இலங்கையின் இனப்பிரச்சினை தீர யதார்த்த சிந்தனை வேண்டும். இலங்கையின் சனத்தொகையில் 100 க்கு 65 சதவீதம் சிங்கள பௌத்த மக்களும், 9 சத வீதம் கிறிஸ்தவ சிங்கள மக்களும் 12 சதவீதம் தமிழ் மக்களும், 8 சதவீத முஸ்லிம் மக்களும் ௬ சதவீத மலையக மக்களும் வாழ்கின்றார்கள். ஆக பௌத்த சிங்கள மக்கள் மூன்றில் இரண்டு பங்கினராகவும் சிறுபான்மைகள் மூன்றில் ஒரு பங்காகவும் காணப்படுகின்றனர். இது ஒரு சராசரி மதிப்பீடாகும். 9 மாகாணங்களில் 7 சிங்கள மாகாணங்களாகவும், 2 தமிழ் மாகாணங்களாகவும் உள்ளன. 25 மாவட்டங்களில் 18 சிங்கள மாவட்டங்களாகவும், 7 தமிழ் மாவட்டங்களாகவும் உள்ளன. அம்பாறை தமிழ் மாகாணத்தின் முஸ்லிம் மாவட்டமாகவே இருந்திருக்க வேண்டும் எனினும் திட்டமிட்டு சிங்கள மாவட்டமாக தமிழ் மாகாணத்துக்குள் திணிக்கப்பட்டிருக்கின்றது.
7 சிங்கள மாகாணங்களின்
18 மாவட்டங்கள்
1. மேல் மாகாணம் – கொழும்பு, கம்பஹா, களுத்துறை
2. தென் மாகாணம் – காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை
3. மத்திய மாகாணம் – கண்டி, மாத்தளை, நுவரெலியா
4. சப்ரகமுவ மாகாணம் – இரத்தினபுரி, கேகாலை
5. வடமேல் மாகாணம் – குருணாகல், புத்தளம்
6. வடமத்திய மாகாணம் – அநுராதபுரம், பொலனறுவை
7. ஊவா மாகாணம் – பதுளை, மொனராகலை
2 தமிழ் மாகாணங்களின் 7 மாவட்டங்கள்
1. வட மாகாணம் – யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு
2. கிழக்கு மாகாணம் – மட்டக்களப்பு, திருகோணமலை
ஆக கிழக்கு மாகாணத்தின் அம்பாறையைச் சேர்த்தே 18 சிங்கள மாவட்டங்களாகின்றன. ஆக இரு பிரதேசங்கள் உள்ளன.
தனித்தனியே சிங்களப் பிரதேசம் தமிழ் பிரதேசம் என இரு வகை உண்டு. விஸ்தீரணத்தில் 7 சிங்கள மாகாணங்களும் மூன்றில் இரண்டாகவே உள்ளன. 2 தமிழ் மாகாணங்கள் மூன்றில் ஒன்றாக உள்ளது. கடற்பரப்பில் 2 தமிழ் மாகாணங்களும் 100 க்கு 60 சதவீதத்தைக் கொண்டுள்ளன. எனினும் 60 சதவீதமுள்ள இனத்தினர் 40 சதவீதமுள்ள மக்களை ஆளுகிறார்கள். இதற்கு பூர்வ இனம் தாமே என்பதையே ஆதாரமாக முன்வைக்கிறார்கள். நாடு பூர்வீக இனத்துக்கே சொந்தம் இது உலகின் அனைத்து அறிஞர்களும் ஏற்றுக் கொண்ட உண்மை இத்தகைய அந்தஸ்தை பெற வேண்டுமாயின் பாரம்பரியம் கலாசாரம் இருக்க வேண்டும். அதன்படி நாமே இலங்கை மாதாவின் உரித்தாளிகள் ஏனைய பிரஜைகளுக்கும் வாழ்வோருக்கும் பொதுவான உரிமைகள் இருக்கின்ற போதும் அவர்களுக்கில்லாத நாலு வகை உரிமைகள் பூமி புத்திரர்களான எங்களுக்கு உண்டு. சரித்திரத்தில் பாரம்பரியத்தில் நாட்டில் இனத்தில் தீர்வு காணும் உரிமைகளே அவைகளாகும். இது உலகின் ஏகோபித்த தீர்வு என்றெல்லாம் கூறுகிறார்கள். மக்கள் விடுலை முன்னணியின் புதிய தலைமை அண்மையில் வெளியிட்டுள்ள கருத்துக்களைப் பார்த்தாவது இவர்கள் தெளிவு பெற்றுக் கொள்ள வேண்டும்.
இந்நாட்டில் ஐந்து பிரதான இனங்களும் நான்கு மதங்களைப் பின்பற்றுவோரும் வாழ்கின்றனர். சரித்திர ரீதியில் இவர்கள் எங்கிருந்து வந்தாலும் அனைவரும் இந்நாட்டைச் சேர்ந்தவர்களே. ஒரு மதத்தை மிதித்துக் கொண்டு மற்ற மதம் தன்னை உயர்வெனும் சமூகத்தை நாம் உருவாக்கமாட்டோம் என்று அக்கட்சி கூறுகிறது. யாப்பு ரீதியாக ஒரு இனத்துக்கு மட்டும் முக்கியத்துவம் வழங்கப்பட்டதால் ஏனைய இனங்கள் இரண்டாம் பிரஜைகளாகின.
இதனால் இதுவரை காணப்பட்ட பல்லின தேசியம் பேரின தேசியமாகிறது பெரும்பான்மைக்கு உரிமை எனவும் சிறுபான்மைகளுக்கு சலுகை எனவும் வகுக்கப்பட்டன. எனவே தருவதை ஏற்றுக் கொள்ள வேண்டும் அதிகம் கோர முடியாது பூமிபுத்திரர்களும் வந்தேறு குடிகளும் சமமல்ல என்பது தற்போதைய கொள்கையாக உள்ளது.
உலகில் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில நாடுகள் தாம் ஒரே இனம் வாழும் நாடுகளாகும். சவூதி அரேபியாவை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். மற்றும்படி 100க்கு 98 சதவீதம் பல்லினங்கள் வாழும் நாடுகளேயாகும். அந்த வகையில் இலங்கை ஒரு பல்லின நாடே என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆக ஒரு பல்லின நாட்டை ஒருபோதும் பேரின வடிவில் அளவிட முடியாது என்பதே உண்மையாகும்.
இதுவே உள்நாட்டு நெருக்கடிக்கும் சர்வதேச நெருக்கடிக்கும் இலங்கை உள்ளாகக் காரணமாகும். நாம் இப்போது பண்டைய அரச காலத்தில் இல்லை. எனவே பழைய நினைப்பை மறந்து முறையைத் தெரிந்து நடந்து உலகம் போகும் பாதையிலே உள்ளம் தெளிந்து வர வேண்டும். இது தவிர வழியில்லை. அனுரகுமார திசாநாயக்க இது குறித்து மேலும் கூறுகையில்,
இனப் பாகுபாட்டை நமது மக்கள் விடுதலை முன்னணி உருவாக்காது நாம் எல்லா இனங்களினதும் சம உரிமையை ஏற்றுக் கொள்கிறோம். எமது நாட்டின் இரு பிரதான மொழிகளினதும் சம அந்தஸ்தை நாம் ஏற்றுக் கொள்கிறோம். தேசிய கீதத்தை தமிழில் பாடுவது எப்படிக் குற்றமாகும்? சுந்தர ஸ்ரீ பரிணி எனக்கூறினால் தமிழ் பிள்ளைகளுக்கு விளங்கிக் கொள்ள முடியுமா? இந்நிலையில் அப்பிள்ளைகளுக்கு எப்படி தேசப்பற்று வரும். (லங்காதீப 06.-03.-2014) எனக் கேட்கிறார்.
உண்மையில் இத்தகைய கருத்துக்களையே சர்வதேசம் ஏற்றுக் கொண்டிருக்கிறதே தவிர பேரின வாதத்தையல்ல. தாம் 2500 ஆண்டுகளுக்கு முன் குடியேறியோரின் சந்ததிகள் என்பதால் முழு நாடும் தமதே என்றும் தாம் பெரும்பான்மையினராக வாழ்வதால் தேச வளங்களின் ஏகபோகம் தமக்கே எனவும் பேரினவாதிகள் வாதிடுகின்றனர். இக்கருத்துக்கள் பண்டைய அரச காலங்களில் மட்டுமே எடுபட்டிருக்கும் இப்போது இவற்றுக்கு சர்வதேச விதிமுறைப் படி இடமில்லை. ஏனெனில் ஓர் இனத்தை மறு இனம் ஆள ஐ.நா. சபை அனுமதிக்காது.
இது பற்றி சட்டத்தரணி தர்மசேன யகன் தாவல பின்வருமாறு குறிப்பிடுகிறார். இனங்களுக்கிடையே நட்புறவை நிலைநாட்ட விரும்ப வேண்டும் மக்களின் சுயநிர்ணய உரிமையையும் சம நிலைக்கோட்பாட்டையும் கௌரவித்து சர்வதேச சமாதானத்தை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். (ஐ.நா. சபையின் கொள்கை Article (2)
இனங்கள் மத்தியில் சமாதானத்தையும் நட்புறவையும் நிலைநாட்ட உயர் தர ஜீவாதாரத்தையும் முறையான தொழில் வாய்ப்பையும் மனித உரிமையையும் உறுதிப்படுத்துவதெனில் சம நிலைப்பாடு மற்றும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடுகளுக்கு கௌரவம் அளிப்பதன் மூலமேயாகும். (ஐ.நா. சபையின் கொள்கை Article -55)
எல்லா இன மக்களுக்குக்கும் (மக்கட் பிரிவினருக்கும்) All people எனும் வகையில் Right of ditermination எனும் சுயநிர்ணய உரிமை இருப்பதோடு அதன் படி அவர்கள் விரும்பும் அரசியலைப் புரியவும் பொருளாதார, சமூக, கலாசார உயர் நிலைகளை அடையவும் உரிமையுண்டு. (சர்வதேச சிவில் மற்றும் அரசியல் கொள்கை)
ஓர் அரசு சம நிலைப்பாட்டைக் கௌரவித்து அதன் மூலம் அனைத்துத் தனி நபர்களுக்கும் பொருளாதார, சமூக, கலாசார உரிமைகளைப் பெற இடமளிக்க வேண்டும். (சர்வதேச பொருளாதார சமூக கலாசாரம் பற்றிய கொள்கையின் மூன்றாம் ஷரத்து)
எல்லா இனப்பிரிவுகளுக்கும் சுய நிர்ணய உரிமை உண்டு. அதனால் அவை சுயாதீனமாகத் தமது அரசியல் பொருளாதார சமூக கலாசார உரிமைகளை அனுபவிக்கலாம். (25.-06.-1993 ஆம் ஆண்டு வியன்னாவில் நிகழ்ந்த உலக மனித உரிமை மாநாட்டு உடன்படிக்கையின் இரண்டாம் ஷரத்து)
அனைத்தின மக்கள் (All people) எனச் சர்வதேச சட்டம் குறிப்பிடுவது முழு நாட்டினதும் சனத் தொகையை வைத்தல்ல மொழி மற்றும் கலாசார ரீதியில் அமைந்ததே மக்கட்பிரிவு எனக் கனேடிய உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. எனவே இறைமையுள்ள ஒரு நாடு எல்லா இனங்களினதும் சுயநிர்ணய சம நிலைப்பாட்டைப் பேண வேண்டும். (லங்காதீப 06.-04.-2014) சட்டத்தரணி தர்மசேன யகன்தாவல.
இனம் எனும் சொல்லில் பூர்வீக எனும் குறிப்பு இல்லை. எனவே எல்லா இனப்பிரிவுகளும் சம நிலைப்பாடாகவே நோக்கப்படுகின்றன. அது போல் தொகையில் கூடிய இனம் தொகையில் குறைந்த இனம் எனும் குறிப்பும் இல்லை. மத இன மொழி கலாசார, பிரதேச வித்தியாசங்களே கணிக்கப்படுகின்றன. எனவே எல்லா இனங்களினதும் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் ஓர் இனம் மட்டும் ஆளும் இனமாகவும் மற்ற இனங்கள் ஆளப்படும் இனங்களாகவும் இருக்க முடியாது. ஓர் இனத்திடம் மற்ற இனங்கள் தமது சுதந்திரங்களை இழந்து விடவும் முடியாது. இவை சர்வதேச சட்ட விதிமுறைகளை மீறும் செயற்பாடுகளாகும். இவற்றை மீறினால் சர்வதேச ரீதியில் இலங்கை தனித்துவிடும். நவீன காலத்தில் எந்த நாடும் தனித்து இயங்க முடியாது. அதனால் தான் வளர்ச்சியுற்ற நாடுகளே உலகோடு இணங்கிச் செல்கின்றன. காரணம் திறந்த பொருளாதாரக் கோட்பாட்டின் படி ஒரு நாட்டில் தங்கியே மறுநாடு நிற்கும். எனவே வளர்முக மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றான இலங்கை பேரினவாதத்தைக்காக்க சர்வதேச விதிமுறைகளை மீறுவதானது கண்களை விற்று சித்திரம் வாங்குவது போன்றே அமையும்.
இலங்கைக்கு உலக நாடுகளில் பக்கத்திலுள்ள இந்தியாவே முக்கியமானதாகும். பாரம்பரிய நெருக்கம் மட்டுமல்ல 18 மைல்கள் மட்டுமேயுள்ள கடல் தூரமும் இதற்குக் காரணங்களாகும். அத்தோடு தனது சுய பாதுகாப்புக்கு இலங்கை முக்கியம் என்றும் இந்தியா கருதுகின்றது. அதனால் தான் இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளரில் குறிப்பிட்ட தொகையினரை இந்தியா கையேற்றதோடு கச்சதீவையும் இலங்கைக்குக் கொடுத்திருந்தது.
தனது பந்தோபஸ்துக்கான இலங்கையோடுள்ள அரவணைப்பு இந்தியாவுக்கு முக்கியமாயினும் அதில் இலங்கையின் உள்நாட்டு விவகாரமும் சம்பந்தப்பட்டே இருக்கிறது. காரணம் இலங்கையின் உள்விவகாரம் சீராகி இருந்தால் தான் இந்தியாவின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இருக்கும். எனவே, இலங்கை இதை தனக்கெதிரான இந்தியாவின் தலையீடு எனக் கருத முடியாது.
இந்துமா சமுத்திரம் இந்தியாவின் பெயராலேயே அழைக்கப்படுகிறது. இதில் ஒரு சிறிய தீவான இலங்கைக்கு இந்தியாவின் பாதுகாப்பை விட்டால் வேறு வழியில்லை.
இலங்கையின் வடக்கோடு இந்தியாவின் தமிழகம் 18 மைல் கடல்தூரமே இருக்கிறது. எனவே இங்கு பிரச்சினை ஏற்பட்டால் அங்கும் 7 கோடி பேர் மத்திய அரசுக்கெதிராகக் கிளம்பவே செய்வர். இதனால் இந்தியா தமிழர் சார்புக் கொள்கைக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. 13 ஆம் ஷரத்தை வலிந்து திணித்து அதை அமுல்படுத்துமாறும் வற்புறுத்தியது. பதிலுக்கு இந்த ஆத்திரத்தில் இலங்கை சீனாவின் நெருக்கத்தை நாடிச் சென்றுவிட்டது. இதை எதிர்பார்த்திருந்த சீனாவும் இலங்கைக்குப் பல உதவிகளையும் புரிந்து உறவை வளர்த்துக் கொண்டது. காரணம் இந்த உறவு சீனாவின் பொருளாதார உயர்வுக்கு இன்றியமையாததேயாகும். எனவே சில உதவிகளை சீனா இலங்கைக்கு வழங்கியது. இதன் மூலம் இந்தியாவிடம் தான் எதிர்பார்த்திருந்தவற்றை சீனாவிடமிருந்தும் பெற்றுக் கொண்டு இந்தியாவையும் சீனாவையும் இலங்கை சமநிலைப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும் இராஜதந்திரத்தை கையாண்டது.
எந்த நாட்டுக்கும் தான் விரும்பும் நாட்டோடு உறவு கொள்ளவும் ஒப்பந்தம் செய்யவும் உரிமை உண்டு. எனினும் சாதக பாதகங்களின் அடிப்படையிலேயே இது தீர்மானிக்கப்பட வேண்டும். இலங்கை சீன உறவை அமெரிக்க இந்தியக்கூட்டு தமது பாதுகாப்புக்கு இடையூறு என்றே கருதுகின்றன. சீனா தனக்குத் தேவையான அதிக அளவு பெற்றோலை அரபு நாடுகளிலிருந்தும் ஆபிரிக்காவிலிருந் தும் சிலநாடுகளினூடாகக் குழாய்கள் மூலம் பெற்றுக் கொள்ள வகுக்கப்பட்டதே சீனாவின் முத்துமாலைத் திட்டமாகும். இதனால் அமெரிக்காவின் இடைஞ்சலின்றி சீனாவுக்கும் பெற்றோல் எளிதாகக் கிடைக்கிறது. எனினும் இந்தியாவின் சுய பாதுகாப்புக்குரிய இந்து மா சமுத்திரத்தீவான இலங்கையும் அதற்கு உள்வாங்கப்படுவதை இந்தியா விரும்பவில்லை. காரணம் இந்தியாவைச் சுற்றி மாலைபோல் சீனாவின் அத்திட்டம் அமைவதாகும்.
இந்நிலையில்தான் 2011 ஆம் ஆண்டு பசுபிக்கை நோக்கி மையம் கொள்ளுதல் எனும் திட்டத்தை அமெரிக்கா வகுத்தது. காரணம் இந்து மா சமுத்திரப் பகுதியில் அதற்கு எந்த நாட்டின் ஆதரவும் இல்லாதிருந்ததேயாகும். எனவே இந்து மா சமுத்திரத்திலுள்ள தனது டியூகோகி றேஷியா தீவின் பாதுகாப்பை அது வலுப்ப டுத்த வேண்டியிருந்தது. அங்கு அது அமைத்திருந்த இராணுவ தளம் பசுபிக் கடற் பிராந்தியத்தில் முக்கியமானதாகும். இதனால் மாலைதீவிலும் கூட அமெரிக்கா புதிதாக ஓர் இராணுவ தளத்தை அமைத்துக் கொண்டிருக்கிறது.
இதனால் இப்போது பசுபிக் பகுதியில் அமெரிக்காவும் சீனா வும் தத்தமக்கென இரு அணிகளை உருவாக்கி யுள்ளன. இந்தி யாவும், ஜப்பானும் அமெரிக்க சார்பாகவும் பாகிஸ்தான், பங்களாதேஷ் மியன்மார், கம்போடியா, வியட்நாம், இலங்கை ஆகி யன சீனா சார்பாகவும் இருக் கின்றன.
ஏ.ஜே.எம்.நிழாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக