ.ரீ.ஈ யின் புத்துயிர்ப்பை இலக்காகக் கொண்ட திட்டங்களை நிறைவேற்ற வடக்கில் நான்கு சிறு குழுக்களையும் கொழும்பில் ஒன்றையும் அமைத்துள்ளார் என்பதை. புதிதாக முளைவிட்டிருக்கும் புலிகளின் வலையமைப்புக்குள் இணைவதற்கு சேர்க்கப்பட்டவர்கள் ஒன்றில் முன்னாள் புலிகள் அல்லது முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் குடும்ப அங்கத்;தவர்கள் ஆவார்கள். மூன்று மேற்குலக நாடுகளிலுள்ள புலம்பெயர் எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர்களிடமிருந்து நிதி வடக்கிலுள்ள கோபியின் முகவர்களுக்கு அனுப்பியுள்ளதற்கான சான்றுகளும் கிடைத்துளளன.
நடவடிக்கைகள்
பயங்கரவாத தடைப் பிரிவு புலனாய்வாளர்களின் துணையுடன், பாதுகாப்பு படைகள் தற்சமயம் வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் ஒரு தொடரான பரந்துபட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ஆண் பெண் ஆகிய இருபாலாரையம் சேர்ந்த நூற்றுக் கணக்கான பேர்கள் பிரதானமாக இளையோர்கள் சுற்றி வளைக்கப்பட்டு விசாரிக்கப் பட்டார்கள்;. சுற்றி வளைக்கப்பட்டதில் பெரும்பாலானவர்கள் சில மணித்தியாலங்களின் பின் விடுவிக்கப் பட்டுள்ளார்கள். ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு தொடாந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அவர்களிலும் பலர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். தற்சமயம் 30 க்கும் மேற்பட்டவர்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாக அறியப்படுகிறது. எனினும் இந்த எண்ணிக்கை மாறிக்கொணடே போகும் ஏனெனில் சிலர் விடுவிக்கப்படும் அதேவேளை மற்றும் பலர் புதிதாக கைது செய்யப்படலாம்.
பாதுகாப்புடன் தொடர்புள்ள வட்டாரங்கள், புத்துயிர் பெற்ற எல்.ரீ.ரீ.ஈயினரை, தற்போது நடத்தப்பட்டு வரும் தேடுதல் வேட்டை மூலம் நடுநிலைப் படுத்த தங்களால் முடியும் என உறுதியாக நம்புகின்றன. கோபி கைது செய்யப்படடுள்ளார் என்பதை ஆவேசமாக மறுத்த அவர்கள், ஆனால் அவரை விரைவில் பிடித்து விடுவோம் என நம்பிக்கை வெளியிட்டனர். எப்போதாவது கோபி பிடிபடக்கூடிய சந்;தர்ப்பம் ஏற்பட்டால் அவர் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய சாத்தியத்தையும் பாதுகாப்பு வட்டாரங்கள் நிராகரிக்கவில்லை.
சந்தேகமான புலிகள் மீது மேற்கொள்ளப்படும் தேடுதல் வேட்டைகள் பற்றிய மேலதிக விபரங்கள் அதேபோல எல்.ரீ.ரீ.ஈ செயற்பாடுகள் உள்ளதாக கூறப்படும் குற்றச்சட்டுகள் தொடர்பான விசாரணைகள் என்பன பற்றி இனிவரும் கட்டுரையில் விளக்கப்படும்.
- டி.பி.எஸ் ஜெயராஜ்
மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
- முதலாவது, தமிழ் புலம் பெயர்ந்தோரிடையே உள்ள புலிகள் மற்றும் புலிகள் சார்பு அமைப்பு எல்.ரீ.ரீ.ஈ க்கு புத்துயிர் அளிக்கும் முயற்சிகளை மேற்கொள்வதுடன் ஸ்ரீலங்காவின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்து வருவது.
- இரண்டாவதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அத்தகைய சவால்களுக்கு சர்வதேச அபிராயங்களைப் பற்றிக் கவலைப்படாமல் திறமையாக பதிலடி கொடுத்து வருவது.
- மூன்றாவதாக நாட்டில் வலுவாக வேரூன்றியுள்ள பாதுகாப்பு அமைப்பினர் எல்.ரீ.ரீ.ஈ யினர் மேற்கொள்வதாக உணரப்படும் அத்தகைய புத்துயிர்ப்பு முயற்சிகளை முறிடித்து நசுக்கும் திறமையை பெற்றிருப்பது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக