புதன், 30 ஜூலை, 2014

வியட்நாமில் பூனை இறைச்சிக்கு கிராக்கி

பூனைகளை பாதுகாக்க திண்டாடும் அவற்றின் உரிமையாளர்கள்

வியட்­நாமில் பூனை இறைச்சித் தின்­பண்­டத்­துடன் பியர் பானத்­தையும் பரி­மா­று­வது பிர­ப­ல­ம­டைந்து வரு­வதால் இறைச்­சிக்­காக தமது பூனைகள் கடத்­தப்­ப­டலாம் என்ற அச்­சத்தில் அங்­குள்ள பூனை உரி­மை­யா­ளர்கள் உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.



இது தொடர்பில் 'ஏ.எவ்.பி' ஊடகம் திங்­கட்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளது.

பூனை இறைச்­சிக்கு அந்­நாட்டில் தடைவிதிக்­கப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே, அந்­நாட்டின் ஹனோய் நகர் உள்­ள­டங்­க­லான நகர்­களில் பூனை இறைச்சி விற்­பனை செய்­யப்­பட்டு வரு­கி­றது.

பூனை­களை கொன்று அதன் உரோ­மத்தை சவரம் செய்து அகற்­றிய பின் எஞ்­சி­யுள்ள உரோ­மங்கள் சுட்­டுப்­பொ­சுக்­கப்­ப­டு­கி­றது.

அதன்பின் அந்த பூனை சுத்­தி­க­ரிக்­கப்­பட்டு அதன் தேவை­யற்ற உடல் பகு­திகள் அகற்­றப்­பட்டு அதன் உடல் துண்டு துண்­டாக வெட்­டப்­பட்டு வெள்­ளைப்­பூண்­டுடன் சேர்த்து பொரிக்­கப்­ப­டு­கி­றது.

அதன்பின் அந்த பொரித்த பூனை இறைச்­சி­யுடன் மரக்­கறி கல­வை­களை சேர்த்து வதக்கி பியர் பானத்­துடன் சேர்த்து பரி­மா­றப்­ப­டு­கி­றது.

மத்­திய ஹனோ­யி­லுள்ள உண­வ­க­மொன்றின் முகா­மை­யா­ள­ரான ருவான் டங் (35 வயது) விப­ரிக்­கையில், தமது உண­வ­கத்தில் பூனை இறைச்­சிக்கு பெரும் கிராக்கி நில­வு­வ­தாக தெரி­வித்தார்.

வியட்­நாமில் பூனை இறைச்­சிக்கு நிலவும் கிராக்­கியால் அந்­நாட்­டுக்கு அயல்­நா­டு­க­ளான தாய்­லாந்து மற்றும் லாவோ­ஸி­லி­ருந்து பூனைகள் கடத்தி எடுத்துவரப்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில், இறைச்சிக்காக பூனைகள் திருடப்படலாம் என்ற அச்சத்தில் பூனை உரிமையாளர்கள் தமது செல்லப்பிராணிகளை வீட்டுக்குள் அடைத்து வளர்த்து வருகின்றனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல