Aiwa-Matsuo
சக வகுப்பு மாணவியை கழுத்தை நெரித்துக் கொன்று அவரது தலையை வெட்டி, கைகளிலொன்றை துண்டுகளாக்கிய குற்றச்சாட்டில் 15 வயது சிறுமியொருவர் கைதுசெய்யபட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஜப்பானில் இடம்பெற்றுள்ளது.டோக்கியோவின் தென்மேற்கே 900 மைல் தொலைவில் சஸெபோ நகரிலுள்ள தனது வீட்டில் வைத்தே குறிப்பிட்ட சிறுமி இந்தப் படுகொலையை மேற்கொண்டுள்ளார்.
அயிவா மட்ஸுகோ என்ற குறிப்பிட்ட மாணவி (வயது 15) படுகொலையை மேற்கொண்ட சிறுமியின் வீட்டிற்கு சென்ற போதே இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
இதன்போது குறிப்பிட்ட சிறுமி அயிவாவின் தலையில் கூரிய உபகரணமொன்றால் 10 க்கு மேற்பட்ட தடவைகள் தாக்கி அவரை மயக்கமடையச் செய்த பின் அவரது கழுத்தை நெரித்து அவரை படுகொலை செய்துள்ளார்.
இந்த படுகொலைச் சம்பவமானது ஜப்பானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.
தற்போது படுகொலையை மேற்கொண்ட சிறுமி பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக