வியாழன், 8 மே, 2014

உலகிலேயே உயரமான மணப்பெண் (படங்கள் இணைப்பு)

பிரே­சிலைச் சேர்ந்த 6 அடி 8 அங்­குல உய­ர­மான யுவதி, தனது 5 அடி 4 அங்­குல உய­ர­மான காத­லரை திரு­மணம் செய்து உலகில் மிகவும் உய­ர­மான மணப்பெண் என்ற பெயரை தன­தாக்கிக் கொள்­வ­தற்கு தயா­ராகி வரு­கிறார்.



எலி­சா­னி டா குருஸ் சில்வா என்ற மேற்­படி யுவதி, தன்­னை ­வி­டவும் ஒரு அடி 4 அங்­குலம் உயரம் குறைந்த தனது காத­ல­ரான பிரா­ன்­சினால் டோ டா சில்வா கர்வல் ஹோவை கடந்த 3 வருட காலமாக காத­லித்து வரு­கிறார். அவர்கள் கடந்த ஒரு வருட காலமாக திரு­மணம் செய்­யாமல் இணைந்து வாழ்­கின்­றனர்.

இந்­நி­லையில், பிரான்­சினால்டோ அண்­மையில் எலி­சா­னியை திரு­மணம் செய்­வ­தற்­கான விருப்­பத்தை அவ­ரிடம் வெளி­யிட்டு திரு­மண நிச்­ச­ய­தார்த்த மோதி­ரத்தை அவ­ருக்கு அணி­வித்­துள்ளார். இத­னை­ய­டுத்து அவர்கள் விரைவில் திரு­மண பந்­தத்தில் இணைய திட்­ட­மிட்­டுள்­ளனர்.

கபச்­ சு­ரப்­பியில் ஏற்­பட்ட கட்­டி­யொன்றால் அதீத வளர்ச்­சி­ய­டையும் பாதிப்­புக்­குள்­ளான எலி­சானி, தனது பாதிப்பால் கர்ப்­ப­ம­டை­வது சாத்­தி­ய­மற்றுப் போகும் பட்சத்தில் குழந்­தை­யொன்றை தத்­தெ­டுத்து வளர்க்க விரும்­பு­வ­தாகக் கூறினார்.

பிரான்­சி­னால்­டோ­வு­ட­னான காதல் தொடர்பு குறித்து எலி­சானி விப­ரிக்­கையில், பிரான்­சினால்டோவை தனது 16 வயதிலேயே முதன்முறையாக சந்தித்ததாவும் ஆரம்பத்தில் தான் அவரை வெறுத்ததாகவும் கூறினார்.







Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல