பெர்த்: இந்திய பெருங்கடலில் விழுந்த மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து வந்த ஒலிகள் அடங்கிவிட்டதால் இனி விமானத்தை தேடும் பணி கடிணமாகிவிட்டது. கடந்த மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசிய விமானம் எம்.ஹெச். 370 மாயமானது.
இரண்டு வார தேடலுக்கு பிறகு விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துவிட்டதாகவும், அதில் பயணித்த அனைவரும் இறந்துவிட்டதாகவும் மலேசியா அறிவித்தது. இதைத் தொடர்ந்து இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது.
கருப்புப் பெட்டி: விமானத்தின் கருப்புப் பெட்டியின் பேட்டரியின் ஆயுள் கடந்த 7ம் தேதி முடிந்தது. இதையடுத்து அதில் இருந்து வரும் ஒலியின் அளவு மெல்ல மெல்ல குறைந்து வந்தது.
சிக்னல்கள்: விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள சீன, ஆஸ்திரேலிய கப்பல்கள் மற்றும் ஆஸ்திரேலிய விமானம் ஆகியவை கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை சிறப்பு கருவி மூலம் கண்டறிந்தன.
புதிய நம்பிக்கை: கருப்புப் பெட்டி சிக்னல்கள் அடுத்தடுத்து கண்டறியப்பட்டதால் விமானத்தை நிச்சயம் கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
ஒலி: கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலி நேற்றுடன் அடங்கிவிட்டது. இனி கருப்புப் பெட்டியை எளிதில் தேடிக் கண்டுபிடிக்க முடியாது.
தேடல்: ஏற்கனவே பல மில்லியன் டாலர் செலவில் நடந்து வரும் விமான தேடல் இன்னும் பல காலம் நடக்கலாம் என்று ஆஸ்திரேலியா எச்சரித்துள்ளது.
Thatstamil

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக