ஞாயிறு, 11 மே, 2014

அம்மன் கோவி­லுக்கு ஏற்­பட்ட நிலை பள்­ளி­வா­ச­லுக்கு உரு­வா­கி­யுள்­ளது

தம்­புள்ளை அம்மன் கோவி­லுக்கு ஏற்­பட்ட நிலை தற்­போது அங்­குள்ள ஹைரியா ஜும்மா பள்­ளி­வா­சலுக்கும் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. தம்­புள்­ளையில் புனித பூமிக்குள் இந்த இரு வணக்­கஸ்­த­லங்­களும் அமைந்­துள்­ள­மை­யினால் அவற்றை அங்­கி­ருந்து அகற்­ற­வேண்­டு­மென்று கடந்த இரண்டு வரு­டங்­க­ளுக்கு மேலா­கவே கோரிக்கை விடுக்­கப்­பட்டு வந்­தது.



இந்த நிலையில் கடந்த வருடம் தம்­புள்­ளையில் அமைந்­தி­ருந்த அம்மன் கோவில் பெரும் சர்ச்­சைக்கு மத்­தியில் இடிக்­கப்­பட்­ட­துடன் அங்­கி­ருந்து அகற்­றப்­பட்­டது. ஆல­யத்தின் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டது. ஆல­யத்தின் மூல­விக்­கி­ரகம் உடைக்­கப்­பட்­டது. இவ்­வாறு பல்­வேறு வித­மான வன்­மு­றைகள் பிர­யோ­கிக்­கப்­பட்­டதன் கார­ண­மாக ஆல­யத்தை அங்­கி­ருந்து அகற்றும் நிலை ஏற்­பட்­டது.

அம்மன் ஆல­யத்தை அமைப்­ப­தற்கு மாற்­றுக்­காணி வழங்­கப்­படும் என்று மத­வி­வ­கார அமைச்­சரும் பிர­த­ம­ரு­மான டி.எம்.ஜய­ரத்ன உட்­பட பல தரப்­பி­னரும் உறு­தி­ய­ளித்­தி­ருந்­தனர். ஆனால் இது­வரை மாற்­றுக்­கா­ணியும் வழங்­கப்­ப­ட­வில்லை. ஆல­யமும் மீள அமைக்­கப்­ப­ட­வில்லை. தம்­புள்­ளையில் அம்மன் ஆலயம் இருந்­த­தென்ற வர­லாறே தற்­போது அழிக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான நிலையில் தம்­புள்ளை ஹைரியா ஜும்மா பள்­ளி­வாச­லையும் அங்­கி­ருந்து அகற்­று­வ­தற்கு முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது. 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி இந்தப் பள்­ளி­வாசல் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டி­ருந்­தது. அன்­றி­லி­ருந்து இப்­பள்­ளி­வாசலை அங்­கி­ருந்து அகற்­று­வ­தற்கு பேரி­னவாத சக்­திகள் முனைப்­புக்­காட்­டி­யி­ருந்­தன. புனித பூமி, அபி­வி­ருத்தி என்ற போர்­வையில் பள்­ளி­வா­சலை அங்­கி­ருந்து அகற்றி வேறொரு இடத்தில் புதி­தாக நிர்­மா­ணிப்­ப­தற்கு தற்­போது தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

தம்­புள்ளை ரங்­கிரி ரஜ­ம­கா­வி­ஹா­ரா­தி­பதி இன­மா­லுவே சுமங்­க­ல­தேரர் இந்தப் பள்­ளி­வா­சலை அகற்­ற­வேண்டும் என்ற விட­யத்தில் உறு­தி­யாக செயற்­பட்டார். 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி இவ­ரது தலை­மை­யி­லான குழு­வி­னரே பள்­ளி­வா­சலை அகற்­று­மாறு முதன்­மு­தலில் கோரி­யி­ருந்­தனர். இதன் பின்­ன­ணி­யி­லேயே தாக்­கு­தலும் நடத்­தப்­பட்­டி­ருந்­தது. இந்தத் தாக்­கு­தலை அடுத்து முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள் மீதும் முஸ்லிம் மக்கள் மீதும் வன்­முறைகள் பல்­வேறு இடங்­க­ளிலும் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டன. இது­வரை 25க்கும் மேற்­பட்ட பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன.

இவ்­வா­றான சூழலில் பள்­ளி­வாசல் பகு­தி யில் வீதி அபி­வி­ருத்தி என்ற போர்­வையில் கடந்த செவ்வாய் மற்றும் புதன்­கி­ழ­மை­களில் தம்­புள்ளை ரங்­கிரி ரஜ­ம­கா­வி­ஹா­ரையின் விகா­ர­ாதி­பதி இன­மா­லுவே சுமங்­க­ல ­தேரரின் தலை­மையில் சுமார் 40 பொலி­ஸாரின் பாது­காப்­புடன் பாதையை 60 அடிக்கு அக­ல­மாக்கும் பணி ஆரம்­பிக்­கப்­பட்­டது. இதனால் பள்­ளி­வா­ச­லுக்கு ஆபத்து ஏற்­பட்­டுள்­ள­தாக பள்­ளி­வாசல் நிர்­வாகம் அர­சாங்­கத்­தி­லுள்ள முஸ்லிம் அமைச்­சர்­க­ளுக்கும் முஸ்லிம் நிறு­வ­னங்­க­ளுக்கும் அறி­வித்­தி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து இந்தப் பள்­ளி­வாசல் விவ­கா­ரத்தில் தலை­யி­டு­மாறு ஜனா­தி­பதி மஹிந்­த ­ரா­ஜ­பக் ஷ மற்றும் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பா­ய ரா­ஜ­பக் ஷ ஆகி­யோ­ரிடம் முஸ்லிம் அமைச்­சர்­களும், எம்.பி.க்களும் கோரிக்கை விடுத்­தி­ருந்­தனர். சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, கைத்­தொழில் மற்றும் வணி­கத்­துறை அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன், பிர­தி­ய­மைச்சர் பைசர் முஸ்­தபா ஆகியோர் இந்தக் கோரிக்­கை­யினை விடுத்­தி­ருந்­தனர்.

இத­னை­விட பள்­ளி­வா­ச­லுக்கு நேர­டி­யா­கவே பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எச்.எம்.எம். ஹரீஸ், எம்.எஸ். தௌபீக் ஆகியோர் விஜயம் செய்­தி­ருந்­தனர். இவர்கள் இந்த விவ­காரம் தொடர்பில் அமைச்சர் பஷில்

ரா­ஜ­பக் ஷவை சந்­தித்து பேசி­ய­துடன் பள்­ளி­ வா­சல்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள ஆபத்தை நீக்­கு­மாறும் கோரி­யி­ருந்­தனர். இதன்போது கருத்துத் தெரி­வித்த அமைச்சர் பஷில்

ரா­ஜ­பக் ஷ, தனி­ந­பர்­களோ அமைப்­புக்­களோ நாட்டின் சட்­டத்தை கையில் எடுக்க முடி­யாது. பள்­ளி­வாசல் விவ­காரம் தொடர்பில் ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்கு கொண்டு சென்று தீர்வைப் பெற்றுத் தருவேன் என்று உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். இதேபோல் பிரதி அமைச்சர் பைசர் முஸ்­த­பாவும் பள்­ளி­வா­ச­லுக்கு விஜயம் செய்து ஆபத்து நிலை­குறித்து ஆராய்ந்­தி­ருந்தார்.

இவ்­வாறு பள்­ளி­வா­ச­லுக்கு ஏற்­பட்ட ஆபத்து குறித்து முஸ்லிம் தலை­வர்கள் அரச உயர்­மட்­டத்­திற்கு எடுத்­துக்­கூ­றி­ய­ போதிலும் பள்­ளி­வா­சலை அங்­கி­ருந்து அகற்றும் நிலை தற்­போது ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. பள்­ளி­ வா­சலை அகற்­று­வ­தற்கு அனு­ம­திக்க முடி­யாது என்றும் அதற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் கூறி­யி­ருந்­தனர். ஆனால் அதற்­கான முயற்­சிகள் எடுக்­கப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை.

இவ்­வா­றான சிக்­க­லான நிலையில் நேற்று முன்­தினம் மாலை மாத்­தளை மேயரும் மாத்­தளை மாவட்ட சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி அமைப்­பா­ள­ரு­மான ஹில்மி கரீம் பள்­ளி­வாசல் நிர்­வாக சபை­யுடன் கலந்­து­ரை­யாடல் ஒன்றை ஏற்­பாடு செய்­தி­ருந்தார். தம்­புள்ளை பள்­ளி­வா­சலில் இடம் பெற்ற நிர்­வாக சபை­யி­ன­ரு­ட­னான கலந்­து­ரை­யா­ட­லி­லேயே பள்­ளி­வா­சலை அங்­கி­ருந்து அகற்றி வேறொரு இடத்தில் அமைப்­ப­தற்­கான முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது. பள்­ளி­வா­ச­லுக்கு மாற்­றுக்­காணி நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பை­யினால் தம்­புள்­ளை­யி­லேயே வழங்­கப்­படும் என்றும் நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை இனம்­காணும் நான்கு காணி­களில் ஒரு காணியை பள்­ளி­வா­ச­லுக்­காக பெற்­றுக்­கொள்­ளலாம் எனவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

அகற்­றப்­படும் பள்­ளி­வா­சலை மாற்­றுக்­கா­ணியில் நிர்­வா­கமே கட்­டிக்­கொள்­ள­வேண்­டு­மென்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. புனித பூமி என்ற பெயரில் இடம் பெறும் அபி­வி­ருத்­தி­க­ளுக்­காக கடந்­த­வ­ருடம் தம்­புள்­ளை­யி­லி­ருந்த அம்மன் கோவில் அகற்­றப்­பட்­டது. தற்­பொழுது அங்­கி­ருந்­த­பள்­ளி­வா­சலும் அகற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது.

தற்­போது பள்­ளி­வா­சலை அமைப்­ப­தற்கு மாற்­றுக்­காணி வழங்­கப்­படும் என உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆனால் பள்­ளி­வாசலை அங்­கி­ருந்து அகற்­றிய பின்னர் மாற்­றுக்­காணி வழங்­காது இழுத்­த­டிக்­கப்­பட்டால் என்ன செய்­வது என்ற அடுத்த கட்ட நட­வ­டிக்கை குறித்து பள்­ளி­வாசல் நிர்­வா­கமும் முஸ்லிம் தலை­மை­களும் சிந்­திக்­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

ஏனெனில் தம்­புள்ளை அம்மன் கோவில் அகற்­றப்­படும் பொழுதும் பெரும் சர்ச்சை ஏற்­பட்ட அந்த வேளையில் மாற்­றுக்­காணி வழங்­கப்­பட்டு ஆலயம் அமைத்துக் கொடுக்­கப்­படும் என்ற உறு­தி­மொழி வழங்­கப்­பட்­டது. ஆனால் அந்த உறு­தி­மொ­ழி­யா­னது காற்றில்

பறக்­க­ வி­டப்­பட்­டுள்­ளது. இதே நிலை இந்தப் பள்­ளி­வா­ச­லுக்கும் ஏற்­பட்டு விடக்­கூ­டாது.

புனித பூமி என்ற பெயரில் அம்மன் கோவிலை அங்கிருந்து அகற்றியதுபோல் மாற்றுக் காணியொன்றை வழங்கி அதில் ஆலயத்தை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆலயம் அகற்றப்பட்டு ஒருவருடம் ஆகின்றபோதிலும் இதற்கான முயற்சிகள் எடுக்கப்படாமை கவலைக்குரிய விடயமாகும். ஆலய விவகாரத்தை முன்னுதாரணமாகக் கொண்டு பள்ளிவாசலுக்கான மாற்றுக்காணியை உடன் தெரிவு செய்து அதில் பள்ளிவாசலை அமைப்பதற்கு பள்ளிவாசல் நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல் பள்ளிவாசல் ஒன்று தம்புள்ளையில் இருந்தது என்பதற்கான அடையாளமே இல்லாது போய்விடும்.

நாட்டில் இன, மத உறவுகளை மேம்படுத்த வேண்டுமானால் தம்புள்ளையில் மாற்று இடங்களிலாவது ஆலயத்தையும், பள்ளி வாசலையும் அமைக்கவேண்டியது அவசியமாகும். இந்த விட யத்தில் அரசாங்கமும் தீவிரகவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல