தென்னிந்திய தொலைக்காட்சி விளம்பரமொன்றில் ‘பூமராங்’ (Boomerang) இனை வீசி எறிகையில் அது திரும்பி வருவதைக் காண்பித்து குறிப்பிட்ட துறையில் முதலீடு செய்தால் அது முழுமையாகத் திரும்பிவரும் என உருவகப்படுத்தப்படுகிறது. விளம்பரக் காட்சிக்குப் பயன்படும் இப் ‘பூமராங்’ என்பது முன்னைய கால மக்களின் பறந்து இலக்கைத் தாக்கிவிட்டு மீண்டும் திரும்பி வரும் ஆயுதமாகப் பயன்பட்டது. எவ்வித இயந்திரங்களும் உள்ளடக்கப்படாத நிலையில் மரத்தினால் ஆக்கப்பட்ட, எளிமையாகத் தோன்றும் இந்த ஆயுதம் எப்படி பயணித்துச் சென்று திரும்புவது எவ்வாறு சாத்தியம் எனப் பலரும் எண்ணியிருக்கக்கூடும்.
எறிந்தவர் கைக்குத் திரும்பி வரும் ‘பூமராங்’ ஆயுதம் குறைந்தபட்சம் இரு சிறகுகள் உடையதாக அமைந்தவையாகும். சில வகை பூமராங் ஆயுதங்கள் இரண்டிற்கும் மேற்பட்ட இறகுகள் கொண்டவையாகவும் அமைகின்றன. இந்த இறக்கைகளின் அமைப்பு, இது எறிந்தவரிடம் திரும்ப உதவுகின்றது. கைக்குத் திரும்பும் இந்த வகை ‘பூமராங்’ ஆயுதங்கள், முன்பு பொழுதுபோக்குச் சாதனமாகப் பயன்பட்டதோடு, பற்றைக்குள் பதுங்கியிருக்கும் பறவைகளை விரட்டி, விரித்திருக்கும் வலையை நோக்கி விரட்டியடிக்கப் பயன்பட்டுள்ளது.
மிருகங்களில் கங்காரு விலங்கு அவுஸ்திரேலியாவை நினைவுபடுத்துவது போல ‘பூமராங்’ ஆயுதமும் அந்நாட்டினை நினைவுபடுத்துவதுண்டு. அங்குள்ள பழங்குடியினர், ஓடிச் செல்லும் கங்காருவின் காலைக் குறிபார்த்து எறிந்து வீழ்த்தவும், தீக்கோழி போன்ற பறவைகளைக் கொல்லவும் பூமராங் ஆயுதம் உதவியுள்ளது.
வீசுபவரின் கையை விட்டு சுழன்றபடி விலகிச் செல்லும் ‘பூமாராங்’ ஆயுதத்தின் சுழற்சி காரணமாக, வளிமண்டலத்தில் பயணிக்கும் தகைமையினை அவ்வாயுதம் பெற்றுக்கொள்கிறது. இந்தப் ‘பூமராங்’ இனது இறகுகள் வளிமண்டலத்தில் வேகமாக சுழலுகையில் ‘பூமராங்’ இனது மேற்பக்கத்திற்கும் கீழ்ப்பக்கத்திற்கும் இடையில் அமுக்கவேறுபாடு ஏற்படுகிறது. இந்நிலைமை, இந்த ஆயுதத்தினை வளிமண்டலத்தில் தாங்கி வைத்திருக்கும் மேலுதைப்பு விசையாகப் பரிணமிக்கிறது.
‘பூமாராங்’ இனது ஆயுத நீளம், மற்றும் அந்த இறகுகள் இணையும் கோணம் என்பன இதை ஒரு சமநிலை தளத்தில் சுழல அனுமதிக்கின்றது. இந்த இயல்பு gyroscopic சமநிலை என அழைக்கப்படுகிறது. எறியப்படும் ‘பூமராங்’ இன் பரிமாணங்கள் gyroscopic சமநிலைக்கு ஏற்புடையனவாக இல்லாதிருப்பின், எதிர்பார்க்கப்படும் தொடர்ச்சியாகப் பறந்து மீளத்திரும்பும் இயக்கம் நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த நவீன யுகத்திலும் உலகளாவிய ரீதியில் கிரிக்ெகட், கால்பந்து வெற்றிக் கிண்ணப் போட்டிகள் இடம்பெறுவதுபோல, ‘பூமராங்’ எறியும் வெற்றிக் கிண்ணப் போட்டிகளும் இருவருடங்களுக்கு ஒருமுறை இடம்பெற்று வருகின்றன. முன்னைய போட்டிகள் நடந்த 2000, 2002, 2004 ஆம் ஆண்டுகளில் தனித்து எறியும் போட்டியில், சுவிஸ் நாட்டவரான Manual Schütz என்பவர் தொடர்ந்து வெற்றிவாகை சூடியிருந்தார்.
ஆதிகாலத்தில் இந்த ஆயுதம் உருவாக்கப்படுகையில் ஒருநாட்பொழுதில் இதன் வடிவமைப்பு இறுதிசெய்யப்பட்டிருக்கமாட்டாது. நீண்டகால அவதானிப்புக்கள், பிரயோகங்கள் ஊடாகவே ‘பூமராங்’ ஆயுதம் இறுதி வடிவம் பெற்றிருக்கும். ஆனால் தற்போது அறிவியல் முன்னேற்றங்கள் காரணமாக கணினி ஊடான அவதானிப்புக்கள், இயந்திரங்கள் ஊடான வடி வமைப்புக்கள் என்பன ஆய்வுகள் ஊடான முன்னேற்றங்களைத் துரிதப்படுத்த உதவுகின்றன. இவை, துரிதகதியில் வினைத்திறனான கட்டமைப்புக்களை படைக்க வழி யேற்படுத்தும்.
அ.ஹரின் சுலக்ஸ்ஸி,
யாழ். நகர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக