உடுவில்: சுன்னாகம் பேருந்து நிலையப் பகுதியில் கடந்த சில நாட்களாக குரங்கும் நாயும் நெருக்கமாக நட்புடன் விளையாடுவதைப் பார்ப்பதற்காக இப்பிரதேசத்தை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக சுன்னாகம் நகரப் பகுதியில் குரங்கு ஒன்று நிற்கின்றது. இந்தக் குரங்கு அங்குள்ள ஒரு சில கட்டாக்காலி நாய்களுடன் நல்ல முறையில் பழகி விளையாடுவதும் நாய்கள் அதற்கு இடம் கொடுத்துள்ளமையும் பலரிடையேயும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக நாய்களும் குரங்கும் நட்புடன் விளையாடுவதையும் குரங்கு நாய்களுக்கு பேன் பார்ப்பதையும் கண்டு மகிழவென பொது மக்கள் இந்த இடத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.
இவ்வாறு அங்கு செல்கின்ற மக்கள் கட்டாக் காலி நாய்களுக்கும் குரங்குக்கும் பாண், பணிஸ், வாழைப்பழம், வடை போன்ற சிற்றுண்டி வகைளைக் கொடுத்து மகிழ்வதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக