செவ்வாய், 1 ஏப்ரல், 2014

விமானம் பற்றி உருப்படியா ஏதாவது சொல்கிறீர்களா?: மலேசியா மீது பயணிகளின் உறவினர்கள் பாய்ச்சல்

கோலாலம்பூர்: கடலில் விழுந்த விமானம் பற்றி உறுதியான தகவல்கள் எதையும் மலேசியா அளிக்கவில்லை என்று மலேசிய விமான பயணிகள் உறவினர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.



மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கடந்த மாதம் 8ம் தேதி கிளம்பிய மலேசிய விமானம் மாயமானது. விமானம் என்ன ஆனது, அதில் பயணம் செய்தவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் இரண்டு வாரங்கள் ஓடின.

அதன் பிறகு இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் அளித்த தகவலை வைத்து விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துவிட்டதாகவும், அதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாகவும் மலேசியா கடந்த திங்கட்கிழமை அறிவித்தது.

இதையடுத்து விமானத்தை தேடும் பணி தெற்கு இந்திய பெருங்கடலில் நடைபெற்று வருகிறது. கடலில் பல்வேறு பொருட்கள் மிதப்பதாக செய்திகள் வெளியாகின்றன. ஆனால் விமானத்தின் பாகங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

இந்நிலையில் விமானம் மாயமானதில் இருந்து மலேசிய அதிகாரிகள் முரண்பாடான தகவல்களை அளிப்பதாக விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல