ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

பிரசவ தழும்புகள் மறைய...

சரு­மத்தில் வரி­வ­ரி­யான தழும்புகள் பல கார­ணங்­களால் ஏற்­படும். உடல் எடை குறை­யும்­போது, பிர­சவம் ஏற்­ப­டும்­போதும் உண்­டாகும். விரிந்த சருமம் சுருங்­கு­வதால் திசுக்­களில் ஏற்­படும் பாதிப்­புதான் அந்த வரி­வ­ரி­யான தழும்பு.
 இது தோள்­பட்டை, தொடை, மார்பு, வயிறு போன்ற பகு­தி­களில் உண்­டாகும்.


இந்த தழும்­பு­களை ஒரு நாளில் மறைய செய்யும் மேஜிக் எங்கும் இல்லை. விளம்­ப­ரங்­களில் வரு­வது எல்லாம் வணிக வளர்ச்­சிக்கே தவிர, எந்­த­வி­த­மான உப­யோ­கமும் இல்லை. இயற்­கை­யான பொருட்­களை தினமும் தொடர்ந்து தவ­றாமல் உப­யோ­கித்தால், நிச்­சயம் நீங்கள் எதிர்­பார்த்த பலன் கிடைக்கும்.

இவை அற்­பு­த­மான பலனைத் தருபவை. தொடர்ந்து உப­யோ­கித்தால் நல்ல பலனைத் தரும். அப்­ப­டி­யான இயற்கைப் பொருட்­களைப் பார்க்­கலாம்.
சோற்றுக் கற்­றாழை : சோற்றுக் கற்­றாழை தழும்­பு­களை அகற்றுக் குணங்­களைப் பெற்­றவை. தினமும் கற்­றா­ழையின் சதையை எடுத்து வயிற்றுப் பகு­தியில் இருக்­கு­மி­டத்தில் தட­வுங்கள். அரை மணி நேரத்­திற்கு பிறகு குளிர்ந்த நீரால் கழு­வவும். தொடர்ந்து உப­யோ­கிக்­கும்­போது நல்ல பலனைத் தரும்.

கோகோ பட்டர் : கர்ப்­ப­மாக இருக்­கும்­போதே கோகோ பட்­டரை தினமும் உப­யோ­கித்து வந்தால், பிர­ச­வத்துக்கு பின் தழும்­புகள் இல்­லாமல் முழு­வதும் மறைந்­து­விடும்.

அதனை இரவில் உப­யோ­கிப்­பது சிறந்­தது. தொடர்ந்து உப­யோ­கித்தால் தழும்­புகள் மறை­வதை நீங்கள் கண்­கூ­டாகக் காண்­பீர்கள்.

பாதாம் எண்ணெய்: பாதாம் எண்ணெய்,தேங்காய் எண்ணெய் இந்த இரண்­டுமே தழும்­பு­களை மறையச் செய்­பவை. சம அளவு பாதாம் எண்­ணெயில் தேங்காய் என்ணெய் கலந்து அவற்றில் சிறிது மஞ்சள் சேர்த்து வயிற்றில் தடவி 15 நிமிடம் ஊறிய பின் குளித்து வந்தால் தழும்­புகள் முழு­வதும் மறைந்­து­விடும். முயன்று பாருங்கள்.

எலு­மிச்சை சாறு+ வெள்­ளரி சாறு : எலு­மிச்சை சாறு தழும்­பு­களை மறையச் செய்­வதில் சிறந்­தது. எலு­மிச்சை சாறு எடுத்து அதில் சம அளவு வெள்ளரிக்காய் சாறை கலந்து தழும்புகலின் மீது தடவுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவவும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல