வியாழன், 8 மே, 2014

மலேசிய விமானத்தை கடத்தியது வேற்றுகிரகவாசிகளா?

மலேசிய விமானம் கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து பீஜிங் செல்லும் வழியில் திடீரென மாயமானது. விமானம் என்ன ஆனது என்பது உறுதியாக தெரியாத நிலையில், அமெரிக்காவில் உள்ள பிரபல பத்திரிகை நிறுவனம் ஒன்று விமானம் எவ்வாறு மறைந்திருக்கலாம் என பொதுமக்களிடம் ஒரு சர்வே எடுத்தது. இந்த சர்வேயில் சில அதிர்ச்சிகரமான முடிவுகளும் கூறப்பட்டுள்ளன. அமெரிக்காவில் சர்வேயில் கலந்து கொண்ட பத்தில் ஒருவர், விமானம் மாயமானதற்கு வேற்றுகிரகவாசிகள்தான் காரணம் என பதிலளித்துள்ளனர்.



அமெரிக்காவில் உள்ள CNN and ORC International ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து எடுத்த இந்த சர்வேயில், மாயமான விமானத்தை தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என பலர் கூறியுள்ளனர். மேலும் சிலர் விமானம் கடலில் விழுந்திருப்பதாக தாங்கள் நம்பவில்லை என்றும், விமானத்தை பைலட்டுகள் கடத்தியிருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். மேலும் சர்வேயில் கலந்துகொண்ட பத்தில் ஒருவர் விமானத்தை வேற்றுகிரகவாசிகள் கடத்தியிருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

மாயமான விமானத்தை கண்டுபிடிக்க இதுவரை மலேசிய அரசு $3.1 பில்லியன் பணத்தை செலவழித்துவிட்டதாகவும், இருந்தும் விமானம் குறித்து ஒருதகவலும் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளது. மலேசிய விமானம் மாயமானதற்கு இன்னும் விடைகிடைக்காமல் தவித்துக்கொண்டு வருகிறது மலேசிய அரசு.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல