வியாழன், 8 மே, 2014

விமான கறுப்பு பெட்டி தொடர்பில் கடும் விதிகள் அறிமுகப்படுத்த திட்டங்கள் முன்வைப்பு

காணாமல் போகும் விமா­னங்­களின் கறுப்புப் பெட்­டி­களை இல­கு­வாக கண்­டு­பி­டிக்கும் முக­மாக புதிய பிரே­ர­ணைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்ள­தாக ஐரோப்­பிய விமான கண்­கா­ணிப்பு அமைப்பு அறி­வித்­துள்­ளது.



இதன் பிர­காரம் விபத்துக்குள்ளாகி கடலின் அடித்­த­ளத்தைச் சென்­ற­டையும் விமானங்களின் கறுப்புப் பெட்­டி­க­ளி­லி­ருந்து சமிக்­ஞைகள் வெளிப்­படும் காலத்தை 30 நாட்­க­ளி­லி­ருந்து 90 நாட்­க­ளாக அதி­க­ரிக்க திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தாக அந்த அமைப்பு கூறு­கி­றது.

கடந்த மார்ச் 8 ஆம் திகதி கோலா­லம்­பூ­ரி­லி­ருந்து பீஜிங் நக­ருக்கு 239 பேருடன் பய­ணித்து காணாமல் போன மலே­சிய எம்.எச்.370 விமானத்தை கவனத்திற்கொண்டே மேற்­படி நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் சமுத்­தி­ரங்­க­ளுக்கு மேலாக பய­ணிக்கும் பெரிய விமா­னங்­களில் புதிய சமிக்ஞை உப­க­ர­ணங்­களை பொருத்­து­வது அவ­சி­ய­மா­க­வுள்­ள­தாக ஐரோப்­பிய விமான பாது­காப்பு முகவர் நிலையம் தெரி­வித்­தது.

மேலும் புதிய விமா­னங்­களில் விமான அறை­யி­லான ஒலிப்­ப­திவு செயற்பாட்டை இரு மணித்தியாலங்களிலிருந்து 20 மணித்தியாலங்களாக அதிகரிக்க வேண்டியுள்ளது என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல