இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் புதிதாகத் தோன்றியுள்ள சீறுநீரக நோய் பெரும் சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இது தொற்றாநோய்ப்பிரிவுக்குள் இருந்தாலும் நோயின் தீவிரம் அதிகரித்து வருவது பலரையும் கவலைக்கொள்ளச் செய்துள்ளது.
இலங்கையின் வரண்ட வலயத்திற்குள் பரவிக்காணப்படும் இந்த நோயின் முதல் நோயாளர் 1990ஆம் ஆண்டளவிலேயே அடையாளம் காணப்பட்டார். அதிகமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் வடமத்திய மாகாணம், ஊவா மாகாணம், கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மட்டுமன்றி தற்போது வடமாகாணத்திலும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. அத்துடன் தென் மாகாணத்தில் அம்பாந்தோட்டையிலும் சிறுநீரக நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
மாவட்ட ரீதியில் அநுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், மாத்தளை, வவுனியா, பதுளை, அம்பாந்தோட்டை, அம்பாறை, மொனறாகலை, முல்லைத்தீவு, மற்றும் திருகோணமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் சுமார் 60 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சிறுநீரக நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்நோய்க்கு அதிகளவில் விவசாயிகளே பலியாகி வருகின்றனர். சுகாதார அமைச்சு கடந்த வருடம் மேற்கொண்ட ஆய்வின் போது இலங்கையில் 20,828 சிறுநீரக நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்.
இலங்கையில் மாதந்தோறும் சுமார் 1,100 சிறுநீரக நோயாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர் என்றும், வருடாந்தம் சுமார் 300 பேர் வரையில் மரணிக்கின்றனர் என்றும், தரவுகள் தெரிவிக்கின்றன. எனினும், சிகிச்சைக்கு அனுமதிக்கப்படாத நிலையில் வீடுகளிலும் இறப்பதனால் இவ்வெண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது.
சிறுநீரக நோயின் அறிகுறிகள்:
* உடல் வலிமை இழத்தல்
* முதுகு வலி
* சிறுநீர் வெளியேறுவது படிப்படியாகக் குறைதல்
* இரத்த அழுத்தம் சிறிதளவு அதிகரித்தல்
* சிறுநீருடன் நுரை வெளியேறுதல்
நோயின் உச்சகட்டத்தின் அறிகுறிகள்:
* உணவு ஒவ்வாமை
* வாந்தி
* உடல் வீக்கம்
* இளைப்பு
* உடல் வெளுத்தல்
* உடலில் இரத்தத்தின் அளவு குறைதல்
* அதிக இரத்த அழுத்தம்
* தசைகளில் பலவீனம்
* உடல் அரிப்பு
* சுயநினைவு பாதிக்கப்படல்
சிறுநீரக நோய் ஏற்படுமென
அனுமானிக்கும் காரணிகள்:
* பாதிப்புகளை ஏற்படுத்தும் கிருமிநாசினிகள் மற்றும் கிருமி நாசினியை முறையற்ற வகையில் பாவித்தல்.
* நிலத்தடி நீரில் கலந்துள்ள இரசாயன பொருட்கள் மற்றும் ஆசனிக், கெடிமீயம், பாதரசம், ஈயம் மற்றும் செம்பு போன்ற உலோகப்பொருட்கள்.
* கல்சியம், மக்னீசியம் கலந்த நீரை அடிக்கடி பருகுதல்.
* நிலத்தடி நீரில் அதிகளவு புளோரைட் அளவு மற்றும் புளோரோ அலுமீனியம் கலந்திருத்தல்.
* சிறுநீரகத்தில் வைரஸ் தாக்கம்.
* பாம்புக் கடி.
* விஷம் அருந்துதல்.
சிறுநீரக நோயிலிருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள செய்யவேண்டிய வழிமுறைகள்:
* நாள் ஒன்றுக்கு மூன்று லீட்டர் சுத்தமான நீரை அருந்தவேண்டும்.
* கிணற்று நீரை பயன்படுத்தினால் அதன் அருகே மரம் ஒன்றை நடுங்கள்.
* கிருமிநாசினிகளை பயன்படுத்தும் போதும் இரசாயன உரங்களை பயன்படுத்தும் போதும் பாதுகாப்பாக அவற்றை உபயோகப்படுத்த வேண்டும்.
* மது மற்றும் புகைத்தலை தவிருங்கள்
* முடிந்தளவு இரசாயன உரங்களை நீருடன் கலக்காத வகையில் செயற்படுத்துங்கள்.
* உணவை சுவையாக்குவதற்கு செயற்கை இரசாயன சுவையூட்டிகளை பயன்படுத்த வேண்டாம்.
* அலுமினியம் சமையல் பாத்திரங்களுக்கு பதிலாக மட்பாண்டங்களை பயன்படுத்தல் வேண்டும்.
* உணவு, வகைகளை பொதிசெய்யும் போதும் பாவிக்கும் போதும் தரமான பிளாஸ்டிக் பொருட்களையே பாவிக்கவும்
* தினமும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளல்
* வைத்தியர்களின் ஆலோசனையின்றி மருந்துவகைகள் பாவிப்பதைத் தவிர்க்கவும், நோய்களுக்கு முறையான வைத்திய சிகிச்சையை பெற்றுக்கொள்ளவும்.
* ஆரம்ப கட்டத்திலேயே நோயை இனங்காண்க (இரத்தத்தில் கிரியடினின் அளவை அளத்தல் மற்றும் சிறுநீரில் அல்பிக்யுமின் பரிசோதித்துக்கொள்ளல்)
விரைவாக நோயை இனங்கண்டு சிகிச்சை வழங்குவதன் மூலம் நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.
சிறுநீரக நோயானது குறுகிய கால தீவிர சிறுநீரக பாதிப்பு மற்றும் நாட்பட்ட சிறுநீரக பாதிப்பு என்று இரு வகைப்படும். குறுகிய கால சிறுநீரக பாதிப்பானது ஆரம்பக்கட்டத்தில் அடையாளங்காணப்படுமிடத்து, சிகிச்சை வழங்கி குணப்படுத்தலாம். இந்நோய் பாம்பு விஷம் போன்றவை சிறுநீரில் கலத்தல், நீரிழப்பு மற்றும் சிறுநீரக தடங்கல் ஆகியவற்றால் ஏற்படுகின்றது. இந்நோய் நீடிக்கும் பட்சத்தில் நாட்பட்ட சிறுநீரக நோயாக மாறுகிறது. இதில் முதற்கட்டம் அடையாளங்காணப்பட முடிகின்ற அதேவேளை, இரண்டாம் கட்டம் அடையாளங்காண முடியாதது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உயர் இரத்த அழுத்தமும் நீரிழிவுமே சிறுநீரக நோய்க்கான பிரதான காரணிகளாக அமைகின்றன. இலங்கையில் இத்தனை வேகமாக நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணம் இதுவரையில் உறுதியாகக் கூற முடியாதுள்ள அதேவேளை, அசுத்தமான நீர், இரசாயனப் பொருட்கள் நீரில் கலக்கின்றமை, போஷாக்கின்மை என்பனவே காரணமாக அமைகின்றன என்று நம்பப்படுகிறது.
சிறுநீரக பாதிப்பை ஐந்து கட்டங்களாக ஆய்வாளர்கள் பார்க்கின்றனர். இதில் முதல் மூன்று கட்டங்களில் சிறுநீரக நோய்க்கான எவ்விதமான அறிகுறிகளும் காணப்படுவதில்லை. கடைசி இரு கட்டங்கள் அடையாளங் காணக்கூடியனவாகவும், ஆபத்தானவையாகவும் பார்க்கப்படுகின்றன. அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் தரவுகளின் அடிப்படையில் நோக்குகையில் அதிகளவு இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 4 வீதமானவர்கள் குறைந்த வருமானமுடைய 30முதல் -60 வயதுக்குட்பட்ட ஏழை விவசாயிகளாவர். மேலும் 40-முதல் 70வயதிற்குட்பட்ட ஆண்களே பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுநீரகத்தை பாதுகாப்பதற்கு தினமும் 8-10 கோப்பை தூயநீர் அருந்த வேண்டும். இதுவே வெயிலில் நின்று பணியாற்றும் போது குடிநீரை அதிகமாக பருக வேண்டும். கொதித்தநீர், வடிகட்டியநீர் போன்றவற்றை பயன்படுத்துவது நன்மை பயக்கும். இயற்கையான பானங்கள் பருகுவதற்கு ஏற்றவை.
இலங்கையில் உள்நாட்டு விவசாயத்தில் பெரும் பங்காற்றிவரும் வட மாகாணம், குறிப்பாக வட மத்திய மாகாணத்தில் விவசாயம் செய்பவர்களுக்கு ஏற்படும் இந்த நோயால் எதிர்காலத்தில் இலங்கையில் விவசாயத்திற்கு ஓர் முட்டுக்கட்டையாக அமையக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக