ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

வெந்தயத்தின் மருத்துவக் குணங்கள்

நமது முன்னோர் சமை­ய­ல­றை­யி­லேயே வைத்­தி­யத்­தையும் வைத்­தி­ருந்­தனர். அதில் முக்­கி­ய­மா­னது வெந்­தயம். வெந்­த­யத்தில் புரதம், நார்ச்­சத்து, விட்­டமின் சி, நியாசின், பொட்­டா­சியம், இரும்பு, அல்­கலாய்ட் போன்ற சத்­துக்கள் அடங்­கி­யுள்­ளன.மேலும் கூட்டு டையோஸ்­ஜெனின் உள்­ளதால்,ஈஸ்ட்­ரோஜன் போன்ற குணங்கள் மற்றும் ஸ்டீராய்டல் சப்­போனின் போன்­ற­வை­க­ளையும் தன்­ன­கத்தே கொண்­டுள்­ளது.



கொலஸ்ட்ரோலை குறைக்க வெந்­தயம் உதவி செய்­கி­றது. முக்­கி­ய­மாக கொழுப்பு ­பு­ர­தத்தை குறைக்க உத­வு­கி­றது. இதய நோய்க்கு வெந்­தயம் ஒரு சிறந்த மருந்து. வெந்­த­யத்தில் உள்ள நார்ச்­சத்து இதய அடைப்பு இடர்­பாட்டை குறைக்கும். இதில் பொட்­டா­சியம் உள்­ளதால், இதயத் துடிப்பு மற்றும் ரத்தக் கொதிப்பை கட்­டுப்­ப­டுத்தும். சர்க்­கரை நோய் உள்­ள­வர்­க­ளுக்கு சர்க்­க­ரையை இரத்தம் உட்­கொள்ளும் வீதம் குறையும்.

வெந்­த­யத்தில் அமினோ அமிலம் உள்­ளதால், இன்­சுலின் உற்­பத்­தியை அது தூண்­டி­விடும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்­க­ளுக்கு கண்­டிப்­பாக வெந்­தயம் தேவை. அதி­லுள்ள டையோஸ்­ஜெனின் பெண்­க­ளுக்கு தாய்ப்பால் சுரப்­பதை அதி­க­ரிக்கும். பிர­சவ வலியை குறைத்து குழந்தை பிறப்பை தூண்டும். ஆனால் கர்ப்ப காலத்தில் அள­வுக்கு அதி­க­மாக வெந்­த­யத்தை எடுத்துக் கொண்டால், கருச்­சி­தைவு அல்­லது குறை­பி­ர­சவம் ஏற்­படும் அபாயம் உள்­ளது.

மாத­விடாய் காலத்தின் போது ஏற்­படும் காய்ச்சல் உணர்வு, உடல் சூடு மற்றும் மன­நிலை மாற்­றத்­தையும் சாந்­தப்­ப­டுத்தும். உணவில் ஒரு தேக்­க­ரண்டி வெந்­த­யத்தை சேர்த்துக் கொண்டால், அதி­கப்­ப­டி­யான அமிலப் பாய்ச்சல் அல்­லது நெஞ்­செ­ரிச்­ச­லுக்கு உட­னடி நிவா­ரணம் கிடைக்கும்.

நமது வயிற்றின் அக உறை மற்றும் குடலில், வெந்­த­யத்தின் பசைப் பொருள் சூழ்ந்து கொள்­வதால், எரிச்­சலை உண்­டாக்கும். அதனை உட்­கொள்­வ­தற்கு முன்­பாக வெந்­த­யத்தை தண்­ணீரில் ஊற வைத்தால் அதன் வெளிப்­புறம் பசைத்­தன்­மையை பெறும். வெந்­த­யத்தை ஒரு தேக்­க­ரண்டி எலு­மிச்சை சாறு மற்றும் தேனுடன் கலந்து பரு­கினால் காய்ச்­சலால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு காய்ச்­சலை குறைத்துஉட­லுக்கு புத்­து­ணர்வு கொடுக்கும். வெந்­த­யத்தின் பசைப்­பொருள், இருமல் மற்றும் தொண்டை எரிச்­ச­லையும் நீக்கும்.

வெந்­த­யத்தில் உள்ள நார்ச்­சத்து (சபோனின்ஸ், பசைப்­பொருள் போன்­ற­வைகள்) உண­வு­களில் இருந்து உள்­ளேறிய நச்­சுத்­தன்­மையை உடலில் இருந்து வெளி­யேற்றும். இது பெருங்­கு­டலின் சீதப்­ப­ட­லத்தை புற்­றுநோய் ஏற்­ப­டாமல் பார்த்துக் கொள்ளும். செரி­மா­னத்தை ஊக்­கு­வித்து, உட­லி­லுள்ள தீமை­யான நச்­சுக்­களை வெளி­யேற்றும். இது செரி­மா­ன­மின்­மையை நீக்கி, மலச்­சிக்­கலை போக்கும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்­த­யத்தை சாப்­பிட்டால் அதி­லுள்ள இயற்­கை­யான கரை­யத்­தக்க நார்ச்­சத்­துக்கள்பசியை அடக்­கி­விடும். ஊற வைத்த சுத்­த­மான வெந்­த­யத்தில் இருந்து செய்­யப்­பட்ட பேஸ்ட்டை சரும சிகிச்­சை­க­ளுக்கு பயன்­ப­டுத்­தலாம். அதில் தீக்­காயம், கொப்­பளம், சரும படை போன்ற பிரச்­சி­னை­களும் அடக்கம். கரும்­புள்­ளிகள், பருக்கள், சுருக்­கங்கள் போன்­ற­வை­களை தடுக்க வெந்­த­யத்தை பேஸ் பெக்­காக பயன்­ப­டுத்­தலாம்.

வெந்­த­யத்தை போட்டு கொதிக்க வைத்த நீரை கொண்டு முகத்தை கழு­வி­னாலும் சரி அல்­லது நற்­ப­த­மான வெந்­தய இலை­களை கொண்டு செய்த பேஸ்ட்டை 20 நிமி­டங்­க­ளுக்கு முகத்தில் தட­வி­னாலும் சரி, சரு­மத்தில் பல அதி­ச­யங்கள் அரங்­கேறும்.

வெந்தயத்தை உணவோடு சேர்த்து கொண்டாலும் சரி அல்லது அதன் பேஸ்ட்டை தலைமுடியில் தடவிக் கொண்டாலும் சரி, உங்கள் தலைமுடியை பளபளவென கருமையாக்கும். தினமும் இரவு தேங்காய் எண்ணெயில் ஊற வைத்த வெந்தயத்தை கொண்டு மறுநாள் காலை தலையில் மசாஜ் செய்தால் பொடுகை விரட்டும் முடி உதிர்தலுக்கு பெரிய நிவாரணியாக இருக்கும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல