நுழைவாயில் (கேற்) கம்பி தோள்பட்டை யில் ஏறியதில் பெண்ணொருவர் 20 மணித்தியாலங்கள் உயிருக்குப் போராடிய சம்பவம் ஒன்று துபாயில் இடம்பெற்றுள்ளது..
மகளின் ஆசையை நிறைவேற்றும் நோக் கில் மரத்தின் அருகில் உள்ள சுவரில் ஏறி, பழங்களை பறிக்க முயன்ற துபாய் பெண் ஒருவர், திடீரென கால் இடறி கீழே விழுந்துள்ளார். அவர் விழுந்த இடத்தில் கூர்மையான கம்பிகள் அடங்கிய நுழைவாயிலில் அவரது இடது கை சிக்கிக்கொண்டுள்ளது.
கையின் புயப் பகுதியை கம்பி குத்தி ஊடறுத்துள்ளது. இதனைப் பார்த்த அவருடைய 3 வயது மகள் பயத்தால் அலறியுள்ளார். ஆனால் துணிச்சல் மிகுந்த குறித்த பெண், மகளுக்கு சமாதானம் கூறி, தன்னுடைய கையடக்கத் தொலைபேசியை எடுத்து வருமாறு கூறியுள்ளார். பின்னர் தொலைபேசி மூலம் 'அம்புலன்ஸுக்கு' தகவல் கொடுத்துள்ளார். 'அம்புலன்ஸ்' வருவதற்கு சுமார் 20 நிமிடங்கள் ஆகியது. அதுவரை அவர் தைரியமாக இருந்ததோடு, தனது மகளுக்கும் ஆறுதல் கூறினார்.
மீட்புப்படையினர் விரைவாக வந்து, அவருடைய கையை கம்பியில் இருந்து உடனே எடுத்தால் ஆபத்து என கருதி, மிகப்பெரிய இரும்பு வெட்டியால் இரும்புக்கம்பிகளை வெட்டி எடுத்து, அப்படியே அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு மிக இலாவகமாக அவரின் கையிலிருந்த இரும்புக் கம் பிகளை மருத்துவர்கள் அகற்றினர். சுமார் 20 மணிநேரம் கம்பிகளுடன் இருந்த அந்த பெண்ணின் தைரியத்தை மருத்துவர்கள் பாராட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக