ஞாயிறு, 11 மே, 2014

மலட்டுத் தன்மையை நீக்கும் கரட்

கரட்டில் உள்ள ‘ஏ' விட்டமின் கண் பார்வைக்கு நல்லது. கரட்­டுக்கு மஞ்சள் நிறத்தை அதி­லுள்ள பீட்டா கரோட்டின் என்ற அமி­லம்தான் தரு­கி­றது. அந்த பீட்டா கரோட்­டின்தான் மனித கண்­களில் புரை வராமல் பாது­காக்­கி­றது.



தினமும் ஒரு கரட் சாப்­பிட்டால் உடலில் உள்ள தேவை­யற்ற கொழுப்­பு­களை அகற்­றலாம், குடல் புண்கள் வராமல் தடுக்­கலாம். மஞ்சள் முள்­ளங்கி என அழைக்­கப்­படும் கரட் பற்­றியும் அதன் பலன்கள் பற்­றியும் அறிந்து கொள்வோம்.பயன்கள்

உயிர்ச் சத்­துகள் நிறைந்த கரட்டை பச்­சை­யாக உண்­பது நல்­லது. நார்ச்­சத்து மற்றும் பொட்­டா­சியம் சத்­து­களும் நிறைந்­துள்­ளதால் ஜீர­ணத்­திற்கு உத­வு­கி­றது. மாலைக் கண் நோயை தடுக்கும். இரத்­தத்தில் உள்ள கொழுப்­புச்­சத்தை குறைக்­கவும், புற்று நோயி­லி­ருந்து காக்­கவும் கேரட் உத­வு­வ­தாக ஆய்­வுகள் தெரி­விக்­கின்­றன. இரத்­தத்தை சுத்­தப்­ப­டுத்­தவும், விருத்திச் செய்­யவும் பயன்­ப­டு­கி­றது. வாய் துர்­நாற்­றத்தை போக்கும். குடல் புண்கள் வராமல் தடுக்கும்.

ஆண்மை சக்­தியை அதி­க­ரிக்கும் தன்மை நிறைந்து காணப்­ப­டு­கி­றது. அதா­வது, பாதி வேக­வைத்த முட்­டை­யுடன் கரட் மற்றும் தேன் கலந்து சாப்­பிட்டு வர நல்ல பலன்கள் கிடைக்கும். கரட்டை பசும் பாலில் காய்ச்சி, காய்ந்த திராட்சை பழம் சேர்த்து தேன் கலந்து பயன்­ப­டுத்­தினால் உடல் வலுப்­பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதி­க­ரிக்கும். கரட்டை எலு­மிச்சை சாறு சிறிது கலந்து சாப்­பிட்டு வர பித்த கோளா­றுகள் நீங்கும். உருளைக் கிழங்கை விட 6 மடங்கு அதிக சுண்­ணாம்­புச்­சத்து நிறைந்­துள்­ளதால் உண­வுகள் எளிதில் ஜீர­ண­மாகும். எலும்­புகள் உறு­தி­யாகும்.

முது­மையில் கல்­சிய இழப்பை சரி­கட்ட அன்­றாடம் உணவில் கரட்டை சேர்த்­துக்­கொண்டால் எலும்பு, பற்கள் பலப்­படும். தலை­முடி உதிர்­வதை தடுக்கும் ஆற்றல் கரட்­டுக்கு உள்­ள­தா­கவும் ஆராய்ச்­சிகள் தெரி­விக்­கி­றது. பெண்­க­ளுக்கு மெனோபாஸ் காலங்­களில் ஏற்­படும் விட்­டமின் இழப்பை சரி­செய்ய கரட் மிகவும் சரி­யான ஊட்­ட­சத்து என உலக சுகா­தார நிறு­வனம் அறி­வித்­துள்­ளது. பெண்­க­ளுக்கு மாத­வி­லக்­கின்­போது உண்­டாகும் அதிக உதி­ரப்­போக்கை கட்­டுப்­ப­டுத்தும் தன்மை உள்­ளது.

கரு­வுற்ற பெண்கள் தினமும் 25 கிராம் அளவு கரட்டை பச்­சை­யா­கவோ அல்­லது சமைத்தோ சாப்­பிட்டு வந்தால் மலச்­சிக்கல், போலி வலிகள், களைப்பு ஏற்­ப­டாது. சோகை நீங்கும். குழந்தை நிற­மா­கவும், வலு­வா­கவும் பிறக்கும். சரு­மத்­திற்கு பொலி­வையும், தலைச்­சுற்றல், மயக்கம் போன்­ற­வற்றை தடுக்கும் ஆற்­றலும் நிறைந்­துள்­ளது. கண் புகைச்சல், கண்ணில் பாசி படிதல், மாலைக் கண் போன்­ற­வற்றை குண­மாக்கும்.

கரட்டின் மேல் தோல் நீக்கி சிறு­சிறு துண்­டு­க­ளாக நறுக்கி அல்­லது திருகி அத­னுடன் சின்ன வெங்­காயம், பச்சைக் கொத்­த­மல்லி, இஞ்சி, பச்சை மிளகாய் சிறிது சேர்த்து மோரில் ஊற­வைத்து மதிய உணவு வேளை­களில் உண்டு வந்தால் வாயு மற்றும் வயிறு சம்­பந்­தப்­பட்ட நோய்கள் நீங்கும். கரட் சாறுடன் பாதாம் பருப்­புகள் உண்டு வந்தால், மூளை விழிப்­புடன் இருக்கும். மஞ்சள் காமாலை சீக்­கிரம் குண­மாக தினமும் கரட் சாறு அருந்­து­வது நல்­லது.

வயிற்றில் பூச்­சி­களை மருந்­தின்றி வெளி­யேற்றும், தோல் வரட்சி நீங்கி பள­ப­ளப்­பாகும், முகப்­ப­ருக்கள் மறைந்து சிவப்­பழகு கூடும். தர­மான தாய்ப்பால் தொடர்ந்து கிடைக்க கரட் சாறு அருந்­தலாம். இரத்­தத்தில் தேவை­யில்­லாத யூரிக் அமி­லத்தை கட்­டுப்­ப­டுத்­து­கி­றது. இதனால் மூட்­டு­வீக்கம், வாத நோய்கள் தீரும். மலட்டுத் தன்­மையை மாற்றும் வைட்­டமின் ‘ஈ‘ நிறைந்து காணப்­ப­டு­கி­றது. கரட்டைக் கடித்து உண்­பதால் உமிழ்நீர் அதி­க­மாகச் சுரந்து செரி­மா­னத்தை அதி­க­ரிக்­கி­றது. நாம் தினமும் ஒரு கரட் உண்டு வர குடல்புண், வயிற்­று­வலி, அஜீ­ரணம் ஆகி­ய­வற்றில் இருந்து விடு­தலை கிடைக்கும்.

கரட் ஜூஸ் உடம்­பிற்கு குளிர்ச்சி ஏற்­ப­டுத்­து­வதால், மதிய வேளை­களில் அருந்­தலாம். கோடைக் காலத்தில் உடல் சூடு தணிய, நிறைய கரட் ஜூஸ் பரு­கலாம். சளித்­தொல்லை உள்­ள­வர்கள் அதி­லி­ருந்து விடு­பட்ட பின்­னரே ஜூஸை குடிக்க வேண்டும். கரட் லேசான இனிப்பும், பசியைத் தூண்­டு­வ­தா­கவும், நீர் இளக்­கி­யா­கவும் செயல்­படும் தன்மை கொண்­டது. வயிற்றுக் கடுப்பு, வயிற்றில் பூச்சித் தொல்­லை­க­ளுக்கும் மருத்­துவ ரீதி­யான பலன்­களைத் தந்து உத­வு­கி­றது. இரு­மலைப் போக்கும். இதை மிக அதி­க­மாகத் சாப்­பிட்டால் பித்­த­மாகும்.

நீண்­ட­கா­ல­மாக 'அல்சர்’ உள்­ள­வர்கள், காரம் சாப்­பிட்­டதால் வயிற்று வலி வரு­ப­வர்கள் கரட்டை நன்கு பிழிந்து சாறு எடுத்து வாரம் மூன்று தடவை வீதம் இரண்டு மாதங்கள் சாப்­பிட்டால், வயிறு மற்றும் குடல் சம்­பந்­த­மான நோய்கள் குண­ம­டையும். மறு­ப­டியும் அது­போன்ற பாதிப்­புகள் ஏற்­ப­டா­மலும் தடுத்துவிடும்.

கரட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மிகுந்த நன்மை அளிப்பதுடன், செரிமானத் தைத் தூண்டி நல்ல ஜீரண சக்தியையும் அளிக்கிறது. கரட்டை பச்சையாகவே சாப்பிடலாம் என்பது இதன் சிறப்பு.

பற்களில் கறை உள்ளவர்கள் அடிக்கடி கேரட்டை பச்சையாக மென்று சாப்பிட்டால் அந்தக் கறை மறைந்துவிடும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல