‘வித்தகன் தொட்டு விட்டால் விறகு கட்டை கூட வீணையாக மாறும்’ என்று ஒரு கவிதையில் சொல்லப்பட்டுள்ளது. இக் கூற்று இன்றும் உலகமே அதிகமாக மெச்சுகின்ற ஒரு கலைஞனுக்குப் பொருந்தும். அப்படிப்பட்ட ஒரு முக்கலை வித்தகன் மைக்கல் ஏஞ்சலோ என்று கூறின் அது மிகையாகாது. இவ்வாறு இவரை புகழக் காரணம் 16ஆம் ´நூற்றாண்டின் இவருடைய கலைவெளிப்பாடுகள் இன்றும் உலகையே ஸ்பரிசித்துக் கொண்டிருப்பதால் ஆகும்.
மத்திய காலத்தின் சிறந்த கைராசிக்காரர் என மைக்கல் ஏஞ்சலோ கருதப்பட்டார். மறுமலர்ச்சிக் காலத்தில் ஐரோப்பாவில் காணப்பட்ட சமூக நிலையினை அழுத்தமான காட்சிகளாக வடிகட்டினார். சம கால மற்றுமொரு கலைஞனான ரபிலின் கொள்கைகளின் ஒத்த தன்மைகளையே தானும் கொண்டு விளங்கினார். எனினும் மைக்கல் ஏஞ்சலோவிற்கு தனியான பெருமதிப்பு காணப்பட்டது. காரணம், அக்கால சமூகம் மறுத்த பல மறைவான செய்திகளை தன் ஆற்றல்கள் மூலம் வெளிக்காட்டியமையினால் எனலாம். இவர் சிறந்த பல இளவரசர்களுக்கு குருவாக இருந்ததுடன், பல இலக்கிய வாதிகளை எதிரிகளாகவும் சம்பாதித்துக்கொண்டார். ஒவ்வொரு வருக்கும் பல முன்னோடிகள் பல துறைகளிலும் பெருகி இருக்கும் போதும் மைக்கல் ஏஞ்சலோ தன் ´தன்மான மனப்பான்மையின் காரணமாக தன்னைத் தானே தயார் செய்து கொண்டார்.
மைக்கல் ஏஞ்சலோ (1476-–1564) தன் வாழ்வில் சிற்பம், ஓவியம், நிர்மாணம் எனும் முக்கலைகளிலும் தலைசிறந்த தளபதியாகத் திகழ்ந்தது பலருக்குத் தெரியாது.
ஒரு சிற்பியாக…
மைக்கல் ஏஞ்சலோ தன் கலை எனும் மரத்தில் ஒரு விழுதாக சிற்பத்தை தெரிவுசெய்து கொண்டார். இவர் பெரும்பாலும் சலவைக் கற்களில் சிலைகளைச் செதுக்கினார். மனித உடல்களையே இவர் தன் சிலைகளில் அதிகமாக வெளிக்காட்டினார். மைக்கல் ஏஞ்சலோவால் செதுக்கப்பட்ட சிற்பங்கள் போற்றத்தக்கது. குறிப்பாக கைதியின் சிலையில் தன் சுதந்திரத்தைப் போராடும் ஒருவனின் நிலையாக சித்திரிக்கப்பட்டுள்ளது.
இக் கலைஞன் தனிமனித உருச்சிலைகளை வடிப்பதில் கைதேர்ந்தவர் எனலாம். இவரை ஒரு ஓவியனாகக் காணும் உலக மக்களை தன் சிற்பங்களாலும் பிரமிக்க வைக்கிறார். தனி மனித உடல் நிலையினை போற்றும் வண்ணம் வடிவமைப்பதில் யாருக்கும் நிகரற்றவர். தன் சிற்பங்களின் பூரணம் மக்கள் மத்தியில் துணிவுமிக்க கருத்துக்களை உண்டாக்கும் வண்ணம் மருட்சியூட்டும். மைக்கல் ஏஞ்சலோவின் சிற்பங்களில் ஆக்கப்பூர்வமிக்க அபூர்வம் தென்படும். இலக்கியமே உருவாகியதாய் படைப்புக்கள் பேசப்படும்.
1501ஆம் ஆண்டு இவரால் செதுக்கப்பட்ட டேவிடின் சிலை நேர்மையான மனிதன் எனும் கருத்தை உணர்த்துகிறது. இச் சிலை மைக்கல் ஏஞ்சலோவால் செதுக்கப்பட்ட முதல் சிலை என்றும் சொல்லப்படுகிறது. 1505இல் மைக்கல் ஏஞ்சலோவால் செதுக்கப்பட்ட வண்ணமயமான சிற்பம் ஒன்றுதான் இராணுவ வீரனின் சிலை எனப்படுகிறது. இது அளவில் மிகப்பெரிய உருவமாகும். பூரணமாக்கப்பட்ட செதுக்கல் கலைகளாக மோசஸ், இரண்டு அடிமைகள் என்பனவற்றைக் கூறலாம். இவை இன்று பாரிஸில் Louvre அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மைக்கல் ஏஞ்சலோ தன் சிற்பங்களை மிகவும் மதிப்பு கொடுத்து செதுக்கினார். இரண்டு போர் வீரர்கள் சிலை இரவு, பகல், முன் விடியல், அரை இருள் போன்ற இயற்கை உணர்வுகள் கூடிய தன்மைகளை வெளிக்காட்டுகின்றது. இவரால் செதுக்கப்பட்டதும் புகழ் மாலை சூட்டப்பட்டதுமான சிலை தான் கன்னித்தாயும் இறந்த பிள்ளையும் சிலையாகும். இச் சிலை தாயின் அதீத இரக்கத்தை அப்படியே படியவைத்துள்ளது எனப்படுகிறது.
மைக்கல் ஏஞ்சலோவின் பெரும்பாலான சிலைகளை நிர்வாணத்தன்மையுடன் செதுக்கியுள்ளமை அவர்தம் சிலைகளுக்கேயுள்ள தனிச் சிறப்பு என்பர். இவருடைய ஒவ்வொரு சிலைகளும் உலக விருப்பு வெறுப்புக்களை அப்படியே பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
ஒரு ஓவியனாக…
மைக்கல் ஏஞ்சலோவின் சிற்பங்களைப் போலவே ஓவியங்களும் உணர்வுப் பூரணமானவை. இவருடைய முன்னைய ஓவியங்களில் ஒன்றான பரிசுத்த குடும்பம் எனும் ஓவியத்தில் வலிமையான தசை நார்களை மிகவும் நுணுக்கமாக வரைந்துள்ளமை சிற ப்பம்சமாகும். இவருடைய உலகப்புகழ் பெற்ற ஓவியங்கள் பலவும் பெரிய சுவரோவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. வெறுமையாக இருந்த பெரிய சுவருகளில் தான் வரைந்த உருவங்கள் மூலம் அவ்வோவியங்களே உயிர்ப் பெற்றது எனலாம்.
1504இல் மைக்கல் ஏஞ்சலோவால் புனைந்து ஒப்பனை செய்யப்பட்ட ஓவியம் ஒன்று ப்லோரன்சில் பெலசோ வெசியோ வில் இன்றும் மங்காமல் உள்ளது. அங்கு ஒரு பக்க சுவரில் மைக்கல் ஏஞ்சலோவின் ஓவியங்களும் எதிர் சுவரில் லெனாடோ டாவின்சியின் ஓவியமும் வரையப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 1508இல் செஸ்டின் சபேல் எனும் கட்டடம் வெறுமனே காணப்பட்டது.
அக் காலத்தில் குறித்த அக்கட்டடத்தின் பொறுப்பதிகாரியாக இருந்த 7ஆம் கமலன் பாதிரியின் அனுமதியுடன் அக்கட்டட அறைகளின் உட் கூரைகளில் தன் கைவண்ணத்தைக் காட்ட திட்டமிட்டார். இதன் பிரகாரம் பழைய விவிலிய வேதத்தில் வந்த மோசஸின் சம்பவங்களை காட்சிகளாக்கத் திட்டமிட்டார். சுமார் 4½ வருடங்கள் கடு மையாக ஈடுபட்டு அவ் ஓவியத்தை பூரண மாக்கினார். 600 அங்குல சதுர பரப்பினைக் கொண்ட சுவருக்குள் 9 மரச்சட்டங்களில் அவ் ஓவியம் தீட்டப்பட்டது.
அக் காட்சிகளில் தீர்க்கதரிசிகள், சாதாரண மனிதர், அடிமைகள் மற்றும் கிறிஸ்தவ சமய மூதாதையர் போன்ற மனித உருக்களால் அவ்வோவியம் முழுமையாகியது. மட்டுமன்றி, அங்கு வரையப்பட்ட ஒவ்வொரு உருவத்திலும் தலைசிறந்த உயிரோட்டம் இருந்தது. இவ் ஓவியம் மைக்கல் ஏஞ்சலோவிற்கு நிகரான கலைஞன் வேறு யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு தத்ரூபமானதாக சொல்லப்படுகிறது.
1534இல் மைக்கல் ஏஞ்சலோவின் ஓவியத்தில் மற்றுமொரு விஸ்வரூபமாக இறுதித் தீர்ப்பு சுவரோவியமாகியது. இச் சுவரோவியத்தில் ஒவ்வொரு மனித உணர்வுகளு க்கும் இடையில் நவரச உணர்வுகளும் முட்டிமோதும் இயல்பை அப்படியே தீட்டியு ள்ளார். இது தவிர வெள்ளம், தீர்க்கதரிசி, டேனியல், டெல்பிக் சைபில் போன்ற பல ஓவியங்களும் இவருடைய படைப்புக்களுள் இன்றும் பேசப்படுபவை.
ஒரு நிர்மாணியாக…
சமகால கலைஞர்கள் பலர் மைக்கல் ஏஞ்சலோவை ஒரு இயற்கை பித்தன் என்று சொல்வர். இவர் 1520களில் லோரன்ஸோ திருக்கோயிலை இரு கல்லறைகளை வைத்து நிர்மாணிக்கத் தொடங்கினார். இதன் பின் சொற்ப காலத்திலேயே அத் திருக்கோயிலில் மருத்துவ நிலையம் ஒன்றும் நிறுவப்பட்டது. இடையில் 1535 மற்றும் 1546களில் ஒரு ஒப்பந்தம் அடிப்படையில் ரோமின் கபிடோலின் ஹில் ஆலயத்தை மீள் திட்டமிட்டு நிர்மாணிக்க வேண்டி ஏற்பட்டது. மட்டுமன்றி இத் திருக்கோயிலை மரபு ரீதியில் நிர்மாணிக்கத் திட்டமிட்டு சிறிது காலத்திலேயே மைக்கல் ஏஞ்சலோ மரணித்தமையினால் அக் கோயிலின் நிர்மாணப் பணிகள் அவ ரால் பூரணம் காணவில்லை.
3ஆம் போல் பாதிரியின் செயல் துறைக் கிணங்க ரோமின் பார்னஸ் இடம் நிர்மாணிக்கப்பட்டது. மைக்கல் ஏஞ்ச லோ புனித பீட்டர்ஸ் தேவாலயத்தை நிர்மாணிக்கத் தலைமைத் தாங்கினார். இது மறுமலர்ச்சிக் காலத்தில் நிர்மாணிக் கப்பட்ட சிறப்பு வாய்ந்த கோயில் என்றும் சொல்லப்படுகிறது. மைக்கல் ஏஞ்சலோவால் பிராமனன்ட் திட்டம் மீள் மாதிரியாக்கப்பட்டது. இதன் படி உலகிலே தலைசிறந்த கோயில்களில் ஒன் றாக இக்கோயில் போற்றப்படுவதுடன் இக் கோயிலின் கவிகை மாடம் பலரும் வியக்கும் வண்ணம் நிர்மாணிக்கப்பட்டது. இவ்வாறு கிறிஸ்தவ தேவாலயங்களை நிர்மாணிப்பதில் முழு நேரக் கலைஞனாக மைக்கல் ஏஞ்சலோ செயற்பட்டமையினை பலரும் அறியமாட்டார்கள்.
இவ்வாறு முக்கலை வித்தகனான மைக்கல் ஏஞ்சலோ திருமணமாகாத ஒரு ஆண் மகன். தன் கலைப்படைப்புக்களால் உலகின் அன்பை முழுவதுமாகப் பெற்ற வர். மைக்கல் ஏஞ்சலோ ஒரு தீவிர சமய வாதி. இதனாலே தன் பெருவாரியான கலைப்படைப்புக்களை சமயச் சார்பாக மேற்கொண்டுள்ளார் எனலாம்.
அளவத்துகொடை -எம்.ஏ.ஷெரீன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக