சுமார் அறுபது வயதைக் கடந்தவர்களுக்கு கொஞ்சம் ஞாபகமறதி ஏற்படுவது சகஜம் தான். சில தருணங்களில் நல்ல பழகிய நபர் களின் பெயர்களைக்கூட மறந்துவிடுவர் புதிய அலைபேசி எண்களையோ அல்லது தொலைபேசி எண்களையோ நினைவில் இருத்திக்கொள்ள சிரமப்படுவர். கையில் இருக்கும் பணத்தை பலமுறை எண்ணிக் கொண்டேயிருப்பர். இவைகளைமுதுமையின் ஏற்பட்ட விளைவு என்று தெரிந்துகொள்ளலாம். ஆனால் எந்தவித முன்னறிவிப்பும் இல்லா மல் அதாவது எந்தவித காரணமும் இல்லா மல் ஒரு சிலருக்கு திடிரென்று ஞாபகமறதி ஏற்படுவதைத்தான் அறிவுத்திறன் வீழ்ச்சி (Dementia) என்று மருத்துவர்கள் குறிப்பிடு கின்றனர்.
முதுமையில் இயல்பாக ஏற்படும் ஞாபக மறதிக்கும், திடிரென்று ஏற்படும் ஞாபக மறதிக்கும் வித்தியாசம் இருக்கிறது. இதை தொடக்க நிலையில் கண்டறிவது கடினம் என் றாலும் கீழ்கண்ட அறிகுறிகள் மூலம் இதனை உறுதிச்செய்துகொள்ளலாம். தனக்கு ஞாபக மறதி உள்ளதாக கவலைப்பட்டு, அது குறித்து மருத்துவரிடம் அவரே தெரிவிப்பது. ஒரு பொருளைப் பற்றி தவறாக சொன்னாலும், அதைப் பற்றி சரியாக எடுத்துச்சொன்னால், அதைப் புரிந்துகொண்டு தங்களைத் திருத்திக் கொள்வர் உதாரணத்திற்கு ஒரு பேனாவை காட்டினால் அதனை கத்தி என்று குறிப்பிடுவர். அதன் பின் அது கத்தி அல்ல எழுதுவதற்கு பயன்படுத்தப்படும் பேனா என்று எடுத்துச்சொன்னால், அதனை புரிந்துகொண்டு ஆம் அது பேனா தான் என்று பதிலளிப்பர். ஒரு சிலருக்கு மனநோயை கண்டறியும் பரிசோதனையான MMSS சோத னையிலும் இயல்பாகவே இருப்பர். மாற்றம் ஏதும் தெரியாது. இது தொடர்பாக மேலும் எடுக்கப்படும் எம்.ஆர்.ஐ மற்றும் PET சோத னையிலும் மாற்றங்களை கண்டறிய இயலாது.
மேற்கூறியவைகள் எல்லாம் இயல்பான ஞாபகமறதி வந்தவர்களுக்கானது. ஆனால் திடிரென்று அறிவுத்திறன் வீழ்ச்சி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால், தனக்கு ஞாபகமறதி இருப்பதை ஒப்புக் கொள்ளமாட்டார்கள். மற்றவர்களிடமும் சொல்லமாட்டார்கள். பேனாவை கத்தி தான் என்று உறுதியாக சொல்வார்கள். MMSS, MRI, PET போன்ற பரிசோதனைகள் செய்தால் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும்.
அறிவுதிறன் வீழ்ச்சி எதனால் வருகிறது? என்று கேட்டால், முதுமையில் தாக்கும் ஒரு கொடிய நோய் இது. மூளையில் உள்ள நியு ரான் திசுக்கள் அழிவதால் இது ஏற்படுகிறது. நியுரான் திசுக்கள் திடிரென்று ஏன் அழிகிறது? என்பதற்கான காரணங்கள் இன்றும் முறையாக கண்டறியப்படவில்லை.
இந்நோய் ஆண்களைவிட பெண்களையே அதிகம் தாக்குகிறது. இவர்களுக்கு ஒரு சில தருணங்களில் முற்றிலுமாக நினைவுத் திறன் இழந்துவிடுவார்கள். நினைவாற்றல், ஒருமுக கவனம், இடங்களை கண்டறிதல், பொருட் களை பகுத்தறியும் தன்மை ஆகியவை பாதிக் கப்படும். ஒருசிலருக்கு அண்மைக்கால நிகழ்வு கள் முற்றிலுமாக மறந்து போகக்கூடும். கடந்த கால நினைவுகள் மட்டுமே தேங்கி ஆதிக்கம் செலுத்தும். அதைப் பற்றி மட்டுமே பேசி
கொண்டிருப்பர். இறுதியில் இவர்கள் தங்க ளையே மறந்துவிடுவார்கள். இவர்களின் தேவையை மற்றவர்கள் கவனித்து கொள்ள நேரிடும். முதுமையில் மறதியை தவிர்க்க வழி யிருக்கிறதா? என்று கேட்டால், உடற்பயிற்சி, தியானம், மூளைக்கேற்ற சத்துணவு, தனிமை யைத் தவிர்த்தல், பொழுதுபோக்கு ஆகிய விடயங்களில் மனதைச் தொடர்ந்து செலுத்தி வந்தால் இதனை தவிர்க்க இயலும். அதிலும் நாள்தோறும் உடற்பயிற்சி அதாவது நடை பயிற்சி செய்வதன் மூலம் மூளைக்கு இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் மூளையில் உள்ள நியுரான் செல்களின் ஆயுள் அதிகரிக்கும்.தோட்டக்கலையில் ஈடுபடுவது, ஆன்மீக சொற்பொழிவை கேட்பது போன்றவற்றில் மனதை செலுத்தினால்மனம் உற்சாகமடையும். தொடர் தியானப்பயிற்சி செய்துவந்தால் மூளைக்கு சோர்வு வராது.
மூளையில் உள்ள செல்களின் பணிகளை தூண்டுவது தான் தியானத்தின் பிரதான பணியே. புரதசத்து அதிகமுள்ள உணவு களை உண்பதால் தான் மனநலத்திற்கு நல்லது. தனிமையில் இருப்பவர்களுக்கு மனச்சேர்வும், ஞாபக மறதியும் வருவதற்கு வாய்ப்பிருப்பதால், அதனை தவிர்த்து மற்றவர்களுடன் கலகப்பாக இருக்க பழகிக் கொள்ளுங்கள். இவற்றையெல்லாம் செய்து வந்தால் முதுமையையும் கொண்டாடலாம்.
- டொக்டர். வி. எஸ். நடராசன் M.D.,
- தொகுப்பு: அனுஷா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக