மாயமான மலேசிய விமானம் தொடர்பான புலனாய்வு, ‘கிரிமினல் விசாரணை’ என்ற விதத்தில் நடைபெறுவதாக மலேசிய காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகை, இந்த தகவலை மலேசிய போலீஸ் துறை தலைவர் காலித் அபுபக்கர் தெரிவித்ததாக இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
காணாமல் போன மலேசிய விமானம் தொடர்பான புலனாய்வு, இன்று 25 நாளாக நடைபெறும் நிலையிலும், இதுவரை உருப்படியாக தடயம் ஏதும் கிடைக்கவில்லை. இதை யார் செய்தார்கள், எதற்காக செய்தார்கள் என்பதற்கான விளக்கம் ஏதுமில்லை. விமானம் என்ன ஆனது என்பதற்கு ஆதாரம்கூட எதுவுமில்லை.
வழமையாக இப்படியான விவகாரங்கள், சர்வதேச சிவில் ஏவியேஷன் விசாரணை என்ற வகையிலேயே நடைபெறும். ஆனால் மலேசிய காவல்துறை தலைவரோ, இது கிரிமினல் விசாரணை என்கிறார்.
இதில் பெரிய தமாஷ் என்னவென்றால், விமானத்தை செலுத்திச் சென்ற பிரதான விமானி கேப்டன் ஷாவின் வீட்டில் இருந்த பிளைட் சிமுலேட்டரை புலனாய்வுக்காக எடுத்துச் சென்றது மலேசிய போலீஸ். இப்போது அந்த பிளைட் சிமுலேட்டர் அமெரிக்காவிடம் போய் சேர்ந்துவிட்டது. அமெரிக்க புலனாய்வுத்துறை FBI- வசம் உள்ளது அது.
மாயமான விமானத்தை இந்தியக் கடலில் தேடுவதற்கான ஆபரேஷன் சென்டர், ஆஸ்திரேலியாவில் செயல்படுகிறது…. தேடுதலுக்கு செல்லும் விமானங்கள், பேர்த் நகரில் இருந்து செல்கின்றன…. பிளைட் சிமுலேட்டர் அமெரிக்காவில்…. விமானிகளையும், பயணிகளையும் காணவில்லை…. மலேசிய போலீஸ், ‘கிரிமினல் கேஸ்’ என்கிறது.
ஆமா மிஸ்டர் அபுபக்கர், “இந்த கேஸில், குற்றம் என்னங்க?”
viruvirupu

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக