வியாழன், 8 மே, 2014

காஞ்சிபுரத்தில் இலங்கை பெண் அடித்து கொலை

காஞ்­சி­புரம் அருகே இலங்கை பெண் ஒருவர் அடித்து கொலை செய்­யப்­பட்டுள்ளார். இந்த சம்­பவம் வையாவூர் கிரா­மத்தில் பீதியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இது குறித்து தெரி­ய­வ­ரு­வ­தா­வது,



காஞ்­சி­புரம் அருகே வையாவூர் பார­தி­ந­கரில் வசிப்­பவர் பூமணி. இவர் நந்­தம்­பாக்கம் அரசு மேல்­நிலைப் பள்­ளியில் ஆய்­வக உத­வி­யா­ள­ராக பணி­யாற்­று­கின்றார். இவ­ரது மனைவி புனி­த­வதி (44). இவர்கள் கடந்த 30 வரு­டத்­துக்கு முன் இலங்­கையில் இருந்து அக­தி­க­ளாக வந்­த­வர்கள்.

இவர்­க­ளது மகள் அம்­சத்­து­வானி 10 ஆம் வகுப்பு படிக்­கிறாள். மகன் இறை­யன்பு, இன்­ஜி­னி­யரிங் முடித்­து­விட்டு திருச்­சியில் வேலை செய்­கிறார். மற்­றொரு மகன் தினேஷ்­குமார் பிளஸ் 2 படித்து வரு­கிறான்.

நேற்­று முன்தினம் 7 மணி அளவில் புனி­த­வதி, அந்த பகு­தியில் உள்ள தனது அக்கா சுசீலா வீட்­டுக்கு சென்றார். இதன்­பி­றகு நள்­ளி­ரவு ஆகியும் அவர் வீடுதிரும்பவில்லை.

இதை­ய­டுத்து மனை­வியை தேடி சுசீலா வீட்­டுக்கு பூமணி சென்றார். அங்­கி­ருந்து புனி­த­வதி கிளம்­பி­விட்­டது தெரிந்­தது.

இதை­ய­டுத்து புனி­த­வ­தியை பல இடங்­களில் தேடி அலைந்­தனர். ஆனால் அவரை பற்றி தகவல் இல்லை.

இந்­நி­லையில், தனது வீட்டின் பின்­புறம் உள்ள ஏரிக்­கரை புதரில் பலத்த காயத்­துடன் புனி­த­வதி இறந்து கிடந்­தது. சடலம் பிரேத பரி­சோ­த­னைக்­காக காஞ்­சி­புரம் அரசு மருத்­து­வ­ம­னைக்கு அனுப்­பப்பட்டது.

இது குறித்து வழக்­குப்­ப­திவு செய்­துள்ள பொலிஸார், புனி­த­வ­தியை கொன்­றது யார், எதற்­காக கொலை செய்­யப்­பட்டார் என்று விசா­ரிக்­கின்­றனர்.

மேலும் கொலை தொடர்­பாக அவ­ரது கணவர் பூமணி மற்றும் நெருங்­கிய உற­வி­னர்­க­ளிடம் பொலிஸார் தீவிர விசா­ரணை நடத்தி வருகின்றனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல