வியாழன், 8 மே, 2014

10 ஆண்டுகளின் பின் கிளிண்டன் மோனிக்கா உறவின் வெளிவரா இரகசியம்..

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டனுடனான உறவு குறித்து ஏறத்தாள 10 ஆண்டுகளுக்குப் பிறகு மவுனம் கலைத்துள்ளார் மோனிகா லெவின்ஸ்கி.

கிளிண்டனுக்கும் தனக்குமிடையே இருந்த உறவு குறித்து விளக்கமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் மோனிகா. அமெரிக்க அதிபராக கிளிண்டன் இருந்தபோது, அவரது உதவியாளராக இருந்தவர் மோனிகா லெவின்ஸ்கி. அப்போது இருவருக்குமிடையே தவறான உறவிருந்ததாக புகைப்படங்களோடு ஊடகங்களில் செய்தி வெளியானது.



பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு கடிதம் மூலம் விளக்கமளித்துள்ளார் மோனிகா. தற்போது 40 வயதாகும் மோனிகா லெவின்ஸ்கி, வானிட்டி ஃபேர் மெகஸினுக்கு இது குறித்து வெளிப்படையான கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அந்த மேகஸினின் இணைய தளப் பதிப்பில் வெளியான கட்டுரையில் அவர் தெரிவித்துள்ளதாவது:-

வித்தியாசமான முடிவு…

என் கடந்த கால காதல் வாழ்க்கை மற்றும் மற்றவர்களின் எதிர்காலம் ஆகியவற்றை நினைத்துப் பார்க்கிறேன். என்னுடைய கதையின் முடிவினை வித்தியாசமாக முடித்து வைக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

திசை மாறிய வாழ்க்கை…

கிளிண்டனுடன் எனக்கும் ஏற்பட்ட காதல் உறவு, மூத்தவர்களின் ஒப்புதல், பொது வாழ்க்கையின் அவமானம் ஆகியவற்றில் சிக்கிக் கொண்டு, அதனால் வாழ்வில் போக்கு திசை மாறி பலவித இன்னல்களை அளித்தது.

பலியாடு ஆனேன்…

பில் கிளிண்டனின் அதிகாரம் மிகுந்த வாழ்க்கையினை பாதுகாப்பதற்காக நான் ஒரு பலியாடு ஆக்கப்பட்டேன்.

ஆழ்ந்த வருத்தம்…

எனக்கு நானே ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கிறேன்… எனக்கும் அதிபர் கிளிண்டனுக்கும் இடையில் நடந்தவற்றுக்காக! மீண்டும் நான் சொல்கிறேன்.. நான், எனக்கு நானே… மன்னிப்பு. எது நடந்ததோ அதற்காக!

அவமானம்…

கடந்த 2010ல் ரட்கெர்ஸ் பல்கலை மாணவி ஒருவர், ஒரு ஆடவனை முத்தம் கொடுத்தது வீடியோ பதிவாக இணையத்தில் வந்தது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவரின் இந்தச் செயல் என்னை இத்தகைய அவமானத்துக்கு எதிரான நடவடிக்கையில் இறங்க தூண்டுகோலாக அமைந்தது.

முதல் நபர்…

இணையதளத்தில் உலக அளவில் பெருத்த அவமானத்தை ஏற்படுத்திப் பரப்பும் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் முதல் நபராக நான் இருந்தேன்.

பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக..

தற்போதைய நிலையில், இணைய வெளியில் இது போன்ற அவமானச் செய்திகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக, பொது வெளியில் பேசுவதற்கான மேடைகளில் தான் பங்கேற்று வருகிறேன்’ என இவ்வாறு மோனிகா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அமைதி காக்கும் கிளிண்டன் தரப்பு…

இந்தக் கட்டுரை தொடர்பாக, கிளிண்டனின் செய்தித் தொடர்பாளரோ, நியூயார்க்கில் உள்ள கிளிண்டன் பவுண்டேஷனோ உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ஒப்புதல்…

ஆனால், முதலில் இதில் தனக்குத் தொடர்பில்லை எனக் கூறிய கிளிண்டன் பிறகு ஒப்புக் கொண்டார்.

நீலநிற ஆடை…

அதே ஆண்டு, கிளிண்டனுக்கும் தனக்கும் தொடர்பிருந்ததற்கு ஆதாரமாக நீல நிற ஆடை ஒன்றை விசாரணையில் சமர்ப்பித்தார் மோனிகா. தற்போது இந்தக் கட்டுரையில் தனது நீல நிற உடையைப் புதைப்பதற்கான காலம் வந்து விட்டதாக மோனிகா தெரிவித்துள்ளார்.

சபை அவமதிப்பு தீர்மானம்…

மோனிகா லெவின்ஸ்கி, கிளிண்டன் குறித்த இந்தப் பாலியல் விவகாரத்தால் வெள்ளை மாளிகையின் கவுரவத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து, 99ல் செனட் அவையினால் கிளிண்டன் மீது சபை அவமதிப்பு தீர்மானமும் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

லண்டன்வாசியானார்…

இப்பிரச்சினைக்குப் பிறகு, 2000ம் ஆண்டில் முதலில் கைப்பை விற்கும் தொழிலைத் தொடங்கிய மோனிகா, ஜெனி கிரைக்கின் செய்தி தொடர்பாளராகவும் பணிபுரிந்தார். 2005ம் ஆண்டில் லண்டனுக்கு இடம் பெயர்ந்தார் மோனிகா.

Thatstamil


கிளிண்டனுடன் உறவு:மௌனம் கலைத்தார் மோனிக்கா

முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனுடன் பாலியல் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் வெள்ளை மாளிகை பயிற்சி ஊழியர், மோனிக்கா லூயின்ஸ்கி, அவ்விவகாரம் குறித்து ,தனது நீண்ட கால மௌனத்தைக் கலைத்து, மனம் திறந்திருக்கிறார்.

அமெரிக்காவின் ‘வேனிட்டி பேர்’ என்ற சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில், இப்போது 40 வயதாகும் மோனிக்கா, கிளிண்டனுடன் நடந்த இந்த பாலியல் தொடர்பு குறித்து தான் வருந்துவதாகக் கூறியிருக்கிறார்.

அதிபர் கிளிண்டன் தன்னைப் பயன்படுத்திக்கொண்டார் என்று கூறியிருக்கும் மோனிக்கா, ஆனால் தங்களுக்குள் ஏற்பட்ட தொடர்பு என்பது இருவரும் மனதொப்பி நடந்ததுதான் என்றும் கூறியிருக்கிறார்.

“பலியாடாக்கப்பட்டேன்”

1998ல் பில் கிளிண்ட்ன் அதிபர் காலத்தின் முடிவில் நடந்த இந்த பாலியல் சம்பவம், பில் கிளிண்டன் அமெரிக்க நாடாளுமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டுப் பதவியிறக்கப்பட நடந்த முயற்சிகளுக்கு வழி வகுத்தது என்பது நினைவு கூரத்தக்கது. இந்த உறவு குறித்து கிளிண்டன் பொய் சொன்னார் என்ற குற்றச்சாட்டில் எதிர்க்கட்சியினரான, குடியரசுக் கட்சியினர் அவர் மீது குற்றம் சாட்டி பதவி நீக்கம் செய்யும் வழிமுறையைக் கொண்டுவந்தனர்.

ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது.

இந்த விவகாரத்தில் அதிபர் கிளிண்டனைப் பாதுகாக்க, தான் ஒரு பலியாக்கப்பட்டதாகவும் மோனிக்கா கூறுகிறார்.

கிளிண்டன் நிர்வாக அதிகாரிகள், அவர் மீது வழக்கு தொடர்ந்த சிறப்பு ப்ரொஸிக்யூட்டரின் ஏவலாட்கள், இரு கட்சிகளின் ஆட்கள் ,ஊடகங்கள் என்று எல்லோருமே தன் மீது கறை பூசியதாக மோனிக்கா கூறுகிறார்.

இவர்கள் எல்லோருமே அதிகாரத்தில் இருந்தவர்கள் என்பதால், இந்தக் கறை நிலைத்துவிட்டது என்றும் மோனிக்கா கூறுகிறார். இந்த விவகாரத்துக்குப் பின்னர், வெள்ளை மாளிகையைவிட்டு நீங்கிய மோனிக்கா, பிறகு, கைப்பை டிசைனராகவும் அதன் பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் சிறிது காலம் வேலை செய்தார்.

பிறகு லண்டனுக்கு மேல் படிப்பு படிக்கச் சென்ற மோனிக்காவுக்கு, அவரது கடந்த காலம் காரணமாக, அமெரிக்காவில் வேலை கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாக இருந்தது என்கிறார். இப்போது தன்னுடைய கதையைச் சொல்வது என்பது, தனது கடந்த காலத்துக்கு ஒர் “இலக்கை, நோக்கத்தை” தருவதற்குத்தான் என்று கூறும் மோனிக்கா, “ஒரு வேளை தன்னுடைய கதையைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், இது போல அவமானப்படுத்தப்பட்ட மற்றவர்களுக்கு உதவ முடியும் ” என்று கருதுவதாகக் கூறுகிறார்.

கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் 2016ல் நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிடலாம் என்று யூகங்கள் நிலவும் சூழலில், லூயின்ஸ்கி விஷயம் மீண்டும் தலைதூக்குவது, ஒரு வேளை இந்த விவகாரத்தை மீண்டும் நினைவுபடுத்தி, ஹிலாரிக்கு எதிராகப் பயன்படுத்தலாம் என்ற குடியரசுக் கட்சியினரின் கணக்காக இருக்கலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் யூகிக்கின்றனர்.celeindn-Moneka

BBC


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல