ஞாயிறு, 14 டிசம்பர், 2014

அகச்­சி­வப்புக் கதிர்­களை கண்கள் காண இய­லுமா?

எம்மைச் சுற்றி எத்­த­னையோ மின்­காந்த அலைகள் விரைந்து செல்­கின்­றன. வானொலி, தொலைக்­காட்­சிக்­கான தக­வல்­களைக் கொண்­டு­வரும் வானொலி அலைகள், தகவல் பரி­மாற்­றங்­களைக் காவிச்­செல்­­பவை எனப் பல அலை ­நீளங்­களைக் கொண்ட மின்­காந்த அலைகள் அங்­கு­மிங்கும் பய­ணித்துச் செல்­கின்­றன. இயற்­கை­யான மின்­காந்த அலைகள் சூரி­ய­னி­லி­ருந்தும் வரு­கின்­றன. அவற்றில் அபா­ய­க­ர­மான சக்­தியைக் கொண்ட கதிர்ப்­புக்கள், அதா­வது புற­வூதாக் கதிர்கள் ஓசோன் படை­யினால் உறிஞ்­சப்­பட, ஏனை­யவை புவியை வந்­த­டை­கின்­றன.



இவ்­வா­றான மின்­காந்த அலை­களில் 400 நனோ­மீற்றர் தொடக்கம் 720 நனோ­மீற்றர் வரை­யி­லான அலை­நீ­ளங்­களைக் கொண்ட மின்­காந்த அலை­களை மாத்­தி­ரமே கண்­களால் பார்க்­க­மு­டி­கி­றது. இந்த வீச்­சிற்கு குறை­வான அலை­நீ­ள­முள்ள மின்­காந்தக் கதிர்ப்­புக்கள் அல்­லது அதி­க­ரித்த நீள­முள்ள மின்­காந்த அலைகள் எமது சூழலில் இருந்­தாலும் அவற்றைக் காண எம் கண்­களால் இய­லு­வ­தில்லை. பார்­வைப்­புல வீச்சின் கீழ் எல்­லைக்கு அப்பால் அண்­மித்­தா­க­வுள்ள உள்ள அகச்­சி­வப்புக் கதிர்கள் மற்றும் மறு­எல்­லைக்கு வெளியே அருகில் காணப்­படும் புற­ஊதாக் கதிர்­களும் எமது கண்ணை வந்­த­டைந்­தாலும் அவை புல­னா­வ­தில்லை. எனினும், இக்­க­திர்கள் குறித்து அறி­வி­ய­லா­ளர்கள் அதிக ஆர்வம் கொண்­டுள்­ளனர். குறிப்­பாக மனி­தனின் உடல் அகச்­சி­வப்­புக் ­க­திர்­களைக் கதிர்க்கும் இயல்­பி­னது என்­பதால், குற்­றப்­பு­ல­னாய்வு தொடர்­பான ஆய்­வு­களில் அகச்­சி­வப்புக் கதிர் குறித்து அதி­க­ரித்த கவனம் செலுத்­தப்­ப­டு­கி­றது.

அகச்­சி­வப்புக் கதிர் அலை­நீளம் கொண்ட ‘லேசர்’ கதி­ருடன் தொடர்­பு­பட்ட பரி­சோ­தனை மேற்­கொண்­டி­ருந்த அறி­வி­ய­லாளர் குழு­வொன்று தம் கண்­க­ளுக்கு இடை­யி­டையே பச்­சை­நிற பளிச்­சி­டு­கைகள் தென்­ப­டு­வதை அவ­தா­னித்­தனர். இந்த அவ­தா­னிப்­பினை தமது ஆய்­வுக்­கட்­டு­ரை­யொன்றில் குறிப்­பிட்­டி­ருந்­தனர். இவ்­வித்­தி­யா­ச­மான குறிப்­பினை அவ­தா­னித்த அமெ­ரிக்க வாஷிங்டன் பல்­க­லைக்­க­ழக மருத்­துவப் பிரி­வி­னது ஆய்­வுக்­குழு அதற்­கான கார­ணங்­களை ஆழ­மாக ஆராயத் தீர்­மா­னித்­தது. அவர்­களின் ஆய்வின் மூலம் கண்கள் சில குறிப்­பிட்ட நிலை­மை­களில் அகச்­சி­வப்புக் கதிர்ப்­புக்­க­ளையும் காண்­ப­தற்­கான சந்­தர்ப்பம் உண்டு என்­பதைக் கண்­ட­றிந்­துள்­ளனர். தமது ஆய்வின் பெறு­பே­று­களை கடந்த 1ஆந் திகதி வெளி­யான Proceedings of the National Academy of Sciences இணைய ஆய்­வி­தழில் வெளி­யிட்­டுள்­ளனர்.

பார்வைப் புல வீச்­சி­லான கதிர்கள் கண்­வில்­லை­களால் விழித்­தி­ரையில் குவிக்­கப்­ப­டு­கையில், அக்­க­திரில் அடங்­கி­யுள்ள ஒளிப்­போட்டோன் வடி­வி­லான சக்­தியை விழித்­திரை பெற்று photopigment என்ற மூலக்­கூ­றினை ஆக்­கு­கின்­றது. ஒளிக்­கு­ரிய காட்­சியைப் பார்­வைப்­பு­ல­னாக்கும் பணி, அதா­வது பெறப்­பட்ட ஒளி­யி­லி­ருந்து பார்­வை­யாக உண­ரு­வ­தற்­கான செயற்­பா­டுகள் இவ்­வாறு உரு­வாக்­கப்­பட்ட மூலக்­கூ­றினால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. அச்­செ­யற்­பா­டுகள் இறு­தியில் பார்­வைப்­புலன் ஏற்­பட வழி­வ­குக்­கி­றது.

ஆய்­வினை மேற்­கொண்ட வாஷிங்டன் பல்­க­லைக்­க­ழக ஆய்­வா­ளர்கள் எலிகள் மற்றும் மனி­த­ரி­லி­ருந்து பெறப்­பட்ட விழித்­தி­ரை­களில் அகச்­சி­வப்­புக்­க­திர்­களைச் செலுத்திப் பல்­வேறு பரி­சோ­த­னை­களை மேற்­கொண்­டனர். அப்­ப­ரி­சோ­த­னை­க­ளின்­போது அகச்­சி­வப்­புக்­கதிர் விழித்­தி­ரையின் ஒரி­டத்தில் அடுத்­த­டுத்து வந்­த­டை­கையில், அது photopigment மூலக்­கூறு ஒன்­றினை உரு­வாக்­கு­வதைக் கண்­ட­றிந்­தனர்.

இது குறித்து ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கையில், “எடுத்­துக்­காட்­டாக, பார்­வைப்­புல வீச்­சிற்கு இடைப்­பட்ட 500 நனோ­மீற்றர் நீள­மான மின்­காந்த அலை­யொன்று கண்ணின் விழித்­தி­ரையை வந்­த­டை­கையில் மேற்­கு­றிப்­பிட்ட மூலக்­கூறு பிறப்­பிக்­கப்­ப­டு­கி­றது.

அதே புள்­ளியில் அகச்­சி­வப்புக் கதிர் வீச்­சி­லுள்ள 1000 நனோ­மீற்றர் அலை­நீ­ள­முள்ள கதிர்­வீச்சு அடுத்­த­டுத்து விழித்­தி­ரையின் ஒரு புள்ளியில் தாக்குமிடத்து அந்நிலைமையும் விழித்திரையில் photopigment மூலக்கூறினை உருவாக்கும்” என விபரித்துள்ளனர்.

இந்த ஆய்வில் அமெரிக்க ஆய்வாளர்கள் மட்டுமல்லாது போலந்து, சுவிற்ஸர்லாந்து, மற்றும் நோர்வே ஆகிய நாடுகளின் அறிவியலாளர்களும் இணைந்து பணி யாற்றினர். இந்த ஆய்வின் பெறுபேறுகள் பார்வைப்புலனிற்கான மின்காந்த அலைவீச்சினை அகச்சிவப்புக்கதிர் வரை விரிவாக்குவதற்கு உதவக்கூடும்.

சில்லையூர் றெ.அலெக்ஸ்,

யாழ்ப்பாணம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல