புதன், 30 ஜூலை, 2014

ஸாந்தலேஸ்மா (Xanthelasma)-வுக்குரிய சிகிச்சை

நோய்களும் உடல்ரீதியான பிரச்சினை களும் பல்வேறு அறிகுறிகள் மூலமாகவே தங்களை வெளிப்படுத்திக்கொள்கின்றன. அப்படியெனில் இரத்தத்தில் கொலஸ் ட்ராலின் அளவு அதிகரித்தால் அதை வெளிப்படுத்தவும் ஏதாவது அறிகுறிகள் இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் இதற்கான பிரத்யேக அறிகுறிகள் இல்லை என்று தான் மருத்துவத்துறை குறிப்பிடுகிறது. இருப்பினும் உடல் அமைப்புகளில் ஏற்படும் ஒரு சில மாறுதல்களை வைத்து இரத்தத்தில் கொலஸ் ட்ராலின் அளவு அதிகரிப்பதை உணரமுடியும். இருந்தாலும் ஒருவரது இரத்தித்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். இது நடைமுறை.



பரம்பரை காரணமாக கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்தால் அவர்களுக்குதோலில் மஞ்சள்படிவுகள் ஏற்படும். இதை மருத்துவத் துறை ஸாந்தலேஸ்மா என்று குறிப்பிடுகிறது. கொலஸ்ட்ரால் மிகுதியாக இருப்பவர்களுக்கு குறிப்பாக கண்களுக்கு கீழ்ப்பகுதியில் காணப்படும். இந்த கொழுப்பு படிவங்கள் நோயாளியின் தசை நாண்களிலும் படிய வாய்ப்பு உண்டு. இதனால் முகத்திலும், இரண்டு கண்களைச் சுற்றியும் கொலஸ்ட் ரால் படிவங்கள் காணப்படும். இவர்களுக்கு கருவிழப்படலத்தைச்சுற்றியும் கொலஸ்ட் ரால் வெண்படலம் (Corneal Arcus) உருவாகி யிருக்கும். இதேப்போன்ற கொழுப்பு படிவங் கள் தசை நாண்களிலும், மூட்டுகளிலும் ஏற்படலாம். இவர்களுக்கு மூட்டுகளிலும், கை மடக்கும் இடங்களிலும் ஓரஞ்சு நிறத்தில் பெரிய கட்டிப் போன்ற படிவங்கள் ஏற்படும். ஒரு சிலருக்கு இடுப்பு மற் றும் பின்புறப் பகுதிகளி லும் இவை தோன்றும்.

இவர்களுக்கு மூட்டுப்பாதிப்புகளால் வலி அதிகமாக இருக்கும். இரத்தத்தில் டிரை கிளிசரைடு, கொலஸ்ட்ரால் மிகுந்தவர்களுக்கு உடலில் கொப்புளங்கள் போல் கொலஸ்ட்ரால் படிவுகள் இருக்கும்.விழித்திரையில் சோதித்து பார்த்தால் இரத்த ஓட்டம் தெரியாது. ஏதோ வெண்மையாக பால் ஓடுவது போல் கொலஸ்ட்ரால் மிகுந்த இரத்தம் காட்சியளிக் கும். இவர்களுக்கு கணைய அழற்சி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக இவர்களுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும். இவர்களுக்கான இரத்த பரிசோதனையில் இரத்தத்தில் சோடியத்தின் அளவு இயல்பை விட அதிக அளவு குறைந்து காணப்படுவதுடன், கொழுப்பு பொருட்கள் மிதப் பதால் நீர்ச்சத்து குறைந்தே காணப்படும். இரத்தத்தில் டிரைகிளிசரைடு மிகுதியாக இருப்பவர்களுக்கு மூளையில் இரத்த ஓட் டம் மெதுவாக நடைபெறும். இதனால் பல் வேறு நரம்புகள் பாதிக்கப் படக்கூடும்.பக்க வாதம் ஏற்படலாம். கை, கால் பகுதிகளில் மதமதப்பு உருவாகும்.மூட்டு உபாதை ஏற் படும். கண்கள் உலர்ந்து போகும். அதனால் இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்திருந்தால் அதன் வெளிப்பாடான உடல் அமைப்பில் தெரியும் நுட்பமான அறிகுறிகள் நாம் உணர்ந்து, உடனே மருத்துவரை நாடி பரிசோதனைகளை செய்து கொண்டு, அதற்குரிய சிகிச்சைகளை பெறவேண்டும்.

- டொக்டர். சு. முத்து செல்வக்குமார் M.D.,
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல