ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

நீர்வேலி சிறுமி மீதான சித்திரவதை: சமூக வலைத்தளத்தளத் தகவலும், நீதிமன்றத்தின் துரித நடவடிக்கையும் சிறுமியைக் காக்க உதவின

நீர்வேலியில் சித்தியினால் கொடுமைப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற 6 வயது சிறுமியை தொடர்ச்சியான சித்திரவதையில் இருந்து காத்து பாதுகாப்பதற்கு, சமூக வலைத்தளத் தகவலும், அதனைத் தொடர்ந்து யாழ் மேல் நீதிமன்றத்தின் துரித நடவடிக்கையும் உதவியிருக்கின்றன.



இந்தச் சிறுமி தாக்கப்படுகின்ற காட்சிகளைக் கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தன.

இந்தக் காணொளி வெளியாகிய சில நிமிடங்களில் அது பற்றிய தகவலும் அந்தக் காணொளியும் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, உடனடியாகச் செயற்பட்ட நீதிபதி இளஞ்செழியன், அந்தச் சிறுமியைக் கண்டுபிடித்து அவரைப் பாதுகாப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு பொலிசார் உட்பட உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்;தார்.

மனிதாபிமானமற்ற ஒரு பெண்ணின் செயற்பாட்டினால், சித்திரவதைக்கு உள்ளாகிய சிறுமியின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றது. அத்துடன் இந்தச் செயற்பாடு தொடர்ந்து இடம்பெறுமேயானால், அது அந்தச் சிறுமி மேலும் மோசமாகப் பாதிக்கப்படலாம் என்பதைநீதிபதி இளஞ்செழியன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தார்.

எனவே, பாதிப்புக்கு உள்ளாகியிருந்த சிறுமி இருக்குமிடம் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு, அவரைப் பாதுகாக்க வேண்டும். அதேவேளை. அவரை அந்த நிலைமைக்கு உள்ளாக்கியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தியிருந்தார்.

பாதிப்புக்கு உள்ளாகியிருந்த சிறுமி இருக்கும் இடம் நீர்வேலி பிரதேசம் என்ற தவலைத் தவிர ஏனைய துல்லியமான தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் நீர்வேலி கிராம சேவகர் பிரதேசம் முழுவதிலும் உடனடியாக, தீவிர தேடுதல் நடத்தி காணொளியில் காணப்பட்ட சிறுமி உட்பட சம்பந்தப்பட்டவர்களின் அடையாளங்களைக் கொண்டு அவர்களுடைய இருப்பிடத்தைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழிகாட்டல் ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து, பொலிசாரும், சிறுவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர் நலன்களுக்குப் பொறுப்பான துறை சார்ந்த அதிகாரிகள் மிகத் துரிதமாகச் செயற்பட்டு, பாதிக்கப்பட்ட சிறுமியைக் கண்டுபிடித்து, அவரைப் பாதுகாத்ததுடன் அவர் மீது கொடுமை புரிந்த பெண்ணும் அவருடைய கணவரும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

நமூக வலைத்தளங்களின் பொறுப்பான செயற்பாடும், நீதிமன்றத்தின் துரிதச் செயற்பாடும் ஒரு சிறுமியைக் கொடுமையிலிருந்து பாதுகாக்கவும், சிறுவர்களுக்கு எதிரான சி;த்திரவதை என்னும் சமூகக் குற்றம் ஒன்றைத் தடுப்பதற்கும் உதவியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல