செவ்வாய், 1 ஏப்ரல், 2014

மலேசிய விமானம் கடலில் ஒரு ரன்வேயில் லேன்டிங் செய்ததா? அப்படித்தான் சொல்கிறது மலேசியா!

மாயமாக மலேசிய விமானம் தொடர்பாக இப்போது ‘மாயமான நிலைப்பாடு’ ஒன்றை எடுத்துள்ளது மலேசிய அரசு. “விமானம் கடலில் மூழ்கியது என்றோ, அதிலிருந்த அனைவரும் கொல்லப்பட்டார்கள் என்றோ நாம் இதுவரை அறிவிக்கவில்லை” என ஒரே போடாக போடுகிறார்கள் அவர்கள்.



நேற்று (திங்கட்கிழமை) நடந்த செய்தியாளர் மாநாட்டில் பேசிய மலேசியாவின் தற்காலிக போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுதின் ஹூசேன், “பிரதமர் நஜிப் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. பிரதமர், ‘மலேசிய விமானம் MH370 தனது பயணத்தை இந்திய கடலில் முடித்துக் கொண்டது’ என்றுதான் சொன்னாரே தவிர, ‘விமானம் கடலில் மூழ்கியது’ என்றோ, ‘அதிலிருந்த அனைவரும் கொல்லப்பட்டார்கள்’ என்றோ தெரிவிக்கவில்லை” என்றார்.

வரவர மலேசிய அரசு கூறுவதை புரிந்துகொள்ள தனித் திறமையும், புது ஆங்கில அகராதியும் தேவைப்படும் போலிருக்கிறதே!

மலேசிய விமானம் MH370 தனது பயணத்தை இந்திய கடலில் முடித்துக் கொண்டது. ஆனால், கடலில் மூழ்கவுமில்லை, பயணிகள் அனைவரும் இறக்கவுமில்லை என்றால் என்னங்க அர்த்தம்?

மலேசிய அர்த்தத்தின்படி, இந்தியக் கடலில் ஒரு ரன்வேயில் லேன்டிங் செய்ததா? இந்திய கடலின் ‘அடியில்’ உள்ள ஒரு ஹோட்டலில் பயணிகள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்களா? அப்புறம் இப்போது கடலில் எதை தேடுகிறார்களாம்?

காமெடி பண்ணுவதில் தவறில்லை. ஆனால், நூற்றுக்கணக்கான உயிர்களுடன் காமெடி பண்ணக்கூடாது!

விறுவிறுப்பு.காம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல