இது என்ன இடக்கு முடக்கான பெயராக இருக்கிறது என யோசிக்கிறீர்களா?
அது மாத்திரமல்ல, பொதுவாக சுறுசுறுப்பான வாழ்க்கை என்றால் நோய்கள் அணுகாது என்பார்கள். ஆனால், அதற்கு மாறாக நோய்க் குறிகள் இருக்கின்றன எனச் சந்தேகிக்கிறீர்களா?
அழைப்பு மணி அடித்ததும் கதவைத் திறந்த மனைவி இவரது வெற்றுக் கைகளைக் கண்டதும் ஏமாற்றம் அடைந் தாள். “எங்கை அப்பா பார்சல்” என்றாள். “என்ன பார்சல்”; எனக் கேட்க நினைத்தவர் திடீரென நினைவு வர, “அடடா மறந்து விட்டேனே” என மனம் நொந்தார். மனைவிக்கு காய்ச்சல். இன்று சமைக்க முடியாது என்பதால் மதிய இடைவேளையின்போது வீடு வரும்போது ஓர் உணவுப் பார்சல் கொண்டு வரச் சொல்லியிருந்தாள். வேலை மும்முரத்தில் அந்த நினைப்பே எழவில்லை இவருக்கு.
‘சுறுசுறுப்பு (மும்முர) வாழ்க்கைமுறை நோய்க்குறித் தொகுப்பு’
இதுபோன்ற பல சம்பவங்கள் உங்கள் வாழ்க்கையிலும் ஏற்பட்டிருக்கலாம்.
புத்தக அலுமாரிக்குப் போகிறீர்கள். எதை எடுக்க வந்தீர்கள் என்பது மறந்துவிட்டது. அல்லது பிரிட்ஜை திறக்கிறீர்கள். எதை எடுக்க அல்லது அதனுள் வைக்க வேண்டும் என்பது ஞாபகத்தில் இல்லை.
சாவியை எங்கே வைத்திருக்கறீர்கள் என்ற தெரியாமல் வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடுகிறீர்கள். கடைசியில் உங்கள் பொக்கற்றுக்குள் இருப்பதைக் கண்டு பிடித்ததும் மனைவியின் ஏளனச் சிரிப்பில் அசடு வழிகிறீர்கள். வேலையில் பிசியாக இருக்கும்போது செல்போனில் அழைப்பு எடுத்த நண்பருக்கு சற்று நேரத்தில் நீங்கள் அழைப்பதாகச் சொல்லியிருந்தீர்கள். முற்றாகவே மறந்துவிட்டது. பேசிக் கொண்டிருந்த ஒருவரின் பெயரைக் கேட்டிருந்தீர்கள், சற்று நேரத்தில் அழைக்க முனைந்தபோது என்ன பெயர் என்பது நினைவில் இல்லை.
ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது தேவைப்பட்ட ஒரு சாதாரண சொல் கிடைக்காமல் திணறுகிறீர்கள். இவை போன்ற பல சில்லறை விடயங்கள் மறந்து போவதால் மற்றவர்களின் ஏளனத்திற்கும் அதிருப்திக்கும் ஆளாவதால் மனம் நோகக் கூடும்.
இவற்றால் உங்களது நாளாந்தப் பணிகள் கடினமடைந்து நீங்கள் அதில் ஊக்கம் இழப்பதாக உணர்கிறீர்களா? இத்தகைய மிகச் சாதாரண விடயங்களை நினைவில் வைத்திருப்பது நித்தியப் போராட்டமாக உள்ளதா? அப்படியானால் நீங்கள் ‘சுறுசுறுப்பு (மும்முர) வாழ்க்கைமுறை நோய்க்குறித் தொகுப்பு’ (BusyLifestyleSyndrome) நோயினால் பாதிக்கபட்டிருப்பதாகக் கொள்ளலாம். தமிழ் சொல் நீண்டதாகவும் கடுமையாகவும் இருக்கிறதா? அப்படியானால் ‘பிஸி லைப் சின்ரோம்’ என்றே தொடரலாமே.
ஏன் ஏற்படுகிறது?
இன்றைய வாழ்வானது மிகவும் அவசரமானதாகவும் நேர நெருக்கடி மிக்கதாகவும் இருக்கிறது. ஆற்ற வேண்டிய கடமைகள் பல தினமும் பயமுறுத்துகின்றன. பயணங்கள் பல இருக்கும். இவற்றில் பல உங்கள் தொழில் சார்ந்தவையாக இருக்கலாம், அல்லது குடும்ப வேலைகளாக இருக்கலாம் அல்லது உங்கள் இலட்சிய இலக்குகளை எட்டுவதற்கான அயராத முயற்சிகளாக இருக்கலாம்.
அதே நேரம் இன்றைய வாழ்க்கையானது வசதிகள் மிக்கதாக மாறிவிட்டது என்பது உண்மைதான். ஸ்மார்ட் போன், ஈமெயில், இன்பொக்ஸ், என பலவும் கைகொடுக்கின்றன.ஆனால் அவை நிரம்பி வழிந்து நெருக்கடிகளையும் கொடுப்பதையும் மறுப்பதற்கில்லை.
கணினியிலும், போனிலும் மட்டும் நிரம்பி வழியவில்லை. எமது மூளையிலும்தான். அளவிற்கு அதிகமான தகவல்கள் நிரம்பி வழிவதால், அவற்றை பகுத்து சரியான இடங்களில் சேமிக்க நேரமும் வசதியும் மூளைக்குக் கிடைப்பதில்லை.
எமது மூளையானது தனக்கு தேவையான தகவல்களை இரு பெரும் பிரிவுகளாகச் சேமிக்கிறது. ‘குறுகிய கால நினைவுகள்’ ‘நீண்ட கால நினைவுகள்’ என்பனவையே அவை. சாதாரண நிலையில் பல தவகல்கள் உடனடி அவசரத் தேவைகள் நிமித்தம் குறுகிய கால நினைவுகளாக முளையின் ஹிப்போகம்பஸ் பகுதியில் (hippocampus region) சேமித்து வைக்கப்படுகின்றது.
ஆயினும் ஆற்று வெள்ளமாக அலை அலையாக அடித்து வரப்படும் தகவல்களில் முக்கியமானவற்றை ஒருவரால் தேர்ந்தெடுத்து உடனடியாக சேமிக்க முடியாது போய்விடுகிறது.
ஓர் உதாரணம் சொல்லலாம். நீங்கள் விமான நிலையத்தில் காத்திருக்கும்போது அருகில் இருந்தவருடன் உரையாடுகிறீர்கள். பின்னர் அவரவர் வழிகளில் பிரிந்து சென்றுவிடுகிறீர்கள். மறுநாள் உங்கள் மனைவியுடன் பேசும்போது நீங்கள் அவருடன் குறிபிட்ட ஒரு திரைப்படம் பற்றிப் பேசியதை ஞாபகப்படுத்தி சொல்ல முடிகிறது. ஆனால் அவரது பெயரை ஞாபகப்படுத்த முடியவில்லை. அவர் அணிந்திருந்த உடையோ அல்லது அவருக்கு மீசை இருந்ததா? இல்லையா போன்ற விடயங்கள் அடியோடு நினைவில் இல்லை. பேசிய விடயத்தைச் சேமித்து வைத்த மூளையானது ஏனையவற்றை அவசியமில்லை எனச் சேமிக்காது ஒதுக்கிவிட்டது.
இது போன்ற மறதிகள் ஓரிரு தடவைகள் நடந்தால் அதைச் தற்செயலான சம்பவம் என ஒதுக்கித் தள்ளிவிடலாம். ஆனால் மீண்டும் மீண்டும் இவ்வாறான ஞாபக மறதிகள் ஏற்பட்டால் அதனை ‘பிஸி லைப் சின்ரோம்’ எனக் கொள்ளலாம்.
நீங்கள் செய்யக் கூடியவை எவை?
மிக முக்கியமான விடயம் உங்கள் வாழ்க்கையை அவசரமும் நெருக்கீடும் இல்லாமல் ஆக்கி சற்று அமைதி வாழ்க்கைக்குத் திருப்புவதாகும். இதைச் ‘செய்யுங்கள்’ என்று சொல்வது சுலபம் செயற்படுத்துவது கஷ்டம் என்பது உண்மைதான்.
இருந்தாலும் உங்களால் குறிப்பட்ட காலப் பகுதிக்குள் செய்து முடிக்க முடியாத அல்லது உங்களால் முடியாத பணிகளை ஏற்காதீர்கள். உங்களால் செய்ய முடிந்ததை மட்டும் பொறுப்பேற்று மீதியை மறுக்கக் கற்றுக் கொள்ளுங்கள். நெருக்கீடு குறைந்துவிடும்.
மனதை அமைதிப்படுத்தும் பயிற்சிகளை தினமும் செய்து வாருங்கள். தியானம், யோகாசனம், உடலையும் மனதையும் தளரப் போடும் பயிற்சிகள் போன்ற பல உண்டு. தினமும் காலையில் பணியை ஆரம்பிக்க முன்னர் ஒருமுறை செய்யுங்கள். தேவை ஏற்பட்டால் பணிநேரத்திலும் ஒரு நாற்காலியில் தனிமையில் அமர்ந்திருந்து சில நிமிடங்களுக்கு தளரச் செய்யும் பயிற்சிகளைச் செய்து வரலாம்.
உடற் பயிற்சி அவசியம். அது நீரிழிவு கொலஸ்டரோல், பிரஷர் போன்ற நோயாளிகளுக்கானது மட்டுமல்ல ஏனையவர்களுக்கும் அவசியமானதே. வேக நடை, துள்ளல் நடை, ஓடுதல், நீச்சல் போன்ற எந்த உடற் பயிற்சியானாலும் நல்லதே. காத்திருக்கும் பணிகளில் மனத்தை அலையவிடாது முழுமையாக பயிற்சியில் ஈடுபடுங்கள். மனதில் உற்சாகத்தைக் கிளப்பும்.
முழுமையானதும் பரஸ்பர ஈடுபாட்டுடன் கூடிய உடலுறவு உடலுக்கும் உள்ளத்திற்கும் அற்புதமான ஓளடதமாகும்.
ஆரோக்கியமான சமபல உணவு, வேலை நெருக்கடிகளிலிருந்து விடுபட வைக்கும். உல்லாச விடுமுறையும் நிறையவே உதவும்
‘சுறுசுறுப்பு (மும்முர) வாழ்க்கைமுறை நோய்க்குறித் தொகுப்பு’ என்பது உளவியல் துறையில் புதிதாகப் பேசப்படும் ஒரு நோயானபோதும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இதனால் பாதிக்கபட்டிருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.
“அப்பாவுக்கு மறதிநோய் பிடிச்சிட்டுதோ இல்லை அல்சிமர் நோய் வரப் போகுதோ தெரியவில்லை. சாப்பாட்டையே மறந்து போனார்” மனைவி நக்கல் அடித்தா.
பயப்பட வேண்டியதில்லை.
முதுமை மறதி (Dementia) அல்சைமர் நோய் (Alzheimerdisease)
போன்றவை அல்ல இது முற்றிலும் வேறான மாற்றக் கூடிய நோய்தான். ஆனால் நோயை மாற்றுவதில் பெரும் பங்கு மருந்துகளில் இல்லை. நெருக்கடி மிக்க வாழ்கை முறையை மாற்றுவதில்தான் உள்ளது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
குடும்ப மருத்துவர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக