புதன், 30 ஜூலை, 2014

வயிற்று வலிக்கு சிகிச்சை பெற சென்ற நபர் தான் ஒரு பெண் என அறிந்து அதிர்ச்சி

 Stunned: Doctors couldn't believe the results of the scan
வயிற்­று­வ­லி­யுடன் சிறு­நீரில் குருதி வெளி­யே­றிய நிலையில் மருத்­து­வ­ம­னைக்கு சிகிச்சை பெறு­வ­தற்கு சென்ற திரு­ம­ண­மான 44 வயது நப­ரொ­ருவர், தான் உண்­மையில் ஒரு பெண் என்­ப­தையும் தனக்கு மாத­வி­லக்கு ஏற்­பட்­டுள்­ள­தையும் அறிந்து அதிர்ச்­சி­ய­டைந்த சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.



 Unusual: The man has female reproductive organs
ஸெஜியாங் மாகா­ணத்­தி­லுள்ள யொங்காங் நகரைச் சேர்ந்த சென் என்ற சுருக்கப் பெயரால் அழைக்­கப்­படும் மேற்­படி நபர், தனது மனை­வி­யுடன் மருத்­து­வ­ம­னைக்கு சென்­ற­போதே அவரைப் பரி­சோ­தித்த மருத்­து­வர்கள் இந்த அதிர்ச்சித் தக­வலை வெளி­யிட்­டுள்­ளனர்.

சென்­னிற்கு மாதாந்தம் குறிப்­பிட்ட காலப்­ப­கு­தியில் வயிற்­று­ வ­லியும் சிறு­நீ­ருடன் குருதிப் போக்கும் ஏற்­பட்­ட­துடன் அவ­ரது முகத்­திலும் கால்­க­ளிலும் வீக்­கமும் ஏற்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் அவரைப் பரி­சோ­தித்த மருத்­து­வர்கள் அவ­ரது ஆண் பிறப்­பு­றுப்­புடன் அவ­ரது உடலில் பெண்­க­ளுக்­கான முழு­மை­யான இன­வி­ருத்தி உறுப்­புகள் விருத்­தி­ய­டைந்­துள்­ளதைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளனர்.

அவர் திரு­மணம் செய்து 10 வரு­ட­கா­ல­மாக தனது மனை­வி­யுடன் இயல்­பான குடும்ப வாழ்வை நடத்­தி­யுள்ளார்.

இது தொடர்பில் குறிப்­பிட்ட மருத்­து­வ­ம­னையின் மருத்­து­வர்கள் விப­ரிக்­கையில், ஆரம்­பத்தில் சென்னின் தோற்­றத்தைப் பார்த்து அவர் பெண்­ணாக இருப்பார் என தமக்கு சிறிதும் சந்­தேகம் ஏற்­ப­ட­வில்லை எனவும், சீரி ஊடு­காட்டும் பரி­சோ­தனை மூலமே அவ­ரது உடலில் கருப்பை விருத்­தி­ய­டைந்­தி­ருப்­பது கண்­ட­றி­யப்­பட்­ட­தாகவும் கூறினார்.

அத்­துடன் சென்­னுக்கு மேற்­கொள்­ளப்­பட்ட மர­பணு பரி­சோ­த­னை­யின்­போது அவ­ருக்கு ஒரு ஜோடி எக்ஸ்எக்ஸ் பாலியல் நிற­மூர்த்­தங்கள் இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. அதன் காரணமாகவே அவ­ருக்கு பெண் இன­வி­ருத்தி உறுப்­புகள் விருத்­தி­ய­டைந்­துள்­ள­தாக தெரிவிக்கப்படுகிறது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல