ஞாயிறு, 14 டிசம்பர், 2014

விஷ­மாகும் உண­வுகள்! ஆபத்­துக்கள் தெரி­யுமா?

கலர் கல­ரான பிளாஸ்டிக் டிபன் பொக்ஸில் உணவு கொண்டு செல்ல குழந்­தைகள் ஆசைப்­ப­டு­வார்கள்.

ஏனெனில் வித­வி­த­மான டிசைன், வண்­ணக்­க­லர்கள் என குழந்­தை­களை இந்த பிளாஸ்டிக் டிபன் பொக்ஸ்கள் வசீ­க­ரிக்கும்.



பெற்­றோர்­களும், தங்கள் பிள்­ளை­களின் ஆசைப்­ப­டியே நடந்­து­கொள்வர், சிறி­யவர் மட்­டு­மல்ல, இளை­ஞர்கள் மற்றும் பெரியோர் அனை­வ­ருமே பாட­சாலை மற்றும் அலு­வ­ல­கத்­திற்கு இந்த கலர்புல் டிபன்­பொக்­ஸையே கொண்டு செல்­கின்­றனர்.

ஆனால், இதன் விப­ரீதம் தெரி­யுமா உங்­க­ளுக்கு,

கடை­களில் குறைந்த விலை பிளாஸ்டிக் டப்­பாக்கள் நிறைய வந்­து­விட்­டன. இவை எல்லாம் பொது­வாக தர­மா­னது என கூற முடி­யாது.

பொது­வாக, பிளாஸ்­டிக்­கு­களில் இருந்து, பி.பி.ஏ (bisphenol-a) எனப்­படும் இரசாயனப் பொருள் உரு­வாகும்.

இது, ஹோர்மோன் பாதிப்பை ஏற்­ப­டுத்தும். நரம்பு சார்ந்த பிரச்சி­னை­களை உரு­வாக்கும்.

தொடர்ந்து பயன்­ப­டுத்­து­வதால், எடை கூடும், நீரி­ழிவு பாதிப்பு வரும். குறைந்த வய­தி­லேயே, பெண்கள் பூப்­பெய்தி விடவும் வாய்ப்­புள்­ளது.

'பெட்' (பாலி எத்­திலின் டேரப்­தலேட்) பாட்டில் என்­கிறோம். இதில், டை- எத்தில் - ஹைட்­ரக்சில் அமைன்(டேகா) என்ற இரசா­யனப் பொருள் கலந்­துள்­ளது.. என்ன பெயரே வித்­தி­யா­ச­மாக இருக்­கி­றதே என்று யோசிக்­கின்­றீர்­களா...? பெயர் மட்­டு­மல்ல அவை ஏற்­ப­டுத்தும் விளை­வுகள் கூட உயி­ருக்கே உலை வைத்து விடு­கின்றன.

இது புற்­று ­நோய்க்­கான இரசாயனப்­பொருள். போத்­தலை மீண்டும் மீண்டும் பயன்­ப­டுத்­து­வ­தாலும், வெந்­நீரை ஊற்றி வைத்து பரு­கு­வ­தாலும், 'டோகா' தண்­ணீரில் கலந்து, உட­லுக்குள் செல்­கி­றது.

இதுவும் ஆபத்­தான ஒன்று, பி.பி.ஏ பாதிப்பு இல்­லாத, உணவுப் பொருட்­களை வைத்தால், சூடா­காத பிளாஸ்டிக் டப்­பாக்கள்(புட்கிரேட்) பயன் படுத்த வேண்டும்.

டப்பா, போத்தல்கள் வாங்கும் போது இதுபற்றிய குறிப்புகள் உள்ளதா என பார்த்து, தர மானதாக வாங்க வேண்டும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல