செவ்வாய், 31 ஜனவரி, 2017

வேர்ட் புரோகிராமில் சொல்லுக்கான எதிர் பொருள் தரும் எதிர்ச் சொல் பெற..

வேர்ட் புரோகிராமில், ஆவணங்களைத் தயாரிக்கையில், சொற்களில் பிழைகள் இருந்தால், அதன் கீழே சிகப்பு கோடு காட்டப்படுகிறது. அதில் ரைட் கிளிக் செய்திடுகையில், அச்சொல் சரியான எழுத்துக்களுடன் காட்டப்படுகிறது. இதைப் போல, அந்த சொல்லுக்கான எதிர் பொருள் தரும் எதிர்ச் சொல் பெற என்ன செய்திட வேண்டும்?

ஐபோனில் வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்த முடியுமா?

வாட்ஸ் அப் செயலி, ஐபோனில் பயன்படுத்தும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் போனில் இயங்கும் வாட்ஸ் அப் செயலியில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் இதிலும் தரப்பட்டுள்ளன.

பேஸ்புக் தளத்தில், மெசேஜ் எழுதி அனுப்புகையில் சிறிய அளவில் அசைவு படங்களை (GIF) எப்படி இணைப்பது?

GIF என அழைக்கப்படும் சிறிய அனிமேஷன் படங்கள். முதலில் GIF என்பது என்னவெனத் தெரிந்து கொள்ளலாம். இது Graphics Interchange Format என்பதன் சுருக்கமாகும். இந்த பைல் வடிவம் உருவங்களின் அசைவை சப்போர்ட் செய்கிறது.

எட்ஜ் பிரவுசரில் அடோப் ப்ளாஷ் பிளேயர் இயக்கத்தை நிறுத்துவதற்கான வழி

உங்கள் பிரவுசரில் அதன் இயக்கம் நிறுத்தப்பட்டே அமைக்கப்பட்டிருக்கலாம். பொதுவாக, ப்ளாஷ் பிளேயரை மட்டுமே சார்ந்து அமைக்கப்படும் இணைய தளங்கள் மட்டுமே, அதை இயக்குமாறு பாப் அப் செய்தி தரும். எட்ஜ் பிரவுசரில், ப்ளாஷ் இயக்கப்பட்டிருந்தால், அதனை நிறுத்தி வைக்க வழி தரப்பட்டுள்ளது.

எக்ஸெல் டிப்ஸ்... பைலை விரும்பும்போது பார்க்க.. எக்ஸெல் ஸ்குரோலிங்

எக்ஸெல் பைலை விரும்பும்போது பார்க்க: எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றை மிகக் கவனத்துடன் ரகசியமாகத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் நண்பர் அருகே வருகிறார். அவரிடமிருந்து அதனை மறைக்க விரும்புகிறீர்கள். என்ன செய்திடலாம்? உடனே விண்டோ மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் ஹைட் (Hide) என்று இருப்பதைக் கிளிக் செய்திடுங்கள். அல்லது ஆல்ட் + டபிள்யூ + எச் ஆகிய மூன்று கீகளை அழுத்தினாலும் இந்த விளைவு ஏற்படும்.

வேர்ட டிப்ஸ்.. திரைக் குறிப்பினை மறைக்க.. எண்களுடன் பட்டியல் அமைக்க.. டாகுமெண்ட்டின் அமைப்பினை அறிய

திரைக் குறிப்பினை மறைக்க: வேர்டில் மவுஸ் பயன்படுத்துகையில், சிறிய அளவில் மஞ்சள் வண்ணத்தில் சில இடங்களில் கட்டங்கள் எழுவதைப் பார்த்திருப்பீர்கள். உங்கள் மவுஸ் எதனைக் காட்டுகிறது என்பது, சிறிய அளவில் விளக்கும் செய்தி அந்தக் கட்டத்தில் இருக்கும்.

மொபைல் போனுக்குப் புதியவரா! மொபைல் போன் பயன்களும் பாதுகாப்பும்

இணையப் பயன்பாடு நம் வாழ்க்கையை வளப்படுத்துவது ஒரு புறமிருக்க, அதனை விபத்துகள் சந்திக்கும் களமாகவும் ஹேக்கர்கள் மாற்றி வருகின்றனர். இதுவரை கம்ப்யூட்டர்களில் மட்டுமே இருந்த வைரஸ் ஆபத்து, மிக வேகமாக மொபைல் போன்களிலும் பரவி வருகிறது. மொபைல் போனில் பயன்படுத்தப்படும் இயக்க முறைமைகள், ஹேக்கர்களுக்கு எளிதாக வழிவிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளனவா? என்ற கேள்வியும், மொபைல் போன்களில் இயங்குவதற்கென கிடைக்கும் பாதுகாப்பு செயலிகள் அவ்வளவு வலிமையுள்ளனவாக அமைக்கப்படவில்லையா என்ற சந்தேகமும் தற்போது அனைவரின் மனதிலும் எழத் தொடங்கி உள்ளன.

பிரவுசர்கள் தரும் அறிவிப்புகளைத் தடுக்க

இப்போது நாம் பயன்படுத்தும் பிரவுசர்கள் அனைத்துமே, அவற்றில் இயங்கும் இணைய தளங்கள், அவை குறித்த அறிவிப்புகளை (notifications) நமக்குக் காட்டிட அனுமதி அளிக்கின்றன. அதற்கேற்ற வகையில், பிரவுசர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் ஏதேனும், செய்தி மற்றும் வர்த்தக ரீதியிலான இணைய தளங்களைப் பார்க்கையில், உடனே ஒரு பாப் அப் விண்டோ காட்டப்படும். “இந்த தளத்திலிருந்து எந்த தகவலையும் நீங்கள் காணத் தவறாமல் இருக்க வேண்டுமென்றால், நாங்கள் எங்கள் அறிவிப்புகளை உங்களுக்குத் தருகிறோம். தரட்டுமா?” என்று அதில் கேள்வி இருக்கும்.

திருடனுக்கு திருமணம்: 1000 திருடர்கள் பங்கேற்பு

 Toufiq and Sohra were married on Sunday

தானே: மகாராஷ்டிராவில் நடந்த திருடனின் திருமணத்தில் ஆயிரக்கணக்கான வழிப்பறி திருடர்கள் நாடு முழுவதுமிருந்து வந்து கலந்து கொண்டனர்.

ஜெர்மனி ஏர்போர்ட்டில் அதிகாரிகள் அட்டூழியம்.. சிங்கப்பூர் பெண்ணிடம் தாய்ப்பால் சுரப்பு சோதனை!

பெர்லின்: பாதுகாப்பு என்ற பெயரில் சிங்கப்பூர் பெண்ணின் மார்பகங்களில் பால் சுரக்கிறதா என்று சோதனை நடத்தப்பட்ட சம்பவம் ஜெர்மனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள், 30 ஜனவரி, 2017

சுமந்திரனை யாழ்ப்பாணத்தில் வைத்து படுகொலை செய்ய வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ யின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட சதி வெளிப்பட்டது - பகுதி - 2

சாதாரண பிஸ்கால் சட்டத்தின் கீழ் சிறையிலடைப்பு

வாசுதேவன், தவவயேந்திரன், குலேந்திரன் மற்றும் அஜந்தன் ஆகியோரிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்ற பின்னர் ரி.ஐ.டி அவர்களை ஜனவரி 20ந் திகதி கிளிநொச்சி நீதிமன்றில் மாவட்ட நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜன் முன்னிலையில் ஆஜர் படுத்தியது. வழக்கத்துக்கு மாறான ஒரு நகர்வாக அந்த நால்வரையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டவில்லை. மாறாக அவர்கள் வெடி மருந்துகளையும் மற்றும் போதைப் பொருட்களையும் தம்வசம் வைத்திருந்ததாகவே குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. மேலும் பாராளுமன்ற உறப்பினா திரு.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்ததாக விசேடமான குறிப்புகள் எதையும் அவர்கள் குறிப்பிடவில்லை, மாறாக ஒரு முக்கிய அரசியல் பிரமுகரை தாக்குவதற்கு முயற்சி மேற்கொண்டதாக மட்டும் குறிப்பிடப் பட்டிருந்தது. அந்த நால்வரும் காவல்துறையின் கீழான பிஸ்கால் கைதுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்கள். தற்சமயம் அவர்கள் அனுராதபுரம் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்கள்.

130 மனைவிகள், 203 குழந்தைகள்.. நைஜீரியாவின் சர்ச்சை மத போதகர் காலமானார்

 Mohammed Bello Abubakar, who had 130 wives and fathered 203 children, has died aged 93

நைஜீரியாவில் 130 மனைவிகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் வசித்து வந்த மதபோதகர் முகமது பெல்லோ அபுபக்கர் (Mohammed Bello Abubakar) தனது 93 வயதில் காலமானார். அவருடைய மனைவிகளில் சிலர் தற்போதும் கர்ப்பிணிகளாக உள்ளதாக கூறப்படுகிறது.

பரம்பரையாக தொடரும் மரபணு பிரச்சினைகள் : 9 பேரை கேலிக்கை செய்யும் சமூகம் (காணொளி இணைப்பு)

பரம்பரையாக தொடரும் மரபணு பிரச்சினைகள் காரணமாக 11 பேரை கொண்ட குடும்பத்தில் 9 பேர் குள்ளமாக பிறந்துள்ளார்கள். இதனால் அவர்களை சமூகத்தவர் கேலி செய்யும் சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.

சுமந்திரனை யாழ்ப்பாணத்தில் வைத்து படுகொலை செய்ய வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ யின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட சதி வெளிப்பட்டது - பகுதி - 1

“நல்லவன்”(உண்மையான பெயர் அல்ல) வட பகுதி கிராமம் ஒன்றில் வசிக்கும் ஒரு தமிழ் இளைஞன். அவன் தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரீ.ரீ.ஈ) அமைப்பின் ஒரு முன்னாள் உறுப்பினர் மற்றும் அவன் மே 2009ல் ஆயுதப் படைகளிடம் சரணடைந்தவன். அவனை ஒரு குறிப்பிட்ட காலம் சிறையில் அடைத்து வைத்திருந்து, புனர்வாழ்வு நடவடிக்கையில் ஈடுபடுத்தியதின் பின்னர் விடுதலை செய்தார்கள். யுத்தத்துக்குப் பின்னான வட பகுதி சூழல் வலி நிறைந்த கடினமான ஒன்று ஏனென்றால் நல்லவனால் வருமானம் தரும் ஒரு வேலையை எங்கு தேடியும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. வெளிநாடு செல்வதற்கும் போதுமான பொருளாதார வளமும் கூட அவனிடம் இருக்கவில்லை. நல்லவன் வயதான ஒரு சித்தியுடன் வசித்தபடி சாத்தியமான போதெல்லாம் அடிக்கடி ஒரு தற்காலிக தொழிலாளியாக உடல் உழைப்பை மேற்கொண்டு வந்தான்.

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

வீட்டில் பெரியர்வர்கள் இறந்தால் மகனுக்கு மொட்டை அடிப்பது ஏன் தெரியுமா?

இந்தியாவில் ஒருவர் பிறப்பதில் இருந்து, இறப்பது வரை கடைப்பிடிக்கப்படும் சடங்குகள் பலவன இருக்கின்றன. இதில் பெரும்பாலானவை இன்றளவும் பின்பற்றி வரப்படுகின்றன. ஆனால், அந்த சடங்குகள் எதற்காக கொண்டுவரப்பட்டது, ஏன் செய்கிறோம் என்று தான் பலருக்கும் தெரியாது. அதில், வீட்டில் ஒரு பெரியவர் இறந்தால் அவரது மகனுக்கு மொட்டை அடிப்பார்கள். இந்த சடங்கு ஏன்? எதற்காக பின்பற்றப்பட்டது என இங்கு காணலாம்...

அமெரிக்காவில் மசூதிக்கு தீ வைப்பு

 Twitter image of suspected arson fire at Victoria Islamic Center in US state of Texas on January 28, 2017

முஸ்லீம்களுக்கு தடை விதித்த சில மணிநேரத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் மசூதி ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களை தோண்டியெடுத்து மேக்கப் போட்டு பண்டிகை கொண்டாட்டம் – (வீடியோ)

இறந்த தங்களது உறவினர்கள் உடலை தோண்டி எடுத்து, அதற்கு புதிய ஆடை உடுத்து, அழகு ஒப்பனைகள் செய்து பண்டிகை கொண்டாடும் மக்கள்!

அமெரிக்க விசா அமைப்பு இஸ்லாமியர்களுக்கு எதிரானதா?

 அமெரிக்காவில் கல்வி கற்கும் சிரியா நாட்டை சேர்ந்த அகதிகள்

அமெரிக்கா கொண்டுவந்துள்ள வரைவு நிறைவேற்று அதிகார ஆணையின் விவரங்களை பிபிசி அறிந்துள்ளது. இந்த வரைவு ஆணை நிறைவேறும் பட்சத்தில் அது பெரும்பாலும் இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் குடிமக்கள் அமெரிக்காவிற்கும் நுழையாதபடி செய்வதாக உள்ளது.

வெள்ளி, 27 ஜனவரி, 2017

சுவிசர்லாந்தில் இலங்கைத் தமிழருக்கு 30ஆயிரம் ஈரோ நஷ்டஈடு!!

நாடு கடத்தப்பட்ட இலங்கையருக்கு 30ஆயிரம் ஈரோ நஷ்டஈடு வழங்குமாறு சுவிஸ் அரசுக்கு ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவு!

வியாழன், 26 ஜனவரி, 2017

அமெரிக்காவில் கொடூரமான வாட்டர்போர்டிங் (Waterboarding) சித்ரவதை விசாரணை மீண்டும் அறிமுகமாகிறது

தீவிரவாதிகளை விசாரிக்க ஏற்கனவே அமெரிக்காவில் அமுலில் இருந்த சித்ரவதை முறையை கொண்டு வர தீவிரமாக பரிசீலிக்கிறேன் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“இனிமேல் இப்படி செய்யமாட்டேன்” : அரிசி திருடிய எலியை கட்டி வைத்து பதாகை மாட்டிய நபர்கள்

 Shame on you: A convenient store owner in China has allegedly punished a rat for stealing rice
 
சீனா­விலுள்ள கடை­யொன்றில் அரிசி திரு­டி­ய­தாக கூறப்­படும் எலி­யொன்­றுக்குத் தண்­ட­னை­யாக, லொறி­யொன்றின் பின்னால் அதை கட்டித் தொங்­க­விட்­ட­துடன், இனிமேல் இப்­படி செய்­ய­மாட்டேன் என்ற அர்த்தம் தொனிக்கும் பதா­கை­யொன்­றையும் எலி மீது சிலர் மாட்­டி­யுள்­ளனர்.

செவ்வாய், 24 ஜனவரி, 2017

கனடா தமிழ் இளைஞர் பிரித்தானியாவில் கொலை!

பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்ட32 வயதான சுரேன் சிவானந்தன்

பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 32 வயதான சுரேன் சிவானந்தன் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது உறவினர்களால் அடையாளம் காட்டியுள்ளனர்

18.9 அங்­குல நீள­மான ஆணு­றுப்பு கொண்ட நபர் (படங்கள்,வீடியோ)

மெக்­ஸி­கோவைச் சேர்ந்த நபர் ஒருவர் உல­கி­லேயே மிகப் பெரிய ஆணு­றுப்பு கொண்ட நப­ராக விளங்­கு­கிறார். இவரின் ஆணு­றுப்பு 18.9 அங்­கு­லங்கள் (48 சென்­ரி­ மீற்றர்) நீள­மா­னது என மருத்­து­வர்கள் உறு­திப்ப­டுத்­தி­யுள்­ளனர்.

திங்கள், 23 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு அனுமதி… இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் 50 கேள்விகள்…

முதலில் இத்தனை இலட்சம் பேர் ஒன்றாக கூடியதற்காக, இளைஞர்கள், இளைஞிகளுக்கும் மாணவ, மாணவிகளுக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துகள். அரசும் காவல்துறையும் அனுமதித்தது என்றாலும் மிக பொறுமையாக நிதானமாக நேர்மையாக கொட்டும்பனியிலும் தங்கள் கொள்கைக்காக காத்திருந்த நீங்கள் தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களாக, ஒளிமயமான எதிர்காலத்தின் ஒளியாக மாறி இருக்கிறீர்கள்… குழந்தைகளும் பெண்களும் குடும்பங்களும் என ஒட்டுமொத்த தமிழ்நாடே உங்களை ஆச்சர்யத்தோடு வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இனிமேல் இந்த மாணவர்கள், இந்த மாணவிகள், இந்த இளைய சமுதாயம் நம் தமிழகத்தை வளமான திசைக்கு மாற்றுவார்கள் என்று நம்புகிறார்கள். நானும் அந்த கூட்டத்தில் உள்ள ஒரு தமிழன் தான்.

பேக்ரவுண்டில் யூட்யூப் ஆடியோ ஒலிக்க செய்வது எப்படி.? (ஆண்ட்ராய்டு)

உங்களின் ஆண்ட்ராய்டு கருவியின் பேக்ரவுண்டில் யூட்யூப் ஆடியோ ஒலிக்க செய்ய கீழ்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றவும்.

"தொல்லைப்பிடித்த" லைவ் வீடியோ நோட்டிபிகேஷனை நிறுத்துவது எப்படி.?

உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட், மிக எளிதாக ஒரு பெரிய அளவிலான நோட்டிபிகேஷன்கள் மிகுந்த ஒரு இடமாக மாறிக் கொண்டேபோகிறதா.? குறிப்பாக உங்கள் நண்பரின் லைவ் வீடியோ, இன்றைய பிறந்தநாள் யார் யாருக்கு போன்ற எரிச்சலூட்டும் நோட்டிபிகேஷன்களை நீங்கள் பெற விரும்பாவிட்டால் இங்கே வழங்கும் எளிய வழிமுறைகளை பின்பற்ற, லைவ் வீடியோ, பெர்த்டே மற்றும் இதர எரிச்சலூட்டும் நோட்டிபிகேஷன்ஸ்களை உங்களால் முடக்க முடியும்.

டெஸ்க்டாப் கம்ப்யூட்டரிலும் ஃபேஸ்புக் லைவ் வீடியோ வசதி

உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், தனது பயனாளிகளுக்கு அவ்வப்போது புதுப்புது வசதிகளை அறிமுகம் செய்து இன்ப அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. அந்த வகையில் லேட்டஸ்ட்டாக ஃபேஸ்புக் அறிவித்த வசதி ஃபேஸ்புக் லைவ் வீடியோ. இதன் மூலம் எந்த ஒரு நிகழ்ச்சியையும் வீடியோ லைவ் செய்து மகிழலாம்.

பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாமலேயே மெஸெஞ்சரை பயன்படுத்துவது எப்படி.?

ஒருவேளை நீங்கள் பேஸ்புக்கை கைவிடும் எண்ணம் கொண்டவர்களில் ஒருவராக இருக்கலாம் அல்லது "இந்த பேஸ்புக் தொல்லையை தாங்க முடியலடா சாமி" என்று வெறுத்துப்போன கூட்டத்தில் ஒருவராக இருக்கலாம், ஆகமொத்தம் முகநூல் பக்கமே தலைவைக்கப் பிடிக்காத நபராக இருக்கலாம், அதே சமயம் நீங்கள் பேஸ்புக்கின் மெஸெஞ்சரை மட்டும் பாரபட்சம் இலலாமல் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.

பெண்களின் பாதுகாப்புக்கு உதவும் பிரதான ஆப்ஸ்.!

பெண்களுக்கு மதிப்பளிக்கும் மிகச்சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றாலும் பெண்களுக்கு முழு அளவில் இந்தியாவில் பாதுகாப்பு இருக்கின்றதா? என்று கேட்டால் வருத்தத்துடன் இல்லை என்றுதான் கூற வேண்டிய நிலை உள்ளது.

ஞாயிறு, 22 ஜனவரி, 2017

இரு ஆளுமைகள்… சில நினைவலைகள்!

தமிழ்நாட்டின் வடக்குக் கடலோரப் பகுதியில் சமீபத்தில் வீசிய ‘வார்தா’ புயல், ‘எனக்குப் பிறகு பெரிய பிரளயம்தான்’ என்ற பழமொழியை நினைவுபடுத்தியது. ஜெயலலிதாவின் மறைவுடன் அதை ஒப்பிடத் தோன்றியது. தமிழக அரசியல் இப்போது புதிய சூழலுக்கு மாறிக்கொண்டிருக்கிறது.

சனி, 21 ஜனவரி, 2017

விவாகரத்து வழக்கில் ஆஜராகாத நடிகை ரம்பாவுக்கு நீதிமன்றம் கண்டனம்

சென்னை: விவாகரத்து வழக்கில் ஆஜராகாத நடிகை ரம்பாவுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரபல நடிகை ரம்பாவுக்கும் இலங்கை தமிழரான இந்திரகுமார் என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் கனடாவில் வாழ்ந்தனர்.

புதன், 18 ஜனவரி, 2017

மசாலா தோசை இப்போ பர்கராச்சு, அடுத்து என்ன ? - இந்தியர்களின் கற்பனைகள்


இது தோசையா? பர்கரா?
 படத்தின் காப்புரிமை KIRTISH BHATT
பாரம்பரியமிக்க சில இந்திய உணவு வகைகளை பர்கர் வடிவில் தாங்கள் தயாரித்து பரிமாறும் திட்டத்தை துரித உணவுக்குப் பேர் போன மெக்டொனால்ட் நிறுவனம் அறிவித்தது பரபரப்பை உருவாக்கியுள்ளது.

செவ்வாய், 17 ஜனவரி, 2017

எக்ஸெலில் Insert Options buttonஐ நீக்க...

எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், நெட்டாகவும், படுக்கையாகவும் வரிசைகளை இணைக்கையில், இணைத்த இடத்தில், ஒரு பிரஷ் ஐகான் காட்டப்படுகிறது. அதில் டூல் பார் ஒன்றும் மெனு ஒன்றும் காட்டப்படுகிறது. இதனை நீக்க...

வேகமாக டைப் செய்திட பயிற்சி தரும் இணைய தளங்கள்

இணையத்தில் இதற்கெனப் பயிற்சி அளிக்கும் புரோகிராம்களும் உள்ளன. தளங்களும் உள்ளன.

பேஸ்புக்கில் தானாக இயங்கும் விடியோ பைல்களை நிறுத்த

பேஸ்புக் இரண்டு வகையாக விடியோ பைலை இயக்குகிறது.

உங்களுக்கு விருப்பமில்லை எனில், தானாக அது இயங்குவதை நிறுத்திவிடலாம். பேஸ்புக் திரையில், மேலாக வலது பக்கமாகக் காட்டப்படும் சிறிய அம்புக் குறி அல்லது முக்கோணத்தினை கிளிக் செய்திடவும்.

விண்டோஸ் 10ல், வலது ஓரத்தில் அமைந்துள்ள நோட்டிபிகேஷனுக்கான ஐகானை அகற்ற

விண்டோஸ் 10 சிஸ்டம் Action Centre என்ற ஒன்றை அறிமுகம் செய்தது. இங்கு நமக்கான நோட்டிபிகேஷன் மற்றும் செட்டிங்ஸ் அமைப்பு மாறி மாறிக் காட்டப்படுகிறது.

எக்ஸெல் டிப்ஸ்.. டாஸ்க் பாரில் விடைகள்.. செல்களைச் சுற்றி கோடுகள்

எக்ஸெல் டாஸ்க் பாரில் விடைகள்
எக்ஸெல் ஒர்க் ஷீட்டைப் பொறுத்த வரை, நாம் அதில் உள்ள நெட்டு வரிசை அல்லது படுக்கை வரிசையில் உள்ள செல்களைத் தேர்ந்தெடுத்தால், அதன் மதிப்புகள் நமக்கு டாஸ்க் பாரில் காட்டப்படும்.

திங்கள், 16 ஜனவரி, 2017

வேர்ட் டிப்ஸ்... ரீபிளேஸ் விண்டோவில் டெக்ஸ்ட்... குறிப்புகளைப் பார்க்க...தேவையற்ற கோடுகளைத் தவிர்க்க

 ரீபிளேஸ் விண்டோவில் டெக்ஸ்ட்
வேர்ட் டாகுமெண்ட்டில் சொற்களைத் தேடிக் கண்டறிந்து, அவற்றின் இடத்தில் நாம் விரும்பும் சொற்களை அமைத்திட Find and Replace என்னும் டூலைப் பயன்படுத்துகிறோம்.

குரோம் பிரவுசர்

கூகுள் குரோம் பிரவுசர் பயன்படுத்தி யு ட்யூப் மற்றும் பேஸ்புக்கில் உள்ள விடியோ காட்சிகளை காணும்போது, படங்களில் இளஞ்சிகப்பு மற்றும் பச்சை நிறங்கள் கலந்த வண்ணக் கோலங்கள் தெரிந்தால் அதனை சரி செய்ய....

கூகுள் தேக்ககத்தினைச் சீர் செய்திட

கூகுள் தன் வாடிக்கையாளர் ஒவ்வொருவருக்கும் 15 ஜி.பி. டிஸ்க் இடம் இலவசமாகத் தருகிறது. கூகுள் ட்ரைவ், ஜிமெயில் மற்றும் கூகுள் போட்டோஸ் என இந்த தேக்கக இடம் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள், தங்களின் ஜிமெயில் அக்கவுண்ட்டில் தான் அதிக இடத்தைப் பிடித்திருப்பார்கள். இந்த இடம் 99.5% இடமாக வந்தவுடன், கூகுள் ஓர் எச்சரிக்கையினை வழங்கும். “ சிறிதளவே இடமே உள்ளது. கட்டணம் செலுத்தி கூடுதலாக இடம் வாங்கிக் கொள்ளலாமே” என்று கேட்கும். இந்த நிலையை முன்கூட்டியே தவிர்க்க நாம் மேற்கொள்ளக் கூடிய சில வழிகளை இங்கு காணலாம்.

ஆங்கிலத்தில் எழுத உதவிக் குறிப்புகள்

நாம் அனைவருமே, ஆங்கிலத்தில் பேச, எழுத விரும்புகிறோம். அயல் மொழியாக இல்லாமல், ஆங்கிலம் இரண்டாவது மொழியாக நம்முடன் கலந்து விட்டது. இருப்பினும் ஆங்கில மொழியைப் பிழை இன்றி எழுத நமக்குக் கல்லூரி படிப்பு முழுமையாகக் கை கொடுப்பதில்லை. மொழியைத் தொடர்ந்து பயன்படுத்தினால் மட்டுமே, தெளிவாக அதனைக் கையாள முடியும்.

வேர்ட் டாகுமெண்ட்டில் வாட்டர்மார்க்

“வாட்டர்மார்க்” என்னும் பின் குறியிடல் என்பது நாம் அமைக்கும் டாகுமெண்ட்களின் பக்கங்களில், டெக்ஸ்ட்டுக்குப் பின்புறமாக, டெக்ஸ்ட்டின் தோற்றத்தைப் பாதிக்காத வகையில் அமைக்கப்படும் டெக்ஸ்ட் அல்லது படம் ஆகும். பெரும்பாலும், ரகசிய ஆவணங்களுக்கு “confidential”, முழுமை அடையாத ஆவணத்திற்கு “Draft” எனவும் அமைப்பதுண்டு,

பேஸ்புக் தளத்தில் பழைய பதிவுகளை நீக்க

பேஸ்புக் இணைய தளம் பயன்பாட்டிற்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. 2004 ஆம் ஆண்டில் இது இணைய தளத்தில் கிடைக்கத் தொடங்கினாலும், அப்போது அது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு முதல், 13 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் பயன்படுத்தும் வகையில் வழங்கப்பட்டது. இன்றைக்குப் பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. பலர், அதன் தொடக்க காலம் முதலே பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள், தற்போது பத்தாண்டுகளுக்கு முன் தாங்கள் பதிந்தது குறித்து வருத்தப்படலாம், வெட்கப்படலாம். அவற்றை நீக்க வேண்டும் என நினைக்கலாம்.

விண்டோஸ் 10 சுருக்கு விசைகள்

கம்ப்யூட்டர் பயன்பாட்டில், மவுஸ் சாதனம் நாம் எளிதாக சில செயல்பாடுகளை மேற்கொள்ள உதவியாய் உள்ளது. டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுக்க, காப்பி செய்திட, பேஸ்ட் செய்திட என இதன் உதவிகளைப் பட்டியலிடலாம். இருப்பினும், பலர் இதே செயல்பாடுகளை, கீ போர்டில் உள்ள கீகளை இயக்குவதன் மூலம் மேற்கொள்ளவே விரும்புவார்கள். இவற்றை 'ஷார்ட் கட் கீகள்' என அழைக்கிறோம். கீ போர்டின் மூலம் செயல்பாடுகளை மேற்கொள்வது, விரைவாகப் பணி முடிக்கப் பலருக்கு உதவுகிறது. மவுஸ் பயன்படுத்த விரும்பினால், நம் கரங்களை கீ போர்டில் இருந்து எடுத்து பயன்படுத்த வேண்டியுள்ளது. எனவே, பலர், கீ போர்ட் விசைகளைப் பயன்படுத்தியே செயல்களை மேற்கொள்கின்றனர். இவர்களுக்கு ஷார்ட் கட் கீகள் பெரிதும் உதவுகின்றன.

வாட்ஸ் அப் புரோகிராமினை நம் பெர்சனல் கம்ப்யூட்டரிலும் இயக்கும் வழி

பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ் அப் செயலி, தற்போது பல நாடுகளில் அனைத்து எஸ்.எம்.எஸ். செயலிகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது. மொபைல் போனில் மட்டுமின்றி, பெர்சனல் கம்ப்யூட்டரிலும் இந்த செயலி இயங்குகிறது.

மீண்டும் புலிகள்!! முட்டாளா நீங்கள்?

நான் தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிரி கிடையாது. அதேசமயம் நண்பன் என்றும் கூற மாட்டேன். ஒரு மகத்தான போராட்டம் சீரழிந்து ஓர் இனமே அகதியானதற்கு நானும் ஒரு மௌன சாட்சி. இப்போது யோசித்துப் பார்க்கும்போது என்னுடைய தவறும் தெரிகிறது. சாகசத்தை நம்புபவர்களால் நீண்ட தூரம் பயணிக்க முடியாது. நாம் அதீதமாக எதிர்பார்த்தோம்; அதீதமாக நம்பினோம்; அதீதமாக ஏமாந்தோம். முட்டாள்தனமாக.

பெண்களே, அந்தரங்க பகுதியில் ஷேவிங் செய்யும் முன் இதை தெரிந்துக் கொள்ளுங்கள்!

பெண்கள் மத்தியில் வேக்ஸிங் செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அந்தரங்க பகுதிகள் என்று மட்டுமில்லாமல், உடலில் உள்ள கூந்தல் வளர்ச்சியை அப்புறப்படுத்துவது தான் அழகு என்ற எண்ணம் ஆழ பதிந்துவிட்டது. ஆனால், இது எவ்வளவு நல்லது என நீங்கள் எண்ணுகின்றனர்.

செருப்பில், காந்தியடிகள் படம்... அடங்காத அமேசான்!

அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் செருப்பில் காந்தியடிகளின் படத்தை போட்டு ஒட்டு மொத்த இந்தியர்களையும் இழிவு படுத்தியுள்ளது. காந்தி படம் அச்சிடப்பட்ட அந்த செருப்பு விலை ரூ.1190 என்றும் வெப்சைட் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

போர் வடு (புலம்பெயர்ந்த தமிழருக்கு)

2009 க்கு பின்னர் பல மாவீரர் நாள்கள், பெரிய நினைவஞ்சலிகள் இறந்தவர்களுக்காக வைக்கப்பட்ட போதிலும் இதுவரை குறித்த முன்னாள்போராளிகளுக்கு குறிப்பாக பாதி உடற் திறனை இழந்தவர்களுக்கு காத்திரமான உதவிகள் வழங்கப்படவில்லை,

வடமாகாண சபையால் முள்ளந்தண்டு பாதிக்கப்படோருக்கு என்று தொடங்கப்பட்ட இல்லம் என்ன ஆனதென்றே தெரியவில்லை.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த காதலனை சூட்கேஸுக்குள் வைத்து கடத்த முயன்ற காதலி

சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருந்த தனது காத­லனை சூட் கேஸ் ஒன்­றுக்குள் வைத்து கடத்திச் செல்ல யுவதி ஒருவர் மேற்­கொண்ட முயற்­சியை வெனி­சூலா அதி­கா­ரிகள் முறி­ய­டித்­துள்­ளனர்.

ஞாயிறு, 15 ஜனவரி, 2017

ஸ்மார்ட்போன்களில் டூயல் கமரா (dual camera) லென்ஸ்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே ஒரு கமராவுடன் ஸ்மார்ட்போன் வந்தது. அதன் பின்னர் செல்பி கமராவுடன் வந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட அனைத்து முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் டூயல் கமரா ஸ்மார்ட்போன்களை தயாரிக்க தொடங்கிவிட்டன.

நடிகை திரிஷா மரணம் அடைந்து விட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் போஸ்டர் !நடந்தது இது தான்…

நடிகை த்ரிஷா பீட்டா அமைப்பின் தூதுவராக இருப்பதால் அவர் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர் என கருதி நடிகை த்ரிஷாவுக்கு எதிராக, ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் நடிகை த்ரிஷா எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு அகால மரணமடைந்தார் என போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

சனி, 14 ஜனவரி, 2017

இந்தியர்களின் அமெரிக்க கனவை எச்1பி விசா கெடுத்துவிடும் என்பதற்கான காரணம் தெரியுமா..?

அமெரிக்கக் குடியரசு தலைவர் டொனால்டு டிரம்ப் தனது முதல் நாள் பணியின் பட்டியில் குடியேற்ற சீர்திருத்தம் இடம்பெற்று இருக்கிறது. டிரம் பதவி ஏற்க இருக்கும் நிலையில் இரண்டு அமெர்க்க சட்ட வல்லுநர்களை எச்1பி மற்றும் எல்-1பி விசா குறித்த மசோதாக்களின் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே இந்தப் புதிய சட்டத் திருத்தம் எப்படி இந்திய அமெரிக்கப் பணியாளர்களைப் பாதிக்கும் என்று இங்குப் பார்ப்போம்.

வெள்ளி, 13 ஜனவரி, 2017

Narrow Band என்பது எதனைக் குறிக்கிறது?

பிராட் பேண்ட் போலவே, Narrow Band என்பதுவும் தகவல் தொடர்புக்கான அலைக்கற்றை வரிசையைக் குறிக்கப் பயன்படுகிறது. அலைக்கற்றை வரிசை கிலோ ஹெர்ட்ஸ், மெகா ஹெர்ட்ஸ் அல்லது கிகா ஹெர்ட்ஸ் எனக் குறிப்பிடப்படுகிறது.

பேஸ்புக்கில் பதிவுகளை நல்ல வண்ணப் பின்னணியில் அமைக்க

பேஸ்புக் மொபைல் போனில் பயன்படுத்தப்படும் பேஸ்புக் மெசஞ்சர் செயலியில் மட்டுமே இந்த வண்ண வசதியினை சோதனை முயற்சியில் மேற்கொண்டுள்ளது.

மனிதனை போல் இயங்கும் ரோபோ : சீனாவில் செயல்பாட்டுக்கு வந்தது

மனிதர்களை போன்ற தோற்றமும், முகபாவனைகளும் காட்டு ரோபோவை சீனா தயாரித்து, செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.

வியாழன், 12 ஜனவரி, 2017

இந்திய பெண்களிடம் அதிகரித்து வருகிறதாம் டிசைனுடு பெண்ணுறுப்பு (Designer Vagina) மோகம்!

 Labiaplasty-vaginoplasty
 image source: google
பிளாஸ்டிக் சர்ஜரி செய்து எப்படி முகத்தை, முகத்தின் சில பாகத்தை நமக்கு பிடித்தது போல மாற்று கொள்கிறோமோ. அப்படி தான் லாபியாபிளாஸ்டி (Labiaplasty). இந்த வகை சிகிச்சை மூலமாக பெண்ணுறுப்பை அவரவர் விரும்பும் வகையில், வடிவில் மாற்றி அமைத்து கொள்கின்றனர்.

2 காருக்கு இடையே நசுங்கிய பெண் உயிர் பிழைத்த அதிசயம்- (அதிர்ச்சி வீடியோ)

இந்திய தலை நகர் டெல்லியில், சாலையைக் கடக்க நின்றுகொண்டு இருந்த பெண் மீது வேகமாக வந்த கார் மோதியது.

புதன், 11 ஜனவரி, 2017

பெண்கள் எப்படி கருத்தரிக்கிறார்கள்? முழு செயற்முறை விளக்கம்!

இங்கு பெண்கள் கருத்தரிக்கும் செயற்முறை பற்றி விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

கருத்தரிப்பது என்பது சுலபமான காரியம் அல்ல. விந்தும், கருவும் இணையும் அந்த நிகழ்வு எல்லாருக்கும் எளிதாக நடந்துவிடுவதில்லை. கருவின் ஆரோக்கியம், விந்தின் ஆரோக்கியம், விந்தின் நீந்தும் திறன் என பலவன சரியாக நடக்க வேண்டும். அதிலும் முக்கியமான கரு முட்டை நல்ல நிலையில் இருக்கும் நாளில் கச்சிதமாக நடக்க வேண்டும். பெண்ணின் உடலில் கரு எப்படி உருவாகிறது, இயல்பாக எப்படி கருத்தரிக்கும் செயல்பாடு நடக்கிறது என இங்கு காணலாம்...

கடாபியின் மறுபக்கம்

லிபியாவின் கடாபியை உலகம் ஒரு சர்வாதிகாரியாகப் பார்க்கிறது. அது உண்மையும் கூட. ஆனால் அவரது மறு பக்கம் சுவாரஸ்யமானது. அதனையும் பார்ப்போம் வாருங்கள்.

கடாபி லிபியாவை ஆட்சி செய்த காலத்தில்,

ஹாலிவுட்' பெயரை "ஹாலிவீடாக' மாற்றியவர் கைது

அமெரிக்காவின் சினிமாத் துறை தலைநகரமாக விளங்கும் லாஸ் ஏஞ்சலீஸின் மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற "ஹாலிவுட்' என்ற ஆங்கில எழுத்துக்களை, "ஹாலிவீட்' என்று மாற்றியமைத்தவரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:லாஸ் ஏஞ்சலீஸ் நகரில், ஹாலிவுட் குன்றின் மீது மனை விற்பனை நிறுவனமொன்று தங்களது "ஹாலிவுட்லேண்ட்' என்று பெயரிடப்பட்ட மனைகளை விற்பனை செய்வதற்காக அந்தப் பெயரை சுமார் 30 அடி நீளம், 50 அடி உயர எழுத்துகளாக கடந்த 1923-ஆம் ஆண்டு அமைத்தது.

கறுப்பு இனத்தவருக்கு டிப்ஸூக்கு கொடுப்பதில்லை” : பில்லில் எழுதிக் கொடுத்த வெள்ளையர்கள்!!

டிப்ஸக்கு பதிலாக இனவெறிக் குறிப்பை பெற்ற கறுப்பினப் பணிப்பெண்ணுக்கு ஆதரவாக அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்திலுள்ள ஓர் உணவகத்தின் வாடிக்கையாளர்கள் திரண்டுவருகிறார்கள்.

சிறந்த சேவை, ஆனால் கறுப்பின மக்களுக்கு டிப்ஸ் கொடுப்பதில்லை” என்று பில்லில் ஒரு ஜோடி எழுதிவிட்டு சென்றுள்ளதாக கெல்லி கார்ட்டர் என்கிற கறுப்பின பணிப்பெண் கூறியுள்ளார்.

அத்தை மகள், மாமன் மகளை திருமணம் செய்யப் போறீங்களா? இந்த நோய்கள் தாக்கும்

தற்போதைய காலத்தில், சொந்தத்திலேயே திருமணம் செய்துக் கொள்ளும் பழக்கம் அதிகமாக நடைபெற்று வருகின்றது.

செவ்வாய், 10 ஜனவரி, 2017

பச்சிளம் பாலகனை கொடூர கொலையாளியாக்கிய ஐ.எஸ் அமைப்பு (காணொளி)

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினால் சிறைவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை, பாலர் பாடசாலை செல்லும் சிறுவன் ஒருவன் சுட்டுக் கொலை செய்யும் அதிர்ச்சி காணொளி ஒன்றை ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.

திங்கள், 9 ஜனவரி, 2017

பேக்ரவுண்டில் யூட்யூப் ஆடியோ ஒலிக்க செய்வது எப்படி.? (ஆண்ட்ராய்டு)

உங்களின் ஆண்ட்ராய்டு கருவியின் பேக்ரவுண்டில் யூட்யூப் ஆடியோ ஒலிக்க செய்ய கீழ்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றவும்.

இராணுவத்துக்கு எதிராகப் போராடிய நாங்கள் இப்போது அதே இராணுவத்திடமே வேலை கேட்டு நிற்கிறோம்

முன்னாள் போராளிகளின் உள்ளக்குமுறல்கள்

”எங்கே மறைந்திருக்கிறார்கள், வீரத்திருமகன்களான தமிழ் அரசியல்தலைவர்கள்? இப்போதாவது உங்கள் வேசங்களைக் கலைத்து விட்டு வாருங்கள். இனியும்தாமதித்தால், நிச்சயமாக இந்தப் போராளிகள் அடுத்த கட்டமாக படைகளில் இணைந்தே ஆகவேண்டிய நிலை வரும். ஆம், அவர் மறுபடியும் ஆயுதமேந்தும் நிலை உexltte-1ருவாகும். அந்த ஆயுதம் உங்களுக்கு எதிரானதாகவே இருக்கும். அவர்கள் மட்டுமல்ல, வேலை வாய்ப்பில்லாமல் இருக்கின்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களும் இளைய பெண்களும் கூட படைகளில் பணியாற்றச் செல்லக்கூடிய சாத்தியங்களே உண்டு. இதெல்லாம் நிச்சயமாகத் தமிழ்த்தரப்பிற்கும் தமிழ் அரசியலுக்கும் எதிரானதாகவே இருக்கும். தன்னைத்தானே அழியக்கொடுக்கும் அரசியலை தமிழ்த்தரப்பு இனியேனும் கைவிட வேண்டும். இல்லையேல் முள்ளிவாய்க்காலில் சந்தித்த அழிவையும் விட மோசமான அழிவைச் சந்திக்க வேண்டியிருக்கும் தமிழ் மக்கள். ”

உயிர் காக்கவேண்டிய உத்தமர்களே!..

 பாதிக்கப்பட்ட பிள்ளையின் நிழல்ப்படம்

யாழ்ப்பாணத்தில் வைத்தியத்துறையும் வியாபார நிறுவனமா?..

சுகாதாரம், மருத்துவம், வைத்தியம் என்று சொல்லும் பொழுது மனிதனின்
நீண்டகால வாழ்வின் மகத்துவத்திற்காகவே என்பது சிறப்பான விடையமாகும்.

கனேடிய பொலிஸாரின் மூளையை அதிர வைத்த யாழ்ப்பாண புருஷன் – பெண்டாட்டியின் கிரிமினல் வேலை

தமிழன் இல்லாத நாடும் இல்லை, தமிழனுக்கென்று ஒரு நாடும் இல்லை என்று சொல்வார்கள். அதே போல தமிழன் என்றோர் இனம் உண்டு, தனியே அதற்கோர் குணம் உண்டு என்றும் சொல்வார்கள். இவற்றுக்கு சரியான உதாரணம் யாழ்ப்பாண தமிழர்கள்.

ஸ்மார்ட்போன் அதிகம் சூடாவதைத் தடுக்கும் 7 வழிகள்! #GadgetTips

போன் அடிக்கடி சூடாகும் பிரச்னை உங்களில் பலருக்கும் இருக்கலாம். உங்கள் ஸ்மார்ட்போனை தொடர்ந்து ஒரு மணி நேரம் பயன்படுத்தி விட்டு, அதன் டிஸ்ப்ளேவைத் தொட்டாலே கொதிக்கும். சில சமயம், நீண்ட நேரம் சார்ஜ் போட்டுவிட்டு, மொபைலை கையில் எடுத்தாலும் அதிக வெப்பத்தை உணரலாம். நீண்ட நேரம் பேருந்துகளிலோ, ரயிலோ மொபைலை பயன்படுத்த விரும்பினால் கூட, அதில் இருந்து வெளிவரும் வெப்பம் நமக்கு அசவுகரியமாக இருக்கும். சில ஸ்மார்ட்போன்கள் இதற்கு விதிவிலக்காக இருந்தாலும் கூட, பெரும்பாலான போன்களில் இந்த போன் சூடாகும் பிரச்னை இருக்கின்றது.

ஞாயிறு, 8 ஜனவரி, 2017

அகதிகள்... அழுத்தங்கள்... சில மரணங்கள்!

நெருக்கியடித்து நிறைந்திருக்கும் குடிசைகள். கூரைகளில் ஈரம் சொட்டிக் கொண்டிருந்தது. ஈரத்தின் காரணமாக மண் தரை சொதசொதப்பாய் இருந்தது. கால்கள் சேற்றில் படாமல் நடப்பது என்பது இயலாத காரியம். வட்டமான முகம், கொஞ்சம் சப்பையான மூக்கு, குட்டையான உருவம், மாநிறம் எனக் கொஞ்சம் சீன - திபெத் சாயலில் இருக்கும் இவர்கள் அனைவரும் கெரென் (Karen) இன மக்கள். இடம் - தாய்லந்து, மியான்மர் எல்லையில் இருக்கும் மயி லா (Mae La) அகதிகள் முகாம்.

சனி, 7 ஜனவரி, 2017

தன்னம்பிக்கையின் மறுபெயர்!

ஹாங்காங்கைச் சேர்ந்த 33 வயது லாய் சி வாய், ஆசிய மலையேற்ற சாம்பியன்ஷிப் போட்டிகளில் 4 முறை பட்டங்களை வென்றிருக்கிறார். 2011-ம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது மோசமான விபத்து ஏற்பட்டது. “நான் கண் விழித்தபோது மருத்துவமனையில் இருந்தேன். எனக்குச் சில அறுவை சிகிச்சைகள் முடிந்திருந்தன. இனி நான் சக்கர நாற்காலியில்தான் என் வாழ்நாட்களைக் கழிக்க வேண்டும் என்றும் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் என்றும் சொன்னார்கள்.

அரேபியர்களைத் திகைக்கச் செய்திருக்கும் பாடல்

ஆண்களையும் ஆணாதிக்கத்தையும் விமர்சிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் அரேபியப் பாடல் காட்சியொன்று உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி, 6 ஜனவரி, 2017

கள்ளக்காதலுக்கு இடையூறு: என்ஜினீயரை கொலை செய்து விட்டு நாடகம் ஆடிய மனைவி கைது; கள்ளக்காதலனும் சிக்கினார்

 கொலைசெய்யப்பட்ட என்ஜினீயர் அறிவழகன் மற்றும் கைதான சுரேகா

ஆலந்தூர், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் என்ஜினீயரான தனது கணவரை கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர். அவரது கள்ளக்காதலனும் கைதானார்.

ஒசாமா பின்லேடனின் மகனை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது அமெரிக்கா

ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடனை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது. இப்போது தன்னுடைய 20 ஆம் வயதுகளில் இருக்கின்ற ஹம்ஸா, 2015 ஆம் ஆண்டு அல் கயிதாவின் அதிகாரபூர்வ உறுப்பினராக அறிவிக்கப்பட்டார்.

வியாழன், 5 ஜனவரி, 2017

வேர்ட் டாகுமெண்ட்களில் நெட்டு வரிசைகளை மாற்றி அமைக்க

வேர்ட் டாகுமெண்ட்களில் டேபிள்களை உருவாக்கி, அதில் டேட்டாவை இட்ட பின்னர், நெட்டு வரிசைகளை மாற்றி அமைக்க வேண்டிய தேவை ஏற்படுகையில், மாற்றத்தினை எப்படி எளிதாக மேற்கொள்ளலாம்?

வேர்ட்டில் டாகுமெண்ட்களை தயாரிக்கும்போது ஏற்படும் நெளிவான கோடுகளை நிறுத்த

வேர்ட் டாகுமெண்ட்களைத் தமிழில் தயாரிக்கும்போது, அனைத்து வரிகளிலும், இலக்கணப் பிழைகள் இருப்பதாக வேர்ட் நெளிவான கோடுகளை இட்டுக் காட்டுகிறது. இந்த இலக்கணப் பிழை சுட்டுவதை எப்படி நிறுத்துவது? அதற்கான ஷார்ட் கட் கீ ஏதும் உண்டா?

'ட்ரைவர்' (Driver)

'ட்ரைவர்' என்பது ஒரு வகையான சாப்ட்வேர் புரோகிராம். இது பிரிண்டர், மவுஸ் அல்லது வை பி ரெளட்டர் போன்ற சாதனங்களை, உங்கள் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தோடு தகவல்களைப் பரிமாறிக் கொள்ள உதவுகிறது. அதே போல, இந்த புரோகிராம் மூலம், ஆப்பரேட்டிங் சிஸ்டமும், குறிப்பிட்ட சாதனத்துடன் தகவல்களைப் பகிர்ந்து கொண்டு, செயல்படுவதற்கான கட்டளைகளைத் தருகிறது.

சோக வரலாற்றை மீண்டும் ஞாபகப்படுத்தியிருக்கும் புகைப்படம்

 Mohammed Shohayet, a 16-month-old boy, who had been trying to leave his home in Rakhine State with his family and head to Bangladesh when he drowned

பங்களாதேஷ்-மியன்மார் எல்லையில் உள்ள ‘நஃப்’ ஆற்றங்கரையில், ரொஹிங்யா குழந்தை ஒன்றின் உயிரற்ற உடல் ஒதுங்கியதைச் சித்தரிக்கும் படம் ஒன்று வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸில் புதுவருடத்தில் விதிக்கப்பட்ட கட்டாய சட்டம்..!

உடல் ஆரோக்கியத்துடன் இருப்போர்கள் தமது உடல் உறுப்புகளை தானம் வழங்குவது, 2017 ஜனவரி மாதம் முதல் பிரான்ஸ் நாட்டில் கட்டாய சட்டமாக்கப்பட்டுள்ளது.

புதன், 4 ஜனவரி, 2017

மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு (வீடியோ இணைப்பு)

உடற்கூறியல் வரலாற்றில் சுமார் 100 ஆண்டுகளாக மனித உடலில் மறைந்திருந்த புதிய உறுப்பு ஒன்றை அயர்லாந்தை சேர்ந்த உடற்கூறியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல