ஞாயிறு, 14 டிசம்பர், 2014

பள பளக்கும் கூந்தலுக்கு.....

பெண்களின் அழகுகளின் ஒரு பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக, அடர்த்தியாக இருந்தால் அழகு தேவதை தான். அன்றை நாட்களில் உள்ள மங்கைகளுடன் ஒப்பிடும் போது இன்றைய நவநாகரிக நங்கைகளுக்கு கூந்தலை பராமரிக்ககூட போதிய நேரங்கள் கிடைப்பதில்லை. அதன் விளைவாக பிளவுப்பட்ட அடர்த்தியின்றி, கருமையில்லா கூந்தல் கிடைகிறது. தலைமுடி அடர்ந்து வளர சில டிப்ஸ்



செம்பருத்தி பூ

ஐந்து இதழ்கள் கொண்ட செம்பருத்தி பூவை அரைத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும். செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறியபின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்போ போட்டு அலசினால் கூந்தல் நன்றாக வளரும். கடுக்காய், செம்பருத்தி பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சமஅளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.

முடிசெழித்து வளர வாரத்திற்கு ஒரு முறை வெண்ணையை தலைக்கு தடவி ஒரு மணிநேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும். கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் 4, இரண்டையும் நன்றாக அரைத்து அதனுடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும். வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக்போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி மிருதுவாக வளரும்.

ஒரு லீற்றர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலை 10 கிராம் சேர்த்து எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்கவேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத்துணியில் அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில் தேய்த்து வந்தால் முடி கருமையாகும், அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும்.

கருவேப்பிலை

மருதாணி, செம்பருத்தி இலை, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள், இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணெயில் கலந்து ஊறவிட்டு பின்பு தலைக்கு தேய்க்கவும்.

இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும். எப்பொழுதுமே ஒரு முறை செய்தால் அதை தொடர்ந்து செய்ய வேண்டும். மாற்றிக்கொண்டே இருந்தால் முடி உதிர்வதை தடுக்க முடியாது. ஷாம்போக்கள் பயன்படுத்தும் போதும் இதே போல் செய்ய வேண்டும். அடிக்கடி ஷாம்போக்களை மாற்றினால் முடி உதிரும். கருவேப்பிலை, சின்ன வெங்காயம் 4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல