ஞாயிறு, 14 டிசம்பர், 2014

தர்மம் தலைகாக்கும்

பிச்சை என்­பது உழைக்க உடல் வலிமை இல்­லா­த­வர்கள், இரண்டு கண்­களும் தெரி­யா­த­வர்கள், வாய்­பேச முடி­யா­த­வர்கள், உடல் வலி­மை­யற்ற வித­வைகள், அநா­தைகள், வயோ­தி­பர்கள், கை கால் அற்­ற­வர்கள், கடும் நோய்­வாய்ப்­பட்­ட­வர்கள், தங்­களால் உழைத்து உண்­ப­தற்கு முடி­யாமை கார­ண­மாக தம் பசியைப் போக்­கு­வ­தற்கு வச­தி­ப­டைத்­த­வர்­க­ளிடம் பொருளோ, பணமோ இரந்து கேட்­பது என்று பொருள்­படும்.



பிச்­சைக்­கா­ரர்­க­ளுக்கும் பசியைப் போக்க உணவு வேண்டும். மானத்தைக் காக்க உடை­வேண்டும். நோய் ஏற்­படும் காலங்­களில் மருந்­துகள் வாங்­கு­வ­தற்குப் பணம் வேண்டும். இவை­களை அவர்­க­ளுக்கு யார் வழங்­கு­வார்கள்? வச­தி­ப­டைத்த நாங்­கள்தான் கொடுக்க வேண்டும். அவர்­களைப் பட்­டி­னி­யாலும், நோய்­க­ளாலும் இறக்­க­வி­டக்­கூ­டாது. எங்­களால் இயன்ற அளவு உதவி செய்ய வேண்டும்.

உண்­மை­யான பிச்­சைக்­கா­ரர்­களை நாம் தரக் குறை­வாக ஒரு­போதும் கரு­தக்­கூ­டாது. அவர்கள் கள­வெ­டுத்து, பொய் பிரட்­டுகள் செய்­யாமல் தங்­க­ளு­டைய பசியைப் போக்­கு­வ­தற்கு வச­தி­ப­டைத்­த­வர்­க­ளிடம் இரந்து கேட்­கி­றார்கள். ஆகவே அவர்­களை நாம் மெச்­ச­வேண்டும். எம்மால் இயன்ற உத­வி­களைச் செய்­ய­வேண்டும். பிச்சை எடுப்­பது ஒரு இழி­வான தொழில் அல்ல. அவர்கள் தங்­களால் தொழில்கள் செய்து உழைக்க முடி­யாத கால கட்­டத்தில் பிச்சை எடுப்­பது தவிர்க்க முடி­யா­தது.

பிச்சை எடுப்­பது மானக்­கே­டல்ல. அதைக் கொச்சைப் படுத்­து­வ­துதான் கூடாத செயல். தற்­கா­லத்தில் உடல் வலிமை படைத்­த­வர்கள் ஒரு தொழில் செய்து சம்­பா­திக்­கக்­கூ­டி­ய­வர்கள் கூட பிச்சை எடுக்­கி­றார்கள். ஏனெனில் பணம் சம்­பா­தித்­துக்­கொள்­வ­தற்கு சுல­ப­மான வழி­களில் இதுவும் ஒன்­றாகக் கரு­து­வதே. இதனால் உண்­மை­யான பிச்­சைக்­கா­ரர்­க­ளுக்கு வருவாய் குறை­வா­கவே கிடைக்­கி­றது.. அன்­றாட தேவை­களைப் பூர்த்தி செய்ய முடி­யாமல் இருக்­கி­றது.

ஒரு சில பிச்­சைக்­கா­ரர்கள் மக்­களை ஏமாற்றிப் பிச்சை கேட்­கி­றார்கள். பகல்­வே­ளையில் காலை மடக்கி இருந்­து­கொண்டு நொண்­டி­போ­லவும் வாயைத் திற­வாமல் ஊமை­போ­லவும் நடித்து பிச்சைப் பணத்தைப் பெற்­றுக்­கொண்டு மாலையில் தவ­ற­ணை­க­ளுக்கும், சினிமா அரங்­கு­க­ளுக்கும், போதைப்­பொருள் விற்கும் இடங்­க­ளுக்கும் ஓடோடிச் செல்­கி­றார்கள். ஊமை­போல நடித்­த­வர்கள் மாலையில் போதையில் மயங்கி மக்­களை வாய்க்கு ­வந்தபடி பேசு­கி­றார்கள். இப்­ப­டிப்­பட்ட பிச்­சைக்­கா­ரர்­களால் மக்கள் ஏமாற்­ற­ம­டை­கி­றார்கள்.

ஆகவே நாம் உண்­மை­யான பிச்­சைக்­கா­ரர்­களை முதலில் இனங்­கண்டு அவர்­க­ளுக்கு உத­வு­வ­தற்கு முன்­வ­ர­வேண்டும். அவர்­க­ளுக்கு எம்மால் இயன்ற சரீர உத­வி­களைச் செய்ய முன்­வ­ர­வேண்டும். சிலர் தேநீர் உணவு போன்­ற­வை­களை வாங்­கு­வ­தற்கு நடந்து செல்ல முடி­யா­த­வர்­க­ளாக இருப்­பார்கள். அவர்­க­ளுக்கு உத­வு­வ­தற்கு நாம் தயங்­கக்­கூ­டாது.

பிச்சை எடுப்­ப­வர்கள் தாங்­க­ளா­கவே உணர்ந்து சன நட­மாட்டம் உள்ள இடங்­களில் வீதி ஓர­மாக அமர்ந்து பிச்சை கேட்­பார்­க­ளே­யானால், வருவோர், போவோர் மன­மி­ரங்கித் தம் வச­திக்­கேற்­பவும் விருப்­பத்­திற்­கேற்­பவும் பிச்சை வழங்­கி­விட்டுச் செல்­வார்கள். அவர்கள் தினமும் ஒரு பொது இடத்தில் இருந்தால் மக்கள் அதை அறிந்து வீட்டில் எஞ்சிப்­போன உணவுப் பண்­டங்­களை அவர்­க­ளுக்குக் கொண்டு வந்து கொடுக்க அவர்­களின் பசியும் அடங்கும், அவற்றை வழங்­கு­ப­வர்­க­ளுக்கும் மனத்­தி­ருப்தி ஏற்­படும்.

'அறம் செய்ய விரும்பு', 'ஐய­மிட்டுண்' என்­பன ஔவைப்­பாட்­டியின் அருள்­மொழிகள்.

திரு­வள்­ளுவர் கூட 'வறி­யார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்­றெல்லாம் குறி­யெ­திர்ப்பை நீர துடைத்து', 'அற்றார் அழி பசி தீர்த்தல் அஃதொ­ருவன் பெற்றான் பொருள்வைப் புழி' என்று ஈகையின் சிறப்பைப் பற்­றியும்,

'சிறப்பு ஈனும் செல்­வமும் ஈனும் அறத்­தினூ உங்கு ஆக்னம் எவனோ உயிர்க்கு' , 'அறத்தான் வரு­வதே இன்பம் மற்­றெல்லாம் புறத்த புகழும் இல' என்று அறத்தின் சிறப்பைப் பற்­றியும் தனது குறள் வெண்­பாக்­க­ளினால் எடுத்துக் கூறி­யுள்ளார்.

சிவன்­கூட தாரு­கா­வ­னத்தில் ரிஷ­பத்­தி­னி­க­ளிடம் பிச்சை எடுத்­துள்ளார். சைவர்கள் அவரைக் கண்­கண்ட தெய்­வ­மென வணங்­கு­கி­றார்கள். முன்பு அர­ச­கு­மா­ர­னாக இருந்து துற­வி­யாக மாறிய புத்தர் பெரு­மானும் முன்பு பெரும் செல்­வந்­த­ராக இருந்து துற­வி­யாக மாறிய பட்­டி­னத்­த­டி­களும், அர­ச­னாக இருந்து துற­வி­யாக மாறிய பத்­திர கிரி அடி­களும் பிச்சை எடுத்­துத்தான் தம் பிற்­கா­லத்தைக் கழித்து ஈற்றில் தெய்­வ­நி­லையை அடைந்­தார்கள்.

மக்­களிற் சிலர் எஞ்சிப்­போன உண­வு ­களை குப்பைத் தொட்­டி­களில் வீசு­கி­றார்கள். இது எவ்­வ­ளவு பரி­தா­பத்­திற்­ கு­ரிய செயல் என்று அவர்கள் கரு­து­வ­தில்லை. ஒரு விவ­சா­யி­யா­னவன் மழை, வெயில் என்று பாராது மாதக்­க­ணக்கில் எவ்­வ­ளவோ கஷ்­டப்­பட்டு விவ­சாயம் செய்து எங்­க­ளுக்கு உணவு வழங்­கு­கிறான். அதில் ஒரு பகு­தியை ஒரு நொடிப்­பொ­ழுதில் நாம் வீண­டிக்­கிறோம். உலகில் எத்­த­னையோ உயிர்கள் உண­வின்றித் தவிக்கும் வேளையில் நாம் அதைக் குப்பைத் தொட்­டியில் போட­லாமா? உணவு பழு­த­டை­வ­தற்கு முன் யாருக்­கா­வது வழங்­க­லாமல்லவா?

குப்பை வண்­டி­களில் காற்­பங்கு, வீசப்­பட்ட உண­வா­கத்தான் இருப்­பதை நாம் நகர்ப்­பு­றங்­களில் தினமும் கண்­கூ­டாகக் காண்­கிறோம். அண்­மையில் புதினப் பத்­தி­ரி­கை­யொன்றில் வெளி­வந்த செய்தி பின்­வ­ரு­மாறு:

வெளி­நா­டொன்றில் இரு வயோ­திபப் பெண்கள் ஒரு உண­வுச்­சா­லையில் உண­வ­ருந்­திக் ­கொண்­டி­ருந்­தார்கள்.

அவர்­க­ளுக்கு எதி­ரி­லி­ருந்த மேசையில் அமர்ந்­தி­ருந்த சில வாலி­பர்கள் உணவு வழங்­கு­ப­வ­ரிடம் 'அந்த உணவு கொண்­டுவா', 'இந்த உணவு கொண்­டுவா' என்று பல­வ­கை­யான உணவு வகை­களைக் கட்­ட­ளை­யிட்டுப் பெற்று அவற்றில் சிறி­த­ளவு உண்­டு­விட்டு சாப்­பிட்ட மீதியைத் திருப்பி எடுத்துச் செல்­லு­மாறு பணித்­தார்­களாம். அப்­பொ­ழுது அந்த வயோ­திபப் பெண்­ம­ணிகள் கோபம் கொண்டு 'ஏன் இவ்­வ­ளவு உண­வு­க­ளையும் அநி­யா­ய­மாகக் கொட்­டு­கி­றீர்கள்? ஒன்றில் சாப்­பி­டக்­கூ­டிய அள­வாக எடுத்­தி­ருக்க வேண்டும். அல்­லது எடுத்­த­வற்றைச் சாப்­பிட்­டி­ருக்­க­வேண்டும்' என்று கூறி­யுள்­ளார்கள். அதற்கு அவ்­வா­லி­பர்கள் 'எங்கள் பணத்தைக் கொடுத்­துத்தான் இவை­களை வாங்­கினோம். எங்கள் விருப்­பப்­படி எதுவும் செய்வோம். நாங்கள் செய்­வதை எவரும் தடுக்க முடி­யாது' என்று கூறி­யுள்­ளார்கள்.

உடனே அப்­பெண்­ம­ணி­களில் ஒருவர் தொலை­பே­சியில் யாரு­டனோ கதைத்­தார்­களாம். உடனே உணவுக் கட்­டுப்­பாட்டுக் காரி­யா­ல­யத்தில் இருந்து இரண்டு உத்­தி­யோ­கத்­தர்கள் வந்­தார்­களாம். அவ்­வா­லி­பர்­க­ளிடம் குற்­றப்­பணம் அற­விட்­டுக்­கொண்டு சென்­றார்­களாம். அது ஒரு செல்­வந்த நாடு. அங்கே கூட உணவைக் கண்­ட­படி வீசு­வது குற்றம் என்­றி­ருக்க எங்கள் நாட்டில் உண­வு­களைக் கண்­ட படி வீண­டிக்­க­லாமா?

இந்­நாட்­டிலும் பிர­பல உணவுச் சாலை­களில் கட்­ட­ளை­யிட்டுப் பெற்ற உண­வு­களில் ஒரு­ சி­ல­வற்றைச் சாப்­பிட்­டு­விட்டு மீதி­யாக வைப்­பதை ஒரு­ பா­ணி­யாகக் கருதி உணவை வீண­டிக்­கி­றார்கள். ஆபிரிக்க நாடு­க­ளான சோமா­லியா, எத்­தி­யோப்­பியா போன்ற நாடு­களில் எவ்­வ­ளவு உணவுப் பஞ்சம்! சாப்­பிட உணவு வச­தி­யின்றி நோய் நொடி­யோடு எலும்பும் தோலு­மாக சிறு­வர்கள் முதல் பெரி­யோர்கள் வரை கஷ்­டப்­ப­டு­வதை நாம் தின­சரிப் பத்­தி­ரி­கைகள், சஞ்­சி­கைகள், தொலைக்­காட்­சிகள் மூல­மாக அறி­கி­றோ­மல்­லவா! இவை­களை அறிந்­து­கொண்டும் நாம் உணவுப் பொருட்­களை வீண­டிக்­க­லாமா? அவை­களை எச்­சிப்­ப­டுத்த முன் யாருக்­கா­வது ஏழை எளி­ய­வர்­க­ளுக்கு வழங்­கினால் கோடி­புண்­ணியம் நம்மைச் சாரு­மல்­லவா?

அன்னை திரேசா அம்­மையார் கொண்­டாட்ட வைப­வங்­க­ளுக்குச் சென்று அங்கு மீதி­யாக இருக்கும் உண­வு­களைப் பெற்று வந்து அநாதைப் பிள்­ளை­க­ளுக்குக் கொடுப்­பாராம். அவ்­வம்­மையார் மறைந்தும் முழு உல­க­முமே தலை­வ­ணங்கி நிற்­கி­றது. அவ்­வம்­மையார் போன்று இன்னும் பலர் இவ்­வு­ல­கத்தில் தோன்­ற­வேண்டும்.

தானங்­க­ளி­லெல்லாம் சிறந்­தது அன்­ன­தானம் என்று நாங்கள் நூல்கள் மூலம் கற்­றுள்ளோம். அன்­ன­தானம் என்­பது பொது­வாக நாங்கள் அரிசியால் சமைத்த சோறும், கறி­வ­கை­களும் தான் என்று கரு­துகிறோம். அதை 'உணவை இல­வ­ச­மாக வழங்­குதல்' என்றும் கருத்திற் கொள்ளலாம்.

ஆகவே, நாம் என்ன உண­வா­னாலும் அதைப் பிற உயிர்­க­ளுக்கு வழங்கி அவர்­களின் வயிற்­றுப்­ப­சியை நீக்க முயல்­வோ­மானால் அது எவ்­வ­ளவு புண்­ணி­ய­மான செயல். அவர்­க­ளுக்கு மனப்­பூ­ரிப்பும் எங்­க­ளுக்கு மனத்­தி­ருப்­தியும் ஏற்­படும். இறை­யருள் கிடைத்து எமற்­கேற்­ப­ட­வுள்ள ஆபத்துக்கள் தானாகவே விலகும்.

அம்பலவாணர் இராஜரட்ணம்

சைவ சித்தாந்த பண்டிதர்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல