ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

யாழ். கோப்பாய் சம்பவம் – தாக்கப்பட்ட சிறுமியின் தந்தை என்று குறிப்பிடப்படும் நபர், சிறுமியின் தந்தை இல்லை -முழுமையான விபரம் என்ன?!!-

குறித்த தாய், தந்தை, பிள்ளைகள், குடும்பங்கள் தொடர்பாக இணையத்தளங்களில் பலவகையிலும், தகவல்களை வெவ்வேறு விதமாகவும், உண்மைக்கு புறம்பான வகையிலும் செய்திகள் பிரசுரிக்கப்பட்டு வருகின்றது.


இது குறித்து “அதிரடி” இணையத்திற்குக் கிடைக்கப்பெற்ற முழுமையான விபரங்கள் “அதிரடி” வாசகர்கள் ஊடாக அனைத்து மக்களுக்கும் அறியத்தருகின்றோம்.

இதன்படி தாக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்கு தாக்குதல் நடாத்திய பெண் மூன்றாவது மனைவியாவார்.

குறித்த சிறுமியின் தந்தை மேற்படி பெண்ணை மூன்றாவதாக திருமணம் முடிக்கும்போது, அந்தப் பெண்ணுக்கு இரு குழந்தைகள் இருந்துள்ளன. அதில் ஒரு குழந்தை தான் தாக்கப்பட்ட சிறுமியாவார்.

குறித்த நபர் தாக்குதல் நடாத்திய பெண்ணை மூன்றாவது திருமணம் முடித்து கொண்டு வந்ததன் காரணமாக, கோபமடைந்த அந்நபரின் இரண்டாவது மனைவி தனது மூன்று பிள்ளைகளுடன் வீட்டைவிட்டு வெளியேறியிருந்தார்.

இரண்டாவது மனைவி வீட்டிலிருந்து வெளியேறிய சமயம் அந்த நபரின் முதலாவது மனைவியின் (காலமாகிவிட்டார்) இரு பெண் குழந்தைகளில் ஒரு பிள்ளையை தன்னுடன் அழைத்துச் சென்றதோடு, புத்தி சுவாதீனமில்லாத மற்றைய ஒரு பெண் குழந்தையை இவருடனேயே விட்டுச் சென்றுள்ளார்.

இரண்டாவது மனைவி வீட்டைவிட்டுச் சென்றுவிட்ட நிலையில், சிறுமியைத் தாக்கிய குறித்த பெண் வந்து ஒருமாதகாலப் பகுதியிலேயே முதலாவது மனைவியின் பிள்ளை மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இரண்டாவது மனைவியின் பாதுகாப்பில் பத்திரமாக இருந்த அந்தப் பிள்ளை மூன்றாவது மனைவி (தாக்குதல் நடத்திய பெண்) வந்து ஒரு மாதத்தில் மரணமடைந்தது பல குழப்பங்களையும், பல மர்மங்களையும் நம்முள் எழுப்புகின்றது என்பது பிரதேசவாசிகளின் ஆதங்கமாகும்.

மேலும் தாக்கப்பட்ட சிறுமியானவர் குறித்த (தாக்கிய) பெண்ணிற்கும், வேறொரு நபருக்கும் பிறந்த குழந்தையாவார். இந்தப் பெண்ணை இரண்டு குழந்தைகளுடனேயே மூன்றாவது திருமணம் செய்துள்ளார் குழந்தையின் தந்தை என குறிப்பிடப்படும் கோழி என்கின்ற ராசு.

இந்த நபருக்கும் சிறுமிமீது தாக்குதல் நடாத்திய குறித்த பெண்ணிற்கும் தற்போது ஒரு குழந்தை உள்ளது.

பெற்ற பிள்ளையையே இவ்வளவு கொடுமைப்படுத்தும் இந்தப் பெண், முதல் மனைவியின் பெண் பிள்ளையை எவ்வளவு கொடுமைப்படுத்தியிருப்பார் என்பது பிரதேசவாசிகள் கருத்தாகும்.

மேலும், அந்த மரணத்திலும் பல மர்மங்கள் இருக்கலாமெனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் தாக்கப்பட்ட சிறுமி தாக்குதல் நடத்திய பெண்ணின் சொந்த குழந்தையாவர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகள் “அதிரடியில்” தொடரும்…



 அதிரடி
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல