அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுடனான காதல் தொடர்பின் மூலம் அவர் குற்றச்சாட்டை எதிர்கொள்ள காரணமாக இருந்த முன்னாள் வெள்ளை மாளிகை உத்தியோகத்தரான மொனிக்கா லிவின்ஸ்கி முதல் தடவையாக ஊடகமொன்றுக்கு மனம் திறந்து பேட்டியளித்துள்ளார்.
அவர் (40 வயது) 'வானிட்டி பெயார்' சஞ்சிகையில் தன்னால் எழுதப்பட்ட கட்டுரையில், அப்போது நடந்தவை குறித்து தான் பெரிதும் வருத்தமடைவதாக குறிப்பிட்டுள்ளார்.
தம்மிடையிலான உறவு ஒப்புதலுடன் இடம்பெற்ற போதும், ஜனாதிபதி தன்னை பயன்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
தம்மிடையேயான காதல் தொடர்பு குறித்து கிளின்டன் பொய் கூறியிருந்ததால் 1998 ஆம் ஆண்டு அவரை பதவியிலிருந்து வெளியேற்ற குடியரசுக் கட்சியினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தாக அவர் தெரிவித்தார்.
2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கிளின்டனின் மனைவியான ஹிலாரி எதிர்பார்த்துள்ள நிலையில் லிவின்ஸ்கி விவகாரம் மீளவும் அரசியல் சர்ச்சையை தோற்றுவிப்பதாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
குடியரசு கட்சியினர் ஹிலாரிக்கு எதிராக மொனிக்கா லிவின்ஸ்கி விவகாரத்தை பயன்படுத்த விரும்புகின்றமையே இதற்கு காரணமாகவுள்ளது.
இந்நிலையில் தனது கட்டுரையில், ''எனக்கும் ஜனாதிபதி கிளின்டனுக்குமிடையே என்ன நடந்தது என்பது தொடர்பில் ஆழ்ந்த கவலையடைகிறேன்'' என தெரிவித்த மொனிக்கா லிவின்ஸ்கி, அந்த காதல் தொடர்பான குற்றச்சாட்டு 1998 ஆம் ஆண்டில் வெளியானதையடுத்து தான் துஷ்பிரயோகத்துக்குள்ளானதாக குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு மோசமான முத்திரை குத்தப்பட்டு தான் ஜனாதிபதியை பாதுகாப்பதற்கான பலிக்கடாவாக பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறினார். கிளின்டனின் அரசாங்கத்திலான பதவியிலிருந்து விலகிய மொனிக்கா லிவின்ஸ்கி சிறிது காலம் கைப்பை வடிவமைப்பாளர் ஒருவரிடமும், அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றிலும் பணியாற்றிய பின் லண்டன் சென்று பட்டம் பெற்றார்.
ஆனால் கிளின்டனுடனான காதல் தொடர்பு குறித்த தனது கடந்த காலம் காரணமாக அவரால் அமெரி க்காவில் வேலையொன்றை பெற பெரும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிட்டதாக அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக