புதன், 30 ஜூலை, 2014

மாறாத ரணங்களுடன் துளிர்விடும் உறவுகள்

வளம் கொழிக்கும் விளை நிலங்­க­ளோடும் அழ­கிய வனப்­பு­க­ளோடும் அமை­தி­யாக தமதுதாய­கங்­களில் வாழ்ந்த மக்கள் கூட்­டத்தின் மீது அந்நிய ஆக்­கி­ர­மிப்பை அறி­முகம் செய்த கால­னித்­துவ ஆதிக்கம், தேசிய இன­வொ­டுக்­கு­முறை என்னும் புற்­று­நோயை விட்டுச் சென்­றது. ஆரம்­பத்தில் சிறுகச் சிறுகச் சூறை­யா­டப்­பட்ட உரி­மைகள் தொடரும் காலத்தில் அணை உடைக்கும் அரு­விபோல் மாறவும் சாத்­வீகம் முதல் சர­ண­டையா தன்­மா­னத்­துடன் உரி­மைக்­காக போரா­டி­ேய­வந்­தது தமி­ழினம்; தமிழ்த் தேசிய உரி­மைக்­காக எழுந்த அதி­யுச்ச வீச்­சு­ணர்வு ஒரு சாரா­ருக்கு பயங்­க­ர­வா­த­மாக புலப்­ப­டவும் மனி­தா­பி­மா­னத்தின் பெயரால் அதனை முள்­ளி­வாய்க்கால் மூலையில் வைத்து முடக்­கினர். பெண்கள், குழந்­தைகள், கர்ப்­பி­ணிகள், முதியோர் என அனை­வ­ருமே ஒரு பிர­தே­சத்­திற்­குள்ளே முடக்­கப்­பட்டு உயிர் துறக்கும் துர்ப்­பாக்­கிய நிலை ஏற்­பட்­டது. தமிழ் மக்கள் செய்த தியா­கங்­களின் உச்­சக்­கட்டம் முள்­ளி­வாய்க்கால்.



2004இல் சமா­தான உடன்­ப­டிக்கை கைக­ழு­வப்­பட்டு நெருக்­க­டி­யான நிலை­மை­க­ளிலும் விளை­நி­லங்­க­ளுக்கு மத்­தியில் செழிப்­புடன் வாழ்ந்­த­வர்கள் உயிரைக் கையில் பிடித்­துக்­கொண்டு உடுத்த உடை­யுடன் ஊரி­ழந்து, உற­வி­ழந்­து­, ஊ­ணின்றி உறக்­க­மின்றி இல­வ­சமாய் வழங்­கப்­பட்ட அகதிப் பட்­டத்­துடன் முகாம் என்னும் குடி­லுக்குள் முடக்கப்பட்­ட­ார்கள் .

அகதி என்ற வார்த்­தைக்குச் சில உரி­மை­களும் பல தேவை­களும் இருக்கம். தமி­ழர்­க­ளுக்கும் இருந்­தது. ஆனால், அவை வழங்­கப்­பட்­டதா?

முள்­ளி­வாய்­காலில் நிறை­வுற்ற வெஞ்­ச­மரில் அனைத்­தை­யுமே இழந்து ஏதி­லி­க­ளான எஞ்­சிய தமி­ழர்கள் பாலையும், நெய்­தலும் கலந்த அந்த வறண்ட மண்ணில் மீண்டும் சென்­றாலே நாம் விழ விழ எழுவோம் என்­ப­தற்கு ஆதா­ர­மாவோம் என்ற தன்­னி­க­ரில்லா தன்­னம்­பிக்­கை­யுடன் கோரி­நின்­றனர். இன்று கோரம் நிறைந்த யுத்தம் முடி­வுக்கு வந்­த­தாக அறி­விக்­கப்­பட்டு ஐந்து வரு­டங்­க­ளா­கின்­றன. இருந்­த­போதும் சொந்த மண்­ணுக்கு திரும்பும் பாக்­கியம் அனை­வருக்கும் இது­வ­ரையில் கிடைக்­க­வில்லை

யுத்­தத்தின் இறுதி நாட்­க­ளிலும் முகாம் கால அவ­லத்தின் போதும் தொண்டு நிறு­வ­னங்­களைச் சார்ந்த யாருக்கும் உயி­ருக்­கான உத்­தி­ர­வாதம் கொடுக்­கப்­ப­டாத நிலையில் சில சர்­வ­தேச தொண்டு நிறு­வ­னங்­க­ளு­டைய பங்கு, பணிகள் குறிப்­பி­டத்­தக்­கதாய் அமைந்­தன. அவ்­வா­றி­ருக்­கையில் தற்­போதும் வலி­களின் வடுக்­க­ளுடன் இருக்கும் கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்­டங்­களில் மீளக்­கு­டி­யேறி வாழ்க்­கையை பூச்­சி­யத்­தி­லி­ருந்து ஆரம்­பிக்கும் மக்­களின் துய­ரைப்­போக்கும் வித­மாக சுமார் 600இற்கும் மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு ஐ.சி.ஆர்.சி நிறு­வனம் கள­ஆய்வின் மூலம் தெரிவு செய்து உத­வி­ய­ளித்­தி­ருக்­கின்­றது. அண்­மையில் கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு ஆகிய மாவட்­டங்­க­ளிற்கு நேர­டி­யாகச் சென்ற போது உதவி பெற்ற பய­னா­ளிகள் சிலரை சந்­திக்க நேர்ந்­தது.

மொங்­கொ­லியன், செங்­கிஸ்கான் மத்­திய ஆசிய நாடுகள் மீது மேற்­கொண்ட போர் தைமூர் வட இந்­தி­யாவைச் சிதைத்த போர். ஹிட்லர் யூதர்கள் மீது திணித்த போர் கொசோவா, அல்­பே­னியா, சூடான், எரித்­தி­ரியா, கிழக்குத் திமோர், தற்­போது காஸா என எத்­த­னையோ போர்க்­க­ளங்கள் வர­லாற்றின் அழியாச் சுவ­டு­களை பதித்­தி­ருந்­தாலும் 21ஆம் நூற்­றாண்டில் மிகப்­பெரும் மனித அவ­லத்­துக்கு கார­ண­மான முள்­ளி­வாய்க்கால் யுத்­தத்­திற்கு நேரில் முகங்­கொ­டுத்­த­வர்­களின் ஒவ்­வொரு வார்த்­தை­களும் நெஞ்சைக் கண­மாக்­கி­யது. ஓடும் குரு­தியை உறை­ய­வைத்­தது. தொண்­டையை வறட்­டி­யது. பாது­காப்பு வல­ய­மாக அறி­விக்­கப்­பட்ட விசு­வ­மடு முதல் சுதந்­தி­ர­புரம் வரை சுமார் 35.5 கிலோ­மீற்றர் தூரத்தை பொடி­ந­டை­யாக கடந்து சொல்­லொண்ணா இன்­னல்­களைக் கடந்து கரை­சேர்ந்­த­வர்கள் இன்று தமக்­காக இல்­லா­விட்­டாலும் தமது உற­வு­களின் எதிர்­கா­லத்­துக்­காக எம்­மாலும் முடியும் என்ற அசையாத நம்­பிக்­கை­யுடன் அன்­றாட வாழ்க்கை என்ற பேர­லையில் எதிர்­நீச்­ச­ல­டிக்க ஆரம்­பித்­தி­ருக்­கின்­றார்கள். அவர்­களின் கடந்­த­கா­லத்­தையும் எதிர்­கால எதிர்­பார்ப்­பையும் முழு­மை­யான நம்­பிக்­கையுடன் பின்­வ­ரு­மாறு விவ­ரிக்­கின்­றார்கள்.

சிவ­ஞானம் சுரேஸ்

நான் இப்ப கிளி­நொச்சி கன­க­பு­ரத்­தில் சலூன் ஒன்றை வைச்சு நடத்­திக்­கொண்டுஇருக்­கிேறன். என்ட சொந்த இடம் மல்­லா­வில வவு­னிக்­குளம். 2004இல் இயக்­கத்­தில் இருந்து விலத்­தி­னாப்­பி­றகு திரு­மணம் செய்தன். இப்ப எனக்கு எட்டு, ஆறு வய­தில இரண்டு பெண்­பிள்­ளைகள். படிச்­சுக்­கொண்­டி­ருக்­கினம். 2009இல் இடம்­பெ­யர்ந்து கைக்­கு­ழந்­தை­யோட முள்­ளி­வாய்க்கால் பக்கம் போனம். அப்­பத்தான் ஷெல் விழுந்­த­தால என்ட மனைவி காய­ம­டைந்தா.

எனக்கும் சின்­னச்­சின்ன காயங்கள் தான். ஒரு மாதிரி உயிரை கையில பிடிச்­சுக்­கொண்டு அங்­கே­ருந்து வெளிய வந்தம். மனைவி ஆஸ்­பத்­தி­ரியில சேர்த்­தாங்க. ஒரு மாதிரி அவாவ காப்­பத்­திட்­டாங்க. ஆனால் இப்ப அவா­வால குனிஞ்சு நிமிந்தோ இல்ல குறைஞ்ச பாரத்தை கூட தூக்க முடி­யாத நிலை­யில இருக்­கிறா. அவட உயி­ருக்கு ஆபத்­தில்­லாம போனதே பெரிய விசயம்.

நான் வவு­னி­யா­வில இருக்­கிற பம்­பை­மடு முகா­மில புனர்­வாழ்வு பயிற்­சியை எடுத்­துக்­கொண்டு 2013.-01-.16இல் விடு­த­லை­யானன். அந்த நேரத்­தில என்ட குடும்பம் இருந்த நிலை­மையை என்­னால இன்­டைக்கும் மறக்க முடி­யல. பரம்­பரைத் தொழில் முடி வெட்­டி­றது என்­ற­தால நான் இப்ப நடத்­திற இந்த பொதிகை சலூ­னில வேலைக்குச் சேர்ந்தன். அதில கிடைச்ச வரு­மா­னத்தை வைச்சு எண்ட குடும்பம் ஒரு­மா­திரி ஒடிக்­கொண்டு போச்­சுது. பிறகு ஓணர் வெளிநாட்டுக்கு போகேக்க இந்த கடையை எனக்கு தந்தார். இப்ப எனக்கு கிடைச்ச உத­வி­யையும் வைச்­சுக்­கொண்டு மாதம் மாதம் உழைச்சு அந்த கடனை அவ­ருக்கு கட்­டிக்­கொண்டு வாரன்.

ஆன.........(கண்கள் கலங்­கி­ய­வாறு) எனக்கு இப்ப 38 வய­தா­குது சில நேரங்­கள்ல நெஞ்சு அடைத்­துக்­கொள்ளும். இப்ப சில மாதங்­க­ளுக்கு முன்­னால அப்­பிடி வந்­த­போது கிளி­நொச்சி ஆஸ்­பத்­தி­ரிக்கு போனன். அங்கு நிறைய சோதினை செய்­தவை. அப்ப என்ட நெஞ்­சில ஷெல் பீஸ் ஒன்டு இருக்­கி­றதை கண்டு பிடிச்­சினம். பிறகு கொழும்­புக்கு கொண்டு போய் காட்டச் சொல்­லிச்­சினம். அங்க ஒரு பிறைவேட் கொஸ்­பிட்­டல்ல காட்­டினன்.

அங்க பீஸ் சின்­னதா இருக்­கி­ற­தாயும் ரத்தம் ஓடேக்க பீஸும் ஓடு­ற­தால தான் நெஞ்­ச­டைக்­கு­தெண்டும் ஒப்­ப­ரேசன் செய்தா சரியாய் போகும் எண்டும் சொல்­லிச்­சினம். ஆனால் அதுக்கு ஐஞ்சு லட்சம் வேணுமாம். கொழும்­பில இருக்­கிற அர­சாங்க ஆஸ்­பத்­தி­ரில செய்­யிற எண்டா இங்க கடையை பூட்­டிப்­போட்­டுத்தான் போகனும். அப்­பி­டிச்­செய்தா குடும்பச் செல­வில இருந்து எல்­லாமே இறுக்­கமாய் போயிடும். பிள்­ளை­ய­ளையும் மனை­வி­யையும் பாக்­கவும் யாரும் இல்ல. உழைப்ப பாக்­கி­றதா? இல்ல வருத்­தத்தை பாக்­கி­றதா? அதான் என்ன செய்­யி­றது எண்டு தெரி­யல. ஒரே யோச­னையாய் கிடக்­குது.

வில்­வ­ராஜா சித்­தி­ரா­தேவி

இது புதுக்­கு­டி­யி­ருப்பு கிழக்கு. நான் இங்க வில்­லவம் என்ற பெய­ரில தேநீர் கடை­யொன்றை நடத்தி வாறன். எனக்கு கிடைச்ச உத­வியை வைச்சு இந்த கடைய தொடங்­கினன். இதில தான் எனது குடும்ப வரு­மானம் முழுசாய் தங்­கி­யி­ருக்­குது.

1991இல என்ட மகன் ஜெய­னந்­த­னுக்கு ஒரு­வ­யது. கிபிர் தாக்­கு­தல்ல ஏற்­பட்ட அதிர்ச்­சி­யால பதிக்­கப்­பட்டார். அதோட வாய்­பே­ச­மலும் போய்டார். எங்­கெங்­கல்­லாமோ அலைஞ்சு திருஞ்சம். எத்­த­னையோ பிரார்த்­தனை செய்தம். கடை­சியாய் டொக்டர் ஒருவர் ஒப­ரேஷன் ஒண்டு செய்­யனும் என்டார். அதுக்கு பிறகு இருந்­த­தை­விட கொஞ்சம் குண­மானார்.

எங்­க­ளின்ட ஒரு குழந்­தைக்கு இப்­பி­டி­யா­கிட்­டுது என்ற கவ­லை­யோட நானும் கண­வனும் இருந்தம். அப்­பி­டியே ஒரு பதி­னேழு வருசம் போனாப்­பி­றகு 2008இல் அப்ப என்ட கணவர் மேசன் வேலைக்குப் போய்க்­கொண்டும் பல­ச­ரக்கு கடை நடத்­திக்­கொண்டும் இருந்தார். அந்த நேரத்தில் ஷெல் வந்து வீழ்ந்­ததில காண­வரும் கடு­மையாய் காய­ம­டைந்தார். இப்ப அவ­ரா­லயும் பெரிய வேலை­களைச் செய்­ய­மு­டி­யா­தி­ருக்­குது. இந்­திய வீட்­டுத்­திட்டம் கிடைச்­சி­ருக்கு. மெல்ல மெல்ல வீட்டைக் கட்ட தொடங்­கப்­போறம்.

ஆனா எங்­கட மண் கிணத்­தில இருந்து தண்­ணியை எடுத்­துத்தான் நாங்கள் இப்ப வீட்­டில சாப்­பா­டு­களைச் செய்து வித்­துக்­கொண்­டு­வாரம். போன­கி­ழமை உணவு சுகா­தார பரி­சோ­த­கர்கள் இங்க வந்து மண்­கி­ணத்­தில இருக்­கிற தண்­ணியை பாவிச்சு சாப்­பா­டு­களைச் செய்­யு­றதை நிப்­பாட்டச் சொல்­லீட்­டினம். எங்­க­ளுக்கு நல்ல தண்ணி வெளியில இருந்து கொண்­டு­வா­ரத்­துக்கு யாரு­மில்லை. அந்­தக்­கி­ணறு 114அடி ஆழம் வேற அதைப் சீமந்­தால பூசவும் பெரிய செலவு. இந்தப் பிரச்­சினை எப்­பிடித் தீரப்­போ­கு­தெண்டு தெரி­யல.

சிவ­ஞானம் மயூரன்

எனக்கு இப்ப 24வய­தா­குது. சொந்த இடம் விசு­வ­மடு. இப்ப விசு­வ­மடு டவுன்ல வெத்­திலை, கோயில் சாமான்கள் விக்­கிற கடை­யொன்றை நடத்­திக்­கொண்டு வாறன். நான், அம்மா, அப்பா, தங்­கச்சி, தம்பி என குடும்­பத்­தில ஐஞ்­சுபேர். தம்­பியும், தங்­கச்­சியும் விசு­வ­மடு மகா­வித்­தி­யா­லயத்­தில படிச்­சுக்­கொண்­டி­ருக்­கினம்.

அப்பா மட்டும் தான் விவ­சாயம் செய்து எங்­களை படிக்க வைச்­சுக்­கொண்­டி­ருந்தார். அது போதல. நான் ஓய­லோட என்ட படிப்பை நிறுத்­திட்டு வேலைக்குச் சேரலாம் எண்டு நினைச்சன். மன்­னா­ரில வேலை­யொண்டு இருக்கு என்ற செய்தி வர நான் அங்க சந்­தோ­சமாய் போனேன். அன்­றைக்கு திகதி 2008-.02.-28 எண்டு நினைக்­கிறன். திடீ­ரென ஷெல் வரத் தொடங்­கீட்டு. எல்­லா­ரையும் போல நானும் கிடைச்ச இடத்­தில ஒழிஞ்­சு­கொண்டன். என்ன நடந்­தது என்றே தெரி­யல . என்ட ஒரு கால இழக்க வேண்­டி­யதாப் பேச்சு. நிறை­யவே அழுதன். கடை­சில என்ட வாழ்­கை­யே அங்க தொலைஞ்சு போச்சு. எல்­லாமே முடிஞ்­சு­போச்சு என்டு வீட்­டுக்கு வந்தன்.

அப்பா விவ­சாயம் செய்வார் அம்மா தம்பி தங்­கச்சி எல்­லாரும் அவ­ருக்கு உதவி செய்­வினம். என்­னால எது­வுமே செய்­ய­மு­டி­ய­லேயே எண்டு ஒவ்­வொரு நாளும் எனக்­குள்­ளேயே கவ­லைப்­பட்டு நொந்­து­கொள்­ளுவன். பிறகு எனக்கு செயற்­கைகால் கிடைச்­சுது. ஊன்று கோலுடன் மெல்ல மெல்ல நடக்க ஆரம்­பிச்சன். இருந்­தாலும் கடைசி யுத்தம் வந்­தது. இடம்­பெ­யர்ந்து போனம். நிறை­யவே நடக்க வேண்­டி­யி­ருந்­த­தால எனக்கு சரி­யான கஷ்­டமாய் இருந்­தது. பிறகு முகா­மில இருந்து இயக்­க­தில இருக்­க­வில்லை என்­டாலும் புனர்­வாழ்­வுக்கும் போனேன். 2010இல வெளியில வந்து குடும்­பத்­துடன் சேர்ந்த போது சந்­தோ­சமாய் இருந்­தது. ஆனால் கடு­மை­யான கஸ்­டத்­தால என்ன செய்­யி­ற­தென்று தெரி­யாம இருந்­தது. ஒரு­வேளை மட்­டுமே முழு­மையாய் சப்­பிட முடிஞ்­சுது. வீட்­டுக்கு பின்­னுக்கு இருக்­கிற ஒன்­றரை ஏக்­க­ரில செய்த விவ­சா­யமும் தண்ணி இல்­லா­த­தால நிறுத்த வேண்­டி­யதாய் போச்சு. அப்­பதான் எனக்கு உதவி கிடைச்­சுது. விசுவ மடு­வில வெத்­தில கடை­யொன்றை போட்டன். அதோட பத்தி, பட்டு என சில கோயில் சாமான்­க­ளையும் போட்டு விக்­கிறன். வீட்­டில இருந்து ஒவ்­வொரு நாளும் இப்ப 2கிலோ­மீற்­ற­ருக்கு கிட்ட சைக்­கிள்ள தான் வந்து போவன்.

எனக்கு வெத்­தி­லையை இங்க கொண்­டு­வந்து தார­வரும் என்னை மாதிரி தான் காலை இழந்­தவர். அவர் எனக்கு உத­வி­யாயும் இருக்­கிறார். இப்ப இதில வாற வரு­மா­னத்தை வைச்சுத் தான் குடும்பம் ஓடிக்­கொண்டு இருக்கு. தம்­பியும் தங்­கச்­சியும் நல்லா படிக்­கினம். இப்ப என்­னா­லையும் முடியும் என்டு ஒரு நம்­பிக்கை வந்­தி­ருக்கு.
றஞ்சன் சுமதி

புதுக்­கு­டி­யி­ருப்பு மல்­லிகைத் தீவு தான் என்ட சொந்த இடம். 2002இல் திரு­மணம் செய்தன். கணவர் பல­ச­ரக்கு கடை வைச்சு நடத்­திக்­கொண்­டி­ருந்தார். எங்­க­ளுக்கு ஒரு மகன் பிறந்தார். சந்­தோ­சமாய் இருந்தம்.

2009இல் கடைச்சி சண்­டை­யில தொடங்­கிச்சு. எல்­லாத்­தையும் விட்­டுட்டு போனம். பிறகு முகா­மில இருக்கும் போது என்னை விட்டு பிரிந்து போயிட்டார். கொஞ்­ச­நாளாய் எந்த தொடர்பும் இல்ல. பிறகு தான் அவர் வேற திரு­மணம் செய்­து­கொண்டு போனது தெரி­சிஞ்­சுது. அதுக்கு பிறகு விவ­கா­ரத்­தா­யிட்டு.

இப்ப என்ட மகன் ரதுஷன் புதுக்­கு­டி­யிப்பு மத்­திய கல்­லூ­ரி­யில 6ஆம் ஆண்டு படிச்­சுக்­கொண்­டி­ருக்­கிறார். போன மாதம் என்ட அம்மா இறந்­த­தால இப்ப எனக்­கி­ருக்­கிற ஒரே சொந்தம் என்டா அது மகன் மட்டும் தான். எனக்கு கிடைச்ச உத­வி­யல நான் இப்ப திருப்­பவும் பல­ச­ரக்கு கடையை நடத்தி வாறன். ஒரு நாளைக்கு 600ரூபாக்கு கிட்ட வரு­மானம் கிடைக்­குது. மாசம் மகன்ட பெய­ரி­லையும் என்­ட­பெ­ய­ரி­லையும் கொஞ்சம் கொஞ்சம் சேமித்­துக்­கொண்டு வாரன்.

2001இல இருந்து 1500ரூபா வாடகை கொடுத்து இந்த கடைய நடத்­தி­வாறன். எதிர்­கா­லத்­தில வீட்­டுக்கு கிட்­டவே சொந்­தக்­கா­ணி­யில கடையை நடத்த திட்­ட­மிட்­டி­ருக்­கி­ற­தோட மகனை நல்லா படிக்க வைக்­கி­றது தான் என்ட ஒரே லச்­சியம்.

எஸ்.மௌன்ட் பற்றன்

என்ட சொந்த இடம் ஊர்கா­வற்­துறை. பிரச்­சி­னை­ய­லால இடம்­பெ­யர்ந்து வன்­னிக்கு வந்தன். பிறகு கிட்­டத்­தட்ட மூண்டு வரு­சமாய் இயக்­கத்­தில இருந்­தனான். அப்பா மெக்­கானிக் என்­ற­தால எனக்கு மெக்­கானிக் வேலை தெரியும். மெக்­கானிக் வேலை நல்லாத் தெரிஞ்­ச­ப­டியாய் அப்­பி­டி­யான வேலை­கள தான் எனக்கு இயக்­க­தில இருக்­கேக்க தந்­தவை.

பிறகு திரு­மணம் செய்தன். எனக்கு ஒரு பொம்­பி­ளப்­பிள்ளை பிறந்­தது. அப்­பி­டியே வாழ்க்கை போய் கொண்டு இருந்­தது. கடைசி சண்டை தொடங்­கின நேரம் எல்­லா­ரையும் போல நாங்­களும் 209.-04.-08இல புது­மாத்­தளன் பக்கம் போனம். அங்க என்ட மனைவி ஷெல் பட்டு இறந்­திட்டா. அந்தக் கவலை ஒரு­பக்கம். என்ன செய்­யி­றது. என்ட பிள்­ளை­யை­யா­வது காப்­பாத்­த­னுமே. எப்­பி­டியோ உயிரைக் கையில பிடிச்­சுக்­கொண்டு ஒரு மாதிரி முகா­முக்கு வந்து சின்­னப்­பிள்­ளை­யோட என்­ட­ப­டியா 2009-10-14இல வெ ளிய

வந்­திட்டன். வெளியில வந்து என்ன செய்­யி­றது என்டு தெரியல. நானும் மனை­வியும் இருந்த மல்­லாவி மூண்டாம் யுனிற்­றுக்கு வந்தன். மெக்­கானிக் கடையை சிறி­யதாய் ஆரம்­பிச்சன். 2011இல கடைக்கு சாமான் எடுக்க கொழும்­புக்கு போகேக்க நான் கைது செய்­யப்­பட்டன். பிறகு புனர்­வாழ்வு முகா­முக்கு கொண்டு போய்­யிட்­டினம். அங்க தச்சு வேலையை பழ­கினன்.

2 1/2வரு­சத்­துக்கு பிறகு விடு­தலை செய்­யப்­பட்டன். வெளிய வந்து பிர­தேச சபைக்குச் சொந்­த­மான இந்தக் கடையை 500ரூபா வாட­கைப்­படி எடுத்தன். கிடைச்ச நிதி உத­விய வைச்­சுக்­கொண்டு மல­ரவன் உதி­ரிப்­பாக நிலையம் என்ற இந்தக் கடையை தொடங்கி நடத்திக் கொண்­டி­ருக்­கின்­றன. மாதம் ஒரு 15ஆயி­ரத்­துக்கு கிட்ட வரு­மானம் கிடைக்­குது. சாதா­ரண வாழ்க்­கைக்கு போது­மா­ன­தாக இருக்­குது. சொந்­தக்­காணி இல்­லா­த­தால இந்­திய வீட்­டுத்­திட்­டமும் கிடைக்­கல. எனக்கு இப்ப 33வய­தா­குது. மக­ளுக்கு இப்ப 7வய­தா­குது. நெடுங்­கேணி மகா­வித்­தி­யா­லத்­தில படிக்­கிறா. எதிர்­கா­லத்­தில நல்ல படிச்சு வரணும் என்­றது தான் என்ட ஆசை.
சுபா­சினி இரத்­தி­னராஜ்

எனக்கு இப்ப வயசு 34ஆகுது. ஏண்ட சொந்த ஊர் இது தான் நெடுங்­கேணி மாம­டுச்­சந்தி. இங்க வந்­த­த­தில சந்­தோசம். மூண்டு பிள்­ளையள் இருக்­கினம் மூத்­த­வ­ருக்கு 14வயது வாய் பேச மாட்டார் என்­ற­தால வீல்ட்­டில படிக்­கிறார். இரண்­டா­வது மூண்­டா­வது பொம்­பிளப் பிள்­ளையள். ஒராள் 2ஆம் ஆண்டு படிக்­கிறா. மற்­றவா முன்­பள்­ளிக்கு போறா. ஆடு வளக்­கி­றது தான் என்ட தொழில்.

நான் திரு­மணம் செய்து குடும்­பத்­தோட சந்­தோ­சமாய் தான் வாழ்ந்­தனான். கடைசி யுத்தம் தொடங்­கி­னோன முள்­ளி­வாய்க்­கா­லுக்­கால போய் வவு­னியா முகா­முக்கு ஒரு மாதிரி பிள்­ளை­ய­ளோட போய் சேர்ந்தம். நான் அப்ப நான் கர்ப்­பமாய் இருந்தன். அந்த நேரத்­தில கணவர் திடீ­ரென வேற திரு­மணம் செய்­து­கொண்டு போய்டார். ஏன் எண்டு காரணங் கூட சொல்ல. நானும் பிள்­ளை­யளும் அநாதாய் இருந்தம். என்ட சதோ­ரங்­களும் அப்பா அம்­மாவும் இருந்­த­தால கொஞ்சம் ஆறு­தலாய் இருந்­தது.


பிறகு முகா­மி­லி­ருந்து வௌியில வந்து எங்­கட இடத்தை விடும்­போது இஞ்ச வந்தன். அப்பா தான் எனக்கு காவலாய் என்­னோட எந்த நேரமும் இருப்பார். ஒரு கொட்­டிலை போட்­டுட்டு கொஞ்சம் கடனைப் பட்டு போயிலைக் கன்றை போட்டன் அதில கொஞ்சம் இலாபம் வர அதை வைச்சு பிள்­ளை­யள பாத்­துக்­கொண்டன். அப்­பாவும் உத­வி­செய்வார். அதுக்கு பிறகு எனக்கு கிடைச்ச பண உத­வியை வைச்சு எட்டு ஆடு­களை வாங்­கினான். பிறகு அதுகள் குட்­டி­போட்டு கொண்டு போக ஒண்­டொண்டாய் விக்க தொடங்­கினான். கொஞ்சம் இலாபம் கிடைக்க தொடங்­கவும் அதையே தொடர்ந்து செய்ய தொடங்­கினன்.

இப்ப ஒரு 50 ஆடு­க­ளுக்கு மேல இருக்­குது. ஆட்டை இறைச்­சிக்குத் தான் விக்­கிறன். ஒரு­கிலோ 500 ரூபாய்க்கு கிட்ட போகும். மாசம் ரண்டு மூண்டு ஆடுகள் விலை­போகும். அதை­வைச்சு பிள்­ளை­ய­ளிண்ட படிப்­பையும் வீடு கட்­டு­ற­தையும் பாக்­கிறன். ஏனக்கு இந்­திய வீட்­டுத்­திட்டம் கிடைச்­சாலும் முழுசா வீட்டைக் கட்ட அந்­தக்­காசு பத்­தல. அதால ஆட்டை வித்து வாற காசையும் அதுக்­காக செலவு பண்­ணுறன். அதோட போயி­லையும் அடுத்த பரு­வத்­தில போடு­றதாய் இருக்­கிறன்.

என்ட கணவர் போனது எனக்கு ஆரம்­பத்­தில கஷ்­டமாய் இருந்­தது. அப்பா எனக்கு பாது­காப்பா இருக்­கி­ற­தால கொஞ்சம் மன­சில தெம்பு. என்ட பிள்­ளை­யளை நல்லா படிக்க வைக்­கனும். மூத்த மகன் வாய்­பே­ச­மாட்டார் என்­ற­துதான் எனக்கு கவலை. எண்­டாலும் கொஞ்சங் கொஞ்­சமாய் எல்லாம் சரியா வந்து எங்­க­ளுக்கு எண்டு ஒரு விடிவு இருக்கும் எண்ட நம்­பிக்கை எனக்கு இருக்­குது.

இந்த அறு­வரின் கதை­களும் ஆயி­ர­மா­யிரம் செய்­தி­களை சொல்­கின்­றன. இன்னும் இதைப்­போன்­றதும் இதனை விட மோச­மா­ன­து­மான எத்­த­னையோ கதைகள் ஏதோ­வொரு கார­ணத்­துக்­காக வௌியில் கூற­மு­டி­யாது மனங்­க­ளுக்குள் புதைந்­தி­ருக்­கின்­றன. தவி­ரவும் இன்று இறுதிச் சமர் கண்ட கிளி, முல்லை நிலங்கள் அழ­கிய காபட் வீதி­க­ளுடன் காணப்­பட்­டாலும் எத்­த­னையோ மக்கள் ஏதோ­வொரு வகையில் கிடைத்த நாலைந்து தக­ரங்­களை பரப்பி மண்­குந்து வைத்து தரப்­பாலால் சுவ­ர­மைத்து பச்சை உடை­களின் நட­மாட்­டத்தின் மத்­தி­யிலும் , முட்­கம்பி வேலி எல்­லை­க­ளுக்கு அரு­கிலும் வாழ்ந்து வரு­கின்­ற­மையும் கமரா கண்­ணுக்கு கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்ட நிலையில் கண்கள் படம்­பி­டித்­தி­ருந்­தன. ஒலிப்­ப­திவுப் கரு­விக்கு விலங்­கி­டப்­பட்ட நிலையில் இன்­றைக்கோ நாளைக்கோ எங்­கட சொந்த காணிக்கு போயி­டுவம் என்றும் எங்­க­ளுக்கும் இந்­தியன் வீட்­டுத்­திட்டம் ஓகே ஆயிடும் எண்டு விதா­னையர் சொன்­னவர் என்றும் கூறு­வதை காதுகள் நன்கே பதிவு செய்து கொண்­டன.

குறித்த ஒரு தொண்டர் அமைப்பால் பேர­வ­லத்­திற்கு முகங்­கொ­டுத்த அத்­தனை மக்­களின் தேவைப்­பா­டு­க­ளையும் பூர்த்தி செய்து விட­மு­டி­யாது என்­பது யதார்த்தம். அதேநேரம் தொண்டர் நிறுவனங்களின் சுயாதீனச் செயற்படுகள் முற்று முழுதாக முடக்கப்பட்டுள்ள நிலையில் பொறுப்புடன் செயற்பட வேண்டியது யாருடைய கடமையாகவிருக்கின்றது. மத்தியில் ஆட்சியல் அமர்ந்து கொண்டிருந்து தலைநகரிலும் தன்நகரிலும் ஜனநாயகம் பேசுவதால் எந்தப்பயனும் கிடைத்துவிடப்போவதில்லை என்பதை உணரவேண்டியது யார்? அதனை அவர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்? அதற்கான காலம் என்று ஏற்படப்போகின்றது?

ஒரு காலத்தில் குடும்பத்தோடு ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்து உலக தண்ணீர் தொட்டியில் சிறு உருண்டையாக விருக்கும் தாயகத்திற்கே சோறு போட்டும், பரம்பரை தொழில் செய்தும் பெரும் செல்வந்தர்களாக வாழ்ந்த ஒரு சமூகத்தை கொடிய போரின் விளைவு எந்தளவுக்கு புரட்டிப் போடுகின்றது என்பதற்கு மாற்றுக்கருத்தில்லா உதாரணமாக வன்னிப் பெருநிலப்பரப்பு மக்களே காணப்படுகின்றார்கள்.

நாம் தற்போது ஏழைகள் . கண்ணீர் விடுகின்றோம். நாம் ஏழைகள் ஆக்கப்பட்டோமே தவிர நிரந்தர ஏழைகள் அல்ல. ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும் என்ற சன்றோரின் பழமொழி போல் என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும். கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை என்ற நிலைமாறி ரணங்களுடன் நாமும் தலைநிமிர்வோம் என்பது தான் அவர்களின் நம்பிக்கை.

–ஆர்.ராம்–
(முற்றும்)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல