பெண்ணாகப் பிறந்த எல்லோரும், வாழ்நாளில் ஏதோ ஒரு தருணத்தில் நிச்சயம் இந்த அவதியை அனுபவித்திருப்பார்கள். சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை எல்லோரையும் தாக்கக் கூடிய அந்த நோய் யூரினரி இபெக் ஷன் எனப்படுகிற சிறுநீரகப் பாதைத் தொற்று. ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டாலும், அடிக்கடி தொடர்ந்தாலும், இந்தப் பிரச்சினை எப்படியெல்லாம் பாதிப்பைக் கொடுக்கும் என விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் சந்திரலேகா.
‘‘ஆண்களின் சிறுநீர் பைக்கும், அது வெளியேறுகிற துவாரத்துக்குமான இடைவெளி 15 செ.மீ என்றால் பெண்களுக்கு அது வெறும் 3 செ.மீ. மட்டுமே. அதனால் மிகச் சுலபமாக கிருமிகள் பெண்களின் சிறுநீர் பையைத் தாக்குகின்றன. பெண்களுடைய உடல்வாகு மட்டுமின்றி, ஒவ்வொரு வயதிலும் அவர்கள் சந்திக்கிற சில விடயங்களும் இந்தத் தொற்றுக்கு மிக முக்கியமான காரணமாகிறது. பள்ளிக்கூடம் செல்கிற வயதுப் பெண் பிள்ளைகள், பாடசாலையில் உள்ள கழிவறையின் சுகாதாரம் சரியில்லாத காரணத்தினால் சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பார்கள்.
அடிக்கடி தண்ணீர் குடிக்க மாட்டார்கள். அதனால் அவர்களுக்கு இந்தத் தொற்று அடிக்கடி வரும். அதன் விளைவாக வயிற்று வலி, சோர்வு, பசியின்மை, படிப்பில் கவனச் சிதறல் போன்றவை வரலாம். அடுத்து மாதவிலக்கு நாட்களில் சுத்தமாக இல்லாத பெண்களுக்கும், தரமான நெப்கின்களை உபயோகிக்காத பெண்களுக்கும் இந்தத் தொற்று அடிக்கடி வரும். புதிதாகத் திருமணமான பெண்களுக்கும் இந்தத் தொற்று அடிக்கடி வருவதைப் பார்க்கலாம். புதிதாக உறவில் ஈடுபடுவதால் ஏற்படுகிற இதற்கு ‘ஹனிமூன் யூரித்ரைடிஸ்’ என்றே பெயர்.
திருமணமாகி கர்ப்பம் தரித்த பெண்களுக்கும் இந்தத் தொற்று பாதிக்கலாம். கருத்தரித்ததும் முதலில் சிறுநீர் பரிசோதனை செய்யப்படும். அதில் ஏதேனும் கிருமித் தொற்று இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். அதைக் கவனிக்காமல் விட்டால், அந்தக் கிருமிகளின் பாதிப்பால், கருக்கலைப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். கர்ப்பத்தின் கடைசி மாதங்கள் வரை அடிக்கடி சிறுநீர் பரிசோதனை செய்து, இந்தக் கிருமிகளின் தொற்று இருக்கிறதா எனக் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்தத் தொற்று தீவிரமடைந்தால், குழந்தைக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படும்.
வயதான பெண்களுக்கோ, மெனோபாஸுக்கு பிறகு ஈஸ்ட்ரோஜென் அளவு குறைந்து, அதனால் செல்கள் பலவீனமடைந்து, எளிதில் இன்பெக் ஷன் தொற்றிக் கொள்கிறது. அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழிக்கிற போது எரிச்சல், முழுமையாக கழிக்காத உணர்வு, சில நேரங்களில் காய்ச்சல் போன்றவை யூரினரி இன்பெக் ஷனுக்கான அறிகுறிகள். எப்போதோ ஒரு முறை வந்தால் மருத்துவரிடம் ஆலோசித்து, மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம். சிலருக்கு இது அடிக்கடி வரும். அவர்கள் சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும். சாதாரண சோதனை மட்டும் போதாது என்கிற நிலையில் யூரின் கல்ச்சர் சோதனையும் செய்து, தொற்றுக்கான காரணத்தைத் துல்லியமாகக் கண்டுபிடித்து, அதற்கான மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.
தாமாக மருந்து வாங்கி சாப்பிடுவது, அடிக்கடி வருகிற இந்தப் பிரச்சினையை அலட்சியம் செய்வது போன்றவை, பிற்காலத்தில் சிறுநீரகங்களையே பாதிக்கிற அளவுக்குத் தீவிர நிலைக்குக் கொண்டு செல்லலாம். வருமுன் காப்பது இந்த விஷயத்தில் மிக முக்கியம்.
தினம் 3 லீற்றர் தண்ணீர் குடிப்பது, அந்தரங்க உறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்வது, மாதவிலக்கு நாட்களில் சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பது, தரமான, சுத்தமான உள்ளாடைகளை உபயோகிப்பது போன்றவற்றின் மூலம் இதைத் தவிர்க்கலாம்...’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் சந்திரலேகா.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக