எழுக தமிழ் பேரணிக்கான முன்னாயத்தங்கள் யாழ்ப்பாணத்தில் நடந்து கொண்டிருந்த போது, நியூயோர்க்கில் நடந்து கொண்டிருந்த ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில், இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச தலைவர்கள் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்றிருந்த இந்த மாநாட்டில், உரையாற்றிய ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் இலங்கையில் போருக்குப் பிந்திய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதுபோலவே, இலங்கையில் முன்னெடுக்கப்படும் நிலைமாறுகால செயல்முறைகள் உலகிற்கு முன்னுதாரணமாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் பாராட்டுத் தெரிவித்திருந்தார்.
நியூயோர்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் செயற்பாடுகளையிட்டு தம்மைச் சந்தித்த வெளிநாட்டுத் தலைவர்கள் திருப்தியும் பாராட்டும் தெரிவித்ததாகக் கூறியிருந்தார்.
இந்தப் பாராட்டுகளில் அரசாங்கம் நனைந்து கொண்டிருந்த போது தான், வடக்கில் எழுக தமிழ் நிகழ்வு நடந்தேறியிருக்கிறது. இந்தப் பத்தி எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் போது, எழுக தமிழ் நிகழ்வு இடம்பெற்றிருக்கவில்லை.
ஆனால் அச்சில் வெளியாகும் போது, நிகழ்வு நடந்தேறியிருக்கும்.
இந்த நிகழ்வைப் பிரமாண்டமான ஒன்றாக நடத்த வேண்டும் என்பதே தமிழ் மக்கள் பேரவையின் ஆவலாக இருந்தது. கிட்டத்தட்ட பொங்கு தமிழ் நிகழ்வுக்கு இணையாக இதனை நடத்த வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் தரப்பில் முன்னரே கூறப்பட்டிருந்தது. அதனால் தான், இதன் பெயரும் எழுக தமிழ் என்று வைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
தமிழர் தாயகப் பகுதிகளில் பௌத்த மயமாக்கலையும், சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்துமாறு கோரியும், இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைக்க வலியுறுத்தியும், படைக்குறைப்பை வலியுறுத்தியும், காணாமற்போனோர் மற்றும் மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணையை நடத்தக் கோரியும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வலியுறுத்தியுமே இந்த எழுக தமிழ் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு தமிழரசுக் கட்சியின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கு ஏற்பாட்டாளர்கள் தரப்பில் சில நாட்களுக்கு முன்னதாக நடத்தப்பட்ட பேச்சுக்கள் தோல்வியில் முடிந்திருந்தன. இத்தகைய தருணத்தில் இப்படியொரு போராட்டத்தை நடத்துவது, அரசியலமைப்பு திருத்தத்துக்கான முயற்சிகளை பாழடித்துவிடும் என்றும், தென்னிலங்கையில் சிங்களத் தேசியவாதிகளை உசுப்பேற்றி விடும் என்றும் கூறி தமிழரசுக் கட்சி இந்த நிகழ்வுக்கு ஆதரவு வழங்காமல் நழுவிக் கொண்டது.
ஏற்பாட்டாளர்களைப் பொறுத்தவரையில், தமிழரசுக் கட்சியின் ஆதரவைப் பெற வேண்டும் என்ற உண்மையான எண்ணம் அவர்களுக்கு இருந்ததா? என்று தெரியவில்லை. ஏனென்றால், தமிழ் மக்கள் பேரவைக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் பகிரங்கமாகவே பல சமயங்களில் பனிப்போர் நடந்திருக்கிறது.
தமிழர் தரப்பில் ஒன்றுபட்டு இதுபோன்ற போராட்டங்களை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதைக் கருத்தில் கொண்டு தான், ஏற்பாட்டாளர்கள் தமிழரசுக் கட்சியின் ஆதரவைக் கோரியிருந்தனர்.
எதிர்பார்க்கப்பட்டது போலவே, தமிழரசுக் கட்சியும், ஏதோ சாட்டுகளைச் சொல்லி எழுக தமிழ் நிகழ்வில் இருந்து விலகிக் கொண்டது.
தமிழரசுக் கட்சியின் ஆதரவைப் பெற்று விட்டால் மாத்திரமே எழுக தமிழ் நிகழ்வு பெரிய வெற்றியைத் தந்து விடும் என்று கூற முடியாது. ஏனென்றால், தமிழரசுக் கட்சி வாக்கு வங்கியைக் கொண்ட கட்சியாக இருந்தாலும், அது மக்கள் மயப்படுத்தப்பட்ட ஒரு கட்சி அல்ல.
இதுபோன்ற போராட்டங்களுக்கு பெரியளவில் மக்களைத் திரட்டும் சக்தி தமிழரசுக் கட்சிக்கும் கிடையாது, வடக்கிலுள்ள வேறு எந்த தமிழ்க் கட்சிக்கும் கிடையாது என்பது கசப்பான உண்மை. அதனால் தான், எல்லாக் கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.
எழுக தமிழ் நிகழ்வு பெரியளவில் வெற்றி பெற்றால், அது தமிழரசுக் கட்சிக்கு சவாலான விடயமாகவே இருக்கும்.
தமிழ் மக்கள் பேரவை நேரடியாக இல்லாவிட்டாலும், அதிலிருக்கும் கட்சிகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக் கட்சியுடன் முட்டி மோதுகின்ற கட்சிகளும் அந்த வெற்றியை, வேறு விதமாகவே திருப்புவதற்கு முனைவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
அதேவேளை, எழுக தமிழ் நிகழ்வு யாருக்கு அழுத்தங்களைக் கொடுக்கப் போகிறது, எத்தகைய அழுத்தங்களைக் கொடுக்கப் போகிறது என்பதில் குழப்பங்கள் உள்ளன.
அதாவது, தமிழ் மக்கள் இன்னமும் பிரச்சினைகளுடன் தான் வாழ்கிறார்கள் என்ற செய்தியை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துச் செல்லப் போகிறதா?
அல்லது தமிழ் மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்துக்கு எடுத்துச் செல்லப் போகிறதா?
சர்வதேச சமூகத்துக்கும், அரசாங்கத்துக்கும் இந்த பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் மக்கள் தரப்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் விளக்கிக் கூறப்பட்டிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், இதனைச் செய்திருக்கிறது. வடக்கு மாகாண முதலமைச்சரும் இதனைச் செய்திருக்கிறார். தமிழ் மக்கள் பேரவையும் இதனைச் செய்திருக்கிறது.
அரசாங்கமோ, தனது நிகழ்ச்சி நிரல்களை விட்டு வெளியே வந்து, இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தயாராக இல்லை. எனினும், சர்வதேச சமூகம், எல்லாப் பிரச்சினைகளையும் கேட்கிறது. அரசாங்கத்துக்கும் ஆலோசனைகளைக் கூறுகிறது. ஆனால் கடைசியில் சர்வதேச அரங்கிற்குப் போனதும், தனது தொனியை மாற்றிக் கொள்கிறது.
ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன், இந்த மாத முதல் வாரத்தில் யாழ்ப்பாணம் வந்திருந்தார். பெருமளவு மக்களின் அகதி வாழ்வுக்கு காரணமான வலி.வடக்கிற்கும் சென்றிருந்தார். மக்களின் பிரச்சினைகளை நேரில் சென்றும் பார்வையிட்டிருந்தார். ஆனாலும், அவர் அரசாங்கத்தின் நல்லிணக்கச் செயற்பாடுகளை ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பாராட்டியிருக்கிறார்.
அவரோ அல்லது வேறு எந்த நாடுகளின் தலைவர்களோ, தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீருங்கள் என்று ஐ.நா. பொதுச்சபையில் ஒரு வார்த்தையேனும் கூறவில்லை. நல்லிணக்கம் என்ற பெரியதொரு விடயப்பரப்புக்குள் தமிழர்களின் பிரச்சினைகள் அனைத்தும் சுருக்கப்பட்டு விட்டன.
அவ்வாறாயின், சர்வதேச சமூகத்துக்கு இதுவரை தமிழர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துக் கூறிவந்த முறை தவறானதா அல்லது, சர்வதேச சமூகத்தை தமிழர்களின் பக்கம் திருப்புவதற்குத் தவறி விட்டோமா?
எழுக தமிழ் நிகழ்வில் ஏற்பாட்டாளர்களும், முதலமைச்சரும் வெளியிட்ட அறிக்கைகளில், தமிழ் மக்களின் பிரச்சினைகளை உலகிற்கு எடுத்துக் கூறுவோம் என்று கூறப்பட்டிருந்தது.
எழுக தமிழ் போன்ற நிகழ்வுகள் பிரமாண்டமான வெற்றியைப் பெறுகின்ற வாய்ப்புத் தொடர்பான இந்தப் பத்தி எழுதப்படுகின்ற போது நிறையவே சந்தேகங்கள் இருந்தன.
ஏனென்றால், இதுபோன்ற போராட்டங்கள், எழுச்சிகள் மக்கள் மயப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். அவ்வாறு இந்த நிகழ்வு பெரியளவுக்கு மக்கள் மயப்படுத்தப்பட்டதாக, இதனை மக்கள் மயப்படுத்துவதற்கான பிரசாரங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
தமிழர் தரப்பு இன்னமும் தென்னிந்திய சினிமா நாயகர்களின் மாயைகளில் இருந்து விடுபடவில்லை என்பதை, எழுக தமிழ் நிகழ்வும் எடுத்துக் காட்டியிருக்கிறது.
இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு அறைகூவல் விடுத்து தமிழகத்தில் இருந்து பலரும் அறிக்கைகளை வெளியிட்டிருந்தார்கள். இதுபோன்ற அழைப்புகள் அறிக்கைகளை அவர்கள், ஜெனீவா போன்ற மேற்கு நாடுகளில் நடக்கின்ற ஈழத் தமிழர்களின் பேரணிகளுக்குத் தான் வெளியிடுவது வழக்கம்.
வெளிநாடுகளில் வாழுகின்ற தமிழர்களை உசுப்பேற்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட அதே அறிக்கைகள் இப்போது, தாயகத்தில் வாழும் மக்களை உசுப்பேற்றவும் பயன்படுத்தப்படுகின்றன.
இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு, அவர்களின் பிரச்சினையை சொல்வதற்கு தென்னிந்திய நட்சத்திரங்களோ பிரபலங்களோ தேவையில்லை. உங்களின் பிரச்சினைகளுக்காக போராடுங்கள் என்று வெளியில் இருந்து கொண்டு யாரும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
அவ்வாறு சொல்லப்பட்டால் அதற்குப் பெயர் திணிப்பு. போராட்டங்களுக்கு ஆதரவாக நிற்கிறோம் என்று தார்மீக ஆதரவை யாரும் எங்கேயும் இருந்தும் கொடுக்கலாம். ஆனால், போராடக் கிளம்புங்கள் என்று உந்துதல் கொடுக்க முடியாது.
யாழ்ப்பாணத்தில் வாழும் மக்களுக்கு தமிழகத்தில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், எழுக தமிழ் நிகழ்வில் பங்குபற்றுங்கள் என்று அழைப்பு விடுக்கப்பட்டமை இயல்பானதொன்றாகத் தெரியவில்லை.
2000ஆம் ஆண்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் நடந்த பொங்கு தமிழ் நிகழ்வு இவ்வாறான அழைப்புகள் விடப்பட்டுத் தான் நடத்தப்பட்ட ஒன்றல்ல. அது தானாகவே முகிழ்ந்து வெடித்த ஒரு எழுச்சி.
அதுபோன்ற ஒன்றைத் தான் எழுக தமிழ் போன்ற நிகழ்வுகள் ஏற்படுத்த வேண்டும். அதுவே அரசாங்கத்தையும், சர்வதேச சமூகத்தையும் தானாகவே திரும்பிப் பார்க்க வைக்கும்.
கபில்
வீரகேசரி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக