வியாழன், 8 மே, 2014

ஏழை மக்களின் உணவுக்காக வீதியில் பிரிட்ஜ் வைத்த சவுதி அரேபியர்

கடந்த 5 ஆம் தேதி டுவிட்டரில் ரஜினிகாந்த் இணைந்துவிட்டார் என்றவுடன் ஒவ்வொரு நிமிடமும் ஆயிரக்கணக்கானோர் அவரது டுவிட்டர் பக்கத்தை பாலோ செய்தார்கள் என்ற செய்தியை அனைத்து ஊடகங்களும் போட்டி போட்டு வெளியிட்டன. ஆனால் சவுதி அரேபியாவில் உள்ள ஒருவர் சத்தமின்றி ஏழை மக்களின் உணவுப்பிரச்சனையை தீர்க்க, தான் செய்த ஒரு புரட்சி திட்டத்தை டுவிட்டரில் வெளியிட்டார். அவர் செய்த புரட்சி திட்டம்தான் என்ன என்பதை பார்ப்போமா?



Sheikh Mohamad al-Arefe என்ற பெயருடைய இவர், தனது வீட்டிற்கு முன்னாள் ஒரு பிரிட்ஜை வைத்துள்ளார். பின்னர் அருகில் உள்ள நண்பர்களின் வீடுகளுக்கு சென்று, அவர்களுடைய வீட்டில் மீதமிருக்கும் உணவுகளை குப்பையில் போடாமல் இந்த குளிர்சாதனப்பெட்டியில் வைக்குமாறும், உணவின்றி தவிக்கும் ஏழைகள் அந்த உணவை எடுத்து சாப்பிட்டுக்கொள்வார்கள் என்றும் ஆலோசனை கூறியுள்ளார்.

இவருடைய புரட்சி திட்டத்திற்கு ஆதரவு கொடுக்க அவரது பக்கத்து வீட்டில் உள்ள நண்பர்கள் முன்வந்தனர். தங்கள் வீட்டில் மீதமடைந்த உணவுப்பொருட்களை அதில் வைத்துவிட்டு செல்கின்றனர். சில ஏழைகள் பசியோடு இருந்தாலும், பிறரிடம் உணவு கேட்க தயங்குவார்கள். அவர்கள் போன்ற ஏழைகள் இந்த பிரிட்ஜ் இருக்குமிடம் சென்று அவர்களுக்கு தேவையான உணவை எடுத்து சாப்பிட்டு வருகின்றனர். மேலும் இந்த திட்டத்தை சவுதி அரேபியாவில் உள்ள மசூதிகள் அனைத்திலும் செயல்படுத்த தற்போது ஆலோசிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தை ஆரம்பித்த வைத்ததை அடுத்து Sheikh Mohamad al-Arefe அவர்களின் டுவிட்டரில் பல ஆயிரக்கணக்கான டுவிட்டர் பயனாளிகள் சேரத்தொடங்கினர். அவருடைய செயலை டுவிட்டரின் வழியே பாராட்டி வருகின்றனர். தற்போது அவருக்கு 8.7 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர்.

நாட்டு மக்களுக்கு எந்தவொரு நன்மையும் செய்யாதவர்களுக்கு கிடைத்த ஃபாலோயர்கள் பற்றிய செய்தியை வெளியிட்ட பெரும்பாலான ஊடகங்கள் இந்த புரட்சி திட்டத்தினை ஆரம்பித்தவரின் டுவிட்டர் ஃபாலோயர்கள் குறித்த செய்தியை கண்டுகொள்ளவில்லை என்பதுதான் வருந்ததக்க விஷயம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல