ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

கற்­பூ­ரத்தின் மருத்­துவ குணங்கள்

கற்­பூ­ரத்தில் நிறைய மருத்­துவ குணங்கள் நிறைந்­துள்­ளன. அதிலும் இதில் இருந்து வெளி­வரும் நறு­ம­ணத்­திற்கு காரணம், இதில் உள்ள கெமிக்கல் தான். கற்­பூரம் சாமி கும்­பிடும் போது மட்டும் பயன்­ப­டாமல் சில அழகுப் பரா­ம­ரிப்­பிலும் பயன்­ப­டு­கி­றது. அதுவும் முடி மற்றும் சரும பரா­ம­ரிப்­பிற்கு பெரிதும் உத­வி­யாக உள்­ளது. அதனால் தான் அது ஆயுர்­வேத அழகுப் பரா­ம­ரிப்பில் அதிகம் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. மேலும் அதிக முகப்­ப­ருக்கள் மற்றும் பிம்­பிளால் அவஸ்­தைப்­படு­ப­வர்கள் கற்­பூ­ரத்தை கொண்டு சரி­செய்­யலாம். இது போன்று கற்­பூரம் அழ­கிற்கு கேடு விளை­விக்கும் பல பிரச்சி­னை­களைப் போக்­கு­வ­தற்­கு〪 பெரிதும் உத­வி­யாக உள்­ளது. இப்­போது கற்­பூ­ரத்தை அழகுப் பரா­ம­ரிப்பில் பயன்­ப­டுத்­தினால் என்ன நன்­மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.



சரும அரிப்பு : சரு­மத்தில் ஏற்­படும் பிரச்சி­னை­க­ளான அரிப்பு மற்றும் எரிச்­சலைப் போக்­கு­வ­தற்கு கற்­பூ­ரத்தை பொடி செய்து பிரச்சினை உள்ள இடத்தில் தட­வினால் குண­மாகும்.

தழும்பு : தீயினால் ஏற்­பட்ட தழும்பை போக்­கு­வ­தற்கு கற்­பூ­ரத்தில் சிறிது நீரை ஊற்றி கலந்து தழும்பு உள்ள இடத்தில் தினமும் தடவி வந்தால் அதன் வெளிப்­பாடு குறையும். குறிப்­பாக, தழும்­பா­னது புதி­ய­தாக இருந்தால் அதற்கு இதனை செய்ய வேண்டாம். இல்­லா­விட்டால் அது காயத்தை இன்னும் தீவி­ர­மாக்கி எரிப்பை ஏற்­ப­டுத்தும்.

முகப்­பரு : முகப்­ப­ருவை போக்­கு­வ­தற்கு கற்­பூரம் சிறந்த பொருள். அதற்கு கற்­பூர எண்­ணெயை முகப்­பரு மற்றும் பிம்பிள் உள்ள இடத்தில் தடவி வந்தால் பருக்கள் மற்றும் பிம்­பிளை போக்­கலாம்.

சரும தடிப்பு : சரும தடிப்­புக்கள் இருந்தால் அந்த இடத்தில் கற்­பூ­ரத்தை தேய்த்தால் உடனே தடிப்­புக்­களில் இருந்து நிவா­ரணம் கிடைக்கும்.

குதிகால் வெடிப்பு : குதிகால் வெடிப்­பிற்கு சிறந்த ஒரு வழி­யென்றால் அது கற்­பூ­ரத்தை நீரில் போட்டு அந்த நீரில் பாதங்­களை சிறிது நேரம் ஊற வைத்து தேய்த்து கழு­வினால் நாள­டைவில் குதிகால் வெடிப்­புக்­கள் போய்­விடும்.

முடி வளர்ச்சி : சொன்னால் நம்­ப­மாட்­டீர்கள் கற்­பூரம் முடியின் வளர்ச்­சிக்கும் உதவும். அதிலும், கற்­பூர எண்­ணெயை மூலிகை எண்­ணெ­யுடன் கலந்து முடிக்கு தடவி வந்தால் மனம் ரிலாக்ஸ் ஆவ­துடன் முடியின் வேரும் வலு­வோடு வளரும். வேண்­டு­மெனில் கற்­பூர எண்­ணெயை முட்டை அல்­லது தயி­ருடன் சேர்த்து கலந்து, முடிக்கு தடவி ஊற வைத்து குளித்தால் முடி நன்கு வளரும்.

முடி உதிர்தல் : முடியின் வளர்ச்­சிக்கு உத­வு­வ­தோடு கற்­பூரம் முடி உதிர்­த­லையும் தடுக்கும். இன்­றைய காலத்தில் நிறைய பேருக்கு முடி உதிர்தல் பிரச்­சினை உள்­ளது. இதனால் பல­ருக்கு வழுக்கை கூட ஏற்­பட்­டுள்­ளது. எனவே அதனை போக்­கு­வ­தற்கு, கற்­பூர எண்­ணெயை ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி மசாஜ் செய்து குளித்தால் முடி உதிர்­தலை தடுப்­ப­தோடு அதன் வளர்ச்­சி­யையும் அதி­க­ரிக்­கலாம்.

முக்­கிய குறிப்பு : கற்­பூ­ரத்தில் மிகவும் அதி­க­மான அளவில் நறு­மணம் கொண்ட கெமிக்கல் உள்­ளதால் இது அனை­வ­ருக்­குமே பொருந்தும் என்று சொல்ல முடியாது. எனவே இதனை பயன்படுத்துவதற்கு முன் நன்கு யோசிக்க வேண்டும். ஏனெனில் கெமிக்கல் பொருட்களால் அழற்சி உள்ளவர்கள் இதனை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல