ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

சருமத்தை அழகுபடுத்த அரிசி கழுவிய தண்ணீர்

அரிசி கழு­விய தண்­ணீரை வீணாக்­காமல் சரு­மத்தை அழகு படுத்­து­வ­தற்கும் பயன்­ப­டுத்­தலாம்.


*அரிசி கழு­விய நீரால் முடி பாதிக்­கப்­ப­டு­வது தடுக்­கப்­ப­டு­வ­தாக ஆய்­வு­களின் மூலம் தெரிய வந்­துள்­ளது.

*அரிசி கழு­விய தண்­ணீரை கொண்டு சுண்­டைக்காய் கார குழம்பு செய்­யலாம்.

*சமை­யலில் இதனை பயன்­ப­டுத்­து­வதால் சுவை கூடு­த­லாக இருப்­ப­தோடு, சுவை­யா­கவும் இருக்கும்.

*அரிசி கழுவிய தண்ணீரை சுட வைத்து குழந்தைகளின் கால்களை பிடித்து ஊற்றினால் சீக்கிரமாக கால்களுக்கு பலம் கிடைத்து குழந்தைகள் நடப்பார்கள் உடல் முழுவதும் குளிக்க வைப்பதால் உடலுக்கு தேவயான பலமும் கிடைக்கும்

இதை இன்றும் கிராம புறங்­களில் பின்­பற்­று­கி­றார்கள்.

அரி­சியை சுத்­த­மான நீரில் 1/2 மணி நேரம் ஊற­வைத்து, அரி­சியை நன்­றாக 2 முறை கழு­விக்­கொள்ள வேண்டும், பின்னர் அந்த நீரை வடி­கட்­ட­ வேண்டும். பின்னர் அந்த நீரால் முகத்­தையும், கூந்­த­லையும் அலச வேண்டும். இவ்­வாறு செய்தால் அரிசி கழு­விய நீரில் உள்ள சத்­துக்கள் சருமத் துளை­களின் வழியே சரும செல்­க­ளுக்கு கிடைத்து, சருமம், முகத்தில் உள்ள சுருக்­கங்கள் அனைத்தும் நீங்­கு­வ­தோடு, சரு­மமும் பொலிவு பெறும்.

ஆரோக்­கி­ய­மா­கவும் பொலி­வோடும் இருக்கும். தினமும் ஒவ்­வொரு முறை முகத்தைக் கழுவும் போதும், அரிசி கழு­விய நீரினால் கழுவ வேண்டும்.

கூந்தல் அதிக வறட்­சி­யுடன் மென்­மை­யின்றி இருந்தால், அப்­போது அரிசி கழு­விய நீரைக் கொண்டு கூந்­தலை அலசி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் சுத்­த­மான குளிர்ந்த நீரில் கூந்­தலை அலச வேண்டும். இதனால் கூந்­தலின் மென்­மைத்­தன்மை அதி­க­ரிக்கும்.

மேலும் முடியின் இயற்கை நிறமும் பாது­காக்­கப்­படும். இதனை அப்­ப­டியே குடிக்­காமல், அரி­சியை வேக­வைத்து வடித்த தண்­ணீ­ரோடு உப்பு கலந்து குடிக்­கும்­போது சத்­துக்கள் வீணா­கமல் முழு­மை­யாக கிடைக்கும்.

இந்நீரில் கார்போஹைட்ரேட்டுகளும், ஊட்டச்சத்துகளும் வளமாக நிறைந்துள்ளதால் இதனை குடிப்பதன் மூலம் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல