மலையகத்திலிருந்து மத்திய கிழ க்கு நாடுகளுக்கு விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் சென்று வந்த நிலைமை மாறி இன்று ஆயிரக்கணக்கானவர்கள் பணிபுரியும் காலம் உருவாகியுள்ளது. இவர்களில் பெண்கள்தான் அதிகம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
பெண்கள் வெளிநாடு செல்வது ஒருவகையான மோகம் என்று ஒரு கால த்தில் கூறப்பட்டாலும், அவர்கள் தமது பெற்றோரையும், கட்டிய கணவனையும், பெற்ற பிள்ளைகளையும், உறவினர்களையும் விட்டுவிட்டு இதுவரை கண்டிராத நாடுகளுக்கு துணிந்து செல்வதற்கான காரணத்தையும் எண் ணிப் பார்க்க வேண்டும். பெரும்பாலான தோட்டங்களில் கஷ்டப்பட்டு உழைத்தும் போதிய வருமானம் இல்லாததால் பெண்கள் தமது குடும்பத் தின் வறுமையைக் கருத்திற்கொண்டு வெளிநாட்டுக்குச் சென்று உழைத்து அதன் மூலம் நிம்மதியாக வாழலாம் என்ற நம்பிக்கையோடுதான் செல்கின்றார்கள். ஒரு சிலர் இரண்டு வருட காலத்துக்குப் பிறகு சந்தோசமாக நாடு திரும்பி, மீண்டும் அதே நாட்டுக்குப் போய், அதே இடத்தில் வேலை செய்து விட்டுத் திரும்பி வருவதையும் காணலாம். ஆனால், பலர் வெளிநாட் டில் சொல்லொண்ணாத் துன்பத்தை அனுபவித்து சம்பளம் கூட கிடைக்காமல் கண்ணீரும் கம்பலையுமாக வெறுங் கையோடு திரும்பி வருவதை யும் காண்கிறோம்.
கவலை தரும் கண்ணீர் மல்கும் நிகழ்வுகள்
அண்மைக் காலமாக வெளிநாடுகளு க்குச் சென்று நாடு திரும்பிய பெண்களில் பலரின் அனுபவம் சோகக் கதையாக இருப்பதோடு கல் நெஞ்சக்காரர்களையும் உருக வைக்கும் கண்ணீர் காவியமாகவும் இருக்கின்றது. திரும்பி வந்த ஒரு பெண்ணின் தலையில் இரு ம்பு ஆணிகள் அடிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டிருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இன் னொரு பெண் சூடு வைக்கப்பட்ட நிலையில் திரும்பி வந்துள்ளார். சிலர் பாலியல் தொல்லைகளில் சிக்கித் தவி த்து பாதியிலேயே திரும்பி வந்துள்ளார் கள். வீட்டு வேலை கஷ்டம் என்ப தால் வேலை செய்த வீட்டை வீட்டுத் தப்பி ஓடியுள்ளார்கள். சிலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்துள்ளார்கள். வேலை க்குச் செல்லும்போதே வீட்டுக்காரர்கள் கடவுச்சீட்டுக்களை வாங்கி வைத்துக் கொண்டு வேறு இடங்களுக்கு வேலை க்குச் செல்ல முடியாதபடி தண்டனைகளையும் பெற்றுள்ளார்கள்.
இவ்வாறு வெளிநாடுகளில் பலவிதமான கொடுமைகளுக்கு மத்தியில் பணிப் பெண்களாகப் பணிபுரிந்து அவ ர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் பணத்தில் கண்டபடி குடித்துக் கும்மாளமிடும் கணவன்மார்களும் இருக்கின்றார்கள். தாய்மார்கள் தமது பிள்ளைகள் படிக்க வேண்டும், நன்றாக வீட்டைக் கட்ட வேண்டும் என்று வெளிநாட்டில் வேலை செய்து கொண்டு கனவு காணும் வேளையில், “சின்ன வீடுகளை” வைத்துக் கொண்டு சீரழியும் கணவன்மார்களால் வருடக்கணக்கில் வெளிநாட்டில் பணி புரிந்தும் ஒன்றும் இல்லாத நிலையில் இருக்கும் பெண்களும் இருக்கின்றார்கள்.
வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக தமது நகைகளை ஈடு வைத்தும், விற்றும், வட்டிக்குக் கடன் வாங்கியும் மோசடிப் பேர்வழிகளான சில “ஏஜெ ண்ட்”களிடம் பணத்தைக் கொடு த்து ஏமாந்து போன சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. வெளிநாடுகளுக்கு அனு ப்பி வைப்பதற்காக மலையகத்தில் உலாவுகின்ற சில உள்ளூர் ஏஜண்டுகள் கடவுச்சீட்டு எடுப்பதற்கும், பயிற்சி பெறுவதற்கும் பெண்களை கொழும்பு போன்ற இடங்களுக்குக் கூட்டிச் சென்று துஷ்பிரயோகம் செய்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
பிள்ளைகளை தமது பெற்றோர் அல் லது கணவன்மார் கவனித்துக் கொள் வார்கள் என்ற நம்பிக்கையோடு தாய் மார் வெளிநாடு சென்று விடும்போது பிள்ளைகள் வழிதவறிச் சென்று விடுவதும், ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபடுவதும், சில பெண்பிள்ளைகள் தமது உறவினர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதும் அன்றாடம் நாம் கேள்விப்படுகின்ற சம்பவங்களாக இரு க்கின்றன. தாய்மார் வெளிநாட்டில் இருக்கும்போது பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்கள். ஒரு தந்தை தான் பெற்ற மக ளையே பாலியல் கொடுமைக்கு ஆளா க்கிய சம்பவத்தையும் கேள்விப்பட்டுள்ளோம். இது போன்ற எத்தனையோ சம்பவங்கள் பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளன.
சிறு பிள்ளைகளை தவிக்க விட்டு தாய்மார் வெளிநாடு செல்வதால் பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடுகின்றது என்பதால் அத்தகையவர்கள் வெளிநாடு செல்வதற்கு இலங்கையில் தடை விதிக்கப்பட் டுள்ளது.
இந்நிலையில்,வெளிநாடுகளில் பணி புரியும் தமது மகளோ, மனைவியோ கை நிறைய சம்பாதித்து வருவாள் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும்போது சவப்பெட்டியில் சடலமாக வந்து சேர்ந்த பெண்களின் தொகையும் அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. சவூதி அரேபியாவில் வேலை வாய்ப்புகளுக்காகச் சென்று உயிரிழந்த இலங்கையைச் சேர்ந்தவர்களின் 20 சடலங்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படாத நிலையில் உள்ளதாக இணையதளம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.
மேலும், 2012 ஜனவரி மாதத்துக்கும் ஒக்டோபர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து 30 வயதுக்குக் குறைவான வர்களின் சடலங்கள் பெருமளவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ள்ளதாகவும், அதில் 75 வீதமானவை பெண்களின் சடலங்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று உயிரிழந்த இலங்கைப் பெண்கள் பற்றி இலங்கை வர்த்தகர் சங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும், உயிரிழந்தவர்களில் அநேகமானோர் மாரடைப்பினால் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்து டன் அனுப்பி வைக்கப்படும் பெரும்பாலான சடலங்களில் உள்ளுறுப்புகள் காணாமல் போயுள்ளதாகவும் சுட்டிக் காட்டப்படுகின்றது.
இவ்வாறு பல்வேறு துயரம் தரும் செய்திகளுடன் சம்பளம் தரப்படாமல் பெண்கள் ஏமாந்த நிலையில் நாடு திரும்பியுள்ள சம்பவங்களும் பெருமளவில் இடம்பெற்றுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வட்டவளை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் வெளிநாட்டில் பணிப் பெண்ணாகச் சென்றிருந்தபோது விபத்தில் சிக்கி கை, கால் இழந்த நிலையில் நாடு திரு ம்பியுள்ளார். ஆனால், அவருக்கு எந்த விதமான கொடுப்பனவோ,நட்ட ஈடோ கிடைக்காமல் ஏராளமான கஷ்டங்களை அனுபவித்து வருகின்றார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம்
வெளிநாடு செல்பவர்கள் முகவர்கள் (ஏஜென்ட்) மூலமாக செல்லும்போது அத்தகைய முகவர் நிலையங்கள் இல ங்கை “வெளிநாட்டு வேலை வாய் ப்புப் பணியகத்தில்” முறையாகப் பதிவு செய்யப்பட்டு அனுமதிப் பத்தி ரம் பெறப்பட்டுள்ளதா என்பதை முத லில் அறிந்து கொள்ள வேண்டும். தொழில் பெறுகின்ற காலத்தில் அவர்களின் அனுமதிப் பத்திரம் செல்லுபடியானதா, அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதைத் தெரிந்து கொண்ட பின்னரே தமது கடவுச்சீட்டு மற்றும் ஆவணங்களை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கின்றவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் மூலம் 15 நாட்களும், மத்திய கிழக்கு நாடுகள் அல்லாத நாடுகளுக்குச் செல்கின்றவர் களுக்கு 25 நாட்களும் பயிற்சி தரப்படுகின்றது. அத்தோடு வெளிநாட்டு வேலை தொடர்பாக ஒரு நாள் அறிவூ ட்டும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. சிங்களம் அல்லது தமிழ்மொழியில் அடிப்படை எழுத்தாற்றல் குறைந்தவர்களுக்கு அடிப்படை வதிவிட கற்கைநெறி 18 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது. அவர்கள் பெண்களாக இருந்தால் கைத்தொழில் மற்றும் தையல் பயிற்சி 40 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது.
வெளிநாட்டில் வேலை செய்பவர் கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்தால் அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரகத்துடன் அல்லது இராஜதந்திர நிலையத்துடன் தொடர்பு கொண்டு அவர்களின் கவனத்துக்குக் கொண்டு வர முடியும். சம்பளம் வழங்கப்படா விட்டால் அல்லது வேலைக்கு அழை க்கின்ற அனுசரணையாளர் ஒப்பந்த த்தை மீறினால் அதுபற்றி மேற்கூறிய அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும்.
சுகவீனம், காயம், துன்புறுத்தல்கள், துஷ்பிரயோகம் முதலான காரணங்க ளால் இலங்கைக்கு திரும்பி வரும்போது, விமான நிலையத்தில் உள்ள இல ங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக அதிகாரிகளின் உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். அவர்கள் வீடு செல்வதற்கான பயணச் செலவு, இடைத்தங்கல் இல்லத்தில் உணவு மற்றும் தங்குமிட வசதிகளைச் செய்து கொடுப்பார்கள்.
இவ்வாறு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிலையங்கள் ஊடாக வெளிநாடு செல்வதன் மூலம் ஓரளவு தகுந்த பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். சுகவீனம், விபத்து, ஏதாவது அங்கவீனம், உடல் ரீதியான துன்புறுத்தல்கள், துஷ்பிரயோகம் போன்ற காரணங்களால் திருப்பி அனுப்பப்பட்டிருந்தால் அதற்கான இழப்பீடுகளையும் பெற்றுக் கொள்ள வழி கிடைக்கும். எனவே, வெளிநாடு செல்பவர்கள் மிகவும் நிதானமாகவும் சரியாகவும் செல்வதில் அக்கறை கொள்ள வேண்டியது அவசியமாகும்.
வெளிநாடு சென்றவர்களுக்கு உதவி
பெருந்தோட்டப் பகுதிகளிலிருந்து வெளிநாடு சென்றவர்களில் சிலர் தமது குடும்பங்களோடு எந்தவிதமான தொடர்புகளும் இன்றி இருக்கின்றா ர்கள். சிலர் காணாமற் போயுள்ளார்கள். அவர்களைத் தேடிக்கண்டு பிடிப்பதற் கான சரியான விளக்கம் இல்லாத காரணத்தால் குடும்பத்தில் உள்ளவர்கள் பெருந்தொகையான பணத்தை செலவிட்டும் வேலைக்குச் சென்றவர்கள் உயிரோடு இருக்கின்றார்களா இல்லையா என்று எந்த விதமான பதிலை யும் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றார்கள்.
எனவே, அத்தகையவர்களுக்கு உதவுவதற்காக “பிரிடோ” நிறுவனம் தனது நிறுவனத்தின் பணியாளர்களுக்கான செயலமர்வு ஒன்றை நடத்தியுள்ளதாக பிரிடோ வெளிக்கள உத்தியோகத்தர் எஸ்.கே.சந்திரசேகரன் தெரிவித்துள் ளார். மேலும், இந்த நிறுவனம் வெளி நாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான பணிகளை ஆரம்பித்தவுடன் மேற் கூறப்பட்ட பிரச்சினையோடு சம்பந்தப்பட்டவர்கள் பிரிடோ நிறுவனம் நடத்தி வருகின்ற நடமாடும் சேவை கள் மற்றும் பிரிடோ பணிமனை மூலம் அறியத் தருகின்றார்கள். அவ ர்களிடமிருந்து பெறப்படும் அவசி யமான தகவல்களைக் கொண்டு வெளி நாட்டு வேலை வாய்ப்புப் பணியகத் தின் முறைப்பாட்டுப் பிரிவுக்கு கொண்டு செல்லப்படுகின்றது.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பயனாக இதுவரையில் காணாமற் போன அல்லது குடும்பத் துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டி ருந்த 6 பேருக்கும் மேற்பட்டோர் அண்மைக் காலத்தில் நாடு திரும்பி தமது குடும்பத்தோடு இணைந்துள்ள தாகவும் எஸ்.கே.சந்திரசேகரன் தெரி வித்துள்ளார். இந்த முயற்சிக்கு கொழு ம்பில் உள்ள, “மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையம்” குறி ப்பிடத்தக்க ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும், வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காகச் சென்றுள்ளவர்கள் தொடர்பான சகல தகவல்களும் அடங் கிய கோவை ஒன்றை குடும் பத்தவர்கள் வைத்திருக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாக குடும்பத்தவர்களுக்கு அறிவுறுத்துமாறு தமது நிறுவனத்தின் பணியாளர்களுக்கும், முன்பள்ளி ஆசி ரியர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித் துள்ளார். பிரச்சினைகள் உள்ளவர் கள் இந்த நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெற் றுக் கொள்ளலாம்.
பானா. தங்கம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக