ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

இன்­றைய பேஷன் உலகில் பெரும்­பாலும் பெண்கள் ஸ்லீவ்லெஸ் ஆடை­களைத் தான் அதி­க­மாக விரும்­பு­கின்­றனர். ஆனால், அக்குள் கரு­மை­யாக இருப்­ப­வர்­களால் இத்­த­கைய ஆடை­களை அணிய முடி­வ­தில்லை. இதனால் பலர் அக்­குள்­களை வெள்­ளை­யாக்க அதிகம் பணம் செல­வ­ழிக்­கின்­றனர்.


இந்த மாதி­ரி­யான சிகிச்­சையை பணம் இருப்­ப­வர்கள் மட்­டுமே மேற்­கொள்ள முடியும். அதுவே பணம் இல்­லா­த­வர்கள் என்ன செய்­வார்கள்? அத்­த­கை­ய­வர்­க­ளுக்­கா­கதான் குறைந்த செலவில், இயற்­கை­யான முறையில் பக்க விளை­வுகள் ஏது­மின்றி கரு­மை­யான அக்­குளை வெள்­ளை­யாக்கும் பத்து இயற்கை முறைகள் இங்கு கொடுக்­கப்­பட்­டுள்­ளன. இவற்றை பயன்­ப­டுத்­துங்கள். கரு­மை­யான அக்­குளில் இருந்து விடு­ப­டுங்கள்.

அதி­ம­து­ரவேர்
அதி­ம­துர வேரை தண்­ணீரில் ஊற­வைத்து அரைத்து அதனை அக்­குளின் கரு­மை­யாக உள்ள இடங்­களில் தடவி உலர வைக்க வேண்டும். இந்த முறையை வாரத்­திற்கு ஒரு முறை செய்து வந்தால் அக்குள் கருமை மறை­வ­தோடு, அக்­குளில் துர்­நாற்றம் வீசா­மலும் இருக்கும்.

எலு­மிச்சை
எலு­மிச்­சையில் ப்ளீச்சிங் தன்மை இருப்­பதால் எலு­மிச்­சையைக் கொண்டு தினமும் அக்­குளில் தேய்த்து ஊற­வைத்து கழு­வினால், அக்­குளில் உள்ள இறந்த செல்கள் நீங்கி அக்குள் வெள்­ளை­யா­வ­தோடு அக்குள் துர்­நாற்­றத்தில் இருந்து விடு­ப­டலாம்.

கற்­றாழை
கற்­றா­ழையின் ஜெல்லை அக்­குளில் தடவி மசாஜ் செய்து சுமார் ஒரு மணி­நேரம் ஊற­வைக்க வேண்டும். இப்­படி இரண்டு நாட்­க­ளுக்கு ஒரு­முறை செய்து வந்தால் நிச்­சயம் அக்குள் கருமை நீங்கும்.

குங்­கு­மப்பூ
குங்­கு­மப்­பூவை பாலில் ஊற­வைத்து அதனை அக்­குளில் தடவி 10 நிமிடம் ஊற­வைத்து ஈர­மான பஞ்சு கொண்டு துடைத்து பின் நீரில் கழு­வ­வேண்டும். இதை தினமும் செய்து வந்தால் அக்­குளில் உள்ள கரும்­புள்­ளிகள் நீங்கி அக்குள் வெள்­ளை­யா­கி­விடும்.

மஞ்சள், தயிர்
இயற்­கை­யா­கவே மஞ்சள் மற்றும் தயிரில் ப்ளீச்சிங் தன்மை நிறைந்­துள்­ளது. எனவே, முகத்தில் உள்ள கரு­மையைப் போக்க மஞ்­சளை தயிரில் கலந்து அக்­குளில் தேய்த்து ஊறை­வத்து கழு­வினால் அக்குள் கரு­மையை நிச்­சயம் போக்­கி­விடும்.

தயிர், எலு­மிச்சை
தயிர் மற்றும் எலு­மிச்சை சாற்றை ஒன்­றாக கலந்து அக்­குளில் தடவி 10 நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ச்­சி­யான நீரில் கழு­வ­வேண்டும். இந்த முறையை தொடர்ந்து வாரத்­திற்கு ஒரு­முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வெள்­ள­ரிக்காய்
வெள்­ள­ரிக்­காயை அரைத்து அரை கப் சாறு எடுத்து அதில் சிறிது உரு­ளைக்­கி­ழங்கை அரைத்து கலந்து அக்­குளில் தடவி சிறி­து­நேரம் ஸ்கரப் செய்து 10–-15 நிமிடம் ஊற­வைத்து வெது­வெ­துப்­பான நீரில் கழு­வ­வேண்டும். இந்த முறையை வாரத்­திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல முன்­னேற்றம் தெரியும்.

சந்­த­னப்­ப­வுடர் பால்
சந்­த­னப்­ப­வு­டரை பால் ஊற்றி குளைத்து அதில் சிறிது எலு­மிச்சை சாறு கலந்து அக்­குளில் தடவி காய வைத்து குளிர்ச்­சி­யான நீரில் கழு­வ­வேண்டும். இதனை வாரத்­திற்கு 2-–3 முறை செய்தால் அக்குள் வெள்­ளை­யாகும்.

உரு­ளைக்­கி­ழங்கு
உரு­ளைக்­கி­ழங்கை அரைத்து அதனை தினமும் காலையில் அக்­குளில் தடவி ஸ்கரப் செய்து பின் குளித்தால் கரு­மை­யான அக்­குளில் இருந்து விடுபடலாம்

கடலைமாவு, மஞ்சள், பால்
கடலைமாவு, பால், மஞ்சள் ஆகியவற்றை கலந்து பேஸ்ட் போல் செய்து குளிக்கும் முன் அக்குளில் தடவி பத்து நிமிடம் ஊறவைத்து பின் குளித்தால் அக்குள் கருமை நீங்கிவிடும்.


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல