ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

அழகு குறிப்புகள்

பாதம் : தினமும் இரவில் படுக்கப் போவ­தற்கு முன்பு ஒரு பாத்­தி­ரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலு­மிச்­சைச்­சாறு, ஷாம்போ போட்டு பாதங்­களை பத்து நிமி­டங்கள் வரை ஊற வையுங்கள். பிறகு பிரஷ்ஷால் சுத்தம் செய்­யுங்கள். பாதங்கள் அழ­காகும்.



கழுத்து : சில­ருக்கு நகைகள் அணி­வதால் கழுத்தில் கரு­வ­ளையம் ஏற்­படும். இதைத் தவிர்க்க கோதுமை மாவில் வெண்ணெய் கலந்து கழுத்தை சுற்றி பூசி, 20 நிமி­டங்கள் ஊற வையுங்கள். பிறகு குளி­யுங்கள். இப்­படி தினமும் செய்து வந்தால் கழுத்தில் இருக்கும் கரு­வ­ளையம் மறைந்­து­விடும்.

கூந்தல் : தலை முடியை ஜொலிக்க வைக்கும் சக்தி ஓரஞ்சு தோலுக்கு உண்டு. எனவே உலர்ந்த ஓரஞ்சு தோலுடன் வெட்­டிவேர், சம்­பங்கி விதை, கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பு, கச­கசா ஆகி­ய­வற்றை ஒன்­றாக அரைத்து வாரம் ஒரு முறை இந்தப் பொடியால் தலைக்கு தேய்த்து குளி­யுங்கள். கூந்தல் பள­ப­ளப்­பாக மாறும்.

முகம் : பழுத்த வாழைப்­ப­ழத்தை பாலில் கலந்து முகத்தில் பூசுங்கள். முகம் பளப்­ப­ளக்கும். பப்­பாளிப்பழத்­துடன் எலு­மிச்சைச் சாற்றை கலந்து தட­வுங்கள். முகத்­துக்கு நல்ல நிறம் கிடைக்கும்.

உதடு : இன்­றைய இளம் பெண்கள் சில­ருக்கும் உதட்டில் வெடிப்பு ஏற்­பட்டு இரத்தம் கசியும். பின் படிப்­ப­டி­யாக உதடுகள் கறுப்­பா­ன­தாக மாறி­விடும். இதற்கு மிக முக்­கிய காரணம் உடலில் அதிக உஷ்ணம் இருப்­ப­துதான். இந்த உடல் சூட்டை போக்க ஒரு ஸ்பூன் வெந்­த­யத்தை இரவில் ஊற வையுங்கள். காலை எழுந்­ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்­த­யத்தை போட்டு குடி­யுங்கள். அதே போல் இரவில் படுக்கப் போகும் போது வெண்­ணெயை உதட்டில் தடவிக் கொள்­ளுங்கள். இந்த இரண்­டையும் தொடர்ந்து செய்து வந்தால் உதடு பழைய பொலிவுக்கு வந்துவிடும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல