ஞாயிறு, 14 டிசம்பர், 2014

14 ஆண்டு கால உண்ணாவிரதம்: விடுதலை ஆவாரா இரும்புபெண்?

இந்­தி­யாவில் 14 ஆண்­டு­க­ளாக உண்­ணா­வி­ரதம் இருக்கும் ஐரோம் ஷர்­மிளா விரைவில் விடு­தலை ஆவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.



மணிப்­பூரின் ‘இரும்­புப்பெண்’ என்று அழைக்­கப்­படும் ஐரோம் சானு ஷர்­மிளா என்­பவர் மத்­திய அரசின் ஆயு­தப்­படை சிறப்பு அதி­கார சட்­டத்தை இரத்து செய்­ய­வேண்டும் என்ற கோரிக்­கை­யுடன் கடந்த 2000 ஆம் ஆண்டு உண்­ணா­வி­ரத போராட்­டத்தை ஆரம்­பித்தார்.

தனது 28 ஆவது வயதில் இந்த உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை ஆரம்­பித்த திலி­ருந்து துளி நீர்­கூட பரு­காமல் கடந்த 14 ஆண்­டு­க­ளாக பட்­டினி கிடந்து, காந்­திய வழியில் போராடி உலகின் கவ­னத்தை ஈர்த்தார்.

மணிப்பூர் மாநில அரசால் தற்­கொ­லைக்கு முயன்­ற­தாக குற்­றம்­சாட்டி அவரை கைது செய்த பொலிஸார் இம்­பாலில் உள்ள ஜவ­ஹர்லால் நேரு மருத்­து­வ­ம­னையில் ஷர்­மி­ளாவை அனு­ம­தித்து, பல­வந்­த­மாக சிகிச்சை அளித்து வரு­கின்­றனர். இதனால் அவர் 14 ஆண்­டு­க­ளாக உயிர் வாழ்ந்து வரு­கிறார்.

இந்­திய தண்­ட­னைச்­சட்டம் 309 இன் கீழ் உண்­ணா­வி­ரதம் இருப்­பது அல்­லது வேறெந்த வகை­யி­லா­வது தற்­கொ­லைக்கு முயற்­சிப்­பது போன்ற செயல்­களில் ஈடு­ப­டு­வோ­ருக்கு அதி­க­பட்­ச­மாக ஓராண்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­ப­டு­கின்­றது. இதே சட்­டத்­தின் கீழ் 14 தற்­கொலை முயற்சி வழக்­கு­களில் கடந்த 14 ஆண்­டு­க­ளாக இரோம் ஷர்­மிளா தொடர்ந்து சிறையில் அடைக்­கப்­பட்­டுள்ளார்.

இந்­நி­லையில், தற்­கொலை முயற்­சிக்கு தண்­டனை விதிக்கும் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என சமீபத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை யடுத்து, இந்த உத்தரவை மேற்கோள் காட்டி இந்திய தண்டனைச்சட்டம் 309 ஐ விரைவில் இந்திய மத்திய அரசு இரத்து செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல