ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

உலகில் அதிக மக்களை சிக்கவைத்த நபர் - சார்லி சாப்ளின்

வாய்­விட்டு சிரித்தால் நோய்­விட்டு போகும் என்­பார்கள் அப்­ப­டிப்­பார்த்தால் நம்மை வாய்­விட்டு சிரிக்க வைப்­ப­வர்­களை மருத்­து­வர்­க­ளுக்கு சமம் என்று சொல்­லலாம். உலகில் அதிக மக்­களை சிரிக்க வைத்த நபர் யார் என்று கேட்டால் ஒரே ஒரு நப­ரைத்தான் வர­லாறு புன்னகை­யுடன் உதிர்க்கும். அவர்தான் ஈடு இணை­யற்ற ஆங்­கில நகைச்­சுவை நடிகர் சார்லி சாப்ளின் (Charlie Chaplin). இன்று திரைப்­ப­டங்­களில் வச­னங்­களை கேட்டு சிரிக்­கிறோம் ஆனால் ஊமைப்­ப­டங்கள் மட்­டுமே வெளி­வந்த ஒரு கால கட்­டத்தில் மொழியின் துணை­யின்றி வசனம் எதுவும் பேசாமல் தன் அங்க அசை­வு­க­ளாலே ரசி­கர்­களை வயிறு குலுங்க சிரிக்க வைத்­த­வர்தான் சார்லி சாப்ளின்.



1889ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் திகதி லண்­டனில் உள்ள வால்வொர்த் நகரில் சாள்ஸ்க்கும் ெஹன்னா ஹாரியட் ஹில்­லுக்கும் மக­னாகப் பிறந்தார். இவன் பிறந்த சில நாட்கள் கழித்து பெற்­றோர்­க­ளது திரு­மண வாழ்க்கை முறிந்­தது.

பெற்றோர் இரு­வரும் மேடை இசைக் கலை­ஞர்கள் ஆவர். மிகவும் ஏழ்மை நிலையில் இருந்­தனர். சம்­பா­திக்கும் பணத்தை எல்லாம் தந்தை குடித்தே தீர்த்தார். ஒரு நாள்­மே­டையில் பாடும்­போது சாப்­ளினின் அம்­மா­விற்குத் தொண்­டையில் பிரச்­சினை ஏற்­பட்­டது. அவளால் பாட முடி­ய­வில்லை. அதனால் ரசி­கர்கள் ஒரே கூச்­ச­லிட்­டனர். அவ­மானம் கண்­ணீராகக் கரைய மேடையை விட்டு கீழே இறங்­கினாள் ஹென்னா. அப்­போது ஐந்து வயது சிறுவன் சார்லி சாப்ளின் என்ன நினைத்­தானோ தெரி­ய­வில்லை. உடனே வேக­மாக மேடை­யே­றினான். அது ஒரு மகா கலை­ஞனின் முதல் கலைப் பயணம் என்று யாருக்கும் அப்­போது தெரிந்­தி­ருக்­காது!

தன் அம்மா சொல்லிக் கொடுத்த பாடலைப் பாடி, தன் பிஞ்சு கால், கை களை அசைத்து நட­ன­மாடத் தொடங்­கி னான். ரசி­கர்­களின் விசில் சத்­தத்­தாலும், கைத்­தட்­ட­லாலும் அரங்­கமே அதிர்ந்­தது! மேடையை நோக்கிச் சில்­ல­றைகள் சீறிப் பறந்­தன. சிறு­வ­னான சார்லி சாப்ளின் உடனே பாடு­வதை நிறுத்­தி­விட்டுச் சில்­ல­றை­களைப் பொறுக்­கினான். கூட்­டமோ சார்லி சாப்­ளினை பாடச் சொல்லி கூச்­ச­லிட்­டது!

ஆனால் சார்லி சாப்­ளினோ சிறிதும் சளைக்­காது ‘சிறிது நேரம் பொறுத்­தி­ருங்கள்! சில்­ல­றை­களைப் பொறுக்­கிய பிற­குதான் பாடுவேன் ஒரே நேரத்தில் இரண்டு வேலை­களை என்னால் செய்ய முடி­யாது!’ என்று கூறி­விட்டுச் சில்­ல­றைக்­கா­சு­களைப் பொறுக்கத் தொடங்­கினான் சார்லி சாப்ளின். கூட்­டத்­தினர் சிரித்­தனர். மீண்டும் மீண்டும் எழுந்த சிரிப்பால் வானம் அதிர்ந்­தது! தன் தாய் பாட­மு­டி­யாமல் தவித்­ததை நடித்துக் காட்ட மீண்டும் காது கிழியும் சிரிப்­பொலி எழுந்­தது.

சார்லி சாப்ளின் Hanwell School for Orphans and Destitute Children என்னும் ஆத­ர­வற்­றோ­ருக்­கான பாட­சாலை ஒன்றில் வளர்ந்தான். சார்லி சாப்­ளினின் பன்­னி­ெரண்­டா­வது வயதில், அவ­னது தந்தை குடிப் பழக்­கத்தால் உடல் நலம் குன்றி இறந்தார். தாயும் பெரும் மன உளைச்­ச­லுக்கு உள்­ளாகி Cane Hill Asylum என்ற மன நலம் பாதிக்­கப்­பட்­டோ­ருக்­கான காப்­பகம் ஒன்றில் சேர்க்­கப்­பட்டார்.

சார்லி சாப்ளின் பத்து வய­தாக இருந்த போது ஒரு பூனை­யாக நகைச்­சு­வை­யான பாத்­தி­ரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்­றி­ருந்தார். 1903ஆம் ஆண்டில் Jim> A Romance of Cockayneநாட­கத்தில் நடித்தார். ஷெர்லக் ஹோம்ஸ் நாட­கத்தில் செய்­தித்தாள் விற்கும் சிறுவன் பில்லி வேடத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து Casey's Court Circus நடத்­திய பல்­சுவை நிகழ்ச்­சி­யிலும், Fred Karno's Fun Factory slapstick நகைச்­சுவை நிறு­வ­னத்தில் கோமாளி வேடத்­திலும் நடித்தார்.

1912ஆம் ஆண்டு ஒக்­டோபர் 2 இல் நாடகக் குழு­வொன்­றுடன் சார்லி சாப்ளின் ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கு சுற்­றுலா மேற்­கொண்டார். பின்னர் அங்­கேயே தங்­கி­விட தீர்­மா­னித்தார்.

அவர் நடித்த முத­லா­வது ஊமைப்­படம் Making A Living என்ற பெயரில் 1914ஆம் ஆண்டு வெளி­வந்­தது. இப்­படம் பெரிய வர­வேற்பு எத­னையும் பெற­வில்லை. அதே ஆண்டில் வெளி­வந்த Kid Racesat Venice என்ற திரைப்­ப­டத்தில் தான் விரும்­பி­ய­படி நடிப்­ப­தற்கு சார்லி சாப்­ளி­னுக்கு அவ­காசம் வழங்­கப்­பட்­டது. இதில்தான் சார்லி சாப்ளின் எவ­ராலும் மறக்க முடி­யாத தனது விநோத ஆடை­க­ளுடன் முதன் முத­லாக காட்­சி­ய­ளித்தார். பை போன்ற நீளக் காற்­சட்டை, மாற்றி அணிந்த சப்­பாத்­துக்கள், குட்­டை­யாக கத்­த­ரிக்­கப்­பட்ட மீசை, அழுக்குத் தொப்பி, கைத்­தடி, தள்­ளா­டிய நடை முத­லிய சார்லி சாப்­ளினின் சிறப்பு சின்­னங்கள் இத் திரைப்­ப­டத்­தி­லே­யேதான் முதன் முத­லாக புகுத்­தப்­பட்­டன. இவையே அவ­ருக்கு மறை­யாத புகழைப் பெற்­றுக்­கொ­டுத்த சிறப்பு சின்­னங்­க­ளாக அமைந்­தன. இந்த திரைப்­ப­டத்தை தொடர்ந்து அவ­ரது புகழ் அமெ­ரிக்­காவில் மட்­டு­மன்றி உலகின் பல நாடு­க­ளிலும் விரை­வாகப் பர­வி­யது. ஆரம்ப காலத்தில் சார்லி சாப்ளின் தயா­ரித்து வெளி­யிட்ட குறுந்­தி­ரைப்­ப­டங்­களில் புகழ்­பெற்­ற­வை­யா­வன The Tramp (1915)>, One A.M.(1916)>, The Pawns Shop (1916)>, Behind The Screen (1916)>, The Rink (1916)>, Easy Street (1917)>, The Immigrant (1917)>, The Adventurer (1917)>, A Dog’s Life (1918)>, Shoulder Arms (1918)>, The Pilgrim (1919) ஆகி­ய­வை­யாகும். இவை அனைத்தும் அவ­ரா­லேயே தயா­ரித்து இயக்­க­பட்­ட­வை­யாகும் என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும். சார்லி சாப்­ளினின் முழு­நீள திரைப்­ப­டங்­களுள் The Kid (1921)>, The Gold Rush (1925)>, The Circus (1928)>, City Lights (1931) என்­பன பெரும் வெற்றி பெற்­றன.

சார்லி சாப்­ளினின் முதல் பேசும் படம் 1940 ஆம் ஆண்டில் வெளி­யான The Great Dictator இது அடோல்ஃப் ஹிட்­ல­ரையும் அவ­ரது பாசிச கொள்­கை­யையும் எதிர்த்து குரல் கொடுத்த படம். இப்­படம் அமெ­ரிக்கா இரண்டாம் உலகப் போரில் புகு­வ­தற்கு ஒரு வருடம் முன்பு அங்கு வெளி­யி­டப்­பட்­டது. இதில் சார்லி சாப்ளின் இரு வேடங்கள் பூண்­டி­ருந்தார். அவை ஹிட்லர் மற்றும் நாசி­யர்­களால் கொடு­மை­யாக கொல்­லப்­படும் யூத இனத்தைச் சேர்ந்த ஒரு நாவிதன். சினிமா மீது மோகம் கொண்ட ஹிட்லர் இப்­ப­டத்தை இரு முறை பார்த்தார்.

சார்லி சாப்­ளினின் படங்கள் சாதா­ரண மக்­களால் மாத்­தி­ர­மன்றி உலகின் பிர­பல தலை­வர்­க­ளாலும் விரும்பி ரசிக்­கப்­பட்­டன. வின்ஸ்டன் சேர்ச்சில், லெனின், ஸ்டாலின், ஜவ­ஹர்லால் நேரு, அடோல்ப் ஹிட்லர் போன்ற அக்­கால உலகத் தலை­வர்கள் சார்லி சாப்­ளினின் திரைப்­ப­டங்­களின் பிரத்­தி­யேக பிர­தி­களை வைத்­துக்­கொண்டு ஓய்வு நேரங்­களில் பார்த்து மகிழ்ந்­தனர். ஹிட்லர் எந்­த­ளவு சார்லி சாப்­ளினின் மீது பிரியம் வைத்­தி­ருந்­தா­ரென்றால் தனது ஹிட்லர் மீசையை கூட சார்லி சாப்­ளினை பின்­பற்­றியே வைத்­தி­ருந்தார்.

சாப்­ளினின் அர­சியல் சிந்­த­னைகள் இடது சார்­பு­டை­ய­தாகக் கரு­தப்­ப­டு­கி­றது. இத­னையே இவ­ரது திரைப்­ப­டங்­களில், முக்­கி­ய­மாக Modern Times பிர­தி­ப­லித்­தன. இப்­படம் பாட்­டா­ளிகள் மற்றும் ஏழை­களின் கவ­லைக்­கி­ட­மான நிலை­மையை சித்­த­ரித்­தது. இவர் அமெ­ரிக்க கொள்­கை­க­ளுக்குப் புறம்­பான நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தா­கவும், கம்­யூனிஸ்ட் கொள்­கை­வாதி எனவும் சந்­தே­கிக்­கப்­பட்டார். அதனால் புல­னாய்வு பிரி­விடம் இவரை கண்­கா­ணிக்­கு­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­டது. அமெ­ரிக்­காவில் சார்லி சாப்ளின் வாழும் உரி­மையை நீக்க முயற்சி எடுக்­கப்­பட்­டது. சார்லி சாப்­ளினின் வெற்­றிகள் அனைத்­துமே அமெ­ரிக்­காவில் அமைந்­தாலும், அவர் பிரிட்டிஷ் குடி­யு­ரி­மை­யி­னையே நீடித்தார். 1952ஆம் ஆண்டில் சார்லி சாப்ளின் இங்­கி­லாந்­துக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்டார். இதனை தெரிந்­து­கொண்ட புல­னாய்வு பிரி­வினர் Immigration and Naturali Zation Service உடன் பேச்­சு­வார்த்தை நடத்தி, சாப்ளின் அமெ­ரிக்கா திரும்பும் அனு­மதிச் சீட்டை ரத்து செய்­தார்கள். ஆதலால் அவர் இங்­கி­லாந்­தி­லேயே தங்­கும்­படி நேர்ந்­தது. பெரும்­பாலும் சுவி­ஸர்­லாந்தில் வாழ்ந்தார். இவர் 1972ஆம் ஆண்டில் தனக்கு அளிக்­கப்­பட்ட கௌரவ ஒஸ்கார் விருதைப் பெறு­வ­தற்­காக அமெ­ரிக்கா திரும்­பினார்.

சார்லி சாப்ளின் ஒன்றன் பின் ஒன்­றாக நான்கு மனை­வி­களை மணந்தார். முத­லா­வது மனைவி மில்ட்ரெட் ஹாரிஸ் அவர்­க­ளு­டனும் (ஒரு பிள்ளை), இரண்­டா­வது மனைவி லீட்டா கிரே அவர்­க­ளு­டனும் (இரு பிள்­ளைகள்), மூன்­றா­வது மனைவி போலெட் கொடாட் அவர்­க­ளு­டனும் நான்­கா­வது மனைவி ஊனா ஓ நீல் அவர்­க­ளு­டனும் (எட்டு பிள்­ளைகள்) வாழ்ந்தார். 1943ஆம் ஆண்டு ஜூன் பதி­னாறாம் திகதி சார்லி சாப்ளின் தனது 54 ஆம் வயதில் 17 வயது நிரம்­பிய நான்­கா­வது மனை­வி­யான ஊனா ஓ நீலை மணந்தார். இத் திரு­மண வாழ்க்கை மகிழ்ச்­சி­யுடன் பல வரு­டங்கள் நீடித்­தது. இவர்­க­ளுக்கு எட்டு பிள்­ளைகள் பிறந்­தனர்.

1975 மார்ச் நான்காம் திகதி பிரித்­தா­னி­யாவின் இரண்டாம் எலிஸபெத் மகாராணி “சேர்” பட்டம் வழங்கி கௌரவித்தார். 1985ஆம் ஆண்டு பிரித்தானிய அரசா ங்கம் இவரது உருவத்தை தபால் தலை யில் வெளியிட்டு பெருமை சேர்த்தது. சார்லி சாப்ளினின் வாழ்க்கை வரலாறு 1992ஆம் ஆண்டு “சாப்ளின்” என்ற பெயரில் ஒஸ்கார் விருது பெற்ற சேர் ரிச்சர்ட் அட்டென்பரோ என்பவரால் இயக்கி திரைப்படமாக்கப்பட்டது. இந்தப் படத்தில் அவரது மகள் ஜெரால்டின் சாப்ளின், சார்லி சாப்ளினின் தாயாக நடித்தி ருந்தமை குறிப்பிடத்தக்கது.

சார்லி சாப்ளின் 1977ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது 88 ஆவது வயதில் சுவிட்ஸர்லாந்தின் வேவே நகரில் இறந்தார்.

அல்ஹாஜ் எம்.எப்.எம். இக்பால்

யாழ்ப்பாணம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல